Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

3. The Kerala Advocates Clerks Welfare Fund (Amendment) Ordinance, 2012 (Ordinance No. 1 of 2012)—Tamil

Published 18 September 2012

Department
Law (Legislation-F) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_1
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 15 dated 18th September, 2012.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எப்) துறை

அறிக்கை

2012 ஜனவரி 17 எண் 22658/ச. இ. எப். 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1933 பௌஷம் 27.

2012 ஜனவரி மாதம் 16ஆம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.

2012-ன் அவசரசட்டம் எண் 1

2012˛u ˙LW[ YZd-L±Oo LQd-Lo-Ls SX-®ß

(ß⁄jR) AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

2003-ன் கேரள வழக்கறிஞர்கள் மற்றும் கணக்கர்கள் நலநிதி சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை .—2 0 1 0 - ன் ே க ர ள வ ழ க் க றி ஞ ர் கண க் க ர் க ள் ந ல நி தி (திருத்தம்) அவசரச்சட்டம் (2010-ன் 57) 2010 நவம்பர் 25ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும்;

2

2010 டிசம்பர் 21ஆம் தேதி ஆரம்பித்து 2011 ஜனவரி 3ஆம் தேதி முடிவடைந்த கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் காலத்தில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்று வதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் விதிமுறைகளை நிலைநிறுத்துவதற் காக 2011-ன் கேரள வழக்கறிஞர்கள் மற்றும் கணக்கர்கள் நலநிதி (திருத்தம்) அவசரச்சட்டம் (2011-ன் 6) 2011 ஜனவரி 22-ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பரப்படுத்தியிருந்ததாலும்;

2011 பிப்ரவரி 4ஆம் தேதி ஆரம்பித்து 2011 பிப்ரவரி 24ம் தேதி முடிவடைந்த கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலத்தில் மேற்குறிப் பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்று வதற்கும் முடியாமல்போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் விதிமுறைகளை நிலைநிறுத்துவதற் காக 2011-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர் நலநிதி (திருத்தம்) அவசரச்சட்டம் (2011-ன் 6) 2011 மார்ச் 17ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பரப்படுத்தி யிருந்தாலும்;

2011 ஜூன் 1ஆம் தேதி ஆரம்பித்து 2011 ஜூலை 20ஆம் தேதி முடிவடைந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் காலத்தில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்று வதற்கும் முடியாமல்போனதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டம் 2011 ஜூலை 13ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

2011-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி (திருத்தம்) அவசரச்சட்டம் (2011-ன் 49) 2011 நவம்பர் 18ஆம் தேதி கேரள ஆளுநர் விளம்பரப்படுத்தி யிருந்ததாலும்;

2011 டிசம்பர் 9ஆம் தேதி ஆரம்பித்து அதே நாளில் முடிவடைந்த கேரள சட்டப்பேரவை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையின் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

3

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 213ஆம் விதித்தொகுப்பின் 2ஆம் பிரிவு (எ) துணைப்பிரிவுப்படி 2011-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி (திருத்தம்) அவசரச்சட்டம் (2011-ன் 49) 2012 ஜனவரி 20ஆம் தேதி அமலில் இருந்து நின்று விடுவதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் விதிமுறைகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;

தற்போது, எனவே, இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி (திருத்தம்) அவசரச்சட்டம் என்ற பெயரில் அழைக்கப்படலாம்.

(2) இந்த அவசரச்சட்டத்தின் 3ஆம் பிரிவு 2004 ஏப்ரல் 1ஆம் தேதியும் 4-ம் பிரிவு 2010 நவம்பர் 26ஆம் தேதியும் மீதமுள்ள விதிமுறைகள் 2011 நவம்பர் 18-ஆம் தேதியும் அமலுக்கு வந்திருப்பதாக கருதப்பட வேண்டியதுமாகும்.

