Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

6. The Kerala Municipalities (Amendment) Ordinance, 2013 (Ordinance No. 10 of 2013)—Tamil

Published 29 October 2013

Department
Law (Legislation-C) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_Municipalities
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 43 dated 29th October, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

2013 ஜனவரி 15 எண் 9239/ச. இ. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1 9 3 4 ெ ப ளஷ ம் 2 5 .

2013 ஜனவரி 14ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2013-ன் அவசரச்சட்டம் எண் 10

2013-˛u ˙LW[ ÿ≤-£l-TÙ-≠h• (ß⁄j-R)

AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1994-ன் கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற் குரிய ஒரு அவசரச்சட்டம்.

முன்னுரை.—2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 64), 2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (மூன்றாம் திருத்தம்) அவசரச்சட்டமும் (2012-ன் 65) 2012 நவம்பர் 24ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும்;

2

2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்குப் பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2012 நவம்பர் 25ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படும்.

2. 1994-ன் 20ஆம் சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் 1994-ன் கேரள முனிசிப் பாலிட்டி சட்டம் (1994-ன் 20) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படலாம்) பிரிவு 3 முதல் 5 வரை கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.

3. பிரிவு 233-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 233-ல்,—

(எ) துணைப்பிரிவு (4)-க்குப்பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க் கப்படவேண்டும், அதாவது:—

"(4) துணைப்பிரிவு (2)-ன் படி அரசு நிச்சயிக்கின்ற அடிப்படை சொத்துவரி கட்டணங்களின் வரம்புகளுக்கும், அவைக்கு உட்பட்டு துணைப் பிரிவு (3)-ன்படி குழுமம் ஒரு முறை நிச்சயிக்கின்ற அடிப்படை சொத்துவரி கட்டணங்களுக்கும் அவை அமலுக்கு வருகின்ற தேதி முதல் ஐந்து வருட காலயளவிற்கு அமலில் இருப்பதும், தொடர்ந்து ஒவ்வொரு ஐந்து வருட காலயளவு முடிகின்ற முறைக்கு அடுத்த ஐந்து வருட காலயளவிற்கு அமலில் வரக்கூடிய விதத்தில் அடிப்படை சொத்துவரி கட்டணங்கள் வரிசைப் படி அரசும் குழுமமும் தற்போதுள்ள வரம்புகள் மற்றும் கட்டணங்களின் மீது ஒவ்வொரு வருடமும் ஐந்து சதவிகிதம் என்ற கட்டணத்தில் அதிகரித்து அதன் படி ஐந்து வருட காலயளவு முடிகின்றபோது இருபத்தி ஐந்து சதவிகிதம்3 அதிகரிக்கும் வகையில் புதுப்பித்து நிச்சயிக்க வேண்டியதாகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி வரிக்கட்டணம் புதுப்பித்து நிச்சயிக்கப்பட்டபடி வரி நிர்ணயம் செய்யும்போது,—

(எ) புதியதும், புதுப்பிக்கப்பட்டதும், பயன்பாட்டு முறையில் மாறுதல் செய்யப்பட்டதுமான கட்டிடங்களுடைய காரியத்தில் செயலாளர், நிச்சயிக்கப் பட்டபடி வரி நிச்சயிக்கப்பட வேண்டியதும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுமாகும்.

(பி) உட்பிரிவு (எ)-யில் குறிப்பிட்டுள்ள பிரிவில் உட்படாததும், தரை பரப்பளவின் அடிப்படையில் ஒரு முறை வருடாந்திர சொத்துவரி நிச்சயம் செய்யப்பட்ட கட்டிடத்தினுடைய காரியத்தில், தொடர்ந்து வருகின்ற பத்து வருடத்திற்கு வரி புதுப்பித்து நிச்சயிப்பதற்காக தற்போதுள்ள வருடாந்தர சொத்துவரி கட்டணங்களுடன் அதனுடைய இருபத்தி ஐந்து சதவிகிதம் உயர்த்தி குழுமத்தின் வரி புதுப்பித்து நிச்சயிக்க வேண்டியதும் அதன்படி அடுத்த ஐந்து வருடத்திற்குள்ள டிமான்ட் அறிவிப்பு செயலாளர் கட்டிட உரி மையாளருக்கு கொடுக்கவேண்டியதுமாகும்;

எனினு ம் , இ த ன் ப டி வ ரு ட ா ந் தி ர ெ ச ா த் து வ ரி பு து ப் பி த் து நிச்சயிக்கும்போது துணைப்பிரிவு (7)-ன் படியுள்ள குறைவு செய்வதற்கோ அதிகரிப்பதற்கோ பொருத்தப்படுவதில்லை;

(பி) துணைப்பிரிவு (7)-ல், (iii), (vii), (ix) போன்ற இனங்கள் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

(சி) துணைப்பிரிவு (9)-ன் காப்புவாசக நிபந்தனையில், "கட்டித்தின் சுவரினுடைய கட்டுமானம்" என்ற சொற்கள் தவிர்க்கப்பட வேண்டியதாகும்;

(டி) துணைப்பிரிவு (10)-ல், "அறுபது நாட்களுக்குள்" என்ற சொற் களுக்கு பதிலாக "முப்பது நாட்களுக்குள்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

