Kerala Gazette No. 31 dated 30th July, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-சி) துறை
அறிக்கை
2012 ஆகஸ்ட் 21 எண் 64/ச. இ. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 சிராவணம் 30.
2012 ஆகஸ்டு 18ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.
2012-ன் அவசரசட்டம் எண் 50
2012-˛u ˙LW[ Es[Ùh£ AßLÙW ®flY]eLs
(Lh£jRÙYp R˚P˘NnRp) ß⁄jR
AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1999-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடைசெய்தல்) சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
2முன்னுரை.—2012-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடைசெய்தல்) திருத்த அவசரச்சட்டம் (2012-ன் 5) 2012 ஜ ன வ ரி 1 7 ஆ ம் ே த தி ே க ர ள ஆளு ந ர ா ல் வி ள ம் ப ர அ றி க் ை க செய்யப்பட்டிருந்ததாலும்;
2 0 1 2 ம ா ர் ச் 1ஆ ம் ே த தி ெ த ா ட ங் கி 2 0 1 2 ம ா ர் ச் 2 3ஆ ம் ே த தி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2012-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடைசெய்தல்) திருத்த அவசரச்சட்டம் (2012-ன் 31) 2012 ஏப்ரல் 11ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;
2012 ஜூண் 11ஆம் தேதி தொடங்கி 2012 ஜூலை 25ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-யின் அடிப்படையில் பின்வரும் அவசரச்சட்டம் 2012 ஜூலை 23ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடைசெய்தல்) திருத்த அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2012 ஜனவரி மாதம் 17ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படவேண்டும்3 2. 1999-ன் 11வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காலத்தில், 1999-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடைசெய்தல்) சட்டத்தின் (1994-ன் 11) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று அழைக்கப்படலாம்) பிரிவு 3 மற்றும் 4-ல் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.
3. பிரிவு 2-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 2-ல், உட்பிரிவு (iv)-க்குப் பதிலாக பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"(ivஎ) "எழுத்துமூலமான அறிவுரை" எனில், ஒரு அரசியல் கட்சியில் உட்பட்டதோ ஒரு அரசியல் கட்சியினுடைய ஆதரவு உடையதோ ஆன ஒரு உறுப்பினருக்கு மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சியினுடைய மாவட்ட தலைவர் அல்லது மாவட்ட செயலாளர் ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிப்பதற்கோ வாக்களிப்பில் இருந்து விடுபட்டு நிற்பதற்காகவோ தேதி வைத்து கையெழுத் திட்ட எழுத்துமூலம் கொடுக்கின்ற அறிவுரை என்று பொருள்படும்".
4. பிரிவு 3-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 3-ல்,—
(எ) தற்போதுள்ள பிரிவு அதனுடைய துணைப்பிரிவு (1)ஆக எண்ணமிடப்பட வேண்டியதும் அவ்வாறு எண்ணமிடப்பட்ட (1)ஆம் துணைப்பிரிவிற்கு பிறகு பின்வரும் துணைப்பிரிவுகள் சேர்க்கப்படவும் வேண்டும், அதாவது:—
"(2) துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவுகளான (எ) மற்றும் (பி)யின் தேவைக்காக அளிக்கப்படுகின்ற எழுத்து மூலமான அறிவுரையின் நகல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களின் செயலாளருக்கு அளிக்க வேண்டியதும் மேற்குறிப்பிட்ட உட்பிரிவின் அடிப்படையிலான வாக்களிப்பு செய்வது தொடர்பாக அந்தக்கூட்டத்தில் அறிவுரை நல்குவதற்காக குறிப்பிடப்பட்டபடி அதிகாரப்படுத்தப்பட்ட உறுப்பினர் மேற்குறிப்பிட்ட அறிவுரையிலுள்ள உள்ளடக்கத்தை உறுப்பினர்களின் அறிவிற்காக வாசித்து கேட்க வைக்க வேண்டியதும் அவ்வாறு வாசிக்கப்படுகின்ற அறிவுரைகள் உறுப்பினர்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும்..
(3) சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியோ அல்லது சங்கமோ, துணைப்பிரிவு (2)-ன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களின்படி இந்த தேவைக் காக அதிகாரப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் இந்த துறையின்கீழ் அளிக்கப்படுகின்ற அறிவுரையைப் பொறுத்து ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அதைச்சார்ந்த அரசியல் கட்சியினுடைய மாவட்டத்தலைவர் அல்லது மாவட்ட செயலாளர் அந்த காரியத்தில் கொடுத்த எழுத்து வடிவிலான அறிவுரை நடைமுறையில் உள்ளதாக எண்ணப்பட வேண்டும்.
4( பி ) த ற் ே ப ா து ள் ள வி ள க் க த் தி ல் , "நிறுத்தப்பட்ட " எ ன் ற சொற்களுக்குப் பதிலாக "நிறுத்தப்பட்டதோ அல்லது ஆதரவு அளித்ததோ ஆன" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
5. செல்லுபடியாதல்.—(1) 2012-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் (கட்சித்தாவல் தடைச்சட்டம்) திருத்த அவசரச்சட்டம் (2012-ன் 31) (இதற்குப்பிறகு மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) காலவரம்பு முடிவடைந்தது எனினும்,—
(எ) மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின்கீழ் செய்ததோ, செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியமோ, எடுத்ததோ மேற்கொண்டதாக கருதப்படுவதோ ஆன ஏ ே தனு ம் ந ட வ டி க் ை க ே ய ா இ ந் த அ வ ச ர ச் ச ட் ட த் தி ன் ப டி தி ரு த் த ம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டியதும்.
(எ) மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் காலவரம்பு முடிவடைந்த பிறகும் இந்த அவசரச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட தேதிக்கு முன்பும் ெ ச ய் த ஏ ே தனு ம் க ா ரி ய ே ம ா அ ல் ல து ே ம ற் ெ க ாண் ட ஏ ே தனு ம் நடவடிக்கையோ அவை மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் காலவரம்பு முடியாமல் இருந்தது எனில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்யவோ அல்லது மேற்கொள்ளவோ செய்ததுபோல், இந்த அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.
எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.