Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

4. The Kerala Farmers’ Debt Relief Commission (Amendment) Ordinance, 2012 (Ordinance No. 39 of 2012)—Tamil

Published 18 June 2013

Department
Law (Legislation-P) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-06-18.pdf_2013_25_I_Farmers
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 25 dated 18th June, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

2012 மே 26 எண் 3986/ச. இ. பி. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1934 ஜேஷ்டம் 5.

2012 மே மாதம் 26ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலாளர்.

2012-ன் அவசரசட்டம் எண் 39

2012˛u ˙LW[ ÆYNÙV LPu ®YÙWQ L™`u

(ß⁄jR) AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாம் ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டம் பின் வரும் தேவைகளுக் காக மீண்டு ம் தி ரு த்த ம் செய்து உ கந்த தாக இருப்பதாலும்; 2

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;

த ற் ே ப ா து , அ த ன ா ல் , இ ந் தி ய அ ர சி ய ல ை ம ப் பி ன் 2 1 3 - வ து விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிவிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. 2007-ன் 1வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டம் (2007-ன் 1) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) 3வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 2-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 2-ன் உட்பிரிவு (vii)-ல், "இந்தச்சட்டத்தின் தொடக்க தேதியிலோ, அதற்கு முன்போ" என்ற சொற்களுக்குப் பதிலாக "இந்த சட்டத்தின் தொடக்க தேதியிலோ, அதற்கு முன்போ அல்லது மாநிலத்தின் ஏதேனும் குறிப்பிட்ட விபத்துக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகள் சம்பந்தப்பட்டு, அரசு அறிக்கை மூலமாக நிச்சயிக்கப்படும் அதுபோலுள்ள ஏதேனும் தேதியிலோ, அதற்கு முன்போ" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

எச். ஆர். பரத்வாஜ்,

ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 18 June 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-06-18.pdf_2013_25_I_Farmers/. Archive identifier in.gazette.kerala_new.2013-06-18.pdf_2013_25_I_Farmers.