Kerala Gazette No. 51 dated 27th December, 2011. .
PART I
Section iii
கேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசு
சட்ட (சட்டமியற்றல்-பி) துறை
அறிக்கை
2010 ஆகஸ்ட் 14
எண் 10167/ச. இ. பி. 2/2010/சட்டம். திருவனந்தபுரம்,
1932 சிராவணம் 17.
2010 ஆகஸ்ட் 8ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை
செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக
இதனால் வெளியிடப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
கெ. மதுசூதனன் நாயர்,
சட்டத்துறை சிறப்புச்செயலர்.
2010-ன் 38வது அவசரச்சட்டம்
2010-ன் கேரள நதியோரம் பாதுகாப்பு மற்றும் மணல்
2010-ன் கேரள நதியோரம் பாதுகாப்பு மற்றும் மணல்
2010-ன் கேரள நதியோரம் பாதுகாப்பு மற்றும் மணல்
2010-ன் கேரள நதியோரம் பாதுகாப்பு மற்றும் மணல்
2010-ன் கேரள நதியோரம் பாதுகாப்பு மற்றும் மணல்
எடுத்தல் கட்டுப்பாட்டு (திருத்த) அவசரச்சட்டம்
எடுத்தல் கட்டுப்பாட்டு (திருத்த) அவசரச்சட்டம்
எடுத்தல் கட்டுப்பாட்டு (திருத்த) அவசரச்சட்டம்
எடுத்தல் கட்டுப்பாட்டு (திருத்த) அவசரச்சட்டம்
எடுத்தல் கட்டுப்பாட்டு (திருத்த) அவசரச்சட்டம்
இந்தியக்குடியரசின் அறுபத்தியொன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால்
விளம்பரம் செய்யப்பட்டது.
2001-ன் கேரள நதியோர பாதுகாப்பு மற்றும் மணல் எடுத்தல்
கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான ஒரு அவசரச்சட்டம்.
முகவுரை.—2001-ன் கேரள நதியோர பாதுகாப்பு மற்றும் மணல் எடுத்தல்
கட்டுப்பாட்டு சட்டத்தை இதன் பின்தோன்றும் தேவைகளுக்காக திருத்தம்
செய்வது உகந்ததாக இருப்பதாலும்;
22010-ன் கேரள நதியோரம் பாதுகாப்பு மற்றும் மணல் எடுத்தல்
கட்டுப்பாட்டு (திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 31) 2010 ஜூன் மாதம் 12ஆம்
தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டபடியாலும்;
2010 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி 2010 ஜூலை 29ஆம் தேதி
முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்கூறிய
அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்
குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும்
முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன்
துணை உட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் மேற்கூறிய அவசரச்சட்டம் 2010
ஆகஸ்ட் 9ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில்
இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம்
துரித நடவடிக்கை எடுக்க தேவையான சூழ்நிலைகள் நிலவில் உள்ளன என்று
கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;
தற்போது, எனவே, இந்திய அரசியலமைப்பின் விதித்தொகுப்பு 213-ன்
உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி கேரள
ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பரம் செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2010-ன்
கேரள நதியோர பாதுகாப்பு மற்றும் மணல் எடுத்தல் கட்டுப்பாட்டு (திருத்த)
அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2010 ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக
கருதப்பட வேண்டும்.
2. 2001-ன் 18-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படுதல்.—
இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலகட்டத்தில், 2001-ன் கேரள
நதியோர பாதுகாப்பு மற்றும் மணல் எடுத்தல் கட்டுப்பாட்டு சட்டத்தில்
(2001-ன் 18) (இதற்கு பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) 3 முதல்
12 வரையுள்ள பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு
அமலில் இருக்கும்.
