Kerala Gazette No. 27 dated 2nd July, 2013. .
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிக்கை
2012 ஏப்ரல் 11 எண் 15553/ச. இ. எ. 2/2010/சட்டம். திருவனந்தபுரம்,
1934 சைத்ரம் 22.
2012 ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலர்.
2012-ன் அவசரச்சட்டம் எண் 29
2012˛u ˙LW[ UÙ®X BRÙ-Wm G›-'-˙YÙo, SLp
G›-'-˙YÙo Ut-flm ÿj-ß˚WlTj-ßW Æt-T-˚]-VÙ-[o
SX-®ß AY-NWfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பரம் செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலனிற்காகவும் அவர்களுக்கு ஓய்வூதியமும் பிற சலுகைகளும் அளிப்பதற்காகவும் அதோடு சம்பந்தப்பட் டதோ அல்லது தொடர்புடையதோ ஆன பிறகாரியங்களுக்காகவும் ஒரு நலநிதி உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
2முன்னுரை.—கேரள மாநிலத்தில் உள்ள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலனிற்காகவும் அவர்களுக்கு ஓய்வூதியமும் மற்றும் பிற சலுகைகளும் அளிப்பதற்காகவும்அதோடு சம்பந்தப்பட்டதோ தொடர்புடையதோ ஆன பிற காரியங்களுக்காகவும் ஒரு நலநிதி உருவாக்குவது உகந்ததாக இருப்பதாலும்;
2012-ன் கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர் நலநிதி அவசரச்சட்டம் (2012-ன் 13) 2012 ஜ ன வ ரி 3 0ஆ ம் ே த தி ே க ர ள ஆளு ந ர ா ல் வி ள ம் ப ர அ றி க் ை க செய்யப்பட்டிருந்ததாலும்;
2 0 1 2 ம ா ர் ச் 1ஆ ம் ே த தி ெ த ா ட ங் கி 2 0 1 2 ம ா ர் ச் 2 3ஆ ம் ே த தி முடிவடைந்த கேரள மாநிலச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் மேற்கூறிய அவசரச்சட்டம் 2012-ஏப்ரல் 12ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தில் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்கள் ஏற்பாடும் என்பதாலும் ;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும் தாம் துரிதநடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது:—
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப் பத்திர விற்பனையாளர்கள் நலநிதி அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.
(2) இது உடனடியாக நடைமுறையில் வருவதாகும்.
2 விளக்கம்.—இந்த அவசரச்சட்டத்தில் சந்தர்ப்பம் பிற வகையில் தேவைப்படாத பட்சத்தில்,—
(எ) "வாரியம்" எனில், பிரிவு 9-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப் பத்திர விற்பனையாளர் நலநிதி வாரியம் என்று பொருள்படும்;
3(பி) "வேலை முடிவடைதல்" எனில், வேலை செய்வதற்கு கிடைத்துள்ள உரிமத்தின் இரத்தாதல் அல்லது திருப்பி அளித்தலின் பயனாக ஒரு உரிமம் உடையவரின் தொழில் முடிவடைதல் என்று பொருள்படும்;
(சி) "பங்குத்தொகை" எனில், பிரிவு 4-ன் துணைப்பிரிவு (1)-ன் அடிப்ப டையில் நலநிதியிலுள்ள உறுப்பினர்களும் பிரிவு 26-ன் துணைப்பிரிவு (1)-ன் படி அரசும் நலநிதிக்கு அளிக்க வேண்டிய தொகை என்று பொருள்படும்;
(டி) "சார்ந்து வாழ்வோர்" எனில், மனைவி அல்லது கணவன், வயது முழு ை ம ய ை ட ய ா த தி ரு ம ண ம ா க ா த வ ர் க ள் அ ல் ல து வி த ை வ க ள் அல்லது விவாகரத்து செய்த பெண்மக்கள், மனநிலை அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்கள், உறுப்பினர்களை மட்டும் சார்ந்து வாழும் தந்தை மற்றும் தாய் என்று பொருள்படும்;
(இ) "ஆதாரம் எழுதுவோர்" எனில், 1960-ன் கேரள மாநில ஆதாரம் எழுதுவோரின் உரிமம் சட்டங்களின் அடிப்படையில் உடமை உரிமையைக் குறித்த ஆய்வு செய்து ஆதாரங்களின் நகல் தயாரித்து ஆதார பதிவிற்காக முத்திரைப்பத்திரத்தின் மீது எழுதுவது உட்பட்ட ஆதாரங்கள் தயாரிக்கும் வேலையில் ஈடுபடும் நபர் என்று பொருள்படும்;
(எப்) "நிதி" எனில், பிரிவு 3-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலநிதி என்று பொருள்படும்;
(ஜி) "அரசு" எனில், கேரள அரசு என்று பொருள்படும்;
(எச்) "பதிவு பொது ஆய்வாளர்" எனில், கேரள அரசின் பதிவு பொது ஆய்வாளர் என்று பொருள்படும்;
(ஐ) "உறுப்பினர்" எனில், இந்த அவசரச்சட்டத்தின் நிபந்தனைகளின் படி நலநிதியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டதோ 1991-ன் கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர் நலநிதியில் ஒரு உறுப்பினராக தொடரும் ஒரு ஆதாரம் எழுதுவோர் அல்லது நகல் எழுதுவோர் அல்லது முத்திரைப்பத்திர விற்பனையாளர் என்று பொருள்படும்;
(ஜெ) "அறிக்கை" எனில், கேரள அரசிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை என்று பொருள்படும்;
(கெ) "நிர்ணயம் செய்யப்பட்டது" எனில், இந்த அவசரச்சட்டப்படி உருவாக்கும் சட்டங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என்று பொருள்படும்;
(எல்) "பதிவு அதிகார இடம்" எனில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட (பொது) பதிவாளர் என்று பொருள்படும்;
4(எம்) "திட்டம்" எனில், இந்த அவசரச்சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப் பத்திர விற்பைனையாளர் நலநிதி திட்டம் என்று பொருள்படும்;
(என்) "நகல் எழுதுவோர்" எனில், ஆதாரங்கள் தயாரிப்பதில் ஒரு ஆதாரம் எழுதுபவருக்கு உதவி செய்வதோடு 1960-ன் கேரள ஆதாரம் எழுதுவோரின் உரிமம் சட்டங்களின் மூன்றாவது சட்டத்தின் துணைச்சட்டம் (5)-ல் குறிப்பிட்டபடி பதிவிற்காக ஆஜர்படுத்துவதற்குரிய ஆதாரங்களை நகல் எழுதுவதற்கு தேவையான ஸ்கிரைப் உரிமம் கைவசமுடைய ஒரு நபர் என்று பொருள்படும்;
(ஓ) "செயலர்" எனில், இந்த அவசரச்சட்டப்படி உருவாக்கப்பட்ட வாரியத்தின் செயலர் என்று பொருள்படும்;
(பி) "முத்திரைப்பத்திரம்" எனில், பிரிவு 24-ன்படி அச்சடித்து வினியோகம் செய்யும் கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர் நலநிதி முத்திரைப்பத்திரம் என்று பொருள்படும்;
(க்யூ) "முத்திரைப்பத்திர விற்பனையாளர்" எனில், 1960-ன் கேரள முத்திரைப்பத்திரம் உருவாக்குவதும் விற்பனையும் சட்டங்களின் 35வது சட்டப் படி ஒரு உரிமத்தைப் பெற்று நோன் ஜ˜ºசியல் முத்திரைப்பத்திரங்கள் மற்றும் அதன் விற்பனை சம்பந்தப்பட்ட தொழிலில் தீவிரமாக ஈடுபடும் ஒரு நபர் என்று பொருள்படும்..
3. கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர் நலநிதி.—(1) இந்த அவசரச்சட்டம் அமலுக்கு வந்த பிறகு முடியுமளவு விரைவில் அரசு, அரசிதழ் அறிக்கை வழியாக, "கேரள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர் நலநிதி திட்டம்" என்ற பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியதும் அதன்பிறகு இந்த அவசரச்சட்டம் மற்றும் திட்டத்தின் நிபந்தனைகளின்படி "கேரள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர் நலநிதி" என்ற பெயரில் ஒரு நிதி உருவாக்கப் படவும் வேண்டும்.
(2) திட்டத்தில், இந்த அவசரச்சட்டத்தின் நிபந்தனைகளுக்குட்பட்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் அல்லது ஏதேனும் காரியங் களுக்காக ஏற்பாடு செய்யப்படலாம்.
(3) நிதியில் பின்வருபவை வரவு வைக்கப்படவேண்டும், அதாவது:—
(எ) பிரிவுகள் 4 மற்றும் 26-ன் அடிப்படையிலான பங்குத் தொகைகள்;
5(பி) பிரிவு 5-ன்படி வசூலாக்கப்பட்ட மனுக்கட்டணம்;
(சி) பிரிவு 15-ன்படி கடன் வாங்கும் ஏதேனும் தொகை;
(டி) பிரிவு 24-ன்படி முத்திரைபத்திரம் விற்பனை செய்த வகையில் சேகரிக்கப்படும் அனைத்து தொகைகளும்;
(இ) ஏதேனும் குழுக்களோ அல்லது நிறுவனங்களோ பிற ஏதேனும் நபரோ நிதிக்கு தாமாக கொடுத்துள்ள ஏதேனும் அன்பளிப்பு;
(எப்) நிதியின் ஏதேனும் பகுதியை முதƒடு செய்ததன் மூலம் கிடைத்த லாபம், வட்டி, இலாப விகிதம் அல்லது பிற ஏதேனும் ஆதாயம்;
(ஜி) இந்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பிற ஏதேனும் நிறுவனமோ சங்கமோ அளித்த ஏதேனும் உதவித்தொகைகள், கடன்கள் அல்லது முன்பணங்கள்;
(எச்) முத்திரைப்பத்திர விற்பனையாளர்களுக்கு கமிஷனாக கிடைக்கும் இரண்டு சதவீததொகை;
(ஐ) பிரிவு 30-ன் படி கைமாற்றம் செய்யப்படும் தொகைகள்;
(ஜெ) திட்டப்படி சுமத்தப்பட்ட ஏதேனும் கட்டணம்;
(கெ) திட்டத்தின் நிபந்தனைகளின்படி நிதிக்கு வரவு செய்யப்பட வேண்டிய பிற ஏதேனும் தொகை;
(எல்) நிதியின் திறனை அதிகரிப்பதற்காக பிற வழிகளிலிருந்து வாரியம் சேகரித்த ஏதேனும் தொகை;
(4) நிதி வாரியத்தில் ஒப்படைக்கப்படுவதோடு வாரியம் அதன் நிர்வாகத்தை நடத்தவேண்டியதுமாகும்.
(5) நிதி பின்வரும் அனைத்துமோ அல்லது ஏதேனும் தேவைகளுக்கா கவோ பயன்படுத்தப்படலாம், அதாவது:—
(எ) வேலை முடிவடையும்போது ஒரு உறுப்பினருக்கு அவர் வேலை செய்த வருடங்களின் எண்¶க்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட லாமெனும் அத்தகைய நிரக்குகளில் குறிப்பிட்ட தொகையும் ஓய்வூதியமும் நிதியிலிருந்து அளிப்பதற்கு;
விளக்கம்.—(1) நோயால் வேலையில் தொடரமுடியாத ஒரு உறுப்பினரின் ஓய்வூதிய சலுகைகள் சம்பந்தப்பட்டு தீர்மானம் எடுப்பதற்கு வாரியத்திற்கு அதிகாரம் இருக்கும்.
(2) இந்த அவசரச்சட்டம் ஆரம்பிக்கும் முன் 65 வயது முடிவ டைந்ததும் 25 வருடம் ஆதாரம் எழுதுபவர் அல்லது நகல் எழுதுபவர் அல்லது முத்திரைப்பத்திர விற்பனையாளராக இருந்த ஒரு நபருக்கு அவசரச்சட்டத்தின் நிபந்தனைகளின்படி உறுப்பினராக ஒரு வருடகாலம் பங்குத்தொகை செலுத்தினால் சிறப்பு ஓய்வூதியத்திற்குரிய தகுதியை பெறலாம்.
6(பி) பத்து வருடங்களுக்குக் குறையாமல் பங்குத்தொகை செலுத்திய நபர் மரணமடைந்தால் குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்கு;
(சி) நோயால் அல்லது விபத்தால் ஒரு உறுப்பினர் மரணமடைந்தால் நிதி உதவி அளிப்பதற்கு;
(டி) நிரந்தர உடல் ஊனம் மூலம் வேலை செய்யமுடியாமலோ அல்லது நலநிதியில் உறுப்பினர் பதவி முடிவடையும் உறுப்பினர்களுக்கு அவர்கள் செலுத்திய பங்குத்தொகை நிர்ணயம் செய்யப்படலாம் எனும் படியாக வட்டி உட்பட திருப்பி செலுத்துவதற்கு;
(இ) தீவிரமான நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிட்சைக்குரிய செலவிற்கு நிதி உதவி அளிப்பதற்கு;
(எப்) உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பெண்மக்களின் திருமண தேவைக்கும் பெண் உறுப்பினர்களுக்கு மகப்பேறு தேவைக்கும் நிதி உதவி அளிப்பதற்கு;
(ஜி) உறுப்பினர்களுக்கு அவர்களது வேலை சம்பந்தப்பட்ட தேவைக்கு அல்லது வசிப்பதற்குரிய வீடு கட்டுவதற்கு அல்லது வீட்டை செப்பனிடுவதற்கு அல்லது வீட்டை புதுப்பிக்க அல்லது வீடு கட்டுவதற்குரிய நிலம் வாங்க அல்லது வீடும் நிலமும் சேர்த்து வாங்க அல்லது உறுப்பினர்களின் மக்களுக்கு உயர்கல்வி உட்பட்ட கல்விக்கு நிதியுதவி அல்லது கடன்கள் அல்லது முன்பணங்கள் அளிப்பதற்கு;
(எச்) உடல் நலிவால் துன்பப்படும் உறுப்பினர்களுக்கு சிறப்பு நிவாரணம் அளிப்பதற்கு;
(ஐ) திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பிற ஏதேனும் தேவைக்கு;
(ஜெ) வாரியத்தின் தினசரி நிர்வாக செலவுகளுக்கு;
(6) துணைப்பிரிவு(1)-ன்படி உருவாக்கப்பட்ட திட்டம், அது உருவாக்கிய பிறகு முடியுமளவு விரைவில், சட்டப்பேரவை கூட்டத்தில் இருக்கும்போது சபையின் அவை முன்பாக ஒரு கூட்டத்தொடரிலோ தொடர்ந்து இரண்டு கூட்டங்களிலோ உட்பட்ட மொத்தம் பதினான்கு நாட்களுக்கு வைக்கப்பட வேண்டியதும், அவ்வாறு அது எந்த கூட்டத்தொடரில் வைக்கப்படுகிறதோ அந்த கூட்டமோ அல்லது அதனை தொடர்ந்துவரும் கூட்டமோ முடிவடை வதற்கு முன் சட்டப்பேரவை மேற்குறிப்பிட்ட திட்டத்தில் ஏதேனும் உருவமாற்றம் செய்யும்பட்சத்தில் திட்டத்திற்கு அதன்பிறகு அவ்வாறு உருவமாற்றம் செய்யப்பட்டபடி மட்டும் அமலில் இருக்கும். எனினும், அத்தகைய ஏதேனும் உருவமாற்றம் திட்டப்படி முன்பு செய்த ஏதேனும் சங்கதியின் காரியத்தில் ஊறுவிளைவிக்காத வகையில் அமையவேண்டும்.
