Kerala Gazette No. 41 dated 20th October 2009.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிக்கை
2008 டிசம்பர் 19 எண் 10608/ச. இ. எ. 1/2007/சட்டம். திருவனந்தபுரம்,
1930 அக்ரஹாயனம் 28.
கேரள மாநில சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்கள் தகவலுக்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2008 டிசம்பர் 17-ம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, Nh-Pj-'˚\ £\l-◊f˘NV-Xo.
2008-ன் 30-வது சட்டம்
2008-˛u ˙LW[ ÆY-NÙV LPu ®YÙ-WQ L™-`u
(ß⁄jR) NhPm
2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டத்தை திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முகவுரை.—கேரள விவசாய கடன் நிவாரண கமிஷனின் செயல்பாட்டை அதிக செயல்திறனுடையதாக்கவும் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் பூர்த்தி செய்வதற்கும் அதில் விவசாயிகள் பங்கேற்பை அதிகரிப்பது தேவை என்று அரசு கருதுவதால் ;
21. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2008-ன் கேரள விவசாய கடன் நிவாரண (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2007 மே 22-ம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்பட வேண்டும்.
2. பிரிவு 3-ல் திருத்தம்.—2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டத்தின் (2007-ன் 1) (இதற்குப்பிறகு முதற் சட்டம் என்று குறிப்பி டப்படும்) பிரிவு 3-ன் துணைப்பிரிவு (2)-ல்,—
(1) "ஐந்து உறுப்பினர்கள்" என்ற சொற்களுக்குப்பதிலாக, "ஏழு உறுப்பினர்கள்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
(2) இனம் (iii)-ல் "இரண்டு விவசாய பிரதிநிதிகள்" என்ற சொற்களுக்குப் பதிலாக "நான்கு விவசாய பிரதிநிதிகள்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
3. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2008-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் (திருத்த) அவசரச்சட்டம் (2008-ன் 35) இதனால் இரத்து செய்யப் படுகிறது.
(2) அவ்வாறு இரத்துசெய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின்கீழ் செய்ததாகவோ அல்லது செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியம் அல்லது எடுத்த ஏதேனும் நடவடிக்கை இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி செய்ததாகவோ அல்லது மேற்கொண்டதா கவோ கருதப்பட வேண்டும்.