Kerala Gazette No. 31 dated 30th July, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-சி) துறை
அறிக்கை
2012 செப்டம்பர் 26 எண் 20525/ச. இ. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 அஷ்வினம் 4.
2012 செப்டம்பர் 26ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.
2012-ன் அவசரசட்டம் எண் 54
2012-˛u ˙LW[ Tg-NÙ-Vj-'-WÙw (CWiPÙY' ß⁄jR)
AY-N-WfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
2கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213ஆம் விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாவது திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2010 நவம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்படவேண்டும்
2. 1994-ன் 13வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காலத்தில், 1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு (1994-ன் 13) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று குறிப்பிடப்படுவது) 3வது பிரிவில் கூறப்பட்டுள்ள திருத்தத்திற்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.
3. பிரிவு 35-ன் திருத்தம் .—முதன்மை சட்டத்தின் பிரிவு 35-ன் உட்பிரிவு (1)-ல் துணைப்பிரிவு (பி)-யில் "இரண்டு முறை" என்ற வார்த்தை களுக்குப் பதிலாக "மூன்று முறை" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.