Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala State Water Resources Regulatory Authority Ordinance, 2013 (Ordinance No. 3 of 2013)—Tamil

Published 26 November 2013

Department
Law (Legislation-F) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-11-26.pdf_2013_47_Part_1_Water_resources
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 47 dated 26th November, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எஃப்) துறை

அறிக்கை

2013 ஜனவரி 10 எண் 22743/ச. இ. எஃப். 2/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பௌஷம் 20.

2013 ஜனவரி 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் விளம்பரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர் 2013-ன் அவசரச்சட்டம் எண் 3

2013-˛u ˙LW[ UÙ®X øoY[ J›eœÿ˚\ AßLÙW

œ›U AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

மாநிலத்தில் உள்ள நீர்வளங்களுடைய மேம்பட்ட பயன்பாட்டை எளிதாக்குவதற்கும், குடிநீருக்கும், விவசாயத்திற்கும், வேளாண்மைக்கும் மற்றும் இதர தேவைகளுக்குமாக அதனுடைய நிரந்தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்குமாக மாநிலத்திற்காக கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகாரக்குழுமம் உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

2

முகவுரை.—2011-ன் கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகாரகுழுமம் அவசரச்சட்டம் (2011-ன் 55) 2011 நவம்பர் 30ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2011 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி அதே நாள் முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச் சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் விதிமுறைகளை நிலைநிறுத்துவதற்காக, 2012 கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகார குழும அவசரச்சட்டம் (2012-ன் 8) 2012 ஜனவரி மாதம் 16ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2012 மார்ச் 1ஆம் தேதி ஆரம்பித்து 2012 மார்ச் 23ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண் டுவருவதற்கு ரிய ஒரு மசே ா த ா வை த ாக் க ல் செய்வ தற் கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் விதிமுறைகளை நிலைநிறுத்துவதற் காக 2012-ன் கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகார குழுமத்தின் அவசரச்சட்டம் (2012-ன் 34) 2012 ஏப்ரல் 11ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2 0 1 2 ஜ ூ ன் 1 1ஆ ம் ே த தி தொடங்கி 2 0 1 2 ஜ ூ ை ல 2 5ஆ ம் ே த தி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

இந்திய அரசியலமைப்பு சட்டம் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் 2012-ன் கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகார குழுமத்தினுடைய அவசரச்சட்டம் (2012-ன் 34) 2012 ஜூலை 23ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை மீண்டும் நிலைநிறுத்த மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் கீழ் எடுத்த ஏதேனும் நடவடிக்கையை செல்லத்தக்கதாக்க, 2012 கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகாரக்குழும அவசரச்சட்டம் (2012-ன் 42) 2012 ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

3

2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண் டுவருவதற்கு ரிய ஒரு மசே ா த ா வை த ாக் க ல் செய்வ தற் கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

அத்தியாயம் I

தொடக்கம்

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகாரக்குழும அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

( 2 ) இ து 2 0 1 2 பி ப் ர வ ரி 2 7ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்பட வேண்டும்.

1. விளக்கம்.—(1) இந்த அவசரச்சட்டத்தில், சந்தர்ப்பம் வேறு விதத்தில் தேவைப்படாதபட்சத்தில்,—

(எ) "அதிகாரக்குழுமம்" எனில், பிரிவு 3-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகாரக்குழுமம் என்று பொருள்படும்;

(பி) "தலைவர்" எனில், அதிகாரக்குழுமத்தின் தலைவர் என்று பொருள்படும்;

(சி) "பயன்பாட்டின் வகை" எனில், வீட்டு உபயோகம், விவசாயம், நீர்ப்பாசனம், விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தொழில் அல்லது வ¶ க ம் , சு ற் று ப் பு ற ச் சூ ழ ல் மு த லி ய ப ல் ே வ று ே த ை வ களு க் க ா ன தண்Ω ரு ை ட ய உ ப ே ய ா க ம் எ ன் று ெ ப ா ரு ள் ப டு வ ே த ா டு அ தி ல் நிர்ணயிக்கப்படக்கூடிய அத்தகைய பிற தேவைகளும் உட்படுவதுமாகும்.

