[ 1 ]

27-II-1-(T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 1 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô : Ï. 1.60 裲

⇠27]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜூலை 5, 2023

ஆனி 20, ச‚ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´–2054

தŠொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

[அரசாணை (நிலை) எண்.  47, த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (R2)த்  துறை, 13 மார்ச் 2023]

சேவைகள் அல்லது பயன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரைப் பயன்படுத்துவது,

அரசின் வழங்கல் நடைமுறைகளை எளிதாக்குவத‡ோடு, வெளிப்பட

ைத்தன்மை

மற்றும் திறனை அளிப்பதுடன் ஒருவரின்

அடையாளத்தை

மெய்ப்பிக்க பல்வேறு ஆவணங்களை அளிப்பதை

த் தவிர்ப்பத

ன் வாயிலாக பயனாளிகள் தஙகள் உரிமைகளை

நேரடியாக வசதியாகவும் தடையற்ற முறையிலும் பெற உதவுகிறது என்பதா

லும்;

த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (இனி துறை எனக் குறிப்பிடப்படும்), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்

துறையின் (இனிமேல் செயல்படுத்தும் முகமை எனக் குறிப்பிடப்படும்) www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் தஙகள்

பெயரைப் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற்ற இளைஞர்களுக்கான

வேலைவாய்ப்பின்மை

உதவித் திட்டத்தை

(இனி திட்டம் எனக் குறிப்பிடப்படும்) நிர்வகித்து வருகிறது என்பதா

லும்,

மேலும், மேற்கூறிய திட்டமானது தமிழ்நாடு அரசின் த‡ொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் த‡ொடர் செலவினஙகளுடன்

த‡ொடர்புடையது என்பதா

லும்,

2016 ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் பிற மானியஙகள், பயன்கள், சேவைகள் ஆகியவற்றை உண்மை

யான

பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குதல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2016) 7 ஆம் பிரிவின்படி (இனி மேற்சொன்னன்ன

சட்டம் எனக் குறிப்பிடப்படும்) தமிழ்நாடு அரசு தற்போது பின்வருவனவற்றை இதனால் அறிவிக்கிறது அதாவது:-

(1)

இத்திட்டத்தின் கீழ் பயன்களை

ப் பெறத் தகுதியுடைய தனிநபர் ஒருவர் ஆதார் எண்ணை

ை வைத்திருப்பதற்கா

ன

சான்றை வழஙக வேண்டும் அல்லது அவர் ஆதார் அட்டை

ை நம்பகத்தன்மை

க்கு உட்படுத்தப்பட

வேண்டும்.

(2)

இத்திட்டத்தின் கீழ் பயன்களை

ப் பெற விரும்பும் ஆதார் எண்ணை

ைக் க�ொண்டிராத அல்லது இதுவரை ஆதார்

எண் பெறுவதற்கு விண்ண

ப்பிக்காத

ஆனால் மேற்சொன்னன்ன சட்டத்தின் 3 ஆம் பிரிவின்கீழ் ஆதார் எண்

பெறுவதற்கு உரிமையுடைய யாத‡ொரு நபரும், இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்னர் ஆதார் எண் பதிவுக்கு

விண்ண

ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அத்தகை

ய நபர்கர்கள் யாத‡ொரு ஆதார் பதிவு மையத்திற்கும் சென்று

(இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்) (UIDAI) இணையதளமான https://www.uidai.gov.in-இல் பட்டியல்

இடம் பெற்றுள்ளது) பதிவு செய்யவேண்டும்.

2

(3)

2016 ஆம் ஆண்டு ஆதார் ஒழுங்குமுறை (பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்) விதிகளின் ஒழுங்குமுறை விதி

எண் 12 இன்படி ஆதார் எண் பெறுவதற்கு நாளது வரையில் பதிவு செய்யாத பயனாளிகளுக்கு துறையானது அதன்

செயற்படுத்தும் முகவரமைப்பு வாயிலாக ஆதார் பதிவுக்கான வசதி வாய்ப்புகளை வழஙக வேண்டும். மேலும், த‡ொடர்புடைய

வட்டாரத்தில் அல்லது வட்டத்தில் ஆதார் பதிவு மையம் இல்லையெனில், துறையானது, அதன் செயற்படுத்தும் முகவரமைப்பு

வாயிலாக தற்போதுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பதிவாளராகத் தம்மை பதிவு செய்து

க�ொண்டு, வசதியான இடஙகளில் ஆதார் பதிவு வசதிகளை வழஙக வேண்டும்.

இருப்பினும், தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கீடு செய்யப்படும் வரை, பின்வரும் ஆவணங்களை அளிக்க வேண்டும் என

நிபந்தனைக்குட்பட்டு அத்தகை

ய நபருக்கு திட்டத்தின் கீழான பயன்கள் வழங்கப்பட வேண்டும்.