3. பிரிவு 2-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 2-ல்,—
(i) நிலவிலுள்ள (எ) உட்பிரிவு, (எஎ) என்று மறு எழுத்து நல்கப்பட
வேண்டியதும், அவ்வாறு மறு எழுத்து நல்கப்பட்ட (எஎ) உட்பிரிவிற்கு முன்பாக,
பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்படவும் வேண்டும், அதாவது:—
3"(எ) "அதிகாரப்படுத்திய அலுவலர்" எனில், பிரிவு 2பி-ன்
அடிப்படையில் அதிகாரப்படுத்தப்பட்டுள்ள நில வருவாய் ஆணையர்
என்று பொருள்படுகின்றதும் மேற்கூறிய பிரிவின் அடிப்படையில்
அவருக்கு உதவி செய்வதற்காக அரசு நியமனம் செய்யும் அலுவலர்
உட்படுகின்றதுமாகும்;";
(ii) உட்பிரிவு (பி)-க்கு பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட
வேண்டும், அதாவது:—
"(பிஎ) "மாநில உயர்மட்டக்குழு" எனில் பிரிவு 2எ-ன் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட மாநில உயர்மட்டக்குழு என்று பொருள்படும்;".
(iii) உட்பிரிவு (கெ)-க்கு பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட
வேண்டும், அதாவது:—
"(கெஎ) "சிறப்பு பாதுகாப்பு படை" என்றால் பிரிவு 26எ-ன்
அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை என்று பொருள்படும்;".
4. 2எ, 2பி என்ற புதிய பிரிவுகள் சேர்க்கப்படல்.—முதன்மை
சட்டத்தில் அத்தியாயம் II-ல் பிரிவு 3-க்கு முன்பு பின்வரும் பிரிவுகள்
சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"2எ. மாநில உயர்மட்டக்குழுவின் உருவாக்கம்.—(1) மாவட்ட
சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ள திட்டங்களை ÷ண்ணாய்வு செய்வதற்கும்
அவைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கும் அரசு, அரசிதழ் அறிக்கைமூலம் ஒரு
மாநில உயர்மட்டக்குழுவை உருவாக்க வேண்டும்.
(2) துணைப்பிரிவு (1)-ன் அடிப்படையில் உருவாக்கப்படுகிற மாநில உயர்
மட்டக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் உட்பட்டிருக்க வேண்டும், அதாவது:—
(i) வருவாய்த்துறையின் பொறுப்புடைய
அரசு செயலாளர் .. தலைவர்
(ii) சட்டத்துறை செயலாளர் .. உறுப்பினர்
(iii) நிலவருவாய் ஆணையர் .. கூட்டுநர் (கண்வீனர்)
(iv) புவியியல் கல்வி மையத்தின் இயக்குனர் .. உறுப்பினர்
(v) அரசு பெயர் நியமனம் செய்யும் ஒரு
கூடுதல் காவல்துறை பொது இயக்குனர்
(டைரக்டர் ஜனரல்)
.. உறுப்பினர்
4(vi) அரசு பெயர் நியமனம் செய்யும்
நீர்ப்பாசனத்துறையில் ஒரு
கண்கா¶ப்பு பொறியியலாளர் .. உறுப்பினர்
(vii) அரசு பெயர் நியமனம் செய்கின்ற
இரண்டு சுற்றுசூழல் அறிஞர்கள் .. உறுப்பினர்கள்
(3) மாநில உயர்மட்டக்குழு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை
யாகிலும் தலைவர் தீர்மானிக்கின்ற நேரத்திலும் இடத்திலும் கூட்டம்
சேரவேண்டும்.
(4) மாநில உயர்மட்டக்குழு கூட்டத்திற்கான குவாரம் ஐந்தாக இருக்க
வேண்டியதும் அதில் ஒருவர் துணைப்பிரிவு 2-ன் இனம் (vii)-ன் கீழ் வருகின்ற
ஒரு விஞ்ஞானியாகவும் இருக்க வேண்டும்.