(டி) "அரசு" எனில், கேரள அரசு என்று பொருள்படும்;

(இ) "நீர்ப்பாசன திட்டம்" எனில், உத்தரவிடப்பட்ட பரப்பிடங்களில் இருக்கின்ற பூமியில் திட்ட அறிக்கையின்படி இந்த காரியத்திற்காக காலா காலமாக திருத்தப்பட்டு வெளியிடப்படுகிற ஆணையின்படி பாசன வசதி ஏற்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு திட்டம் என்று பொருள்படும்;

4

(எப்) "உறுப்பினர்" எனில், அதிகாரக்குழுமத்தின் ஒரு உறுப்பினர் என்று பொருள்படுவதும் அதில் அவைத்தலைவர் உட்படுவதுமாகும்.

(ஜி) "அறிக்கை" எனில், அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை என்று பொருள்படும்.

(எச்) "குறிப்பிடப்பட்ட" எனில், இந்த சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டங்களால் குறிப்பிடப்பட்ட என்று பொருள்படும்.

(ஐ) "தேர்வுக்குழு" எனில், பிரிவு 5-ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு தேர்வுக்குழு என்று பொருள்படும்.

(ஜெ) "மாநிலம்" எனில், கேரள மாநிலம் என்று பொருள்படும்.

(கெ) "நீர் பயன்படுத்துவோர் சங்கம்" எனில், 2003-ன் கேரள நீர்பாசனம் மற்றும் நீர்ப்பாதுகாப்பு சட்டத்தில் (2003-ன் 31) குறிப்பிடப் பட்டுள்ள நீர் பயன்படுத்துவோர் சங்கம் என்று பொருள்படும்.

(2) இந்த சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடப்படாததும், எனில் மாநிலத்தின் நீர்ப்பாசனம் அல்லது நீர்வளம் சம்பந்தப்பட்ட வெவ்வேறு சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான வார்த்தைகள் மற்றும் செயல்பாட்டிற்கும் அவற்றிற்கு அந்த சட்டங்களின் முறையே அளிக்கப்பட்டுள்ள பொருள் இருக்கும்.

அத்தியாயம் II

அதிகாரக்குழுமம் உருவாக்குதல்

3. அதிகாரக்குழுமம் உருவாக்குதல்.—(1) அரசு அறிக்கையின் மூலம் இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் வந்த நாள் முதல் மூன்று மாதத்திற்குள் இந்த அவசரச்சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களும் பொறுப்புகளும் நிர்வாகம் செய்வதற்காக கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகாரக்குழுமம் என்ற பெயரில் ஒரு அதிகாரக்குழுமம் உருவாக்கப்பட வேண்டும்.

( 2 ) து ணை ப் பி ரி வு ( 1 ) - ன் அ டி ப் ப ை ட யி ல் உ ரு வ ா க் க ப் ப ட் ட அதிகாரக்குழுமம் நிரந்தர வாரிசுரிமையோடும் பொது முத்திரையுடன் கூடியதும் இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒப்பந்தங்களில் ஏற்படுவதற்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பெற்றுக்கொள்வதற்கும், கைவசம் வைப்பதற்கும், விட்டுவிடுவதற்கும் உரிய அதிகாரத்தோடு கூடியதுமான மேற்கூறிய பெயரிலுள்ள ஒரு தனி நபர் குழுமமாக இருப்பதும் மேற்குறிப்பிட்ட பெயரில் வழக்கு தொடர்வதும் வழக்கு தொடரப்படுவதும் வேண்டியதாகும்.

(3) அதிகாரக்குழுமத்தினுடைய தலைமை அலுவலகம் திருவனந்தபுரத்தில் இருக்கவேண்டும்.

