Kerala Gazette No. 18 dated 1st May, 2012.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-டி) துறை
அறிக்கை
எண் 4085/ச. டி 3/2011/சட்டம்.
2011 ஏப்ரல் 28.
திருவனந்தபுரம்
1933 வைசாகம் 8.
2011 ஏப்ரல் 27ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
கெ. ரம¶,
கூடுதல் சட்டச் செயலாளர், சட்டத்துறை சிறப்புச்செயலர் (பொறுப்பு).
2011-ன் 43-வது எண் அவசரச்சட்டம்
2011˛u ˙LW[ Æ˚[-VÙh" (ß⁄jR) AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாம் ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
2000-ன் கேரள விளையாட்டு சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
முகவுரை.—2000-ன் கேரள விளையாட்டு சட்டம் (2001-ன் 2) பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கத் தேவையான சூழ்நிலைகள் நிலவில் உள்ளன என கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;
2தற்போது, எனவே, இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் வெளியிடப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2011-ன் கேரள விளையாட்டு (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.
2. 2001-ன் 2-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 2000-ன் கேரள விளையாட்டு சட்டத்தில் (2001-ன் 2) (இதற்கு பிறகு முதன்மை சட்டம் என குறிப்பிடப்படும்) 3 முதல் 5 வரையிலான பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு அமலிலிருக்கும்.
3. பிரிவு 3-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தில் பிரிவு 3-ன் துணைப்பிரிவு (3)-ல் "அலுவல் வழி உறுப்பினர்கள்" என்ற தலைப்பின் கீழ்,—
(i) (சி) "வருவாய்துறை செயலர் (செலவினம்)" என்ற சொற்களுக்கும் அடைப்புக் குறிக்கும் பிறகு "அல்லது அவரால் அதிகாரப்படுத்தப்பட்ட கூட்டுச் செயலர் பதவிக்கு குறையாத பதவியிலுள்ள ஒரு அலுவலர்".
(ii) (எப்) "பொது கல்வித்துறை இயக்குநர்" என்ற சொற்களுக்குப் பிறகு "அல்லது அவரால் அதிகாரப்படுத்தப்பட்ட இணை இயக்குநர் பதவியிலும் குறையாத பதவியிலுள்ள ஒரு அலுவலர்" என்ற சொற்களை சேர்க்க வேண்டும்.
4. பிரிவு 6-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 6-ன் துணைப்பிரிவு (1)-ல்,—
(i) (டி) "வருவாய்துறை செயலர் (செலவினம்)" என்ற சொற்களுக்கும் அடைப்புக் குறிக்கும் பதிலாக "அல்லது அவரால் அதிகாரப்படுத்தப்பட்ட கூட்டுச் செயலர் பதவிக்கு குறையாத பதவியிலுள்ள ஒரு அலுவலர்" என்ற சொற்களை சேர்க்க வேண்டும்.
(ii) (இ) "பொது கல்வித்துறை இயக்குநர்" என்ற சொற்களுக்குப் பிறகு "அல்லது அவரால் அதிகாரப்படுத்தப்பட்ட இணை இயக்குநர் பதவிக்கு குறையாத பதவியிலுள்ள ஒரு அலுவலர்" என்ற சொற்களை சேர்க்க வேண்டும்.
35. பிரிவு 14-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு (14)-ல்,—
(i) துணைப்பிரிவு (1)-ல், "இணையான பதவி" என்ற சொற்களுக்குப் பிறகு "அல்லது கேரள மாநில விளையாட்டு குழுமத்தின் உதவிச்செயலரின் பதவி" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
(ii) துணைப்பிரிவு (1)-க்கு பிறகு பின்வரும் காப்புரை சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"துணைப்பிரிவு (1)-ன்படி விளையாட்டு குழுமத்தின் உதவிச்செயலாளர் களில் இருந்து மாவட்ட விளையாட்டு குழுமத்தின் செயலாளராக நியமிக்கப் படுபவர்களின் எண்¶க்கை மூன்று நபருக்கு கூடுதல் ஆகக்கூடாது".
ஆர். எஸ். கவாய், ஆளுநர்.