Kerala Gazette No. 27 dated 2nd July, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஜி) துறை
அறிக்கை
2012 ஜனவரி 17 எண் 24214/ச. இ. ஜி. 2/2011/சட்டம். திருவனந்தபுரம்,
1933 பௌஷம் 27..
2012 ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலாளர்.
2012-ன் அவசரசட்டம் எண் 3
2012˛u cNeLWÙfNÙ¨V YP˘UÙØ TpL˚XdLZL
(ß⁄jR) AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாம் ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1994-ன் cசங்கராச்சாரியா வடமொழி பல்கலைக்கழக சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
முகவுரை.—2011-ன் cசங்கராச்சாரியா வடமொழி பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 56) 2011 நவம்பர் 30ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும்;
22011 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி அதே நாள் முடிவடைந்த சட்டப் பேரவையின் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டசபையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-யின் அடிப்படையில் 2011-ன் cசங்கராச்சாரியா வடமொழி பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 56) 2012, ஜனவரி 20ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.—
1. சுருக்கத் தலைப்பும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் cசங்கராச்சாரியா வடமொழி பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2011 டிசம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாகக் கருதப்படவேண்டும்.
2. 1994-ன் 5வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அ வ ச ர ச் ச ட் ட ம் ந ை டமு ை ற யி ல் இ ரு க் கி ன் ற க ா ல த் தி ல் , 1 9 9 4 - ன் cசங்கராச்சாரியா வடமொழி பல்கலைக்கழக சட்டம் (1994-ன் 5) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று அழைக்கப்படலாம்) பிரிவு 3, மற்றும் 4-ல் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.
3. பிரிவு 12-ல் திருத்தம்.—முதன்மை சட்டம் பிரிவு 12-ல் தற்போதுள்ள தலைப்பின்கீழ் வரும் "பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்கள்" என்ற இனத்திற்கு பதிலாக பின்வரும் இனம் சேர்க்கப்படவேண்டும்.
(i) "ஒரே முறையில் ந ான்கு வ ருடத்தி ற்கு வேந்த ரா ல் பெயர் பரிந்துரை செய்யப்படுகின்ற வடமொழி, இன்டோளஜி, இந்தியன் தத்துவஞானமும் மற்றும் ஏதேனும் இந்திய மொழிகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற நான்கு சிறந்த வல்லுநர்கள்;
(ii) உயர் கல்வித்துறையில் இருந்து நான்கு வருடத்திற்கு, அரசு பெயர் பரிந்துரை செய்கின்ற சிறந்த ஏழு வல்லுநர்கள் அல்லது சிறந்த கல்வி உறுப்பினர்களில் மூன்று நபர்கள் cசங்கராச்சாரியர் வடமொழி3 பல்கலைக்கழகத்திலுள்ள ஆசிரியர்கள், அவர்களில் ஒருவர் மகளிரும் ஒருவர் அட்டவணை சமுதாயம் அல் லது மி கவும் பிற்படு த்த ப்பட்ட இனத்தைச்சார்ந்தவருமாக இருக்கவேண்டும்;
(iii) ஒ ரு வ ரு ட க ா ல த் தி ற் கு அ ர ச ா ல் ெ ப ய ர் ப ரி ந் து ை ர ெ ச ய் ய ப் ப டு கி ன் ற சி ற ந் த க ல் வி த் த கு தி யு ள் ள , ப ல் க ை ல க் க ழ க த் த ா ல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக/கல்Ìரிகள்/மையங்களை சார்ந்த ஒரு முதுகலைப்பட்ட மாணவர்;
(iv) வேந்தரால் சுழற்சி முறையில் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு புலத்தின் தலைவர்;
(v) கேரள மாநில உயர்கல்வித்துறையின் நிர்வாகக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்;
எனினும், நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் என்ற தலைப்பின்கீழ் வேந்தராலோ அல்லது அரசாலோ பரிந்துரை செய்யப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதது காரியத்திலாவதுபோல் வேந்தருக்கோ அல்லது அரசிற்கோ விருப்பமுள்ள காலம் வரை பதவியில் இருக்கலாம்."
4. சிறப்பு காப்புரை.—இந்த முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் எவ்வாறு இருந்தபோதிலும் முதன்மைச்சட்டம் பிரிவு 12-ல் "ப ரி ந் து ை ர க் க ப் ப ட் ட உ று ப் பி ன ர் க ள்" எ ன் ற த ை ல ப் பி ன் கீ ழ் இ ந் த அவசரச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் இனம் (ii), (iii) மற்றும் (iv) கீழ் நியமிக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ள உறுப்பினர்கள். இந்த அவசரச்சட்டம் அமலுக்கு வந்த தேதி முதல் இந்த அவசரச்சட்ட காப்புரையின்படி பதவியில் தொடரமுடியாது.
5 இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2011-ன் cசங்கராச்சாரியா வடமொழி பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 56) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் அடிப்படையில் செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் அடிப்படையில் செய்ததாக அல்லது மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படவேண்டும்.
எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.