5

4. அதிகாரக்குழுமத்தினுடைய அமைப்பு.—(1) அதிகாரக்குழுமத்தில் அவைத்தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருக்கவேண்டியதாகும்.

(2) அவைத்தலைவரையும் பிற உறுப்பினர்களையும் பிரிவு 5-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்வுக்குழுவினுடைய பரிந்துரையின் பெயரில் கேரள ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும்.

(3) அரசு வேலையில் முதன்மை பொறியாளர் பதவியிலுள்ள ஒரு நபர் அவைத்தலைவர் ஆக இருக்க வேண்டியதும் பிற இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் நீர்வள பொறியியல் பிரிவில் ஒரு வல்லுனரும் இன்னொருவர் அரசு கல்Ìரியில் பேராசிரியர் பதவிக்கு கீழ் அல்லாத நீர்வள பிரிவில் ஒரு கல்வி வல்லுநராகவும் இருக்கவேண்டும்.

(4) அதிகாரக்குழுமத்திற்கு தேவையுள்ளபோதெல்லாம்,—

(எ) கொள்கை முறையிலான தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரக் குழுமத்தை உதவி செய்வதற்காக பொறியியல், விவசாயம், குடிநீர், தொழிற்சாலை, சட்டம், பொருளாதாரம், வா¶பம், நிதி, நிர்வாகம் போன்றவை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நிர்வாகம் செய்வதில் திறமை நிரூபித்தோ, அனுபவபூர்வமோ, போதுமான அறிவோ உள்ள வல்லுநரில் இருந்தும்;

(பி) மாநிலத்தினுள், சிறப்பு விருந்தினர்களை அழைக்கலாம். விவசாய சங்கங்களின் உறுப்பினர்களில் இருந்தும்,

(5) அதிகாரக்குழுமத்தின் உறுப்பினர்கள் பிற ஏதேனும் ஆதாயகரமான பதவி வகிக்கக்கூடாததாகும்.

5 . தேர்வுக்குழுவின் உருவாக்கமும் கடமைகளும். —( 1 ) அ ர சி ன் அறிக்கையின் மூலம் அதிகாரக்குழுமத்தின் அவைத்தலைவரையும் பிற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்குள்ள தேவைகளுக்காக,—

(எ) மாநில தலைமை செயலாளர்—பதவி சார்ந்த அவைத்தலைவராக இருக்கவேண்டும்.

(பி) அரசு நிதித்துறை செயலாளர்—பதவி சார்ந்த உறுப்பினர்.

(சி) நீர்வளப் பிரிவினுடையவும் அதிகாரத்திற்குட்பட்ட பரப்பின் மேம்பாட்டினுடையவும் செயலாளர்—குழுத்தலைவர்,

ஆகியோர் உட்பட்ட ஒரு தேர்வுக்குழுமம் உருவாக்கப்பட வேண்டும்.

( 2 ) அ தி க ா ர க் குழு ம த் தி ன் உ று ப் பி ன ரு ை ட ய ே த ா அ ை வ த் தலைவருடையவோ, மரணமோ ராஜினாமாவோ நீக்கப்படவோ காரணமாக உண்டாகின்ற ஏதேனும் காலியிடம் அந்த தேதி முதல் ஒரு மாதத்திற்குள்6 ஏதேனும் உறுப்பினருடைய அல்லது அவைத்தலைவருடைய ஓய்வு பெறும் காலம் அல்லது பதவிக்காலம் முடிவுறுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பும் தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுக்குழுவிற்கு அறிவிப்பு கொடுக்க வேண்டியதாகும்.

(3) தேர்வுக்குழு, அதற்கு அறிவிப்பு கிடைத்த தேதி முதல் ஒரு மாதத்திற்குள் அவைத்தலைவருடையவும் உறுப்பினர்களுடையவும் தேர்வு முடிந்திருக்க வேண்டியதாகும்.

