Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

4. The Kerala Local Authorities (Prohibition of Detection) Amendment Ordinance, 2012 (Ordinance No. 5 of 2012)—Tamil

Published 09 July 2013

Department
Law (Legislation-C) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-07-09.pdf_2013_28_1_local_authorities
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 28 dated 9th July, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

2012 ஜனவரி 17 எண். 64/ச. இ.. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1933 பௌஷம் 27.

2012 ஜனவரி மாதம் 17ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச் செயலாளர்.

2012-ன் அவசரச்சட்டம் எண் 5

2012-˛u ˙LW[ Es-[Ùh£ Aß-LÙW ®fl-Y-]eLs

(Lh-£j-RÙ-Yp R˚P-˘Nn-Rp) ß-⁄j-R

AY-NWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாம் ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1999-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடை செய்தல்) சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—1999-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடை செய்தல்) சட்டம் இதற்கு பிறகு பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

2

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும் தாம் துரிதநடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;

எனவே, தற்போது, இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடை செய்தல்) திருத்த அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. 1999-ன் 11வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில், 1999-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடை செய்தல்) சட்டத்தின் (1999-ன் 11) (இதற்கு பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்) 3 மற்றும் 4ஆம் பிரிவுகளில் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையிலிருக்கும்.

3. பிரிவு 2-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 2-ல், உட்பிரிவு (iv)-க்குப் பதிலாக பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"(ivஎ) "எழுத்துமூலமான அறிவுரை" எனில், ஒரு அரசியல் கட்சியில் உட்பட்டதோ ஒரு அரசியல் கட்சியினுடைய ஆதரவு உடையதோ, ஆன ஒரு உறுப்பினருக்கு மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சியினுடைய மாவட்ட தலைவர் அல்லது மாவட்ட செயலாளர் ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிப்பதற்கோ வாக்களிப்பில் இருந்து விடுபட்டு நிற்பதற்காகவோ தேதி வைத்து கையெழுத் திட்ட எழுத்துமூலம் கொடுக்கின்ற அறிவுரை என்று பொருள்படும்;".

4. பிரிவு 3-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 3-ல்,—

(எ) தற்போதுள்ள பிரிவு அதனுடைய துணைப்பிரிவு 1-ஆக எண்ணமிடப்பட வேண்டியதும் அவ்வாறு எண்ணமிடப்பட்ட (1)ஆம் துணைப் பிரிவு 1-க்கு பிறகு பின்வரும் உட்பிரிவுகள் சேர்க்கப்படவும் வேண்டும், அதாவது:—

"(2) துணைப்பிரிவு (1)-ன் (எ) மற்றும் (பி) உட்பிரிவின் தேவைக்காக அளிக்கப்படுகின்ற எழுத்து மூலமான அறிவுரையினுடைய நகல் அதைச்சார்ந்த உள்ளாட்சி சுய அதிகார நிறுவனத்தினுடைய தலைவருக்கு அளிக்க வேண்டியதும் மேற்குறிப்பிட்ட உட்பிரிவின்படியுள்ள வாக்களிப்பு குறிப்பிடப் பட்டதைச் சார்ந்து அந்தக்கூட்டத்தில் அறிவுரைகள் அளிப்பதில் நிர்ணயம்3 செய்யப்பட்டபடி அதிகாரப்படுத்தப்பட்டுள்ள உறுப்பினர் மேற்குறிப்பிட்ட அறிவுரையின் உட்கருத்தை உறுப்பினர்களுடைய அறிவிற்காக வாசித்து கேட்க வைக்க வேண்டியதும் அவ்வாறு வாசிக்கப்படுகின்ற அறிவுரைகள் உறுப்பினர்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டதாக எண்ணப்பட வேண்டியதுமாகும்.

(3) அதைச்சார்ந்த அரசியல் கட்சியோ அல்லது சங்கமோ, துணைப்பிரிவு (2)-ன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களின்படி இந்த தேவைக் காக அதிகாரப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் இந்த துறையின்கீழ் அளிக்கப்படுகின்ற அறிவுரையைப் பொறுத்து ஏதேனும் கருத்து வேறுபாடுகள் உள்ள பட்சத்தில் அதைச்சார்ந்த அரசியல் கட்சியினுடைய தலைவர் அல்லது மாவட்ட செயலாளர் அந்த காரியத்தில் கொடுத்த எழுத்து வடிவிலான அறிவுரை நடைமுறையில் உள்ளதாக எண்ணப்பட வேண்டும்.

தற்போதுள்ள விளக்கத்தில், "நிறுத்தப்பட்ட" என்ற சொல்லிற்குப் பதிலாக "நிறுத்தப்பட்டதோ அல்லது ஆதரவு அளித்ததோஆன" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.

எச். ஆர். பரத்வாஜ்,

ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 09 July 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-07-09.pdf_2013_28_1_local_authorities/. Archive identifier in.gazette.kerala_new.2013-07-09.pdf_2013_28_1_local_authorities.