(5) மாவட்ட வல்லுநர் குழு பரித்துரை செய்துள்ள எந்த திட்டத்திற்கும்
மாநில உயர்மட்டக்குழுவின் அங்கீகாரம் நல்கப்படாத நிலையில், நிர்வாக
அனுமதி அளிக்கப்படக் கூடாததாகும்.
2பி. அதிகாரப்படுத்திய அலுவலர்.—(1) நில வருவாய் ஆணையர், இந்த
சட்டத்தின் நிபந்தனைகளை செயல்படுத்துவதற்கான பொது கண்கா¶ப்பை
நிர்வகிப்பதற்கு அதிகாரப்படுத்திய அலுவலராக இருப்பதும், இந்த தேவைக்காக
அரசு நியமிக்கின்ற துணை நிலவருவாய் ஆணையர் அல்லது உதவி நிலவருவாய்
ஆணையரின் பதவிக்குக் குறையாத, அதிகாரி அவருக்கு உதவி செய்யவும்
வேண்டும்.
(2) இந்த சட்டத்தின் அடிப்படையில், அதிகாரப்படுத்திய அலுவலர்
நல்குகின்ற பரித்துரைகளை பின்பற்றுவதற்கு, இந்த சட்டத்தின் நிபந்தனைகளின்
அடிப்படையில் செயல்படுகின்ற அனைத்து அலுவலர்களும் கடமைப்பட்டவராவர்.
5. பிரிவு 3-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 3-ல்,—
(i) துணைப்பிரிவு (2)-ல் உட்பிரிவு (ஒ)-க்கு பிறகு பின்வரும்
உட்பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"(பி) மாவட்டத்தின் அதிகாரமுடைய துணை மாவட்ட ஆட்சித்
தலைவர் அல்லது நிலவருவாய் துறை அதிகாரி அல்லது வருவாய்துறை
மண்டல அதிகாரிகள்;
(க்யு) மாவட்டத்தில், பதிவு செய்த மணல் எடுத்தல் தொழிலாளர்க
ளிலிருந்து அரசு பெயர் நியமனம் செய்யும் மூன்று நபர்கள்.";
5(ii) துணைப்பிரிவு (3)-ல், "நீர் பாசனத்துறையில் எக்சிக்கியூட்ºவ்
இன்ஜி…யர்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "சப் கலக்டர்" அல்லது
"தலைமை அலுவலகத்தின் நிர்வாகமுடைய ரவன்யு டிவிஷணல் ஆபீசர்" என்ற
வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
6. பிரிவு 4-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 4-ன் துணைப்
பிரிவு (1)-ல் உட்பிரிவு (ஐ)-க்கு பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட
வேண்டும், அதாவது:—
"(ஜெ) மேற்கூறிய பகுதியில் பதிவு செய்த மணல் எடுத்தல் தொழிலாளர்
களிடமிருந்து மாவட்ட ஆட்சி தலைவர் பெயர் நியமனம் செய்யும் மூன்று
நபர்கள்".
7. பிரிவு 9-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தில் பிரிவு 9-ல் உட்பிரிவு
(பி)-ல், "முதலான வல்லுநர் குழுக்களின்" என்ற வார்த்தைகளுக்குப்பிறகு
"அல்லது அரசு காலாகாலங்களில் குறிப்பிடுகின்ற இந்த பிரிவில் பிற
முகமைகளின்" என்ற வார்த்தைகளும் கூட்டி சேர்க்கப்படவேண்டும்.
8. பிரிவு 12-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 12-ல்,—
(i) துணைப்பிரிவு (2)-ல், "காலை 6 ம¶க்கு முன்பும் மாலை 3 ம¶க்கு
பிறகும்" என்ற வார்த்தைகளுக்கும் எண்களுக்கும் பதிலாக "காலை 7 ம¶க்கு
முன்பும் மாலை 4 ம¶க்கு பிறகும்" என்ற வார்த்தைகளும் எண்களும்
சேர்க்கப்பட வேண்டும்.