(4) தேர்வுக்குழு அதற்கு பரிந்துரை செய்த ஒவ்வொரு காலியிடத்திற்கு இரண்டு பெயர்களுள்ள ஒரு பட்டியல் சிபாரிசு செய்ய வேண்டியதாகும்.

(5) அதிகாரக்குழுமத்தினுடைய அவைத்தலைவராகவோ உறுப்பினராகவோ நியமிப்பதற்கு எவரையேனும் சிபாரிசு செய்வதற்கு முன், உறுப்பினர் என்ற நிலையில் அந்த நபருடைய நடவடிக்கையை தீங்கு விளைவிக்ககூடிய விதத்தில் பாதிக்கக்கூடிய ஏதேனும் நிதி நெருக்கடியோ பிறஏதேனும் விருப்பமோ அந்த நபருக்கு இல்லையென்று தேர்வுக்குழு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(6) தேர்வுக்குழுவில் ஏதேனும் காலியிடம் உண்டென்ற காரணத்தால் மட்டும் அதிகாரக்குழுமத்தின் அவைத்தலைவருடையவும் உறுப்பினர் களுடையவும் நியமனம் செல்லத்தகாததாக இராது.

6. ப¶யின் காலவரம்பு.—(1) அதிகாரக்குழுமத்தின் அவைத்தலைவரும், உறுப்பினர்களும் ஐந்து வருட காலத்திற்கோ அல்லது அறுபத்திஐந்து வயது முடியும்வரையோ எது முதலில் வருகின்றதோ அதுவரை பதவி வகிக்க வேண்டியதாகும்.

(2) அவைத்தலைவரும் அதிகாரக்குழுமத்தின் உறுப்பினர்களும் இரண்டாவது முறை நியமிக்கப்படுவதற்கு தகுதியுடையவராக இருக்க முடியாததாகும்.

7. உறுப்பினர்களுடைய சம்பளமும் ஈட்டுப்படித்தொகையும்.—(1) அதிகாரக்குழுமத்தினுடைய அவைத்தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அப்படியுள்ள சம்பளமும் ஈட்டுப்படித்தொகையும் கொடுக்க வேண்டும்.

(2) அதிகாரக்குழுமத்தின் அவைத்தலைவருடையவும், உறுப்பினர் களுடையவும் சம்பளமும் ஈட்டுப்படித்தொகையும் பிற ப¶ நிபந்தனைகளும் நியமனத்திற்கு பிறகு அவர்களுக்கு எதிராக வேறுபடுத்தக்கூடாது.

8. ப¶ நிபந்தனைகள்.—(1) பிரிவு 6-ல் என்னதான் அடங்கியிருப்பினும் அதிகாரக்குழுமத்தினுடைய அவைத்தலைவரும் உறுப்பினர்களும்,—

(எ) சுயமாக எழுதி அரசிற்கு அறிவிப்பு செய்கின்ற, மூன்று மாதத்திற்கு குறையாமல் ஒரு அறிவிப்பு கொடுத்த பிறகு எந்த நேரத்திலும் அந்த நபருடைய ப¶ ராஜினாமா செய்யலாம்; அல்லது7 (பி) பிரிவு 9-ன் நிபந்தனைகள்படி அந்த நபருடைய ப¶க்கு தகுதியற்றவராக்கலாம்.

(2) அப்படி அலுவலக பதவி முடிவுக்கு கொண்டுவருகின்ற அதிகாரக் குழுமத்தினுடைய அவைத்தலைவரும் உறுப்பினர்களும்,—

(எ) அந்த நபருடைய அப்படியுள்ள பதவிக்காலம் முடிவடைந்த தேதி முதல் இரண்டு வருட காலத்திற்கு அரசின்கீழ் மீண்டும் ப¶க்கு தகுதி உடையவராக இருப்பதோ;

(பி) அந்த நபருடைய அப்படியுள்ள பதவிக்காலம் முடிவடைந்த தேதி முதல் இரண்டு வருடத்திற்கு ஏதாவது வியாபாரம் தொடர்புடைய தொழில் ஏற்பதோ செய்யக்கூடாததாகும்.

