Kerala Gazette No. 41 dated 20th October 2009.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-சி) துறை
அறிக்கை
2008 டிசம்பர் 27 எண் 18148/ச. இ. எ. சி. 2/2008/சட்டம். திருவனந்தபுரம்,
1930 பௌஷம் 6.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொது மக்களின் தகவலுக்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவை யால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2008 டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, Nh-Pj-'˚\ £\l-◊f˘NV-Xo.
2008-ன் 35-வது சட்டம்
2008-˛u ˙LW[ ˚RVp ˘RÙØ-XÙ[o SX-®ß
(ß⁄jR) NhPm
1994-ன் கேரள தையல் தொழிலாளர் நலநிதி சட்டத்தை திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முகவுரை.—1994-ன் கேரள தையல் தொழிலாளர் நலநிதி சட்டம் (1994-ன் 16) இதற்குப் பின்வரும் தேவைகளுக்காக திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;
இந்தியக்குடியரசின் ஐம்பத்தி ஒன்பதாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் 2 1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2008-ன் கேரள தையல் தொழிலாளர் நலநிதி (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2008 ஜனவரி 3-ம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.
2. பிரிவு 7-ல் திருத்தம்.—1994-ன் கேரள தையல் தொழிலாளர் நலநிதி சட்டத்தின் (1994-ன் 16) (இதற்குப்பிறகு முதற் சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 7-ல்,—
(எ) துணைப்பிரிவு (1)-க்கு பதிலாக, பின்வரும் துணைப்பிரிவும் காப்பு வாசகமும் சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"(1) ஒவ்வொரு தையல் தொழிலாளரும் சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு நபரும் மாதந்தோறும் இருபது ரூபாய் வீதமும், ஒவ்வொரு தொழில் உடமையாளரும் அவர் நியமனம் செய்த தையல் தொழிலாளர்களின் எண்¶க்கையின் அடிப்படையில் தொழிலாளர் ஒருவருக்கு மாதந்தோறும் ஐந்து ரூபாய் என்ற முறையில் பங்குத்தொகை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு தொழில் உடமையாளரும் அவர் நியமனம் செய்த தையல் தொழிலாளர்களின் எண்¶க்கையின் அடிப்படையில் தொழிலாளர் ஒருவருக்கு மாதந்தோறும் ஐந்து ரூபாய் என்ற முறையில் பங்குத்தொகை செலுத்த வேண்டும்.
எனில், Ëற்றுக்கு மேலான தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில், Ëற்றுக்கு மேல் வரும் தொழிலாளர் ஒருவருக்கு தொழில் உடமையாளர் மாதந்தோறும் மூன்று ரூபாய் வீதம் நிதிக்கு செலுத்தினால் போதுமானதாகும்."
(பி) துணைப்பிரிவு (2)-ல், "பதினைந்து ரூபாயாக" என்ற சொற்கள் விட்டுவிடப்படவேண்டும்.
(சி) துணைப்பிரிவு (4)-க்குப் பிறகு, பின்வரும் காப்புவாசகம் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"எனில், பிரதிமாத பங்குத்தொகை 10 ரூபாய்க்கு மேலாக அதிகரிக்கும் போது, அவ்வாறான உயர்வுக்கு ஏற்றபடி நிதிக்கு மானியம் நல்க அரசு பொறுப்புடையதாக இராது."
3. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2008-ன் கேரள தையல் தொழிலாளர் நலநிதி (திருத்த) அவசரச்சட்டம் (2008-ன் 23) இதனால் இரத்து செய்யப் படுகிறது.