74. நிதிக்குரிய பங்குத்தொகை.—(1) ஒரு உறுப்பினராக தகுதியுடைய ஒவ்வொரு ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைபத்திர விற்பனையாளரும் மாதந்தோறும் Ëறு ரூபாய் நிதிக்கு பங்குத்தொகையாக செலுத்த வேண்டும்.
(2) அரசுக்கு, அரசிதழ் அறிக்கை வழியாக துணைப்பிரிவு (1)-ல் குறிப் பிடப்பட்ட பங்குத்தொகை நிரக்கு, திட்டத்தின் செயல்பாட்டிற்கு தேவையான தொகையை கணக்கிட்டு காலாகாலங்களில் அதிகப்படியாக ஐËறு ரூபாய் வரையில் என்ற எல்லைக்கு மேல் சீர்திருத்தம் செய்யலாம்.
(3) திட்டத்தில் குறிப்பிடப்படலாமெனும் முறையில் பங்குத்தொகையை செயலாளரின் பெயரில் அல்லது இந்த தேவைக்காக பொறுப்பு ஒப்படைக்கப் பட்ட அதிகாரியின் பெயரில் செலுத்தப்பட வேண்டும்.
5. நிதியின் உறுப்பினர் பதவி.—(1) 1960-ன் கேரளா ஆதாரம் எழுதுவோர் உரிமம் சட்டப்படி ஒரு ஆதாரம் எழுதும் நபரின் அல்லது நகல் எழுதும் நபரின் செல்லுபடியான உரிமமோ அல்லது 1960-ன் கேரள முத்திரைப்பத்திரம் உருவாக்குதலும் விற்பனையும் சட்டப்படியான ஒரு முத்திரைப்பத்திர விற்பனை யாளரின் செல்லுபடியான உரிமமோ அதது காரியத்திலாவதுபோல கைவசம் உள்ளதும் மனு செய்யும் தேதியில் 65 வயதுக்கு கீழ் உள்ள எந்த ஒரு நபருக்கும் நிதியில் உறுப்பினராவதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட அத்தகைய படிவத்திலும் முறையிலும் வாரியத்தில் விண்ணப்பம் செய்யலாம்;
எனினும், மத்திய அரசு வேலையில் அல்லது மாநில அரசு வேலையில் அல்லது ஏதேனும் பொதுத்துறை நிறுவனத்திலிருந்து அல்லது உள்ளாட்சித் துறை நிறுவனத்திலிருந்து ஓய்வூதிய சலுகை பெற்று ஓய்வடைந்தபிறகு ஒரு ஆதாரம் எழுதும் நபராகவோ நகல் எழுதும் நபராகவோ அல்லது முத்திரைப் பத்திர விற்பனையாளராகவோ வேலை செய்யும் எந்த ஒரு நபருக்கும் நிதியில் உறுப்பினர் பதவியை பெறுவதற்குரிய தகுதி இருக்காது.
(2) துணைப்பிரிவு (1)-ன்படி ஒரு மனுவின் மீது வாரியத்திற்கு, அதற்கு உகந்ததென்று தோன்றும் அத்தகைய ஆய்வு செய்யலாம் என்பதோடு மனுதாரரை நிதியில் உறுப்பினராக சேர்ப்பதற்கு அல்லது எழுத்து மூலம் குறிப்பிட்ட காரணங்களால் அவரின் மனுவை தள்ளுபடி செய்யலாம்.
என்றாலும், மனுவை தள்ளுபடி செய்த எந்த ஒரு ஆணையும் மனுதாரருக்கு கூற வேண்டியதை கூறுவதற்குரிய ஒரு வாய்ப்பு அளிக்காமல் நிறைவேற்றக்கூடாது.
மட்டுமல்லாமல், உறுப்பினர் பதவிக்குரிய ஏதேனும் மனு தள்ளுபடி செய்யும்பட்சத்தில் அதன்மூலம் துன்பம் அனுபவிக்கும் எந்த ஒரு நபருக்கும் அரசுக்கு நிர்ணயம் செய்யப்படலாம் எனும் காலயளவிற்குள் மேல்முறையீடு செய்யலாம்.
8(3) ஒவ்வொரு மனுதாரரும் விண்ணப்பக்கட்டணமாக Ëறு ரூபாய் நிர்ணயம் செய்யப்படலாமெனும் அத்தகைய முறையில் மனுவுடன் அளிக்கப்படவேண்டும்.
(4) நிதியின் ஒரு உறுப்பினர் 65 வயது முடிவடையும்போதோ அல்லது 25 வருட பதவிக்காலத்திற்கு பிறகு தனது உரிமத்தை திருப்பி அளித்து தாமாகவே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பம் செய்யும்போதோ நிதியின் உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார்.
(5) நிதியின் உறுப்பினரான ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு உறுப்பினர் சான்றிதழும் பங்குத்தொகையின் நிரக்கு, பதிவேட்டில் பெயர் சேர்த்த விவரங்கள், பிறந்த நாள், பங்குத்தொகை அளிப்பதற்குரிய குறிப்பிட்ட தேதி போன்றவை குறிப்பிடப்பட்ட ஒரு பாஸ்புக் பதிவு அதிகார இடம் அளிக்கவேண்டும். பதிவு அதிகார இடங்கள் அவரின் அதிகார எல்லைக்குள் வரும் உறுப்பினர்களின் ஒரு பதிவேட்டை பாதுகாக்க வேண்டியதும் மாநில அளவில் நிதியில் உறுப்பினரான அங்கத்தினரின் மாவட்டவாரியான விவரங்களை காட்டும் ஒரு பதிவேட்டை வாரியத்தின் செயலர் பாதுகாக்க வேண்டியதுமாகும்.
6. உறுப்பினர் பதவி இரத்து செய்தல்.—ஒரு உறுப்பினர் ஏதேனும் வகையிலான முறைகேடு செய்ததாகவோ அல்லது உறுப்பினர் பதவிக்குரிய நிபந்தனைகள் சம்பந்தப்பட்டோ திட்டப்படி சலுகைகள் கிடைப்பதற்கோ தவறான விவரம் எப்போதாவது அளிக்கப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப் பட்டால் பதிவு அதிகார இடம் அத்தகைய உறுப்பினர் பதவியை இரத்து செய்ய வேண்டும்.