(ii) துணைப்பிரிவு (5)-ல், ஏதேனும் நீர்ப்பாசன திட்டத்திலிருந்தோ
என்ற வார்த்தைகளுக்கு பிறகு நீர் விநியோகத்திட்டத்தின் பம்பிங் ஸ்டேஷ
னிலிருந்தோ தடையணையிலிருந்தோ ஏதேனும் பாதுகாப்பு சுவரிலிருந்தோ
நதிக்கரையில் வைத்து நடத்துகின்ற ஏதேனும் மத ரீதியிலானதோ, கலாச்சார
ரீதியிலானதோ ஆன செயல்பாட்டு மேடையிலிருந்தோ என்ற வார்த்தைகள்
சேர்க்கப்பட வேண்டும்.
(iii) துணைப்பிரிவு (10)-ற்கு பிறகு, பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட
வேண்டும், அதாவது:—
"(11) ஒரு கடவில் மணல் எடுத்தல் செயல்பாடுகளும் அத்தகைய மணல்
கடத்திகொண்டு செல்வதும் நிர்ணயிக்கப்படுகின்றபடி நிபந்தனை
களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு மட்டுமே செய்யப்பட வேண்டும்".
9. பிரிவு 17-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 17-ல்,
துணைப்பிரிவு 4-ல், "சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார நிறுவனத்தின்
செயளாளர்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "சம்பந்தப்பட்ட உள்ளாட்சி
6அதிகார நிறுவனத்தின் செயளாளரும் அந்த மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு
பஞ்சாயத்திற்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரபூர்வமாக பெயர்
நியமனம் செய்கின்ற வருவாய் துறையின் ஒரு அதிகாரியும்" என்ற
வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
10. பிரிவு 23-ற்கு பதிலாக புதிய பிரிவுகள் சேர்க்கப்படுதல்.—முதன்மைச்
சட்டத்தின் பிரிவு 23-ற்கு பதிலாக பின்வரும் பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும்,
அதாவது:—
"23. வாகனம், ஏற்றுவதற்கு பயன்படுத்துகின்ற உபகரணங்கள், ப¶ ஆயுதங்கள் ஆகியவை பறிமுதல் செய்தல்.—(1) இந்த சட்டத்திலோ அதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களிலோ குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றாமல், ஏதேனும் ஒரு நபர் ஒரு கடவிலிருந்து மணல் எடுக்கவோ அங்கிருந்து மணல் கடத்திச்செல்லவோ செய்தால் வருவாய் துறையில் கிராம அதிகாரியின் பதவிக்குக்குறையாத ஒரு அதிகாரியோ அல்லது ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியின் பதவிக்குக்குறையாத ஒரு காவல்துறை அதிகாரியோ அல்லது சிறப்பு பாதுகாப்பு சேனையின் ஒரு உறுப்பினரோ, அத்தகைய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதோ பயன்படுத்தும் எண்ணமுடையதோ ஆன ப¶ ஆயுதங்கள், உபகரணங்கள், ஏற்றுவதற்கு பயன்படுத்துகின்ற உபகரணங்கள், வாகனங்கள், பிற பொருட்கள் ஆகியவற்றை மணல் உட்பட பறிமுதல் செய்ய வேண்டும்.
விளக்கம்:—இந்த பிரிவின் தேவைகளுக்காக வாகனம் என்ற சொல்லில்
நாட்டுப்படகு, சங்ஙாடம், ஏதேனும் பிற யானம் ஆகியவைகளும்
உட்பட்டதாகும்.
