Kerala Gazette No. 42 dated 22nd October, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-சி) துறை
அறிக்கை
2013 ஜனவரி 10 எண் 20525/ச. இ. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1 9 3 4 ெ ப ள ஷ ம் 2 0 .
2013 ஜனவரி 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.
2013-ன் அவசரச்சட்டம் எண் 9
2013-˛u ˙LW[ Tg-NÙ-Vj-'-WÙw (C-Wi-PÙY' ß⁄j-R)
AYNWfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
22012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
( 2 ) இ து 2 0 1 0 ந வ ம் ப ர் 1ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்படலாம்.
2. 1994-ன் 13வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கின்ற காலத்தில் 1994-ன் கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் (1994-ன் 13) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படலாம்) பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.
3. பிரிவு 35-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 35-ன் துணைப் பிரிவு (1)-ல் உட்பிரிவு (பி)-ல், "இரண்டு முறை" என்ற சொற்களுக்குப்பதிலாக "மூன்று முறை" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.
4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள பஞ்சாயத்து ராஜ் (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 54) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்கூறிய அவசரச்சட் டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் செயலோ, மேற்கொண்ட ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின்கீழ் செய்ததாகவோ, மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.