எனினும், உறுப்பினர் பதவியை இரத்து செய்த எந்த ஒரு ஆணையும் மனுதாரருக்கு கூறவேண்டியதை கூற ஒரு வாய்ப்பு அளிக்காமல் நிறைவேற்றக் கூடாது.
(2) ஒரு உறுப்பினர் தொடர்ந்து ஆறு மாதக்காலம் பங்குத்தொகை செலுத்த தவறினால் நிதியில் அவருடைய உறுப்பினர் பதவி தாமாகவே இழந்துவிடும்.
(3) ஒரு நபர் ஆதாரம் எழுதும் நபராகவோ நகல் எழுதும் நபராகவோ அல்லது முத்திரைப்பத்திர விற்பனையாளராகவோ அதது காரியத்திலாவதுபோல செயல்படவில்லை என்று பதிவு அதிகார இடத்திற்கு தோன்றினால் நிதியில் அவருடைய உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படவேண்டும். அத்தகைய காரியங்களில் உறுப்பினர் பதவி இரத்து செய்யும் தேதி பதிவு அதிகார இடம் நிர்ணயம் செய்யும் முறையில் அமையும்.
(4) பதிவு அதிகார இடத்தின் ஆணைகளுக்கெதிரான மேல்முறையீடு நிர்ணயம் செய்யப்படலாமெனும் அத்தகைய காலயளவிற்குள் பதிவை பொது ஆய்வாளர் முன்பாக தாக்கல் செய்யப்படவேண்டும்.
9(5) பதிவு அதிகார இடத்திற்கு ஒரு கடிதம் அளித்து ஒரு உறுப்பினருக்கு நிதியிலிருந்து தாமாக பிரிந்து செல்லலாம். அத்தகைய காரியங்களில், பிரிந்து செல்லும் தேதி உறுப்பினர் கடிதம் அளித்த தேதியாக இருக்கவேண்டும்.
7. உறுப்பினர் பதவியை புனரமைத்தல்.—பிரிவு 6-ன் துணைப்பிரிவு (2)-ன் படி உறுப்பினர் பதவியை இழந்த ஒரு உறுப்பினருக்கு அத்தகைய உறுப்பினர் பதவி முடிவடைந்த தேதி முதல் ஆறு மாதத்திற்குள் 12 சதவீதம் வருடாந்திர வட்டியுடன் நிலுவை செலுத்தினால் உறுப்பினர் பதவியை புனரமைக்கலாம்.
8. திட்டத்தை திருத்தம் செய்தல்.—(1) அரசுக்கு அரசிதழ் அறிக்கை வழியாக இந்த அவசரச்சட்டப்படி தீட்டப்பட்ட திட்டத்தில் முற்கால பலனுடனோ அல்லது பிற்கால பலனுடனோ திருத்தம் செய்யப்படலாம்.
(2) துணைப்பிரிவு (1)-ன்படி ஒவ்வொரு அறிக்கையும் அது வெளியிடப் பட்ட பிறகு முடியுமளவு விரைவில் சட்டப்பேரவை கூட்டத்தில் இருக்கும் போது சபை முன்பாக, ஒரு கூட்டத்தொடரிலோ தொடர்ந்து வரும் இரண்டு கூட்டங்களிலோ உட்படலாம் எனும் மொத்தம் பதினான்கு நாட்களுக்கு அளிக்க வேண்டியதும் அவ்வாறு அது எந்த கூட்டத்தொடரில் வைக்கப் படுகிறதோ அந்த கூட்டம் அதை தொடர்ந்துவரும் கூட்டம் முடிவடைவதற்கு முன் சட்டப்பேரவை மேற்குறிப்பிட்ட அறிக்கையில் ஏதேனும் உருவமாற்றங்கள் ஏற்படுத்தவோ அல்லது அறிக்கை வெளியிடப்பட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கவோ செய்யும் பட்சத்தில், அறிக்கைக்கு அதன்பிறகு அதது காரியத்திலாவது போல அவ்வாறு உருவமாற்றம் செய்தபடி அமலில் இருக்கவோ அல்லது அமலில் இல்லாமல் இருக்கவோ செய்யும். அத்தகைய ஏதேனும் உருவமாற்றம் திட்டப்படி முன்பு செய்த ஏதேனும் சங்கதியின் காரியத்தில் ஊறுவிளைவிக்காத வகையில் அமையவேண்டும்.
9 . வாரியம் உருவாக்குதல்.—( 1 ) அ ர சு க் கு அ ர சி த ழ் அ றி க் ை க வழியாக குறிப்பிடப்பட்ட தேதி முதல் அமலுடன் கூடிய நிதியின் ஆட்சி நிர்வாகத்திற்கும் நடைமுறைபடுத்தல் சம்பந்தப்பட்ட செயல்பாட்டின் மேற்பார் வைக்குமாக "கேரள மாநில ஆதாரம் எழுதுவோர் நகல் எழுதுவோர் மற்றும் முத்திரை பத்திர விற்பனையாளர் நலநிதி வாரியம்" என்ற பெயரில் ஒரு வாரியம் உருவாக்கப்பட வேண்டும்.
(2) வாரியம் நிரந்தர வாரிசுரிமையுடனும் பொது முத்திரையுடனும் கூடிய "கேரள மாநில ஆதாரம் எழுதுவோர் நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர் நலநிதி வாரியம்" என்ற பெயரில் உள்ள ஒரு நபர் வாரியமாக இருப்பதோடு மேற்குறிப்பிட்ட பெயரில் அறியவும் அறியப்படவும் வேண்டும்.
10(3) வாரியத்தில் இதற்கு பின்வரும் நிபந்தனைகளின்படி அரசு பெயர் நியமனம் செய்யும் அரசை பிரதிநிதானம் செய்யும் ஏழு அலுவலால் ஆன உறுப்பினர்களும் நிதியின் பய…ட்டாளர்களை பிரதிநிதானம் செய்யும் மூன்று அலுவலால் அல்லாத உறுப்பினர்களும் இருக்கவேண்டும், அதாவது:—
(எ) அரசுச் செயலர், வரித்துறை—அவர் வாரியத்தின் தலைவராக இருக்கவேண்டும்;
(பி) பதிவு பொது ஆய்வாளர்—இவர் வாரியத்தின் துணைத்தலைவராக இருக்கவேண்டும்;
(சி) பதிவு இணை ஆய்வாளர்—இவர் வாரியத்தின் செயலராக இருக்க வேண்டும்;
(டி) அரசு பெயர் நியமனம் செய்யும் துணை செயலரின் பதவிக்கு குறையாத நிதித்துறையில் உள்ள ஒரு அதிகாரி;
(இ) அரசு பெயர் நியமனம் செய்யும் துணை செயலர் பதவிக்கு குறையாத தொழில்துறையில் உள்ள ஒரு அதிகாரி;
(எப்) அரசு பெயர் நியமனம் செய்யும் இணை செயலர் பதவிக்கு குறையாத வரித்துறையில் உள்ள ஒரு அதிகாரி;
(ஜி) அரசு பெயர் நியமனம் செய்யும் இணைச்செயலர் பதவிக்கு குறையாத சட்டத்துறையில் உள்ள ஒரு அதிகாரி;
(எச்) அரசு பெயர் நியமனம் செய்யும் கேரள மாநில ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களை பிரதிநிதானம் செய்யும் மூன்று அலுவலால் அல்லாத உறுப்பினர்கள்;
(4) திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் வாரியம் அதில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிதியின் நிர்வாகத்தை நடத்தவேண்டும்.
