Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

5. The Cochin University of Science and Technology (Amendment) Ordinance, 2012 (Ordinance No. 14 of 2012)—Tamil

Published 18 September 2012

Department
Law (Legislation-G) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_14
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 15 dated 18th September, 2012.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-ஜி) துறை

அறிக்கை

2012 ஜனவரி 31 எண் 24217/ச. இ. ஜி. 2 /2011/சட்டம். திருவனந்தபுரம்,

1933 மாகம் 11.

2012 ஜனவரி மாதம் 30ஆம் தேதி கேரள மாநில ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. பி. ராமராஜ பிரேம பிரசாத், சட்டத்துறை செயலாளர்.

2012-ன் அவசரசட்டம் எண் 14

2012˛u ˘LÙf£ A±-Æ-Vp-˛-˘RÙ-Øp-÷hT A±-Æ-Vp

Tp-L-˚Xd-L-ZL (ß⁄jR) AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாம் ஆண்டில் கேரள ஆளுநரால் அறிக்கை செய்யப்பட்டது.

1986-ன் கொச்சி அறிவியல்-தொழில்÷ட்ப அறிவியல் பல்கலைக்கழக சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—2011-ன் கொச்சி அறிவியல்-தொழில்÷ட்ப அறிவியல் பல்கலைக் கழக (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 59) நவம்பர் 30ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும்;

2

2011 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி அதே நாள் முடிவடைந்த கேரள சட்டப்பேரவை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையின் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் 2011-ன் கொச்சி அறிவியல்-தொழில் ÷ட்பஅறிவியல் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 59) 2012, ஜனவரி 20ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கொச்சி-அறிவியல் தொழில்÷ட்ப அறிவியல் பல்கலைக்கழக (திருத்தம்) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது 2011 டிசம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. 1986-ன் 31ஆம் சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காலத்தில் 1986-ன் கொச்சி- அறிவியல் தொழில்÷ட்ப அறிவியல் பல்கலைக்கழக சட்டத்திற்கு (1986-ன் 31) (இதற்கு பிறகு முதன்மைச்சட்டம் என்று கூறப்படும்) 3, 4, 5 என்ற பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருப்பதாகும்.

3. பிரிவு 17-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தில் பிரிவு 17-ல்,—

(i) துணைப்பிரிவு (1)-ல், (எ) (viii)-ம் இனத்தில் "ஒருவர் ஆசிரியராகவும் இருக்கவேண்டியது ஆகும்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "ஒருவர் 19ஆம் பிரிவில் "தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ் (v)ஆம் இனத்தின்படி செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக பேராசிரியரும் இருக்கவேண்டியது ஆகும்" என்ற வார்த்தைகளும் எண்களும் அடைப்புக்குறிகளும் சேர்க்கப்பட வேண்டியது ஆகும்.

3

(பி) (xiv)ஆம் உட்பிரிவிற்கு பதிலாக பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட வேண்டியது ஆகும்.

"(xiv) செனட்டில் மாணவ பிரதிநிதிகளிலிருந்து அரசாங்கம் பெயர் சிபாரிசு செய்கின்ற ஒரு மாணவன்";

(ii) துணைப்பிரிவு (2)-ல்,—

(எ) "தகுதியுடையவராக இராது" என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக "தகுதியுடையவராக இருப்பதாகும்" என்ற வார்த்தைகள் சேர்க்கவேண்டியது ஆகும்.

(பி) இரண்டாம் காப்புவாசக நிபந்தனைக்கு பதிலாக பின்வரும் காப்பு வாசக நிபந்தனை சேர்க்க வேண்டியது ஆகும், அதாவது:—

"என்று மட்டுமல்ல, பிரிவு 17-ல் துணைப்பிரிவு (1)-ன் கீழ் அரசாங்கம் பெயர் சிபாரிசு செய்கின்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் விரும்புகின்ற காலம் வரை தங்களுடைய பதவியிடத்தில் தொடரவேண்டியது ஆகும்."

4. பிரிவு 19-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 19-ல்,—

(i) "அலுவலாலான உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ் இனம் (v)-ல், "கொச்சி மேயர்" என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக "கொச்சி மேயரும் களமசேரி நகரசபையினுடைய தலைவரும்" என்ற வார்த்தைகள் சேர்க்க வேண்டியது ஆகும்.

(ii) "பிற உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ்,

(எ) பிரிவு (iv)-க்கு பதிலாக பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"(iv) உயர்கல்வித் துறையிலிருந்து அரசு பெயர் சிபாரிசு செய்கின்ற ஆறு வல்லுநர்கள், இவர்களில் ஒருவர் பின்தங்கிய/பட்டியல் வகுப்பைச் சார்ந்தவரும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கவேண்டியதும் ஆகும்."

(பி) பிரிவு (iv)-க்கு பிறகு பின்வரும் காப்புவாசக நிபந்தனை சேர்க்க வேண்டியது ஆகும். அதாவது:—

"என்றாலும், அரசாங்கம் பெயர் சிபாரிசு செய்கின்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் விரும்புகின்ற காலம் வரை தங்களுடைய பதவியில் தொடர வேண்டியதாகும்.

(சி) பிரிவு (v)-விட்டுவிடப்பட வேண்டியதாகும்.

4

5. சிறப்பு விதிமுறை.—முதன்மை சட்டத்தில் எது எவ்வாறிருப்பினும், இந்த அவசரச்சட்டத்தின் ஆரம்பத் தேதியில், முதன்மைச் சட்டத்தின் 17ஆம் பிரிவு (1)ஆம் துணைப்பிரிவின் (viii)ஆம் (xiv)-ம் இனங்களின்படியும் 19ஆம் பிரிவின் "பிற உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ் (iv)-ம், (v)-ம் இனங்களின் படியும் பதவியிடத்திற்கு பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ள தற்போதுள்ள உறுப்பினர்கள் பதவியிடத்தில் தொடர்வது இந்த அவசரச் சட்டத்தின் விதிமுறைகளின்படி முடிவுக்கு வரும்.

6. செல்லுபடியாதல்.—2011-ன் கொச்சி அறிவியல்-தொழில்÷ட்ப அறிவியல் பல்கலைக்கழக (திருத்தம்) அவசரச் சட்டத்திற்கு (2011-ன் 59) இதற்கு பிறகு மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டம் என்று கூறப்படும். அமலில் இல்லாமலிருந்தாலும் கூட,

(எ) மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் கீழ் செய்ததோ, செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதாவது காரியமோ எடுத்ததோ எடுத்ததாக கருதப்படுவதோ அன ஏதாவது நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் விதிமுறைகளின்படி செய்ததோ எடுத்ததோ ஆக கருதப்பட வேண்டியது ஆகும்.

(பி) மேற்குறிப்பிட்ட அவசரச் சட்டம் அமலில் இல்லாமல் ஆன பிற கும் இநத அவசரச்சட்டம் அரசிதழில் வெளியிடுகின்ற தேதிக்கு முன்பும் செய்த எந்த ஒரு காரியமும் எடுத்த எந்த ஒரு நடவடிக்கையும் இவை மேற்குறிப் பிட்ட அவசரச்சட்டம் அமலுக்கு வராமல் இரந்திருந்தால் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்யவோ எடுக்கவோ செய்யலாம் என்பது போல இந்த அவசரச்சட்டத்தின் விதிமுறைகளின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததாகவோ, எடுத்ததாகவோ கருதப்படவேண்டியதாகும்.

எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 18 September 2012. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_14/. Archive identifier in.gazette.kerala_new.2012-09-18.2012_new_15_Part_1_14.