விளக்கம்.—.இந்த துணைப்பிரிவின் தேவைக்காக,—

(i) "அரசின் கீழுள்ள தொழில்" என்றால், மாநிலத்தின் கட்டுப் பாட்டிலுள்ள ஏதாவது உள்ளாட்சி அல்லது வேறு ஏதாவது அதிகார நிறுவனத்தின் கீழோ அல்லது அரசின் கட்டுப்பாட்டின்கீழோ அல்லது அ ர சி ன் உ ட ை ம யி ே ல ா , க ட் டு ப் ப ா ட் டி ே ல ா உ ள் ள ஏ த ா வ து மா நக ராட்சி யுடையவோ , சொசை ட்டியி ன்கீே ழா உ ள் ள தெ ா ழில் உட்படுவதுமாகும்.

(ii) "வியாபாரம் சம்பந்தப்பட்ட தொழில்" என்றால், நீர்வள பிரிவில் வி ய ா ப ா ர ே ம ா , வ ா¶ ப ே ம ா ெ த ா ழி ல் நி று வ ன ே ம ா அ ல் ல து நீ தி சம்பந்தப்பட்டதோ ஆன வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நபருடைய அல்லது முகமையின் கீழ் உள்ள ஏதாவது தரத்தில் உள்ள தொழில் என்று அர்த்தமாகின்றதும் மேலும் ஒரு வா¶பக் கழகத்தினுடைய இயக்குநரோ ஒரு வியாபார பண்ணையின் பங்காளியோ உட்படுவதும் மேலும் சுதந்திரமாகவோ அல்லது ஒரு பண்ணையில் பங்காளியோ அல்லது ஒரு ஆலோசகராகவோ ஒ ரு ஆ ே ல ா ச ை ன வ ழ ங் கு ப வ ர ா க ே வ ா ப யி ற் சி யி ல் ஏ ற் ப டு கி ற து ம் உட்படுவதுமாகும்.

9. அதிகாரக்குழுமத்தின் உறுப்பினர்களுக்குள்ள தகுதியின்மை.—(1) ஒரு நபர், அதிகாரக்குழுமத்தின் அவைத்தலைவராகவோ உறுப்பினராகவோ நியமிக்கப்படுவதற்கோ தொடருவதற்கோ ஒரு நபர் தகுதியற்றவராகிறார் என்றால்,—

(எ) நிரந்தர மனநலம் குன்றிய நபராக இருந்தும், அது சரி என்று தகுதி வாய்ந்த நீதிமன்றம் அறிவிப்பு செய்தாலோ அல்லது மனநிலையில் அல்லது உடல்நிலையில் ஏற்பட்ட ஊனம்மூலம் அவ்வாறு தொடர்வது முடியாமல் இருக்கவோ நேர்ந்தது எனில்; அல்லது

(பி) திவாலானவர் என்று அறிவிப்பு செய்யப்பட்டது எனில், அல்லது8 (சி) அ ரசின் தீர்மா னத் தில் ஒழுக் க க்ே கே டா அ ல்ல து நிதி முறைகேடுகளோ உட்படுகின்ற ஒரு குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டவர் எனில்; அல்லது

(டி) அதிகாரக்குழுமத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த ந ப ரு ை ட ய ெ ச ய ல் ப ா ட் டி ற் கு தீ ங் கு வி ை ள வி க் கு ம் ப டி ப ா தி ப் பு உண்டாக்கக்கூடிய அப்படியுள்ள நிதி சார்ந்த அல்லது வேறுவித விருப்பமோ அந்த நபருக்கு இருக்குமெனில்; அல்லது

(இ) பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக பதவியில் தொடர்வதற்காக தன்னுடைய அலுவலக பதவியை அந்த நபர் தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதென்றால்; அந்த நபர் குழுமத்தின் உறுப்பினராகவோ அல்லது அவைத்தலைவராகவோ நியமனம் செய்வதற்கு அல்லது தொடர்வதற்கு தகுதியற்றவராவார்.