(5) வாரியத்திற்கு அரசின் முன்கூட்டிய அனுமதியுடன் அதற்கு உகந்த தென்று தோன்றும் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நிதியின் செயல்திறனான நடைமுறைப்படுத்தலுக்கு, அது தேவை யென்று கருதும் அவசரச சட்டமோ அல்லது திட்டத்தின்படி அதன் அத்தகைய அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தலைவரிடமோ செயலரிடமோ ஒப்படைக்கலாம்.
10. வாரியத்தின் கூட்டம்.—(1) வாரியம் அதன் வியாபார செயல்பாட்டிற் காக குறைந்த அளவு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடவேண்டும்.
(2) வாரியத்தின் ஒரு கூட்டத்திற்கான எண்¶க்கை குறைந்தது நான்கு அலுவலால் ஆன உறுப்பினர்களும் இரண்டு அலுவலால் அல்லாத உறுப்பினர் களும் உட்பட வாரியத்தின் 6 உறுப்பினர்களாக இருக்கவேண்டும்.
11(3) செயலர் அல்லது, அவர் இல்லாத நேரத்தில் துணை செயலரோ, அல்லது செயலர் மற்றும் துணைசெயலர் இல்லாத நேரத்தில் கூட்டத்தில் வந்துள்ள உறுப்பினர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரோ வாரிய கூட்டத்தின் தலைமையிடம் வகிக்கவேண்டும்.
(4) வாரியத்தின் ஒரு கூட்டத்தின் முன்வரும் எந்த ஒரு காரியமும் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்களிப்புடன் தீர்மானம் செய்யப்பட வேண்டியதும் சம வாக்களிப்பின் காரியத்தில் கூட்டத் தில் தலைமை தாங்கும் செயலாளர் அல்லது துணைச்செயலாளர் அல்லது உறுப்பினருக்கு ஒரு காஸ்டிங் வாக்குரிமை இருக்கும்.
11. வாரியத்தில் உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம்.—(1) பிரிவு 9-ன் துணைப்பிரிவு (3)-ன் படி நியமனம் செய்யப்பட்ட அலுவலால் அல்லாத உறுப் பினர்கள் வாரியம் உருவாக்கப்பட்ட அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்ட தேதி முதல் மூன்று வருடகாலத்திற்கு பதவியிடம் வகிக்கவேண்டும்.
(2) எந்த ஒரு அலுவலால் அல்லாத உறுப்பினருக்கும் அரசுக்கு எழுத்துவடிவிலான அறிக்கையை அளித்து தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டியதும், எனினும், அரசு இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர் பதவியில் தொடரவேண்டும்.
(3) பொது விருப்பத்திற்கேற்ப ஏதேனும் அலுவலால் ஆன உறுப்பினர் மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் தொடர்வது உகந்ததல்ல என்று அரசு கருதும் பட்சத்தில் அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு எந்த நேரத்திலும் அரசுக்கு அத்தகைய உறுப்பினரை பதவியிடத்திலிருந்து நீக்கம் செய்யலாம்.
12. அலுவலால் அல்லாத உறுப்பினர்களின் தகுதியின்மையும் பதவி நீக்கம் செய்தலும்.—(1) அரசுக்கு வாரியத்தின் எந்த ஒரு அலுவலால் அல்லாத உறுப்பினரையும்,—
(எ) அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டால்; அல்லது
(பி) அவர் திவாலானவர் என்று அறிக்கை செய்யப்பட்டால்;
(சி) அவர் வாரியத்தின் அனுமதியின்றி தொடர்ந்து மூன்று கூட்டங்களில் ஆஜராகாமல் இருந்தால்;
(டி) அவர் ஒரு உறுப்பினராக செயல்பட தகுதியற்றவர் என்றோ திறமையற்றவர் என்றோ அல்லது உறுப்பினராக அவர் தொடர்வது பொது விருப்பத்திற்கு தீங்கு ஏற்படும் வகையில் தனது பதவியை தவறாக உபயோகம் செய்தார் என்றோ அரசு கருதும் பட்சத்தில்;
உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படலாம்.
12எனினும், இந்த துணைப்பிரிவின்படி ஒரு உறுப்பினரை பதவி நீக்கம் செய்வதற்கு முன்பு அவரை பதவி நீக்கம் செய்யாமல் இருப்பதற்குரிய காரணத்தைக்கூற அவருக்கு நியாயமான ஒரு வாய்ப்பை அளிக்கவேண்டும்.
(2) துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (சி)-யின்படி வாரியத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அலுவலால் அல்லாத உறுப்பினர், அரசு பிற வகையில் ஆணை வெளியிடாதபட்சத்தில் அவரை பதவி நீக்கம் செய்த தேதி முதல் மூன்று வருடகாலத்திற்கு வாரியத்தில் ஒரு உறுப்பினராக மீண்டும் நியமனம் செய்வதற்கு தகுதியுடையவராக இருக்கமாட்டார்.
(3) துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (டி)-யின்படி பதவிநீக்கம் செய்யப் பட்ட வாரியத்தின் ஒரு அலுவலால் அல்லாத உறுப்பினர், அரசு ஒரு ஆணை மூலம் அவர் தகுதியற்றவர் அல்ல என்று அறிக்கை செய்யும் வரை மீண்டும் நியமனம் செய்வதற்கு தகுதியற்றவராக இருப்பார்.
13. வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்குரிய இருப்புக்கட்டணம், பயணப்படி மற்றும் தினசரிப்படி—வாரியத்தில் பெயர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நிர்ணயம் செய்யப்படலாமெனும் முறையில் உள்ள இருப்புக் கட்டணம், பயணப்படி மற்றும் தினசரிப்படி கிடைப்பதற்குரிய தகுதி இருக்கும்.
14. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நியமனம்.—(1) அரசுக்கு இந்த அவசரச்சட்டப்படி வாரியத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு செயலாளருக்கு உதவி செய்ய தேவையென கருதும் அளவுக்கு அதிகாரிகளையும் ஊழியர்களையும் நிர்ணயம் செய்யப்படலாமெனும் முறையில் பதிவு துறையிலிருந்து மாற்றுப்ப¶யில் நியமனம் செய்யலாம்.
(2) வாரியத்தில் தீர்மானங்களை செயல்படுத்துவதற்காக வாரியத்தின் செயலாளரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும்.
15. கடன் வாங்குவதற்குரிய வாரியத்தின் அதிகாரம்.—வாரியத்திற்கு, அரசின் முன்கூட்டிய அங்கீகாரத்துடன் அரசு குறிப்பிடும்படியான நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நிதியின் தேவைக்காக காலாகாலங்களில் பணம் கடன் வாங்கலாம்.
16. வாரியத்தில் உள்ள அலுவலால் அல்லாத உறுப்பினர்கள் பொது ஊ ழி ய ர் க ள ா க இ ரு க் க ே வண் டு ம் .—வ ா ரி ய த் தி ல் உ ள் ள ஒ வ் ெ வ ா ரு அலுவலால் அல்லாத உறுப்பினரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (1860-ன் 45வது மத்திய சட்டம்) பிரிவு 21-ன் கருத்துக்கு உட்பட்டு ஒரு பொது ஊழியராக கருதப்படவேண்டும்.
