Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Madras Hindu Religious and Charitable Endowments (Amendment) Ordinance, 2012 (Ordinance No. 59 of 2012)—Tamil

Published 20 August 2013

Department
Law (Legislation-B) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-08-20.pdf_2013_34_Part_1_madras
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 34 dated 20th August, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

2012 நவம்பர் 10 எண் 23460/ச. இ. பி. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1934 கார்த்திகா 19.

2012 நவம்பர் 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2012-ன் அவசரசட்டம் எண் 59

2012-˛u ˘Nu˚] Ck' NUV A\dLhP˚[ (ß⁄jR)

AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1951-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;

2

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213ஆம் விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ஆல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளைகள் (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வருவதாகும்.

2. 1951-ன் XIX-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கின்ற காலத்தில், 1951-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளை சட்டத்தில் (1951-ன் XIX-வது சென்னை சட்டம்) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று அழைக்கப்படும்) பிரிவு 3 முதல் 9 வரை குறிப்பிடப்பட்டுள்ள திருத்தத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.

3. பிரிவு 7-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 7-ல்,—

(எ) துணைப்பிரிவு (3)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது,—

"(3) துணைப்பிரிவு (1)-ல், குறிப்பிடப்பட்டுள்ள வாரியத்தில் ஒன்பது இந்து உறுப்பினர்கள் உட்படுவதுடன் அவர்களில் ஒரு நபர் பெண் உறுப்பினராக இருக்கவேண்டியதும் ஒரு நபர் ஆதிதிராவிடப் பிரிவினராக இ ரு க் க ே வண் டி ய து ம் , ஒ ரு ந ப ர் ப ழ ங் கு டி பி ரி வி ன ர ா க இ ரு க் க வேண்டியதுமாகும்.

விளக்கம்.—இந்த பிரிவின் தேவைகளுக்காக ஆதிதிராவிட பிரிவினர் மற்றும் ஆதிதிராவிட பழங்குடியினரும் என்பதற்கு இந்திய அரசியலமைப்பின் 366வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (24) மற்றும் (25)-ன் வரிசைப்படி அதற்கு வழங்கப்பட்டுள்ள அதே அர்த்தம் இருக்க வேண்டியதுமாகும்"

(பி) துணைப்பிரிவு (4)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"( 4 ) து ணை ப் பி ரி வு ( 3 ) - ல் , கு றி ப் பி ட ப் ப ட் டு ள் ள ஒ ன் ப து உறுப்பினர்களில் பெண் உறுப்பினரும் ஆதிதிராவிட பிரிவில் உட்பட்ட உறுப்பினரும், ஆதிதிராவிட பழங்குடி பிரிவில் உட்பட்ட உறுப்பினரும் உ ட் ப ட ஏ ழு உ று ப் பி ன ர் க ை ள அ ை ம ச் ச ர ை வ யி ல் உ ள் ள இ ந் து3 உறுப்பினர்களால் பெயர் நியமனம் செய்யப்பட வேண்டியதும் பிற இரண்டு உறுப்பினர்களும் பிரிவு 7ஐ-ல் நிபந்தனை செய்யப்பட்டுள்ளபடி கேரள மாநில சட்டப்பேரவையில் உள்ள இந்து உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதுமாகும்".

4. பிரிவு 7பி-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 7பி-யில் உட்பிரிவு (iv)-யில் "ஐம்பது வயது" என்ற சொற்களுக்குப் பதிலாக "நாற்பத்திஐந்து வயது" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

5. பிரிவு 7எல்-இல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 7எல்-க்குப் பதிலாக பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"7எல். வாரியத்தின் ப¶கள்.—வாரியம் பின்வரும் ப¶கள் மற்றும் கடமைகளை நிர்வாகம் செய்ய வேண்டியதாகும், அதாவது:—

(i) இந்து சமய நிறுவனங்களின் போதுமான பராமரிப்பும் மேம்பாடும் உறுதி செய்தல்,—

(ii) பக்தர்களுக்காக கோவில்களில் தேவையான வசதிகளை உருவாக்குவதும் அதை சரியான முறையில் பராமரிக்கவும் வேண்டும்;

(iii) வட்டாரக்குழுவின் ப¶கள் உள்பட, யார் நிர்வகிக்க வேண்டுமென்று வாரியம் அதிகாரம் வழங்கக்கூடிய அத்தகைய கடமைகளை வாரியத்தின் கீழ் உள்ள எல்லா பிரிவுகளையும் சுழற்சி முறையில் உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

6. பிரிவு 8டி விட்டுவிடப்படல்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 8டி விட்டுவிடப்பட வேண்டும்.

7. பிரிவு 13-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 13-ல்,— (எ) துணைப்பிரிவு (1)-க்கு பதிலாக, பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"(எ) ஒவ்வொரு வட்டாரக் குழுவிலும், அரசால் நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டியதாகும்";

(பி) துணைப்பிரிவு (2)-ல், "மூன்று வருடம்" என்ற சொற்களுக்குப் பதிலாக "இரண்டு வருடம்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

8. பிரிவு 39-ன் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 39-ன், துணைப்பிரிவு (3)-ல், "ஐந்து வருடம்" என்ற சொற்களுக்குப் பதிலாக "இரண்டு வருடம்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

4

9. வட்டாரக்குழு மற்றும் பரம்பரை அல்லாத டிரஸ்டிகளுடையவும் தற்போதுள்ள உறுப்பினர்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள்.—முதன்மை சட்டத்தில் என்ன தான் அடங்கி இருந்தாலும், இந்த முதன்மைச்சட்டம் தொடங்கிய நாள் முதல் அலுவலில் உள்ள வட்டாரக்குழுவின் அவைத்தலைவரும் உறுப்பினர்களும் மற்றும் மரவு வழியல்லாத டிரஸ்டிகளும் இந்த முதன்மைச்சட்டம் தொடங்கிய நாள் முதல், அதன் அதன் காரியம் போல, அப்படியுள்ள வட்டாரக் குழுவினுடைய அவைத்தலைவரும் உறுப்பினர்கள் மற்றும் மரபுவழியல்லாத டிரஸ்டியும் அலுவலில் இருந்து நீக்கப்படுவார்கள்.

எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 20 August 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-08-20.pdf_2013_34_Part_1_madras/. Archive identifier in.gazette.kerala_new.2013-08-20.pdf_2013_34_Part_1_madras.