Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala Co-operative Societies (Third Amendment) Ordinance, 2011 (Ordinance No. 51 of 2011)—Tamil

Published 25 June 2013

Department
Law (Legislation-H) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-06-25.pdf_2013_26_1_co-operative_societies
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 26 dated 25th June, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எச்) துறை

அறிக்கை

2011 நவம்பர் 18 எண் 21921/ச. இ. எச். 2/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1933 கார்த்திகம் 27.

2011 நவம்பர் மாதம் 18ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சிறப்பு செயலாளர் (சட்டம்).

2011-ன் அவசரசட்டம் எண் 51

2011˛u ˙LW[ ·h"\‹ NeLeLs (Íu\ÙY' ß⁄jR)

AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1969-ன் கேரள கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்

முகவுரை.—2011-ன் கேரள கூட்டுறவு சங்கம் (மூன்றாவது திருத்த) அவசரச்சட்டம், (2011-ன் 45) 2011 ஆகஸ்ட் 12ஆம் தேதி கேரள ஆளுநர் விளம்பரப்படுத்தியிருந்ததினாலும்;

2

2011 செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி 2011 நவம்பர் 4ஆம் தேதி மு டி வ ை ட ந் த ே க ர ள ம ா நி ல ச ட் ட ப் ே ப ர ை வ கூ ட் ட த் ெ த ா ட ரி ல் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் 2011-ன் கேரள கூட்டுறவு சங்கங்கள் (மூன்றாம் திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 45), 2011 நவம்பர் 7ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

எனவே, தற்போது, இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2011-ன் கேரள கூட்டுறவு சங்கங்கள் (மூன்றாவது திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது 2011 ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்படவேண்டும்.

2. 1969-ன் 21வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காலத்தில், 1969-ன் கேரள கூட்டுறவு சங்க சட்டத்திற்கு (1969-ன் 21) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று அழைக்கப்படும்) 3 மற்றும் 4வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.

3. பிரிவு 3-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 2-ல்,—

(i) உட்பிரிவு (ஓசி)யில் தற்போதுள்ள காப்புவாசகத்திற்கு பதிலாக கீழே கூறப்படுகின்ற காப்புவாசகங்கள் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"என்றாலும், ஒன்றுக்கு கூடுதல் தாÌக்காக்களில் செயல்படுகின்றதும் தற்போதுள்ள சங்கங்களுடைய சொத்துக்களும் பொறுப்புகளும் பிரிவு செய்யாமல் எந்த ஒரு புதிய முதன்மை கூட்டுறவு விவசாய கிராம மேம்பாட்டு3 வங்கியும் பதிவு செய்யக்கூடாததும், புதிய சங்கங்கள் அவைகளின் செயல்பாடு, அவ்வாறு பிரிக்க ப்ப ட்ட அதது ச ங்க ங்களுை டய செயல்பா ட்டு பகுதிக்குள்ளாக குறைத்துக்கொள்ளவேண்டும்.

(ii) உட்பிரிவு (க்யூ பி)க்கு பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கவேண்டும், அதாவது:—

"(க்யூ சி) "சிறப்பு அதிகாரி" எனில், தற்போதுள்ள ஒரு கூட்டுறவு செயல்பாட்டு பிரதேசம் பிரிவு செய்யப்படாமல் பதிவு செய்த சங்கத்தினுடைய சொத்துக்களும் பொறுப்புகளும் பாதுகாப்பில் வைப்பதற்கும் புதிய சங்கங்கள் பதிவு செய்வதற்கும் சட்டத்திலுள்ள 28ஆம் பிரிவில் வகை செய்யப் பட்டுள்ளபடி கூட்டங்கள் கூட்டுவதற்கும் பதிவாளர் நியமித்த துணைபதிவாளர் பதவிக்கு குறையாத ஒரு அலுவலர் என்று பொருள்படும்."

