Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala Municipality (Second Amendment) Ordinance, 2012 (Ordinance No. 64 of 2012)—Tamil

Published 22 October 2013

Department
Law (Legislation-C) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-10-22.pdf_2013_42_Part_1_Municipality
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 42 dated 22nd October, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

2012 நவம்பர் 25 எண் 9239/ச. இ. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1934 அக்ரஹாயனம் 4.

2012 நவம்பர் 24ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2012-ன் அவசரச்சட்டம் எண் 64

2012-˛u ˙LW[ ÿ≤-£l-TÙ-≠h• (C-Wi-PÙm ß⁄j-R)

AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1994-ல் கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற் குரிய ஒரு அவசரச்சட்டம்.

முன்னுரை.—கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாத தாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;

2

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. 1994-ன் 20ஆம் சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் 1994-ன் கேரள முனிசிப் பாலிட்டி சட்டம் (1994-ன் 20) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படலாம்) பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.

3. பிரிவு 447-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 447-ன் துணைப் பிரிவு (6)க்குப்பிறகு பின்வரும் துணைப்பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"(7) 1077-ல் அப்காரி சட்டத்திலோ (1077-ன் 1) தற்போது நிலவிலுள்ள பிற ஏதேனும் சட்டத்திலோ என்னதான் அடங்கியிருந்தாலும், எந்த ஒரு நபரும் முனிசிப்பாலிட்டியின் முன்னதாகவுள்ள அனுமதி இல்லாமலும் அனுமதியில் தனியாகக் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்படாததும் ஆன, ஒரு முனிசிப்பல் பகுதிக்குள் ஒரு மதுக்கடை நிறுவுவதற்கு முடியாததாகும்.

(8) கல்வி நிறுவனம் அல்லது பிரார்த்தனை இடங்களின் அருகில் ஒரு மதுக்கடை நிறுவுவதற்கு அனுமதி அளிக்கும்போது தற்போது நிலவிலுள்ள அப்காரி சட்டத்திலோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்க ளிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ள Áர அளவிற்கு கட்டுப்படுவதுடன் மேற்குறிப் பிட்ட Áர அளவிற்குள் ஒரு மதுக்கடை நிறுவுவதற்கு முனிசிப்பாலிட்டி அனுமதி அளிப்பதற்கு முடியாததும் ஆகும்.

(9) பொது அமைதி அல்லது ஒழுக்கத்தின் தேவையைக் கருத்தில் கொண்டோ, வசதியோ, இன்னலோ காரணமாகவோ ஒரு மதுக்கடை ஒரு இடத்திலிருந்து இதற்காக பரிந்துரை செய்யப்படுகின்ற பதினைந்து நாட்களுக்கு மிகாத காலயளவிற்குள் வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கோ, மூடுவதற்கோ உத்தரவு அளிப்பதற்கு ஒரு முனிசிப்பாலிட்டிக்கு அதிகாரமுள்ளதாகும்.

(10) இந்த பிரிவில் என்னதான் அடங்கியிருந்தாலும், (7) முதல் (9) வரையுள்ள துணைப்பிரிவுகளின் ஏற்பாடுகள் 2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 64) அமலுக்கு வந்த தேதியில்,3 நிலவிலுள்ள எந்த ஒரு மதுக்கடைக்கோ, நிலவிலுள்ள எல்லா சட்ட ஏற்பாடு களுக்கும் உட்பட்டு மேற்குறிப்பிட்ட தேதியில் தற்போதுள்ள கள்ளுகடைகள் அவை நிறுவுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்குட்பட்ட பகுதியில் மாற்றி நிறுவுவதற்கு பாதமாக இருப்பதில்லை.

விளக்கங்கள்.—"மதுக்கடை" எனில், 1077-ன் அப்காரி சட்டமும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களின் படியுள்ள ஒரு கள்ளுக்கடையோ, ஒரு அயல்நாட்டு மதுக்கடையோ, அயல்நாட்டு மது சில்லறை விற்பனை நிறுவனங் களோ, FL-9 நிறுவனங்களோ அல்லது ஒரு பார் ஹோட்டலோ என பொருள்படும்".

ஹெச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 22 October 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-10-22.pdf_2013_42_Part_1_Municipality/. Archive identifier in.gazette.kerala_new.2013-10-22.pdf_2013_42_Part_1_Municipality.