17. முழுநம்பிக்கையில் செய்த செயல்களுக்குரிய பாதுகாப்பு.—இந்த அவசரச்சட்டப்படி அல்லது திட்டப்படியான கடமைகளும் பொறுப்புகளும் நிறைவேற்றுவதற்காக முழு நம்பிக்கையுடன் செய்ததோ செய்ய எண்ணுவதோ13 ஆ ன ஏ ே த னு ம் க ா ரி ய ம் ச ம் ப ந் த ப் ப ட் டு வ ா ரி ய த் தி ல் உ ள் ள ஒ ரு உறுப்பினருக்கு அல்லது வாரியத்திற்கு உதவி செய்யும் பிற ஏதேனும் நபருக்கு எதிராக எந்த ஒரு வழக்கோ பிற சட்ட நடவடிக்கையோ செல்லுபடியாகாது.
18. அரசு அளிக்கும் பரிந்துரைகள்.—அரசுக்கு காலாகாலங்களில் வாரியத் திற்கு பரிந்துரைகள் அளிக்கலாம் என்பதோடு அதை செயல்படுத்துவதற்கு வாரியம் கடமைப்பட்டிருப்பதுமாகும்.
19. பரிசோதனைக்காக ஆணை வெளியிடுவதற்குரிய அதிகாரம்.— (1) அரசுக்கு, எந்த சமயத்திலும், வாரியத்தின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு செய்வதற்கும் அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காகவும் அரசின் ஒரு செயலாளர் பதவிக்கு குறையாத ஏதேனும் அதிகாரியை ஆய்வு அதிகாரியாக நியமனம் செய்யலாம்.
(2) அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஆய்வு அதிகாரிக்கு, பரிசோதனை சரியான முறையில் நடைபெறுவதற்குரிய அனைத்து வசதிகளையும் வாரியம் செய்து கொடுக்க வேண்டியதும் அவர் தேவைப்படும் வாரியத்தின் கைவசமுள்ள ஆவணங்கள், கணக்குகள் மற்றும் பிற விவரங்களை அளிக்கவும் வேண்டும்.
20. நிதியின் கணக்குகளின் த¶க்கை மற்றும் த¶க்கையாளர்களின் நியமனம்.—(1) நிர்ணயம் செய்யப்படலாமெனும் முறையில் நிதியின் கணக்கு களை த¶க்கை செய்வதற்காக வாரியம் அத்தகைய த¶க்கையாளர்களை நியமனம் செய்யவேண்டும்.
(2) அத்தகைய த¶க்கையாளர்களை நிதியின் கணக்குகளை ஒவ்வொரு வருடத்திலும் ஒரு முறை த¶க்கை செய்யவேண்டும்.
21. வருடாந்திர அறிக்கையும் கணக்குகளை த¶க்கை செய்த அறிக்கையும்.—நிதியின் வருடாந்திர அறிக்கை வாரியத்தின் பரிந்துரைப்படி தயாரிக்க வேண்டியதும் வாரியத்தின் அங்கீகாரத்திற்கு பிறகு அறிக்கையின் ஒரு நகல், கணக்குகளை த¶க்கை செய்த அறிக்கையுடன் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முடிவடைவதற்கு முன்பாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படவும் வேண்டும்.
(2) வருடாந்திர அறிக்கை கிடைத்தவுடன், அரசு, அது கணக்குகளின் த¶க்கை செய்த அறிக்கை உட்பட சட்டப்பேரவையின் முன்பாக வைக்கப்படவேண்டும்.
22. சிவில் நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு தடை.—இந்த அவசரச்சட்டப் படியோ அல்லது திட்டப்படியோ அல்லது அதன் கீழிலோ அரசு அல்லது வாரியச்செயலர் அல்லது வாரியம் பொறுப்பு ஒப்படைத்த ஏதேனும் அதிகாரி தீர்வு செய்யப்பட வேண்டியதோ, தீர்மானம் செய்யப்பட வேண்டியதோ அல்லது கைகாரியம் செய்யப்படவேண்டியதோவான ஏதேனும் பிரச்சனை14 அதாவது நிர்ணயம் செய்யப்படவேண்டியதோ ஏதேனும் காரியத்தை தீர்வு செய்யவோ தீர்மானம் செய்யவோ கைகாரியம் செய்யவோ அல்லது நிர்ணயம் செய்யவோ உரிய எந்த அதிகாரமும் எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் இருக்காது.
23. சாட்சியை கூட்டிவருவதற்கும் தெளிவெடுப்பு நடத்துவதற்கும் உரிய அதிகாரம்.—இந்த அவசரச்சட்டத்தின்கீழ் பரிசோதனையின் தேவைக்காக, வாரியத்திற்கு, 1908-ன் சிவில் நடவடிக்கை சட்டத்தொகுப்பு (1908-ன் 5வது மத்தியசட்டம்) படி ஒரு சிவில் வழக்கு விசாரணை நடைபெறும்போது ஒரு சிவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதே அதிகாரங்கள் பின்வரும் காரியங்களை குறித்து இருக்கவேண்டும், அதாவது:—
(எ) எந்த ஒரு நபரையும் ஆஜராவதற்கு கட்டாயப்படுத்துவதற்கும் அல்லது அவரை சத்திய வாக்குமூலத்தின் மீது விசாரணை செய்வதற்கும்;
(பி) ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கும், ஆஜராக்குவதற்கும் தேவைப்படுவதற்கு;
(சி) சத்தியவாக்குமூலத்தின் மீது சாட்சியங்களை பெறுவதற்கு; மேலும் (டி) சாட்சிகளை விசாரணை செய்வதற்காக கமிஷனை நியமனம் செய்வதற்கு.
24. கேரள மாநிலத்தில் உள்ள ஆதாரம் எழுதுபவர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலநிதி தபால் தலை.— (1) வாரியம், ஐம்பது ரூபாய் மதிப்புடையதும், நிர்ணயம் செய்யப்படலாமெனும் அத்தகைய உருவத்திலும் முறையிலும் உள்ளதும் "கேரள மாநிலத்தில் உள்ள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலநிதி தபால் தலை" என்று முத்திரை செய்யப்பட்டதுமான தபால் தலைகள் அரசு அச்சகத்தில் அச்சிடப்பட வேண்டும்.
( 2 ) உ ரி மமு ை ட ய ஒ ரு ஆ த ா ர ம் எழு து ே வ ா ர் த ய ா ரி த் த து ம் மாநிலத்தில் உள்ள ஏதேனும் துணைப்பதிவு அலுவலகங்களில், அதது காரியத்திலாவது போல புக் I, III அல்லது IV-ல் பதிவு செய்வதற்கு ஆஜராக்கப்படும் ஒவ்வொரு ஆதாரத்திலும் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டபடியான ஒரு தபால் தலை, கேரள முத்திரைப்பத்திர சட்டம் (1959-ன் 17-வது சட்டம்) படி சுமத்தலாம் எனும் தபால் தலை கட்டணம் தவிர செலுத்த வேண்டும்.
எனினும், மத்திய அரசோ அல்லது மாநில அரசோ அல்லது உள்ளாட்சித்துறை நிறுவனத்திற்காகவோ பதிவு செய்வதற்கு தயாராக்கப் பட்டதும் ஆஜராக்கப்பட்டதுமான ஏதேனும் ஆதாரத்திற்கு இந்த துணைப்பிரிவு பாதகமாக இராது.
