Kerala Gazette No. 6 dated 7th February, 2012.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-சி) துறை
அறிக்கை
2011 மார்ச் 18.
எண் 11011/ச. இ. சி. 1/2010/சட்டம். திருவனந்தபுரம்,
1932 பல்குணம் 27.
2011 மார்ச் 17ஆம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
கெ. மதுசூதனன் நாயர், சட்டத்துறை சிறப்புச்செயலர்.
2011-ன் அவசரசட்டம் எண் 34
2011-˛u ˙LW[ Tg-NÙ-Vj-'-WÙw (CWi-PÙ-Y' ß⁄jR)
AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்ட ாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
முகவுரை.—1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தை பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்; 2010-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 25) 2010 ஜூன் மாதம் 12ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டபடியாலும்;
22010 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி 2010 ஜூலை 29ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2010-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 34), 2010 ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதனாலும்;
2010 டிசம்பர் 21ஆம் தேதி ஆரம்பித்து 2011 ஜனவரி 3ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரின் காலத்தில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2011-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 10) 2011 ஜனவரி மாதம் 22ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும்;
2011 பெப்ருவரி 4ஆம் தேதி தொடங்கி 2011 பெப்ருவரி 24ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரின் காலத்தில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் 2011-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச்சட்டம் 2011 மார்ச் 18ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
31. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2011-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2010 ஜூன் 14ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்பட வேண்டும்.
2. 1994-ன் 13-வது சட்டம் தற்காலிகமாகத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.—இந்த சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் (1994-ன் 13) (இதற்குப்பிறகு முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படும்). 3 முதல் 8 வரையிலான பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு பலனுடையதாக இருக்கும்.
3. பிரிவு 1-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 1-ன் துணைப்பிரிவு (2)-ல், "தொழிற் பகுதிகளுடையவும்" என்ற சொற்களுக்கு பதிலாக, "அரசியலமைப்பின் விதித்தொகுப்பு 243க்யூ உட்பிரிவு (1)-ன் காப்புவாசகத்தின்படி விவசாய பட்டிணமாக குறிப்பிடப்பட்ட பகுதிகளுடையவும்" போன்ற சொற்கள் எண்கள் மற்றும் குறியீடுகள் சேர்க்கப்பட வேண்டும்.
3. பிரிவு 10-ன் திருத்தம் .—முதன்மை சட்டத்தின் பிரிவு 10-ன் துணைப்பிரிவு (3)-க்குப்பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"(3எ) º-லிமிட்டேஷன் கமிஷன் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்டு இந்த பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட ஒவ்வொரு ஆணையும் அரசு அரசிதழில் வெளியிடப்பட வேண்டியதும், அது சட்டப்படி செல்லு படியானதாகவும் இருக்கும்.".
5. பிரிவு 30-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 30-ன் துணைப்பிரிவு (1)-ல் தற்போதுள்ள விளக்கம், "விளக்கம் 1" என்று எண் இடப்பட வேண்டியதும் அவ்வாறு எண் இடப்பட்ட விளக்கம் 1-க்கு பிறகு பின்வரும் விளக்கம் சேர்க்கப்படவும் வேண்டும், அதாவது:—
"விளக்கம் 2.—இந்த பிரிவின் தேவைக்காக பகுதி நேர ப¶யா ளர்கள் மற்றும் மதிப்பூதியம் பெறுபவர்கள் ஊழியர்களாக கருதப்பட வேண்டும்.".
6. பிரிவு 149-ன் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 149-ன் துணைப்பிரிவு (2)-க்கு பின்வரும் காப்புவாசகம் சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"எனில் சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் பல்வேறு மட்டங்களிலான பஞ்சாயத்துகளுக்கு ஒரே சமயத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதை செயல்படுத்த மாநில தேர்தல் குழு தேவைபடுவதற்கு ஏற்ப காலியிடங்கள் ஏற்படுவதற்கு முன்னரான 6 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம்.".
47. பிரிவு 154-ன் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 154-ன் துணைப்பிரிவு (2)-க்கு பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"பஞ்சாயத்தின் தலைவர் அல்லது துணைத்தலைவர் தனது பதவிப் பொறுப்பையோ அல்லது பஞ்சாயத்தில் ஒப்படைக்கப்பட்டதோ அதன் உமையிலுள்ளதோ அல்லது தனது கைவசம் அல்லது கட்டுப்பாட்டில் அல்லது வந்தடைந்ததோ ஆன ஏதேனும் ஆவணம், பணம், அல்லது பிற பொருட்கள் தலைவர் அல்லதுதுணைத்தலைவர் என்ற நிலையில் உள்ள தனது பதவி காலவரையறை முடிவடைந்தால் உடனடியாகவும், மேலும் துணைத்தலைவரின் காரியத்தில், தலைவர் தேவைப்பட்டால் உடனடியாகவும் பதவிக்கு வரும் தனது வாரிசுக்கோ நிர்ணயம் செய்யப்பட்ட பிற அதிகாரிக்கோ ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில் அத்தகைய தலைவர் அல்லது துணைத் தலைவர், குற்றஸ்தாபனத்தின் மீது அந்த குற்றத்திற்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாத பிழைத்தண்டனை சுமத்தப்பட வேண்டும்."
8. பிரிவு 235எபி-ன் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 235எபி-ன் துணைப்பிரிவு (1)-ல், "1999 அக்டோபர் 25ஆம் தேதி அல்லது" என்ற சொற்கள் மற்றும் எண்களுக்குப் பதிலாக, "2008 டிசம்பர் 31ஆம் தேதி அல்லது" என்ற சொற்கள் மற்றும் எண்கள் சேர்க்கப்பட வேண்டும்.
9. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2011-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 10) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் கீழ் செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச் ச ட் ட த் தி ன் அ டி ப் ப ை ட யி ல் தி ரு த் த ம் ெ ச ய் ய ப் ப ட் ட மு த ன் ை ம சட்டத்தின் கீழ் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்பட வேண்டும்.
ஆர். எஸ். கவாய், ஆளுநர்.