(2) துணைப்பிரிவின் (1)-ன் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிகாரக் குழுமத்தினுடைய அவைத்தலைவர், அல்லது உறுப்பினர்கள், அதது சங்கதிபோல் நிர்ணயிக்கப்படுகின்ற நடவடிக்கைமுறைகள்படி நடத்திய ஒரு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட நெறி தவறிய நடத்தையின் அடிப்படையில் ஆளு ந ரு ை ட ய ஆ ணை மூ ல ம் அலு வ ல க ப த வி யி ல் இ ரு ந் து நீ க் க ம் செய்யப்படவேண்டியதாகும்.

(3) துணைப்பிரிவின் (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை காலயளவில் அதிகாரக்குழுமத்தின் அவைத்தலைவரையோ உறுப்பினர்களோ ஆளுநருக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம்.

1 0 . அ தி க ா ர க் குழு ம த் தி ன் அ தி க ா ரி ை ய யு ம் ப¶ ய ா ட் க ை ள யு ம் நியமனம் செய்வதற்கு அரசிற்குள்ள அதிகாரமும் அவர்களுடைய ப¶ நி ப ந் த ை ன களு ம்.—அதிகாரக்குழுமத்திற்கு அரசின் முன்கூட்டிய அங்கீகாரத்துடன், அதனுடைய கடமைகளும், பொறுப்புகளும் நிர்வகிப்பதற்கு ஒரு செயலாளரையும் அதற்கு தேவையென்று தோன்றுகின்ற அப்படியுள்ள அதிகாரியையும், ப¶யாளர்களையும் நிர்ணயிக்கப்படக்கூடிய அத்தகைய முறையிலும் அத்தகைய வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நியமனம் செய்யப்படலாம்.

11. அதிகாரக்குழுமத்தின் கூட்டம்.—(1) அவைத்தலைவர் தீர்மானம் செய்யும் அத்தகைய நேரத்திலும் அத்தகைய இடங்களிலும் அதிகாரக்குழுமம் அதனுடைய கூட்டம் நடத்த வேண்டியதாகும்.

(2) அதிகாரக்குழுமத்தினுடைய கூட்டத்திற்குத் தேவையான எண்¶க்கை அவைத்தலைவர் உட்பட இரண்டு ஆக இருக்கவேண்டும்.

9

(3) அதிகாரக்குழுமத்தினுடைய ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அவைத்தலைவருக்கு முடியாமல்போனால், அதற்காக அவைத்தலைவர் பெயர் நி ய ம ன ம் ெ ச ய் யு ம் ஏ த ா வ து உ று ப் பி ன ரு ம் அ ப் ப டி யு ள் ள ெ ப ய ர் நியமிக்கப்பட்டவருடைய இல்லாமையிலோ அல்லது அவைத்தலைவர் இல்லாத இடத்திலோ வருகை தந்திருக்கும் உறுப்பினர்கள் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கின்ற ஏதாவது ஒரு நபர் அவை கூட்டத்திற்கு தலைமை வகிக்க வேண்டியதாகும்.

(4) அதிகாரக்குழுமத்தினுடைய எல்லா முடிவுகளும் பெரும்பான்மை அடிப்படையில் இருக்க வேண்டியதாகும்.

(5) அதிகாரக்குழுமத்தின் எல்லா ஆணைகளும் தீர்மானங்களும் செயலாளரோ அல்லது அவைத்தலைவர் இதற்காக அதிகாரப்பூர்வமாக அதிகாரப்படுத்திய அதிகாரக்குழுமத்தின் பிற ஏதாவது அதிகாரியோ நடத்த வேண்டியது ஆகும்.

