Kerala Gazette No. 6 dated 5th February, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிக்கை
2012 மார்ச் 28 எண் 7164/ச. இ. எ. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 சைத்ரம் 8.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2012 மார்ச் 27ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலர்.
2012-ன் 2-வது சட்டம்
2012-˛u ˙LW[ ®ß J'd-∏" (LQd-°u ¡RÙ]-
YÙd-˘L-"l◊) NhPm
2012 ஏப்ரல் முதல் தேதி ஆரம்பிக்கும் நிதி ஆண்டில் ஒரு பகுதியின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முன்னுரை.—2012 ஏப்ரல் முதல் தேதி ஆரம்பிக்கும் நிதி ஆண்டில் ஒரு 2 இந்திய குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத்தலைப்பு.— இந்த சட்டத்திற்கு 2012-ன் கேரள நிதி ஒதுக்கீடு (கணக்கின் மீதான வாக்கெடுப்பு) சட்டம் என அழைக்கப்படலாம்.
2. 2012 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் நிதி ஆண்டிற்கு கேரள மாநில தொகுநிதியிலிருந்து 23034,62,01,000 ரூபாய் வழங்குதல்.—2012-ன் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் நிதி ஆண்டில் அட்டவணையில் (2)-வது கட்டத்தில் குறிப்பிட்டுள்ள ப¶கள் மற்றும் தேவைகள் தொடர்பான பல்வேறு செலவுகளை எதிர்கொள்ள, அட்டவணையில் (3)-வது கட்டத்தில் கூறப்பட்டுள்ளவையில் மிகாததும், மொத்தம் இருபத்திமூன்றாயிரத்து முப்பத்திநாலு கோடி அறுபத்திரண்டுலட்சத்தி ஆயிரம் ரூபாய் வருகின்ற தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரப் படுத்தப்பட்ட தொகைகள் மேற்குறிப்பிட்ட ஆண்டு தொடர்பான அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் வினியோகிக்கப்படவேண்டும்.