2. 2003-ன் 27ஆம் சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 2003-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி சட்டம் (2003-ன் 27) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று குறிப்பிடப்படும்) 3,4,5 என்ற பிரிவுகளில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 17-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 17-ல்,—

(i) துணைப்பிரிவு 5-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"(5) ஒவ்வொரு உறுப்பினரும் நிதிக்காக வருடவரித்தொகையாக ஆயிரத்தி இருËறு ரூபாய் வழங்க வேண்டியதும் இதனை மொத்தமாக வழங்குகின்ற போது எல்லா வருடமும் ஜூன் மாதம் 30ஆம் தேதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ வழங்க வேண்டியதும் அல்லாதபோது மூன்று சரியான தவணை களாக ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 என்ற தேதிகளிலோ அதற்கு முன்போ வழங்க வேண்டியதுமாகும்.

4

எனில், மேற்குறிப்பிட்டபடி மொத்தமாகவோ அல்லது தவணைகளாகவோ குறிப்பிட்ட நேரத்திற்குள் வரித்தொகை கட்டுவதற்கு தவறுகின்ற உறுப்பினர்கள் இதன்படி தவறிய நிலுவைத்தொகை பன்னிரண்டு சதவீதம் வட்டியோடு டிசம்பர் 31ஆம் தேதியோ அதற்கு முன்பாகவோ கட்டவேண்டியதுமாகும். (5அ) தற்போதுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் 2004 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2010-ன் கேரள வழக்கறிஞர்கள் மற்றும் கணக்கர்கள் நலநிதி (திருத்தம்) அவசரச்சட்டம் (2010-ன் 57) அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியான 2010 நவம்பர் 26ஆம் தேதி வரையுள்ள காலயளவில் கட்டவேண்டிய வருடாந்தர வரிதொகையின் நிலுவை 2010 டிசம்பர் 31, 2011 ஜூன் 30, 2011 டிசம்பர் 31 என்ற தேதிகளுக்கு முன்பாக மூன்று சரியான தவணைகளாக கட்டவேண்டியது ஆகும்.

என்றாலும், நிலுவையினுடைய ஒன்றும் இரண்டும் தவணைகள் கட்டுவதற்கு தவறுகின்ற உறுப்பினர்கள் 2011 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக நிலுவைத்தொகையை மொத்தமாக பன்னிரண்டு சதவீத வட்டியுடன் கட்ட வேண்டியதுமாகும்."

(ii) துணைப்பிரிவு (6)-ல், "ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பு" என்ற வார்த்தைகள் மற்றும் எண்களுக்கு பதிலாக "டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு" என்ற வார்த்தைகளும் எண்களும் சேர்க்கப்படவேண்டும்.

4. பிரிவு 18-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 18-ல், துணைப் பிரிவு (6)-ற்கு பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்க வேண்டியதுமாகும்., அதாவது:—

"(7) உறுப்பினர் பதவி முடிவடைந்து ஓய்வூதியமும் பிற சலுகைகளும் பெற்றுக்கொண்ட ஒரு நபரை நிதிக்காக மீண்டும் அனுமதி அளிக்க கூடாததாகும்."

5. பிரிவு 26-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 26-ல், தற்போதுள்ள பிரிவு இந்த பிரிவினுடைய துணைப்பிரிவு (1) ஆக எண் இடப்படவேண்டியதும் இதன்படி எண்¶ட்ட (1)ஆம் துணைப்பிரிவிற்கு பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டியதாகும்,. அதாவது:—

"(2) 1985-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி திட்டத்தில் எது எவ்வாறிருப்பினும் மேற்குறிப்பிட்ட திட்டத்தின் எல்லாவித சொத்துக்களும் பொறுப்புகளும் இந்த சட்டத்தின் 4-ம் பிரிவுப்படி உருவாக்கப்பட்டுள்ள குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியதுமாகும்.

5

4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2011-ன் கேரள வழக்கறிஞர் கணக்கர்கள் நலநிதி (திருத்தம்) அவசரச்சட்டம் (2011-ன் 49) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.

எம். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 18 September 2012. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_1/. Archive identifier in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_1.