(இ) துணைப்பிரிவு (12) தவிர்க்கப்பட வேண்டியதாகும்;

(எஃப்) துணைப்பிரிவு (14) தவிர்க்கப்பட வேண்டியதாகும்;

(ஜி) துணைப்பிரிவு (19)-ல், இனம் (ii)-க்கு பதிலாக பின்வரும் இனம் சேர்க்கப்பட வேண்டியதாகும், அதாவது:—

"(ii) வருடாந்திர சொத்துவரியின் உயர்வில் மிகவும் குறைந்த வரம்பும் கூடிய வரம்பும் நிச்சயிப்பது";

4. பிரிவு 235-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 235-ல் உட்பிரிவு (பி)-க்கு பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட வேண்டியதாகும், அதாவது:—

4

"(பிஎ) அரசினுடைய அங்கீகாரம் உள்ள கல்வி நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளதும் மேல்நிலைப்பள்ளி வரையுள்ளதுமான கல்வித் தேவை களுக்கு மட்டும் பயன்படுத்துகின்ற கட்டிடங்களும் அப்படிப்பட்ட நிறுவனங் களில் மாணவர்கள் தங்குகின்ற விடுதி கட்டிடங்களும்".

5. பிரிவு 447-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 447-ன் துணைப் பிரிவு (6)க்குப்பிறகு பின்வரும் துணைப்பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"(7) 1077-ல் அப்காரி சட்டத்திலோ (1077-ன் 1) தற்போது நிலவிலுள்ள பிற ஏதேனும் சட்டத்திலோ எதுவும் எவ்வாறிருந்தபோதிலும், எந்த ஒரு நபரும் முனிசிப்பாலிட்டியின் முன்அனுமதி இல்லாமலும் அனுமதியில் தனியாகக் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்படாததுமான, ஒரு முனிசிப்பல் பகுதிக்குள் ஒரு மதுக்கடை தொடங்க முடியாததாகும்.

(8) கல்வி நிறுவனம் அல்லது பிரார்த்தனை இடங்களின் அருகில் ஒரு மதுக்கடை தொடங்க அனுமதி அளிக்கும்போது தற்போதுள்ள அப்காரி சட்டத்திலோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ள Áர அளவிற்கு கட்டுப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட Áர அளவிற்குள் ஒரு மதுக்கடை தொடங்க முனிசிப்பாலிட்டி அனுமதி அளிப்பதற்கு முடியாததும் ஆகும்.

(9) பொது அமைதி அல்லது ஒழுக்கத்தின் தேவையைக் கருத்தில் கொண்டோ, வசதியோ, இன்னலோ காரணமாகவோ ஒரு மதுக்கடை ஒரு இடத்திலிருந்து இதற்காக பரிந்துரை செய்யப்படுகின்ற பதினைந்து நாட்களுக்கு மிகாத காலயளவிற்குள் வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கோ, மூடுவதற்கோ உத்தரவு அளிப்பதற்கு ஒரு முனிசிப்பாலிட்டிக்கு அதிகாரமுள்ளதாகும்.

(10) இந்த பிரிவில் எதுவும் எவ்வாறிருந்தபோதிலும், (7) முதல் (9) வரையுள்ள துணைப்பிரிவுகளின் ஏற்பாடுகள் 2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 64) அமலுக்கு வந்த 2012 நவம்பர் 25ஆம் தேதியில், நிலவிலுள்ள எந்த ஒரு மதுக்கடைக்கோ, நிலவிலுள்ள எல்லா சட்ட ஏற்பாடுகளுக்கும் உட்பட்டு மேற்குறிப்பிட்ட தேதியில் தற்போதுள்ள கள்ளுகடைகள் அவை தொடங்குவதற்கு அனுமதிக்கப் பட்டுள்ள வரையறைகளுக்குட்பட்ட பகுதியில் மாற்றி நிறுவுவதற்கு பாதமாக இருப்பதில்லை.

விளக்கங்கள்.—"மதுக்கடை" எனில், 1077-ன் அப்காரி சட்டமும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களின் படியுள்ள ஒரு கள்ளுக்கடையோ, ஒரு அயல்நாட்டு மதுக்கடையோ, அயல்நாட்டு மது சில்லறை விற்பனை நிறுவனங் களோ, FL-9 உரிமம் உள்ள ஒரு நிறுவனமோ அல்லது ஒரு பார் ஹோட்டலோ என பொருள்படும்".

5

6. இரத்தாதலும், தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டமும் (2012-ன் 64) 2012-ன் கேரள முனிசிப் பாலிட்டி (மூன்றாம் திருத்த) அவசரச்சட்டமும் (2012-ன் 65) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச்சட் டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின் கீழ் செய்த ஏதேனும் செயலோ, மேற்கொண்ட ஏதேனும் நடவடிக்கையோ இந்தச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின் கீழ் செய்தததாகவோ, மேற்கொண்டதாகவோ கருதப்பட வேண்டும்.

ஹெச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 29 October 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_Municipalities/. Archive identifier in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_Municipalities.