Kerala Gazette No. 41 dated 20th October 2009.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஒருங்கிணைப்பு) துறை
அறிக்கை
2009 ஜனவரி 5 எண் 19147/ச. இ. ஒ. 3/2008/சட்டம். திருவனந்தபுரம்,
1930 பௌஷா 15.
கேரள மாநில சட்டமன்ற பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டபடியான மசோதாவிற்கு 2009 ஜனவரி 3-ம் நாள் ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, £\l-◊˘NV-XÙ[o (Nh-Pm).
2009-ன் சட்டம் எண் 6
2008-˛u EVo- NhPdLp-Æd-LÙ] ˙R£V Tp-L-˚Xd-
L-Z-Lm (ß⁄jR) NhPm
2005-ன் உயர் சட்டக்கல்விக்கான தேசிய பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான ஒரு சட்டம்.
முகவுரை.—2005-ன் உயர் சட்டக்கல்விக்கான தேசிய பல்கலைக்கழக சட்டத்தை பின்வரும் நோக்கங்களுக்காக திருத்துவது தேவையாக இருப்பதால்;
இந்தியக்குடியரசின் ஐம்பத்தி ஒன்பதாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்.
G. 2/2009/DTP.
21. சுருக்கத்தலைப்பும் தொடக்கமும்:—(1) இந்த சட்டம் 2008-ன் உயர் சட்டக்கல்விக்கான தேசிய பல்கலைக்கழக (திருத்த) சட்டம் என்று அழைக்கப்படலாம்.
(2) இது 2008 ஜூன் 9-ம் தேதி அமலில் வந்ததாக கருதப்படவேண்டும்.
2. முகவுரையில் திருத்தம்.—2005-ன் உயர் சட்டக்கல்விக்கான தேசிய பல்கலைக்கழக சட்டத்தின் (2005-ன் 27) (இதற்குப் பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்) கடைசி அட்டவணையில் வரும் "சுயநிதி அடிப்படையில்" என்ற சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
3. பிரிவு 3-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 3-ன் துணைப்பிரிவு (2)-ல் "சுயநிதி" என்ற சொற்கள் விட்டுவிடவேண்டும்.
4. பிரிவு 12-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 12-ல் இனம் (xi)-க்கு பின் கீழ்வரும் இனம் இணைத்துக் கொள்ளவேண்டும், அதாவது:—
"(xiஎ) தலைமைச் செயலாளர், நிதிதுறை, கேரள அரசு;
(xiபி) உயர் கல்வி குழுவினுடைய செயல்பாட்டுக்குழு அதன் உறுப்பினர்களில் இருந்து பெயர் நியமனம் செய்யும் ஒரு உறுப்பினர் ";.
5 . பி ரி வு 1 7 - ல் தி ரு த் த ம் .—மு த ன் ை ம ச ட் ட த் தி ன் பி ரி வு 1 7 - ன் துணைப்பிரிவு (2)-ல்,—
(i) இனம் (vi)-ல் தற்போதுள்ள சொற்களுக்கு பிறகு பின்வரும் சொற்கள் இணைக்கப்பட வேண்டும், அதாவது:—
"அல்லது அவர் நியமனம் செய்யும் உயர் கல்வித்துறையில் உள்ள அரசு இணை செயலாளரின் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரி ";.
(ii) இனம் (vii)-ல் தற்போதுள்ள சொற்களுக்குபிறகு பின்வரும் சொற்கள் இணைக்கப்பட வேண்டும், அதாவது:—
"அல்லது அவர் நியமனம் செய்யும் சட்டத்துறையில் அரசு இணை செயலாளரின் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரி ";
(iii) இனம் (xii)-க்குப்பின் பின்வரும் இனங்கள் இணைக்கப்பட வேண்டும், அதாவது:—
"(xiii) அரசு முதன்மைச் செயலாளர், நிதிதுறை அல்லது அவர் நியமனம் செய்யும் நிதித்துறையின் அரசு இணை செயலாளரின் பதவிக்கு குறையாத ஒரு அலுவலர் ;
3(xiv) உயர் படிப்புக்கான கவுன்சிலிங் உறுப்பினர்களில் இருந்தும் நிர்வாகக்குழு நியமனம் செய்த ஒரு உறுப்பினர்;
(xv) அரசு நியமனம் செய்த இரண்டு சட்ட வல்லுநர் அதில் ஒருவர் பெண் ஆக இருக்க வேண்டும்."
6 . பிரிவு 27-ல் திருத் தம்.—மு த ன் ை ம ச ட் ட த் தி ன் பி ரி வு 2 7 - ல் துணைப்பிரிவு (1)-ல் அட்டவணை (எ)-க்கு பதில் பின்வரும் அட்டவணை இணைத்துக்கொள்ளவேண்டும், அதாவது:—
"(எ) கேரள பார் கவுன்சிலின் ஒரு பிரதிநிதி"
7. 46எ என்ற புதிய பிரிவை இணைத்தல்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 46-க்கு பிறகு பின்வரும் பிரிவு இணைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது:—
"46எ. நெறிமுறைகள் நல்குவதற்குரிய அரசின் அதிகாரம்.—பல்கலைக் கழகத்திலுள்ள மாணவ மாணவிகளின் கட்டணம் மற்றும் அனுமதி தொடர்பாக காலாகாலங்களில் அரசால் உருவாக்கப்படும் நெறிமுறைகளை செயல்படுத்துவ தற்கு பல்கலைக்கழகங்களை நெறிப்படுத்த அரசுக்கு முழு அதிகாரம் இருக்கும்.
எனினும், அத்தகைய நெறிமுறைப்படுத்தலில் செயல்பாட்டுக் குழுவின் தீர்மானம் இறுதியானதாக இருக்கும்."
8. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2008-ன் உயர் சட்டக்கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் (திருத்த) அவசரச்சட்டம் (2008-21)-ன் இதன் மூலம் இரத்து செய்யப்படுகிறது.
(2) எனினும், அவ்வாறு இரத்துசெய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரசட்டத்தினால் திருத்தப்பட்ட முதற்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஏதேனும் செயல் அல்லது மேற்கொண்ட ஏதேனும் நடவடிக்கையும் இந்த சட்டத்தினால் திருத்தப்பட்ட முதற்சட்டப்படி செய்யப்பட்டதாக அல்லது மேற்கொள்ளப்பட்டதாக கருதப்பட வேண்டும்.