அதாவது:-

(அ) அவர் பதிவு செய்திருப்பாராயின், அவருடைய ஆதார் பதிவு அடையாளச் சீட்டு: மற்றும்

(ஆ) பின்வரும் ஆவணஙகளில் ஏதேனும் ஒன்று, அதாவது:-

(i)

ஒளிப்பட

த்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்: அல்லது

(ii)

நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை

ை; அல்லது

(iii) கடவுச்சீட்டு; அல்லது

(iv) குடும்ப அட்டை

ை; அல்லது

(v)

வாக்காளர் அடையாள அட்டை

ை; அல்லது

(vi) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அட்டை

ை: அல்லது

(vii) ஒளிப்பட

த்துடன் கூடிய கிசான் (விவசாய) கணக்குப் புத்தகம்: அல்லது

(viii) 1988 ஆம் ஆண்டு ம�ோட்டா

ர் வாகனச் சட்டம், (மத்திய சட்டம் 59/1988) கீழ் உரிமம் வழங்கும் அதிகாரியால்

வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்; அல்லது

(ix) அரசிதழ் பதிவு பெற்ற்ற அலுவலர் அல்லது வட்டாட்சியரால் அலுவலக விவரக் குறிப்பே

ட்டில் வழங்கப்பட்ட அத்தகை

ய

நபரின் ஒளிப்பட

த்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்; அல்லது

(x)

துறையால் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் ஆவணம்;

மேலும், மேற்கூறிய ஆவணஙகள் அந்த ந�ோக்கத்திற்கென்றே

துறையால் நியமிக்கப்பட்ட

அலுவலர் ஒருவரால் சரிபார்க்கப்பட

வேண்டும்.

2. இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு பயன்களை

சிரமமின்றி வழங்குவதற்கேதுவாக, துறையானது அதன் செயல்பாட்டு

முகவரமைப்பு வாயிலாக, ஊடகஙகளில் பரவலாக விளம்பரம் செய்து, மேற்சொன்னன்ன தேவையைப் பற்றிப் பயனாளிகள் அறிந்து

க�ொள்வதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய்ய வேண்டும்.

3. பயனாளிகளின் தெளிவற்ற்ற உயிரியளவியல் காரணமாகவ�ோ வேறு ஏதேனும் காரணத்தால�ோ ஆதார் உறுதிச் ச‚ோதனை

த‡ோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றற்ற வேண்டும். அதாவது

(அ) ​கைரேகை தெளிவின்றி இருக்கும் நேர்வில், உறுதிப்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த இடர் தகவல் அமைப்பு வருடல்

(Scan) அல்லது முக வடிவை உறுதி செய்யும் வசதி ப�ோன்றவ

ை ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வகையில், துறையானது

தடையற்ற முறையில் பயன்களை

வழங்குவதற்காக அதன் செயல்பாட்டு முகவரமைப்பு வாயிலாக கைரேகை உறுதி

செய்யும் வசதியுடன் ஒருங்கிணைந்த இடர் தகவல் அமைப்பு வருடிகள் (Scanners) அல்லது முகத்தின் வடிவை உறுதி

செய்வதற்கான வசதிகளுக்கு ஏற்பாடு செய்துதர வேண்டும்.

(ஆ) கைரேகைகள் அல்லது ஒருங்கிணைந்த இடர் தகவல் அமைப்பு வருடி (Scan) அல்லது முக வடிவை உறுதி செய்தல்

ப�ோன்ற உயிரியளவியல் உறுதிச் ச‚ோதனைகள் த‡ோல்வியுறும் நேர்வில், சாத்தியமான மற்றும் ஏற்றுக்கொள்ள்

ளக்கூடிய

சூழலகளிலெல்லாம், ஒருமுறை பெறப்படும் ஆதார் கடவுச் ச‚ொல் அல்லது குறிப்பிட்ட கால அளவிற்கு செல்திறனுள்ள

நேர அடிப்பட

ையிலான ஒருமுறை பெறப்படும் கடவுச் ச‚ொல் ஆகியவற்றின் வாயிலாக உறுதிச் ச‚ோதனைகளை

மேற்கொள்ளலாம்.

(இ) உயிரியளவியல் அல்லது ஒரு முறை பெறப்படும் ஆதார் கடவுச்சொல்

அல்லது நேர அடிப்பட

ையிலான ஒரு முறை

பெறப்படும் கடவுச்சொல் உறுதிப்படுத்துதல் சாத்தியமில்லாத ஏனைய அனைத்து நேர்வுகளிலும், ஆதார் அட்டை

ையில்

அச்சிடப்பட்டுள்ள விரைவு பதில் (QR) குறியீட்டின் வாயிலாக பயனாளிகளின் நம்பகத்தன்மையை

ச் சரிபார்த்து, திட்டப்

பயன்களை

வழங்கலாம். மேலும், வசதியான இடஙகளில் விரைவு பதில் குறியீட்டு படிப்பிற்குத் தேவையான ஏற்பாடு

துறையில் அதன் செயற்பாட்டு முகவரமைப்பு வாயிலாகச் செய்து தரப்பட

வேண்டும்.

3

4. மேற்கூறியவற்றுடன், இத்திட்டத்தின் கீழ் யாத‡ொரு தகுதியுடைய பயனாளியும் தனக்குரிய பயன்களை

ப் இழக்காமலிருப்பதை

உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் அமைச்சரவைச் செயலகத்தை

ச் சேர்ந்த நேரடி பலன் பரிமாற்ற்றத் திட்டத்தின் 19.12.2017 ஆம்

நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடுபாடுகளைக் கையாளும் ஏற்பாட்டுமுறையை துறை தனது செயற்பாட்டு

முகவரமைப்பு வாயிலாகப் பின்பற்றற்ற வேண்டும்.

5. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்க்கம்)

ï. ܼœ,

இயக்குநர் (கூ.ப�ொ.),

தமிழ் வளர்ச்சி மற்றும்,

செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுப�ொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.