4. 28ஆம் பிரிவினுடைய திருத்தம்.—முதன்மை சட்டத்தின் 28ஆம் பிரிவில் (1சி) துணைப்பிரிவிற்கு பிறகு கீழே குறிப்பிடப்படும் துணைப் பிரிவுகள் சேர்க்க வேண்டும்., அதாவது:—

"(1டி) இந்த சட்டத்தில் எதுவும் எவ்வாறிருந்தபோதிலும், தற்போதுள்ள ஒரு கூட்டுறவு சங்கத்தினுடைய செயல்பாட்டு பிரதேசமும் சொத்துக்களும் பொறுப்புகளும் பிரிவு நடத்தாமலுள்ள எந்த ஒரு முதன்மை கூட்டுறவு விவசாய கிராம மேம்பாட்டு வங்கியினுடையவும் பதிவும் குழுவினுடைய உருவாக்கலும் செல்லுபடியாகாமல் இருப்பதும் அப்படிப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றிற்காகவும் பதிவாளர் சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.

(1இ) அவ்வாறு நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்,—

(i) முன்பிருந்த சங்கத்திற்கு உரிமையுள்ளதோ உரிமையுள்ளதாக காணப்படுவதோ ஆன சொத்துக்களும், பொறுப்புகளும் வழக்குத் தொடரலாம் எ ன் ப து ம் இ ழ ப் பு களு ம் க வ ன த் தி ல் ெ க ா ள் ள ே வ ா , த ன்னு ை ட ய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவோ செய்ய வேண்டியதும் அப்படியுள்ள சொத்துக்களும், முதலுகளும் வழக்குத்தொடரலாம் என்பதும் நஷ்டமோ, கெடுதலோ, அழிவோ தடைவதற்கு தேவையானதும் சரியானதும் ஆன நடவடிக்கைகள் கைக்கொள்ளவேண்டும்.

(ii) சங்கத்தினுடைய செயல்பாட்டு பிரதேசமும், சொத்துக்களும், கடமைகளும் பிரிப்பதற்கு அப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அல்லாமல் அவ்வாறு பிரிக்கப்பட்ட சங்கத்திலுள்ள உறுப்பினர்களை உட்படுத்தி புதிய சங்கம் பதிவு செய்வதற்கும் குழு அமைப்பதற்குமாக எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியதாகும்.

4

(iii) "அப்படியுள்ள பிரித்தல், இந்த அவசரச்சட்டம் அமலுக்கு வந்த ே த தி மு த ல் ஆ று ம ா த க ா ல வ ை ர ய ை ற க் கு ள் முழு ை ம ய ை ட ய ச் செய்யவேண்டும்.."

5. செல்லுபடியாதல்.—2011-ன் கேரள கூட்டுறவு சங்க (மூன்றாவது திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 45) (இதற்கு பிறகு மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டம் என அழைக்கப்படுவது) நடைமுறையில் இல்லாமல் போனாலும் கூட,—

(எ) மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்திலுள்ள விதிமுறைகளின்படி செய்ததோ, செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியமோ, அல்லாவிடில் எடுத்ததோ எடுத்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் விதிமுறைகளின்படி செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்;

(பி) மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு நடைமுறையில் இல்லாமல் ே ப ா ன ாலு ம் பி ற கு ம் இ ந் த அ வ ச ர ச் ச ட் ட ம் அ ர சி த ழி ல் பி ர சு ர ம் செய்யப்படுகின்ற தேதிக்கு முன்பு செய்ததாகவோ அல்லது செய்ததாக க ரு த ப் ப டு வ ே த ா ஆ ன ஏ ே தனு ம் க ா ரி ய ே ம ா , அ ல் ல து எ டு த் த ே த ா எடுக்கப்பட்டதாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கைகளோ, அவை மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு நடைமுறையில் இல்லாமலாக இருந்ததென்றால், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததாகவோ, எடுக்கவோ செய்வதாக என்பதுபோல இந்த அவசரச்சட்டத்திற்கு பதிலாக திருத்தம் செய்யப்பட்ட முதன்மைசட்டத்திற்கு நிகரான விதிமுறைகளின்கீழ் செய்ததோ, எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.

எம். ஓ. எச். ஃபரூக், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 25 June 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-06-25.pdf_2013_26_1_co-operative_societies/. Archive identifier in.gazette.kerala_new.2013-06-25.pdf_2013_26_1_co-operative_societies.