Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

1. The Kerala Municipality (Amendment) Ordinance, 2011 (Ordinance No. 35 of 2011)—Tamil

Published 10 January 2012

Department
Law (Legislation-C) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2012-01-10.pdf_2012_02_Part_1_Law_leg_c
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 2 dated 10th January, 2012.

PART I

Section iii

கேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

2011 மார்ச் 18 எண் 11012/ச. இ. சி. 1/2010/சட்டம். திருவனந்தபுரம்,

1932 பல்குணம் 27.

2011 மார்ச் 17ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை

செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக

இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

கெ. மதுசூதனன் நாயர்,

சட்டத்துறை சிறப்பு செயலர்.

2011-ன் அவசரச்சட்டம் எண் 35

2011-ன் கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த)(திருத்த)(திருத்த)(திருத்த)(திருத்த) அவசரச்சட்டம்அவசரச்சட்டம்அவசரச்சட்டம்அவசரச்சட்டம்அவசரச்சட்டம்

2011-ன் கேரள முனிசிப்பாலிட்டி

2011-ன் கேரள முனிசிப்பாலிட்டி

2011-ன் கேரள முனிசிப்பாலிட்டி

2011-ன் கேரள முனிசிப்பாலிட்டி

இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால்

விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1994-ன் கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்தை மீண்டும் திருத்தம்

செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—1994-ன் கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்தை (1994-ன் 20)

பின்வரும் நோக்கங்களுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக

இருப்பதாலும்;

2

2010-ன் கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 26),

2010 ஜூன் மாதம் 12ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை

செய்யப்பட்டபடியாலும்;

2010 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி 2010 ஜூலை 29ஆம் தேதி

முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில்

மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம்

கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக

2010-ன் கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 32)

2010 ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை

செய்யப்பட்டிருந்ததாலும்;

2010 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ஆரம்பித்து 2011 ஜனவரி மாதம்

3ஆம் தேதி முடிவடைந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில்

மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம்

கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக

2011-ன் கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 11)

2011 ஜனவரி மாதம் 22ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பரம்

செய்யப்பட்டதாலும்;

2011 பெப்ருவரி மாதம் 4ஆம் தேதி ஆரம்பித்து 2011 பெப்ருவரி மாதம்

24ஆம் தேதி முடிவடைந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில்,

மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம்

கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல்

செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன்

துணைப்பிரிவு (எ)-ன் அடிப்படையில் மேற்கூறிய அவசரச்சட்டம்

2011 மார்ச் 18ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில்

இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

3

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும்,

தாம் துரித நடவடிக்கை எடுக்கத்தேவையான சூழ்நிலைகள் நிலவில்

உள்ளன என்று கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;

தற்போது, எனவே, இந்திய அரசியலமைப்பின் விதித்தொகுப்பு 213-ன்

உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, கேரள

ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பரம் செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2011-ன்

கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2010 ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக

கருதப்படவேண்டும்.

2. 1994-ன் 20-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—

இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 1994-ன் கேரள

முனிசிப்பாலிட்டி சட்டம், (1994-ன் 20) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம்

என்று குறிப்பிடப்படும்), பிரிவுகள் 3, 4 மற்றும் 5-ல் குறிப்பிடப்பட்ட

திருத்தங்களுக்கு உட்பட்டு பயனுடையதாக அமையும்.

3. பிரிவு 69-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 69-ன்

துணைப்பிரிவு (2)-க்குப்பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும்,

அதாவது:—

"(2எ) வார்டு பிரித்தல் மற்றும் அவற்றின் எல்லையை நிர்ணயம்

செய்தல் தொடர்பாக இந்த பிரிவின் கீழ் º-லிமிட்டேஷன் கமிஷனால்

வெளியிடப்பட்ட எந்த ஒரு ஆணையும் அரசிதழில் பிரசுரிக்கப்பட

வேண்டியதும் அது சட்டப்படி செல்லுபடியானதாகவும் இருக்கும்."

4. பிரிவு 86-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 86-ன்

துணைப்பிரிவு (1)-ல், நிலவிலிருக்கும் விளக்கம், "விளக்கம் 1" என எண் இட

வேண்டியதும் அவ்வாறு எண் இடப்பட்ட விளக்கம் 1-க்கு பிறகு பின்வரும்

விளக்கம் சேர்க்கப்படவும் வேண்டும், அதாவது:—

"விளக்கம் 2.—இந்தப்பிரிவின் தேவைக்காக பகுதி நேரப்ப¶யா

ளர்களும் மதிப்பூதியம் பெறுபவர்களும் ப¶யாளர்களாக கருதப்பட

வேண்டும்.".

4

5. பிரிவு 407-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 407-ன்

துணைப்பிரிவு (1)-ல், "1999 அக்டோபர் 15ஆம் தேதியிலோ" என்ற சொற்

களுக்கும் எண்களுக்கும் பதிலாக "2008 டிசம்பர் 31ஆம் தேதியிலோ"

என்ற சொற்களும் எண்களும் சேர்க்கப்பட வேண்டும்.

6. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2010-ன் கேரள மாநில முனிசிப்பாலிட்டி

(திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 26) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசர

சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்

கீழ் செய்த ஏதேனும் காரியமோ, எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த

அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை

சட்டத்தின்கீழ் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.

ஆர். எஸ். கவாய்,

ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 10 January 2012. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2012-01-10.pdf_2012_02_Part_1_Law_leg_c/. Archive identifier in.gazette.kerala_new.2012-01-10.pdf_2012_02_Part_1_Law_leg_c.