Kerala Gazette No. 28 dated 9th July, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஜி) துறை
அறிக்கை
2011 டிசம்பர் 1 எண் 24216/ச. இ. ஜி. 2/2011/சட்டம். திருவனந்தபுரம்,
1933 அக்ரஹாயனா 10.
2011 நவம்பர் 30ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச் செயலர்.
2011-ன் அவசரசட்டம் எண் 58
2011˛u ULÙjUÙ LÙkß TpL˚XdLZL (ß⁄jR)
AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1985-ன் மகாத்மா காந்தி பல்கலைக்கழகச் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
முன்னுரை.—1985-ன் மகாத்மா காந்தி பல்கலைக்கழகச்சட்டம் (1985-ன் 12) இதற்குப் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;
2கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க தேவையான சூழ்நிலை நடைமுறையில் உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது:—
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2011-ன் மகாத்மாகாந்தி பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் என்ற பெயரால் அழைக்கப்படும்.
(2) இது உடனடியாக அமலுக்கு வருவதாகும்..
2. 1985-ன் 12ஆம் சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 1985-ன் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகச் சட்டம் (1985-ன் 12) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று அழைக்கப்படும்) பிரிவு 3, 4, 5, 6, 7 என்பனவை குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.
3. பிரிவு 17இல் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் 17ஆம் பிரிவில்,—
(எ) "அலுவலான உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ், இனம் 15-க்கு பிறகு, பின்வரும் இனம் சேர்க்க வேண்டியதாகும், அதாவது:—
"( 1 6 ) ெ ச ன ட் டி ன் உ று ப் பி ன ர் அ ல் ல ா த சி ன் டி ே க ட் டி ன் உறுப்பினர்கள்"
( பி ) " பி ற உ று ப் பி ன ர்" எ ன் ற த ை ல ப் பி ன் கீ ழ் ( 4 )ஆ ம் இ ன ம் நீக்கப்படவேண்டியதாகும்.
4. பிரிவு 18-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 18-ல் (7)-வது துணைப்பிரிவிற்குப்பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்க வேண்டியதாகும், அதாவது:—
"(8) வேந்தரோ அரசோ பெயர் சிபாரிசு செய்கின்ற செனட்டின் உறுப்பினர்களுக்கு வேந்தருக்கோ, அரசிற்கோ, அந்தந்த காரியங்களுக்கு ஏற்ப, விரும்புகின்ற காலம் வரை தங்களுடைய பதவியை வகிக்க வேண்டியதாகும்.".
5 . பிரிவு 21-ல் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தில் பிரிவு 21-ல், "பிற உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ்,—
3(i) (எ) இனத்திற்கு பதிலாக பின்வரும் இனம் சேர்க்க வேண்டியதாகும், அதாவது:—
"(எ) உயர்கல்வித்துறையிலிருந்து அரசு பெயர் சிபாரிசு செய்கின்ற எட்டிற்கு குறையாத உறுப்பினர்கள், இவர்களில் ஒருவர் மகளிராக இருக்கவேண்டியதாகும்.''.
(i) (இ) இனம் நீக்கப்பட வேண்டியதாகும்;
(ii) (ஜி)-யும் (எச்) இனங்கள் நீக்கப்பட வேண்டியதாகும்.
6. பிரிவு 22-ல் திருத்தம்..—முதன்மைச்சட்டத்தின் 22-ல், துணைப் பிரிவு 2-க்குப்பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டியதாகும், அதாவது:—
"(3) வேந்தரோ அல்லது அரசோ பெயர் சிபாரிசு செய்கின்ற சின்டிகேட் உறுப்பினர்களுக்கு வேந்தருக்கோ அல்லது அரசிற்கோ, அந்தந்த காரியங்களுக்கு ஏற்ப, விரும்புகின்ற காலம் வரையில் தங்களுடைய பதவியை வகிக்க வேண்டியதாகும்.".
7. சிறப்பு விதி.—முதன்மைச்சட்டத்தில் என்ன அடங்கியிருந்தாலும், இந்த அவசரச்சட்டத்தினுடைய தொடக்க தேதியில், 17ஆம் பிரிவில் "பிற உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ் (4)ஆம் இனத்தின்படி 21ஆம் பிரிவில் "பிற உறுப்பினர்கள்" என்ற தலைப்பின்கீழ் (எ), (இ), (ஜி), மற்றும் (எச்) இனங்களின்படியும் பதவியிடத்திற்கு அரசு பெயர் சிபாரிசு செய்யப்பட்ட தற்போதைய உறுப்பினர்கள் பதவியிடம் வகிப்பது இந்த அவசரச் சட்டத்தின் விதிமுறைகளின்படி முடிவடைவதாகும்.
எம். ஓ. எச். பரூக், ஆளுநர்.