Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

4. The Kerala Tolls (Amendment) Ordinance, 2012 (Ordinance No. 12 of 2012)—Tamil

Published 18 September 2012

Department
Law (Legislation-F) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_12
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 15 dated 18th September, 2012.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எப்) துறை

அறிக்கை

2012 ஜனவரி 20 எண் 22813/ச. இ. எப். 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1933 பௌஷா 30.

2012 ஜனவரி மாதம் 18ஆம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலாளர் (சட்டம்).

2012-ன் அவசரசட்டம் எண் 12

2012˛u ˙LW[ ˙PÙpv (ß⁄jR) AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1976-ன் கேரள டோல் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—2011-ம் ஆண்டின் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 54) 2011 நவம்பர் மாதம் 28ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2

2011 டிசம்பர் 9ஆம் தேதி ஆரம்பித்து அதே நாளில் நிறைவுற்ற கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச் சட்டம் (2011-ன் 54) 2012 ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமலில் இருந்து நின்று விடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர் பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

தற்போது, எனவே, இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2011 நவம்பர் 28ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்படவேண்டும்.

2. 1977-ன் சட்ட எண் 6 தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 1976-ன் கேரள டோல்ஸ் சட்டம் (1977-ன் 6) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 2-ன் திருத்தம். —மு த ன் ை ம ச ட் ட த் தி ன் பி ரி வு 2 - ன் உட்பிரிவு (எ)-ல் "Ëறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "ஐËறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

3

4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2011-ன் கேரள டோல்ஸ் (திருத்தம்) அவசரச்சட்டம் (2011-ல் 54) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததாகவோ மேற்கொள்ளப்பட்டதாகவோ கருதப்படவேண்டும்.

எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 18 September 2012. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_12/. Archive identifier in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_12.