(3) துணைப்பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டபடி ஒட்டப்பட்ட ஒவ்வொரு தபால் தலையும் 1959-ன் கேரள முத்திரைப்பத்திர சட்டத்தின் (1959-ன் 17வது சட்டம்) பிரிவு 12-ன் குறிப்பிடப்பட்ட முறையில் இரத்து செய்யப்பட வேண்டும்.
15(4) இந்தபிரிவின்படி அச்சடிக்கப்பட்ட தபால்தலைகள் வாரியத்தின் பொறுப்பில் இருக்கவேண்டியதும், தபால்தலையின் வினியோகமும், விற்பனையும் நிர்ணயம் செய்யப்படலாமெனும் அத்தகைய முறையில் இருக்கவேண்டியதும் ஆகும்.
25. தவறுதல் அல்லது தகுதியின்மை போன்ற காரியத்தில் பணம் அளித்தல்.—(1) தவறுதலோ அல்லது தகுதியின்மையோ காரணமாக உறுப்பினர் பதவி முடிவடையும் காரியத்தில் உறுப்பினருக்கு அல்லது அவரது வாரிசுக்கு திட்டத்தில் குறிப்பிட்டபடி வரித்தொகையாக செலுத்திய பணத்திற்காக விண்ணப்பம் செய்யலாம்.
(2) உறுப்பினர் பதவி முடிவடைந்த ஏதேனும் உறுப்பினருக்கு அல்லது அவரது வாரிசுக்கு நலநிதியிலிருந்து ஏதேனும் சலுகைக்கு தகுதியிருக்காது.
(3) உறுப்பினர் பதவி முடிவடைந்த தேதிக்கு பிறகு பங்குத்தொகை ஏதேனும் செலுத்தப்பட்டது எனில் அது முழுமையாக எந்தவொரு வட்டியுமின்றி திருப்பி செலுத்தப்பட வேண்டும்.
(4) ஒரு உறுப்பினர் அல்லது அவரால் பெயர் நியமனம் செய்யப்பட்ட நபர் ஏதேனும் தொகையை தவறுதலாக பெற்றுக்கொண்டார் எனில் தகுந்த நியமன நடவடிக்கைகள் வழியாக அத்தகைய நபரிலிருந்து அதை வசூலிக்க வேண்டும்.
26. அரசின் பங்குத்தொகை.—(1) ஒரு நிதியாண்டில் உறுப்பினர்கள் அளித்த மொத்த பங்குத்தொகையின் பத்து சதவீதம் அல்லது ஊக்கத்தொகை அல்லது விடுப்புத்தொகையாக மாற்றுவது உட்பட்ட நலநிதியின் செயல் பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்ட ஊழியர்களின் பயணப்படி தவிர, ஊதியம் மற்றும் படிகளின் உறைவிடத்திலிருந்து பெற வேண்டிய செலவுகளோ இதில் எது குறைவாக உள்ளதோ அதை அரசு பங்குத்தொகையாக அளிக்கவேண்டும்.
(2) ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் செயலாளர் ஊக்கத்தொகை மற்றும் விடுப்பு தொகை பணமாக்குவதுட்பட்ட நலநிதியின் செயல்பாட்டிற் காக ஒப்படைக்கப்பட்ட ஊழியர்களின் பயணப்படி தவிர ஊதியம் மற்றும் படிகளின் உறைவிடத்திலிருந்து பெறவேண்டிய செலவு கணக்கிடப்பட வேண்டியதும் அதை அரசிடம் தெரிவிக்க வேண்டியதும் ஆகும்.
(3) அவ்வாறு கணக்கிடப்பட்ட தொகை உறுப்பினர்களின் வருடாந்திர பங்குத் தொகையின் பத்து சதவீதத்திற்கும் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தொகையும் உறுப்பினர்களின் வருடாந்திர பங்குத்தொகையின் பத்து சதவீதம் தொகையின் வேறுபாட்டை நலநிதியிலிருந்து வாபஸ் பெற வேண்டியதும் காலாகாலங்களில் நிர்ணயம் செய்யப்படும் சம்பந்தப்பட்ட உறைவிடத்திற்கு செலுத்தப்பட வேண்டியதும் ஆகும்.
1627. குறைகள் போன்றவை மூலம் வாரியத்தின் செயல்பாடுகள் செல்லுபடி ஆகாததாக இராது.—இந்த அவசரச்சட்டப்படியோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படியோ வாரியம் செய்த செயல்பாடோ அல்லது நடவடிக்கைமுறையோ,—
(எ) வாரியத்தில் உள்ள ஏதேனும் காலியிடமோ அல்லது உருவாக்கு தலில் ஏற்படும் குறையோ; அல்லது
(பி) அதன் ஒரு உறுப்பினரான ஏதேனும் நபரை பெயர் நியமனம் செய்ததால் ஏற்படும் ஏதேனும் குறையோ அல்லது முறைகேடோ; அல்லது (சி) வாரியத்தின் செயல்பாட்டிலோ அல்லது நடவடிக்கையிலோ ஏற்பட்ட ஏதேனும் குறை அல்லது குறைபாடு;
காரணமாக மட்டும் செல்லுபடியாகாததாக இராது.
28. இடர்களை போக்குதல்.—இந்த அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை அமலாக்குவதில் ஏதாவது இடர்கள் ஏற்படும்போது அந்த இடர்களை நீக்கம் செய்வதற்கு தேவை என்று தங்களுக்கு தோன்றும் இந்த அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு எதிரல்லாததுமான நிபந்தனைகளை அரசிதழ் அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆணை மூலம் உண்டு பண்ணலாம்.
எனினும், இந்த அவசரச்சட்டம் அமலுக்கு வந்து இரண்டு வருடங் களுக்குப்பிறகு அத்தகைய எந்த ஆணையும் உண்டுபண்ணக்கூடாது.
(2) துணைப்பிரிவு (1)-ன் கீழ் வெளியிடப்பட்ட ஆணை சட்டப் பேரவை முன்பு வைக்கப்பட வேண்டும்.
29. விதிகள் உருவாக்குவதற்குரிய அதிகாரம்—(1) அரசுக்கு, அரசிதழ் அறிக்கை வழியாக இந்த அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை செயல்படுத்துவதற்காக மு ன் க ா ல ப ல னு ட ே ன ா அ ல் ல து பி ன் க ா ல ப ல னு ட ே ன ா வி தி க ள் உருவாக்கலாம்.
