Kerala Gazette No. 41 dated 20th October 2009.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிக்கை
2009 ஜனவரி 2 எண் 10673/ச. இ. எ. 2/2008/சட்டம். திருவனந்தபுரம்,
1930 பௌஷம் 12.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2009 ஜனவரி மாதம் 1-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, Nh-Pj-'˚\ £\l-◊f˘NV-XÙ[o.
2009-ன் 1-வது சட்டம்
2008-˛u ˙LW[ YZd-L-±-Oo LQd-Lo-Ls SX-®ß
(ß⁄jR) NhPm
2 0 0 3 - ன் ே க ர ள வ ழ க் க றி ஞ ர் கண க் க ர் க ள் ந ல நி தி ச ட் ட த் ை த திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முகவுரை.—2003-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி சட்டம் பின்வரும் தேவைகளுக்காக திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;
21. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2008-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் (திருத்த) சட்டம் என்று அழைக்கப்படலாம்.
(2) இது 2008 ஜூன் மாதம் 10-ம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்படவேண்டும்.
2. பிரிவு 14-ல் திருத்தம்.—2003-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி சட்டத்தில் (2003-ன் 27) (இதற்கு பிறகு முதற்சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 14-ன் துணைப்பிரிவு (1)-ல், "இரண்டு ரூபாய் மதிப்புடைய" என்ற சொற் களுக்குப்பதிலாக, "ஆறு ரூபாய் மதிப்புடைய" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
3. பிரிவு 17-ல் திருத்தம்.—முதற் சட்டத்தின் பிரிவு 17-ன் துணைப்பிரிவு (5)-ல், "இருËறு ரூபாய்" என்ற சொற்களுக்கு பதிலாக, "நாÚறு ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.
4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2008-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி (திருத்த) அவசரச்சட்டம் (2008-ன் 34) இதனால் இரத்து செய்யப்படு கிறது.
(2) அவ்வாறு இரத்துசெய்யப்பட்டபோதிலும், மேற்கூறிய அவசர சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின் அடிப்படையில் செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்பட வேண்டும்.