Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

1. The Madras Hindu Religious and Charitable Endowments (Amendment) Ordinance, 2013 (Ordinance No. 7 of 2013)—Tamil

Published 22 October 2013

Department
Law (Legislation-B) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-10-22.pdf_2013_42_Part_1_Madras_Hindu_Religious
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 42 dated 22nd October, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

2013 ஜனவரி 10 எண் 23460/ச. இ. பி. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பௌஷா 20.

2013 ஜனவரி 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலர் (சட்டம்).

2012-ன் அவசரச்சட்டம் எண் 7

2013-˛u ˘Nu˚] Ck' NUV A\d-Lh-P-˚[ (ß-⁄j-R)

AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1951-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்

முகவுரை.—2012-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளை (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 59) 2012 நவம்பர் 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2

2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளைகள் (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

( 2 ) இ து 2 0 1 2 ந வ ம் ப ர் 1 0ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்படவேண்டும்.

2. 1951-ன் XIXவது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 1951-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளை சட்டத்தில் (1951-ன் XIXவது சென்னை சட்டம்) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்) பிரிவு 3 முதல் 9 வரை குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 7-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 7-ல்,—

(எ) துணைப்பிரிவு (3)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப் படவேண்டும், அதாவது:—

"(3) துணைப்பிரிவு (1)-ல், குறிப்பிடப்பட்டுள்ள வாரியத்தில் ஒன்பது இந்து உறுப்பினர்கள் உட்படுவதுடன் அவர்களில் ஒரு நபர் பெண் உறுப்பின ராக இருக்கவேண்டியதும் ஒரு நபர் ஆதிதிராவிடப்பிரிவினராக இருக்க வேண்டியதும், ஒரு நபர் பழங்குடிப்பிரிவினராக இருக்க வேண்டியதுமாகும்.

விளக்கம்.—இந்தப்பிரிவின் தேவைக்காக "ஆதிதிராவிட பிரிவினர்" மற்றும் "ஆதிதிராவிட பழங்குடியின"ரும் என்பதற்கு இந்திய அரசியலமைப்பின் 366வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (24) மற்றும் (25)-ல் முறையே அதற்கு வழங்கப்பட்டுள்ள அதே அர்த்தம் இருக்கும்.

3

(பி) துணைப்பிரிவு (4)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப் படவேண்டும், அதாவது:—

"(4) துணைப்பிரிவு (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது உறுப்பினர் களில் பெண் உறுப்பினரும் ஆதிதிராவிட பிரிவில் உட்பட்ட உறுப்பினரும், ஆதிதிராவிட பழங்குடியினர் பிரிவில் உட்பட்ட உறுப்பினரும் சேர்த்து ஏழு உறுப்பினர்களை அமைச்சரவையில் உள்ள இந்து உறுப்பினர்களால் பெயர் நியமனம் செய்யப்பட வேண்டியதும் பிற இரண்டு உறுப்பினர்களை பிரிவு 7-ல் நிபந்தனை செய்யப்பட்டுள்ளபடி கேரள மாநில சட்டப்பேரவையில் உள்ள இந்து உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதுமாகும்".

4. பிரிவு 7பி-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 7பி-ல் உட்பிரிவு (iv)-ல் "ஐம்பது வயது" என்ற சொற்களுக்குப் பதிலாக "நாற்பத்தி ஐந்து வயது" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

5. பிரிவு 7எல்-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 7எல்-க்கு பதிலாக பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"7எல். வாரியத்தின் ப¶கள்.—வாரியம் பின்வரும் ப¶கள் மற்றும் கடமைகளை நிர்வாகம் செய்ய வேண்டியதாகும், அதாவது:—

(i) இந்து சமய நிறுவனங்களின் போதுமான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டை உறுதிசெய்தல்;

(ii) பக்தர்களுக்காக கோவில்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்து வதோடு அதை சரியான முறையில் பராமரிக்கவும் வேண்டும்;

(iii) வட்டாரக்குழுவின் ப¶கள் உட்பட, யார் நிர்வகிக்க வேண்டு மென்று வாரியம் அதிகாரம் வழங்கக்கூடிய அத்தகைய கடமைகளை வாரியத் தின் கீழ் உள்ள எல்லா பிரிவுகளையும் சுழற்சி முறையில் உறுப்பினர்களுக்கு பங்கிட்டு அளிக்கவேண்டும்.

6. பிரிவு 8டி விட்டுவிடப்படல்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 8டி விட்டுவிடப்பட வேண்டும்.

7. பிரிவு 13-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 13-ல்,—

(எ) துணைப்பிரிவு (1)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப் படவேண்டும், அதாவது:—

"(எ) ஒவ்வொரு வட்டாரக்குழுவிலும், அரசால் நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்கள் இருக்கவேண்டும்";

(பி) துணைப்பிரிவு (2)-ல், "மூன்று வருடம்" என்ற சொற்களுக்குப் பதிலாக "இரண்டு வருடம்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

4

8. பிரிவு 39-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 39-ன் துணைப் பிரிவு (3)-ல் "ஐந்து வருடம்" என்ற சொற்களுக்குப் பதிலாக "இரண்டு வருடம்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

9. வட்டாரக்குழு மற்றும் பரம்பரை இதர டிரஸ்டியுடையவும் தற்போதுள்ள உறுப்பினர்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள்.—முதன்மைச் சட்டத்தில் என்னதான் அடங்கி இருந்தாலும், இந்த முதன்மைச்சட்டம் தொடங்கிய நாள் முதல் அலுவலில் உள்ள வட்டாரக்குழுவின் அவைத்தலைவரும் உறுப்பினர்களும் மற்றும் மரபு வழியல்லாத டிரஸ்டிகளும் இந்த அவசரச் சட்டம் தொடங்கிய நாள் முதல், அதது காரியம்போல, அப்படியுள்ள வட்டாரக்குழுவினுடைய அவைத்தலைவரும் உறுப்பினர்கள் மற்றும் மரபுவழியல்லாத டிரஸ்டியும் அலுவலில் இருந்து நீக்கப்படுவார்கள்.

10. இரத்தாதலும் காப்பும்.—(1) 2012-ன் சென்னை இந்து சமய அறக்கட்டளை (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 59) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) இவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின் அடிப்படையில் செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ, இ ந் த ச ட் ட ப் ப டி தி ரு த் த ம் ெ ச ய் ய ப் ப ட் ட மு த ன் ை ம ச் ச ட் ட த் தி ன் அடிப்படையில் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.

எச். ஆர். பரத்வாஜ்,

ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 22 October 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-10-22.pdf_2013_42_Part_1_Madras_Hindu_Religious/. Archive identifier in.gazette.kerala_new.2013-10-22.pdf_2013_42_Part_1_Madras_Hindu_Religious.