(2) இந்த அவசரச்சட்டப்படி உருவாக்கப்படும் ஒவ்வொரு விதியும் அது உருவாக்கப்பட்ட பிறகு முடியுமளவு விரைவில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருக்கும்போது அவை முன்பாக ஒரு கூட்டத்திலோ அல்லது தொடர்ந்து வரும் இரண்டு கூட்டங்களிலோ உட்படலாம் எனும் மொத்தம் பதினான்கு நாட்களுக்கு வைக்கப்படவேண்டியதும் அவ்வாறு அது, எந்த கூட்டத்தில் வைக்கப்படுகிறதோ அந்த கூட்டம் அல்லது அதனை தொடர்ந்து வரும் கூட்டம் முடிவடையும் முன்பு, சட்டப்பேரவை மேற்குறிப்பிட்ட சட்டத்தில் ஏதேனும் திருத்தம் ஏற்படுத்தியோ அல்லது அந்த விதி உருவாக்க வேண்டியதில்லை என்று தீர்மானிக்கும்போதோ, அந்த சட்டத்திற்கு அதற்கு பிறகு அதது காரியத்திலாவது போல அல்லது அவ்வாறு திருத்தம் செய்த வகையில் மட்டும் அமலில் இருக்கவோ அல்லது அமலில் இல்லாமலிருக்கவோ செய்யும். எனினும், அவ்வாறு ஏதேனும் திருத்தம் அல்லது இரத்தாதல் அந்த விதியின்கீழ் முன்பு செய்யப்பட்ட தீர்மானத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் இருக்கவேண்டும்.
1730. 1991-ன் கேரள மாநிலத்தில் உள்ள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலநிதி திட்டத்தி லிருந்து நிதி கைமாற்றம் செய்வதற்குரிய நிபந்தனை—(1) தற்போது அமலில் உள்ள பிற ஏதேனும் விதியில் எது எவ்வாறு இருப்பினும் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும் தேதி முதல் 1991-ன் கேரள மாநிலத்தில் உள்ள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலநிதி திட்டத்தின் கணக்கில் இருந்த அனைத்து தொகைகளும் இந்த அவசரச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் நிதிக்கு கைமாற்றம் செய்யப்பட வேண்டியதும் அதில் வரவு செய்யவேண்டியதும் 1991-ன் கேரள மாநிலத்தில் உள்ள ஆதாரம் எழுதுவோர் மற்றும் நகல் எழுதுவோரின் நலநிதி திட்டத்தில் பங்குத்தொகை அளிப்பதற்குரிய உறுப்பினரின் பொறுப்பு அத்தகைய தேதி முதல் இரத்து செய்யப்படும்.
(2) இந்த அவசரச்சட்டப்படி உருவாக்கப்படும் வாரியத்திற்கு அத்தகைய திட்டங்களை குறித்த அனைத்து உரிமை வாதங்களும் தீர்மானம் செய்யலாம்.
31. இரத்தாதலும் தவிர்ப்பும்—(1) 2012-ன் கேரள மாநிலத்திலுள்ள ஆதாரம் எழுதுவோர், நகல் எழுதுவோர் மற்றும் முத்திரைப்பத்திர விற்பனையாளர்களின் நலநிதி அவசரச்சட்டம் (2012-ன் 13) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டத்தின்படி செய்த ஏதேனும் காரியம் அல்லது எடுத்த ஏதேனும் நடவடிக்கை இந்த அவசரச்சட்டப்படி செய்ததாகவோ அல்லது எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.
அட்டவணை
[பிரிவு 3-ன் (2) காண்க]
திட்டத்தில் ஏற்பாடு செய்யும் காரியங்கள்
(1) வாரியம் நிதியின் நிர்வாகத்தை நடத்தவேண்டியமுறை.
(2) உறுப்பினர்களின் பதிவு.
(3) நிதிக்குரிய பங்குத்தொகை, முத்திரைப்பத்திர விற்பனையாளரின் கமிஷனின் இரண்டு சதவீதம் ஆகியவை அளிப்பதற்குரிய முறை.
(4) பல்வேறு பிரிவுகளிலிருந்து பங்குத்தொகை, முத்திரைப் பத்திர விற்பனையாளர்கள் கமிஷனின் இரண்டு சதவீதம் போன்றவை வசூலிக்க வேண்டியமுறை.
(5) வாரியத்திற்கு உதவுவதற்காக ஏதேனும் குழுவை உருவாக்குதல்.
(6) செயலாளர்களின் பொறுப்புகள்.
(7) கணக்குகளை பாதுகாக்கும் முறை, அரசு வெளியிடும் ஏதேனும் பரிந்து ரைகள் அல்லது குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின்படி நிதியின் பொறுப்18 பிலுள்ள பணம் முதƒடு செய்தலும் பட்ஜெட் தயாரித்தலும் கணக்கு க ை ள த¶ க் ை க ெ ச ய் த லு ம் அ ர சு க் கு அ றி க் ை க க ள் சமர்ப்பித்தலும்.
(8) நிதியிலிருந்து பணம் பின்வாங்குவதற்கு அனுமதி அளிப்பதற்கும் அதிலிருந்து ஏதேனும் குறைக்கவோ அல்லது கூட்டவோ செய்வதற்குரிய நிபந்தனைகளும் அத்தகைய கூட்டல் அல்லது கழித்தலின் அதிக அளவு தொகையும்.
(9) ஒரு உறுப்பினர் தன்னுடையவும் குடும்பத்தினுடையவும் விவரங்கள் தேவைப்படும்போது அளிக்க வேண்டிய படிவம்.
(10) ஒரு உறுப்பினரின் மரணத்தைத்தொடர்ந்து அந்த உறுப்பினருக்கு நிதியிலிருந்து கிடைக்கவேண்டிய சலுகைகள் பெற்றுக்கொள்வதற்குரிய நபரை பெயர் நியமனம் செய்தலும் அத்தகைய பெயர் நியமனத்தை பரிசோதனை செய்தலும் இரத்து செய்தலும்.
(11) உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டு பாதுகாக்க வேண்டிய பதிவேடுகளும் ஆவணங்களும்.
(12) பாஸ்புக், சான்றிதழ்கள், அடையாள அட்டை போன்றவற்றின் படிவம், அது அளிப்பதற்கும், கைவசம் வைப்பதற்கும் மாற்றி அளிப்பதற்கும் செய்ய வேண்டியது நடவடிக்கை முறையும்.
(13) அட்டவணையில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் தேவைகளுக்காக சுமத்தப்பட வேண்டிய கட்டணம்.
(14) பிரிவு 30-ன்படி கைமாற்றம் செய்யப்பட்ட தொகைகள் நிதிக்கு கைமாற்றம் மற்றும் வரவு செய்யப்பட வேண்டியதன் முறை.
(15) உறுப்பினர்கள் அல்லது அவர்களை சார்ந்தவர்களின் நலனிற்கான ஏதேனும் காரியங்களுக்கு நிதியை பயன்படுத்தலாம்.
(16) நிதியின் ஆட்சி நிர்வாகத்தில் ஏற்படலாமெனும் செலவுகளை செய்வதற்குரிய நடவடிக்கை முறை.
(17) நிதியிலிருந்து சலுகைகள், உதவித்தொகைகள் மற்றும் முன்பணங்கள் அளிப்பதற்குரிய நடவடிக்கை முறை.
(18) ே ச ை வ மு டி வ ை ட ந் த வ ரு ட த் தி ன் அ டி ப் ப ை ட யி ல் ே வ ை ல முடிவடையும் உறுப்பினர்களின் நிதியிலிருந்து அளிக்கலாம் எனும் தொகை மற்றும் ஓய்வூதிய நிரக்கை ஒழுங்குபடுத்தல்.
(19) தவறு ஏற்படுத்திய உறுப்பினரின் காரியத்தில் பங்குத்தொகை திருப்பி அளிக்கும் முறையும் நிரக்கும்.
(20) திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையானதோ அல்லது தகுந்ததோஆன பிற ஏதேனும் காரியங்கள்.
எச். ஆர். பரத்வாஜ்,
ஆளுநர்.