23எ. மணல், வாகனங்கள் முதலானவற்றை பறிமுதல் செய்தல்.— (1) பிரிவு 23-ன் அடிப்படையில் ஏதேனும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் காரியத்தில், அத்தகைய சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரி, மேற்கூறிய சொத்துக்களின் மீது அவைகள் பறிமுதல் செய்யப்பட்டவை என்று காட்டுவதற்குரிய ஒரு முத்திரை வைத்து வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பித் திருந்தாலும் இல்லை எனிலும், அவ்விதம் பறிமுதல் செய்த 48 ம¶ நேரத்திற்குள், அவ்விதம் பறிமுதல் செய்ததாக, மேற்கூறிய சொத்துக்களை பறிமுதல் செய்த இடத்தில் அதிகாரமுடைய சப் டிவிஷணல் குற்றவியல் நீதிபதிக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
(2) துணைப்பிரிவு (1)-ன் அடிப்படையில் உள்ள அறிக்கை கிடைத்தால்,
துணைப்பிரிவு குற்றவியல் நீதிபதி பிரிவு 23-ன் அடிப்படையில் பறிமுதல்
செய்த சொத்துக்களை பறிமுதல் செய்யாதிருப்பதற்கான காரணமுண்டெனில்,
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட நேரத்திற்குள், எழுத்துமூலம்
அறிக்கை செய்யப்பட வேண்டுமென தேவைப்பட்டுக்கொண்டு, வாகனங்கள்
7அல்லது ப¶ ஆயுதங்கள் அல்லது, உபகரணங்கள் அல்லது ஏற்றுவதற்கு
பயன்படுத்தும் உபகரணங்கள் அல்லது பிற சொத்துக்களின் உரிமையாளர்
களுக்கு அல்லது அதன் பொறுப்புடைய நபருக்கு அறிக்கை நல்க வேண்டும்.
(3) கையகப்படுத்திய சொத்துக்களின் உரிமையாளரோ அல்லது
பொறுப்புடைய நபரோ விளக்கம் நல்காதிருப்பதும் நல்கிய விளக்கம்
திருப்திகரமல்லாமலும் இருந்தால் பிரிவு 23-ன்படி பறிமுதல் செய்த
சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டியதாகும் என்று துணைப்பிரிவு
குற்றவியல் நீதிபதி புரிந்து கொண்டால் அவர், ஒரு ஆணை மூலம், அதை
பறிமுதல் செய்ய வேண்டியதும் அந்த விவரம் அவற்றின் உரிமையாளரையோ
அல்லது அதன் பொறுப்புடைய நபரையோ அறிவிக்கவும் வேண்டும்.
எனினும், கையகப்படுத்திய சொத்துக்களின் உரிமையாளருக்கோ
அல்லது அவற்றை கட்டுப்படுத்தும் நபருக்கோ, பறிமுதல் செய்வதற்குப் பதிலாக,
மணல் தவிர, பறிமுதல் செய்த சொத்துக்களை, மாவட்ட ஆட்சி தலைவர்
தீர்மானிக்கின்ற விலைக்கு துல்லிய தொகையை செலுத்தி அவற்றை
மீட்டுக்கொள்வதற்குரிய சுதந்திரம் நல்கவேண்டும்.
மட்டுமல்லாமல், எந்தவித காரணத்தினாலும் விலை ஈடுசெய்து
கொண்டு பறிமுதல் செய்த மணலை விட்டுக்கொடுக்கக்கூடாது.
(4) துணைப்பிரிவு (3)-ன் காப்பு வாசகத்தின்படி கிடைத்த தொகையை
பிரிவு 23டி-ன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பவர்மானேஜ்மென்ட் ஃபண்ட்-ல்
செலுத்தவேண்டும்.
(5) துணைப்பிரிவு (3)-ன் அடிப்படையில் ஒரு பறிமுதல் ஆணை
வெளியிடும் காரியத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக அதிகாரமுடைய
நீதிமன்றம் முன், இந்த சட்டத்தின்படி ஒரு குற்றம் செய்தது சம்பந்தப்பட்ட
ஒரு மனு வருவாய் டிவிஷணல் அதிகாரி நல்கவோ அல்லது பிரிவு 25-ல்
குறிப்பிட்டுள்ளபடி அதிகாரியால் தாக்கல் செய்யப்படவேண்டும்.
