Kerala Gazette No. 28 dated 9th July, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-சி) துறை
அறிக்கை
2012 ஜனவரி 17 எண் 21699/ச. இ. சி. 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,
1933 பௌஷம் 27.
2012 ஜனவரி 17ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.
2012-ன் அவசரசட்டம் எண் 4
2012-˛u ˙LW[ Tg-NÙ-Vj-'-WÙw (ß⁄jR) AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
முகவுரை.—2011-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டம் (2011-ன் 48) 2011 நவம்பர் 18ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும்;
22011 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி அதே நாளில் முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதா தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் பின்வரும் அவசரச்சட்டம் 2012 ஜனவரி 20ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213ஆம் விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2010 நவம்பர் மாதம் 1ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படவேண்டும்
2. 1994-ன் 13வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காலத்தில், 1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு (1994-ன் 13) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று குறிப்பிடப்படுவது) 3வது பிரிவில் கூறப்பட்டுள்ள திருத்தத்திற்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.
3. பிரிவு 159-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 159-ன் துணைப் பிரிவு (1)-ல், "மூன்று மாதத்திற்குள்" என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக "பதினைந்து மாதங்களுக்குள்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2011-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (மூன்றாம் திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 48) இதனால் இரத்து செய்யப் படுகிறது.
3(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் அடிப்படையில் செய்த ஏதேனும் காரியமோ, எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ கருதப்படவேண்டும்.
எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.