Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

4. The Kerala Stamp (Amendment) Ordinance, 2013 (Ordinance No. 5 of 2013)—Tamil

Published 29 October 2013

Department
Law (Legislation-A) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_Stamp
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 43 dated 29th October, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2013 ஜனவரி 10 எண் 18971/ச. இ. எ. 2/2010/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பௌஷம் 20.

2013 ஜனவரி 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரிக்கப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2013-ன் அவசரச்சட்டம் எண் 5

2013˛u ˙LW[ ÿj-ß-˚Wl-Tj-ßW (ß-⁄j-R) AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1995-ன் கேரள முத்திரைப்பத்திர சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு அவசரச்சட்டம்.

முன்னுரை.—2010-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 54) 2010 அக்டோபர் 22ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2

2010 டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி 2011 ஜனவரி 3ஆம் முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக, 2011-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 5) 2011 ஜனவரி 22ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2011 பெப்ருவரி 4ஆம் தேதி தொடங்கி 2011 பெப்ருவரி 24ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண் டுவருவதற்கு ரிய ஒரு மசே ா த ா வை த ாக் கல் செய்வ தற் கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2011-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 30) 2011 மார்ச் 17ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப் பட்டதாலும்;

2011 ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 2 0 1 1 ஜ ூ ை ல 2 0ஆ ம் ே த தி முடிவடைந்த பதிமூன்றாவது கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும், நிறைவேற்று வதற்கும் முடியாமல் போனதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ல் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் மேற்கூறிய அவசரச்சட்டம் 2011 ஜூலை 13ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2012-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 2) 2012, ஜனவரி 16ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும், 2011 ஜூலை 13ஆம் தேதி முதல் 2012 ஜனவரி 17ஆம் தேதி வரை மேற்கூறிய அவசரச்சட்டத்தின் காலவரம்பிற்கு பிறகு எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் செல்லுபடியாக்குவதற்காகவும்;

2012 மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 2012 மார்ச் 23ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய மசோதாவை தாக்கல் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

3

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2012-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 28) 2012 ஏப்ரல் 11ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப் பட்டதாலும்;

2 0 1 2 ஜ ூ ன் 1 1ஆ ம் ே த தி தொடங்கி 2 0 1 2 ஜ ூ ை ல 2 5ஆ ம் ே த தி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ல் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் மேற்கூறிய அவசரச்சட்டம் 2012 ஜூலை 23ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2012-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 47) 2012 ஆகஸ்ட் 11ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட தாலும், மேற்கூறிய அவசரச்சட்டத்தின் காலவரம்பிற்கு பிறகு எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் செல்லுபடியாக்குவதற்காகவும்;

2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் 21ஆம் தேதி முடிவ டைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட் டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கத்தேவையான சூழ்நிலைகள் நிலவில் உள்ளன என கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

( 2 ) இ து 2 0 1 0 ஏ ப் ர ல் 1ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்பட வேண்டும்.

4

2. 1959-ன் 17-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலயளவில் 1959-ன் கேரள முத்திரைப் பத்திரச்சட்டம் (1959-ன் 17) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பி டப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 28(எ)-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு (28எ)-ன் துணைப்பிரிவு (4)-ல்,—

(i) "முப்பது நாட்கள்" என்ற சொற்களுக்குப்பதிலாக "ஒரு வருடம்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

(ii) நிலவிலுள்ள ஏற்பாடுகளுக்குப் பதிலாக பின்வரும் காப்புவாசகங்கள் சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"ஆனால், குறிப்பிட்ட காலயளவிற்குள் மேல்முறையீடு தாக்கல் செய்யாததற்கு மேல் முறையீட்டாளருக்கு போதிய காரணம் உள்ளது என மாவட்ட ஆட்சியாளர் திருப்தியுறும்பட்சத்தில் அவர் குறிப்பிட்ட ஒரு வருட காலயளவிற்கு பிறகும் மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்கலாம்."

4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 47) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்ததோ, செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் செயலோ, மேற்கொண்டதோ மேற்கொண்டதாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.

எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 29 October 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_Stamp/. Archive identifier in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_Stamp.