Kerala Gazette No. 3 dated 19th January 2010.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஒருங்கிணைப்பு) துறை
அறிக்கை
2009 ஆகஸ்ட் 1 எண் 8880/ச. இ. ஒ. 3/2009/சட்டம். திருவனந்தபுரம்,
1931 சிராவணம் 10.
2009 ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, Nh-Pj'˚\ £\l-◊f˘NV-Xo.
2009-ன் (எண் 14) அவசரச்சட்டம்
2009˛u ˙LW[ Æ˚[-VÙh" (ß-⁄j-R) AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபதாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பரம் செய்யப்பட்டது.
2000-ன் கேரள விளையாட்டு சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்
முகவுரை.—2008-ன் கேரள விளையாட்டு (திருத்த) அவசரச்சட்டம் (2008-ன் 38) 2008 செப்டம்பர் 26-ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும் ;
G. 29/2009/DTP.
22008 நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கி 2008 டிசம்பர் 18-ஆம் தேதி முடிவுற்ற கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச் சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையின் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவற்கும் 2000-ன் கேரள விளையாட்டு சட்டத்திற்கு மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கும் 2009-ன் கேரள விளையாட்டு (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 2), 2009 ஜனவரி 3-ஆம் தேதி கேரள ஆளுநர் விளம்பரம் செய்திருந்தபடியாலும்;
2009 பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி 2009 மார்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வைத்து மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையின் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2009-ன் கேரள விளையாட்டு (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 8) 2009 மார்ச் 29-ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்திருந்தபடியாலும்;
2009 ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி 2009 ஜூலை 24-ஆம் தேதி முடிவுற்ற 12-வது கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வைத்து மேற்கூறிய அ வ ச ர ச் ச ட் ட த் தி ற் கு ப தி ல ா க ச ட் ட ப் ே ப ர ை வ யி ன் ஒ ரு ச ட் ட ம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணை உட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் 2009-ன் கேரள விளையாட்டு (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 8) 2009 ஆகஸ்ட் 3-ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
3த ற் ே ப ா து , அ த ன ா ல் , இ ந் தி ய அ ர சி ய ல ை ம ப் பி ன் 2 1 3 - வ து விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2009-ன் கேரள விளையாட்டு (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இந்த அவசரச்சட்டத்தின் பிரிவு 7 மற்றும் 8, 2008 ஆகஸ்டு 17-ஆம் தேதியும் மீதமுள்ள ஏற்பாடுகள் 2009 ஜனவரி 5-ஆம் தேதியும் அமலுக்கு வந்ததாக கருதப்படவேண்டும்.
2. 2001-ன் 2-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 2000-ன் கேரள விளையாட்டு சட்டத்திற்கு (2001-ன் 2) (இதற்குப்பிறகு முதற்சட்டம் என்று குறிப்பிடப்படும்) 3 முதல் 8 வரையிலான பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு பயனுடையதாக அமையும்.
3. பிரிவு 3-ன் திருத்தம்.—முதற்சட்டத்தில் பிரிவு 3-ன் துணைப்பிரிவு (3)-ல், "பெயர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்" என்ற தலைப்பின் கீழ் இனம் (ii)-ல், "சர்வதேச" என்ற சொற்றொடருக்கு பதிலாக "சர்வதேச அல்லது தேசிய" என்ற சொற்கள் இணைக்கப்படவேண்டும்.
4. பிரிவு 6-ன் திருத்தம்.—முதற்சட்டத்தின் பிரிவு 6-ன் துணைப்பிரிவு (1)-ன் இனம் (எச்)-ல்,—
(எ) "தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து" என்ற சொற்க ளுக்குப் பதிலாக "உறுப்பினர்களிடமிருந்து" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
(பி) "சர்வதேச" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "சர்வதேச அல்லது தேசிய" என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும்.
5. பிரிவு 9-ன் திருத்தம்.—முதற்சட்டத்தில் பிரிவு 9-ன் துணைப்பிரிவு (3)-ல், "பெயர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்" என்ற தலைப்பின் கீழ் உட்பிரிவு (பி)-ன் இனம் (iv)-ல், "சர்வதேச" என்ற சொற்களுக்கு பதிலாக "சர்வதேச அல்லது தேசிய" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.
6. பிரிவு 14-ன் திருத்தம்.—முதற்சட்டத்தில் பிரிவு 14-ன் துணைப்பிரிவு (1)-ல், "துணை ஆட்சியாளரின்" என்ற சொற்களுக்குப்பதிலாக "பிரிவு அதிகாரியின்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.
47. பிரிவு 47எ-ன் திருத்தம்.—முதற்சட்டத்தில் பிரிவு 47எ-யில் "இரண்டு வருட காலத்திற்கோ" என்ற சொற்களுக்குப்பதிலாக "மூன்றரை வருட காலத்திற்கோ" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.
8. செல்லுபடியாதல்.—முதற்சட்டத்தில் அல்லது தற்சமயம் அமலில் இ ரு க் கு ம் பி ற ஏ ே த னு ம் வி தி யி ே ல ா எ து எ வ் வ ா று இ ரு ப் பி னு ம் , முதற்சட்டத்தின் பிரிவு 47எ-ன் அடிப்படையில் அரசு பெயர் நியமனம் செய்த அ ர சி த ழ் அ றி க் ை க வ ழி உ ரு வ ா க் க ப் ப ட் ட ம ா நி ல வி ை ள ய ா ட் டு குழுமத்தினுடையவும், மாவட்ட விளையாட்டு குழுமங்களுடையவும் 2008 ஆகஸ்டு 17-ஆம் தேதி முடிவடைந்த காலவரம்பு, இந்த அவசரச்சட்டத்தின்மூலம் திருத்தம் செய்யப்பட்டபடி பிரிவு 47எ-ன் ஏற்பாடுகளுக்கு இணங்க நீடிக்கப்பட்டதாக கருதவேண்டியதும் அதற்கு ஏற்ப முதற்சட்டத்திலோ அதன் கீழோ வழங்கப்பட்டதாக கருதப்படும் அதிகாரங்களும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு மேற்கூறிய குழுமங்கள் செய்த ஏதேனும் காரியமோ, எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ மேற்கூறிய குழுமங்களின் காலவரம்பு முடிவடைந்தது என்ற காரணத்தால் மட்டும் அசாது ஆகிறது என்றோ எப்போதேனும் அசாதுவாக இருந்தது என்றோ கருதப்படக் கூடாததாகும்.
9. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2009-ன் கேரள விளையாட்டு (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 8) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டத்திற்கு பதிலாக திருத்தம் செய்யப்பட்ட முதல் சட்டத்தின் கீழ் செய்ததோ அல்லது செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியமோ எடுத்ததோ எடுத்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கையோ அதது காரியத்தி லாவதுபோல் இந்த அவசரச்சட்டத்தின்மூலம் திருத்தம் செய்தவாறு முதற்சட்டத்தின்கீழ் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.
ஆர். எஸ். கவாய், Bfi-So.