(6) துணைப்பிரிவு (3)-ன் அடிப்படையில் பறிமுதல் செய்த
மணலை, பொதுப்ப¶த்துறை அவ்வப்போது நிச்சயிக்கின்ற நிரக்கில்,
நிர்மிதி மையத்திற்கு அல்லது கலவரைக்கு விற்பனை செய்து அவ்விதம்
கிடைக்கின்ற தொகையை பவர் மானேஜ்மென்ட் ஃபண்ட்-ல் செலுத்த
வேண்டும்.
(7) இந்த பிரிவின்படி பறிமுதல் செய்வது மேற்கூறிய குற்றத்திற்கு
இந்த சட்டப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள தண்டனைக்கு புறம்பானதாக
இருக்கும்.
823பி. மாவட்ட ஆட்சித் தலைவருக்குரிய ரிவிஷன்.—பிரிவு 23பி-ன்
அடிப்படையில் பறிமுதல் ஆணை மூலம் துன்பம் அனுபவிக்கின்ற எந்த ஒரு
நபருக்கும், மேற்கூறிய ஆணையின் தேதி முதல் 15 நாட்களுக்குள் மாவட்ட
ஆட்சித்தலைவருக்கு ரிவிஷன் நல்கவேண்டியதும் மேற்கூறிய ஆணை
மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதும் என்பது ஆவணங்களின் அடிப்படையில்
மாவட்ட ஆட்சித்தலைவர் புரிந்துகொண்ட பின்பு மேற்கூறிய ஆணையை
புதுப்பிக்கவோ திருத்தம் செய்யவோ இரத்து செய்யவோ செய்யலாம்.
எனினும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் ரிவிஷன் தாக்கல்
செய்யாததற்கு ரிவிஷன் மனுதாரருக்கு போதுமான காரணங்கள் உள்ளன என்று
மாவட்ட ஆட்சித்தலைவர் திருப்தியடைந்தால் அவர் 15 நாட்கள் வரையுள்ள
காலதாமதத்தை மன்னிக்கலாம் அதற்கு பிறகு ஏற்படும் காலதாமதத்தை
மன்னிக்கக்கூடாது.
23சி. மாவட்ட நீதிமன்றத்திற்குரிய மேல்முறையீடு.—(1) பிரிவு 23பி-ன்
அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆணைமூலம் பாதிக்கப்பட்ட
எந்த ஒரு நபருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆணையின்
தேதி முதல் 30 நாட்களுக்குள் சொத்து கையகப்படுத்திய இடத்தின்
அதிகாரமுடைய மாவட்ட நீதிமன்றம் முன்பு மேல்முறையீடு தாக்கல்
செய்யவேண்டும்.
(2) துணைப்பிரிவு (1)-ன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றத்தின்
தீர்மானம் இறுதியானதாக இருக்கும்.
23டி. பறிமுதல் செய்த சொத்து அல்லது பறிமுதல் செய்வதற்கு பதிலாக நல்கிய தொகையை திரும்பிக் கொடுத்தல்.—பிரிவு 23பி-ன்படி தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் மாவட்ட ஆட்சியாளர் அல்லது பிரிவு 23சி-ன்படி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் மாவட்ட நீதிமன்றம் அல்லது அதது காரியத்திலாவதுபோல் பிரிவு 23பி அல்லது பிரிவு 23சி-ன்படி ஆணையை திருத்தம் செய்தால் அல்லது இரத்து செய்தால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களோ அல்லது பறிமுதலுக்கு பதிலாக அளிக்கப்பட்ட தொகையோ அதன் உடமையாளருக்கு அல்லது அதன் பொறுப்புடைய நபருக்கு திருப்பி அளிக்க வேண்டியதும் தொகை திருப்பி அளிக்கும் காரியத்தில் அது நதி மேலாண்மை நிதியிலிருந்து அளிக்க வேண்டியதுமாகும்.