Kerala Gazette No. 44 dated 5th November, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-பி) துறை
அறிக்கை
2012 நவம்பர் 10 எண் 23459/ச. இ. பி. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 கார்த்திகா 19.
2012 நவம்பர் 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.
2013-ன் அவசரச்சட்டம் எண் 58
2012˛u ß⁄-Æ-RÙe-·o˛˘LÙf£ Ck' NUV ®fl-Y-]eLs
(ß⁄j-R) AYNWfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1950-ன் திருவிதாங்கூர்-கொச்சி இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மீண்டும் (திருத்தம்) செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
முன்னுரை.—கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாத தாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
2தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் திருவிதாங்கூர்-கொச்சி இந்து சமய நிறுவனங்கள் (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.
(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.
2. 1950-ன் XV-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் 1950-ன் திருவிதாங்கூர்- கொச்சி இந்து சமய நிறுவனங்கள் (திருத்த) அவசரச்சட்டம் (1950-ன் XV) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படும்) பிரிவு 3 முதல் 16 வரை கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.
3. பிரிவு 4-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 4-ல்,—
(எ) துணைப்பிரிவு (1)-ல், "ஒருவர் மகளிராகவும் மற்றும்" என்ற வார்த்தைகளை விட்டுவிட வேண்டும்.
(பி) துணைப்பிரிவு (1எ)-க்குப் பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"(1எ) துணைப்பிரிவு (1)-ல் கூறப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவையிலுள்ள இந்து உறுப்பினர்களால் பெயர் பரிந்துரை செய்யப்பட வேண்டியதும் மற்றும் அட்டவணை ஜாதி/ பழங்குடியினர் பிரிவைச்சேர்ந்த உறுப்பினரை கேரள மாநில சட்டசபையின் இந்து உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டியதுமாகும்."
4. பிரிவு 6-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 6-ல் "ஐம்பது வருடங்கள்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "நாற்பத்தி ஐந்து வருடங்கள்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
5. பிரிவு 10-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 10-ன் துணைப் பிரிவு (1)-ல், "இரண்டு வருடங்கள்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "மூன்று வருடங்கள்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
6. பிரிவு 14-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 14-ல் துணைப் பிரிவு (1)-ல், "நிலையான குழுக்கள்" என்ற வார்த்தைகளை விட்டுவிட வேண்டும்.
37. பிரிவு 15(பி) நீக்குதல்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 15(பி) நீக்கப்பட வேண்டும்.
8. பிரிவு 29(எ) நீக்குதல்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 29(எ) நீக்கப்பட வேண்டும்.
9. பிரிவு 35-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 35-ன் துணைப் பிரிவு (1)-ல், "வாரியத்திற்கு சட்டங்களை உருவாக்கலாம்" என்ற வார்த்தைகளுக் குப்பதிலாக "வாரியத்திற்கு அரசின் முன்அனுமதியுடன் சட்டங்கள் உருவாக்கலாம்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
10. பிரிவு 63-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 63-ன்,—
(எ) துணைப்பிரிவு (1)-ல், "ஒருவர் மகளிராகவும் மற்றும்" என்ற வார்த்தைகளை விட்டுவிட வேண்டும்.
(பி) துணைப்பிரிவு (2)-க்குப் பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"(2) (1)ஆம் துணைப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று உறுப்பினர் களில் இரண்டு உறுப்பினர்களை அமைச்சரவையில் இந்து உறுப்பினர்களால் பெயர் பரிந்துரை செய்யப்பட வேண்டியதும் மற்றும் அட்டவணை பழங்குடியினர் பிரிவைச்சேர்ந்த உறுப்பினரை கேரள மாநில சட்டசபையின் இந்து உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டியதுமாகும்."
11. பிரிவு 65-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 65-ன், "ஐம்பது வருடங்கள்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "நாற்பத்தி ஐந்து வருடங்கள்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
12. பிரிவு 70-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 70-ன் துணைப் பிரிவு (1)-ல், "இரண்டு வருடங்கள்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "மூன்று வருடங்கள்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
13. பிரிவு 73-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 73-ன் துணைப் பிரிவு (2எ)-ல், "நிலையான ஆனணயங்களின்" என்ற வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும்.
14. பிரிவு 74(பி)யை நீக்குதல்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 74(பி) நீக்கப்படவேண்டும்.
15. பிரிவு 122-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 122-ன் துணைப் பிரிவு (1)-ல், "வாரியத்திற்கு சட்டங்களை உருவாக்கலாம்" என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக "வாரியத்திற்கு அரசின் அனுமதியுடன் சட்டங்களை உருவாக்கலாம்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
416. பிரிவு 127எ நீக்குதல்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 127எ நீக்கப்பட வேண்டும்.
17. 2008-ன் 19வது சட்டத்தை இரத்து செய்தல்.—கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (அறநிலையத்துறை வாரியங்களின் கீழுள்ள ஆட்சி ப¶களை சார்ந்த அதிக பொறுப்புகள்) சட்டம் (2008-ன் 19) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
எச். ஆர். பரத்வாஜ்,
ஆளுநர்.