12. க ா லி யி ட ங் க ள் மு த ல ா ன ை வ ெ ச ய ல் ப ா ட் ை ட ே ய ா அ ல் ல து நடவடிக்கையையோ செல்லுபடியாகாததாக இராது.—அதிகாரக்குழுமத்தில் ஏதேனும் காலியிட ம் இருக் கின் ற து எ ன்ற க ாரணத்த ால் மட்டு ம் அ தி க ா ர க் குழு ம த் தினு ை ட ய எ ந் த ஒ ரு ெ ச ய ல் ப ா ட் ை ட யு ம் அ ல் ல து நடவடிக்கையையும் கேள்வி கேட்கப்படவோ செல்லுபடியாகாதவாறு மாற்றப்படவோ கூடாததாகும்.

அத்தியாயம் III

அதிகாரக்குழுமத்தின் அதிகாரங்களும், பொறுப்புகளும் கடமைகளும்

13. அ தி க ா ர க் குழு ம த் தி ன் அ தி க ா ர ங் களு ம் , ெ ப ா று ப் பு களு ம் கடமைகளும்.—அதிகாரக்குழுமத்திற்கு பின்வரும் அதிகாரங்களும், கடமைகளும் உண்டாயிருக்கும், அதாவது:—

(i) பல்வேறு பிரிவிலுள்ள பய…ட்டாளர்களின் நீர் தேவை வருடாந்திர அடிப்படையில் அல்லது காலவரம்பின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்;

(ii) செயல்திட்டக்குழு, பங்கீட்டுக்குழு, நீர் உபயோகிப்போர் சங்கம் போன்ற வெவ்வேறு நிலைகளிலுள்ள விவசாய அமைப்புகளுக்கு, தேவையான நீர்ப்பாசன நீருடைய தேவையை தீர்மானிக்க வேண்டும்;

(iii) திட்ட நிர்வாகத்தினுடைய செலவு, ஆட்சி நிர்வாகம், செப்பனிடுதல் போன்றவை அடிப்படையாகக்கொண்டு பொது பயனுறுவோர் கருத்துக்களை தெரிந்த பிறகு அப்படியுள்ள நீர்வள செயல்திட்டங்களுக்கு ஒரு10 நீர்வரிக்கட்டண முறை நிறுவவும், பல்வேறு நிலையிலுள்ள வீட்டு உபயோகம் நீர்பாசனம், தொழிற்சாலைகள் போன்ற அப்படியுள்ள வெவ்வேறு வகையில் ப ய ன் ப டு த் து ே வ ா ரு க் கு நீ ர் ெ ச ல வு த் ெ த ா ை க யி ன் அ ள வு ே க ா ல் நிச்சயிக்கவேண்டும்

(iv) நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு நீர்செயல்திட்டத்தினுடைய போதுமான செயல்பாட்டிற்கும் பராமரிப்பிற்காகும் செலவு நிர்ணயம் செய்யவேண்டும். இதற்காக ஒருங்கமைப்புடைய செயல்பாடும் தேவையான பராமரிப்புகளும் ப¶யின் தன்மைக்கு தீங்குவிளைவிக்கவில்லை என்று உறுதிப்படுத்துவதற்காக, அதிகாரக்குழுமம் தீர்மானிக்கின்ற அப்படியுள்ள செயல்திட்டங்களுடைய மொத்த செயல்பாட்டிற்கும் பராமரிப்பிற்கும் தேவையுள்ள நிபந்தனைகள் போதுமான வரவு செலவு திட்டங்களின் உதவியோடு மாநிலம் உறுதிப்படுத்த வேண்டும்.

(v) நீர்ப்பாசன அமைப்புகளின் செயல்பாட்டிற்கும், பராமரிப்பதற்கும் அதேபோன்று ப¶களுடைய தரத்திற்கும் விவசாய அமைப்புகளின் செயல்பாட்டிற்கும் பராமரிப்பிற்குமுள்ள தொகை வினியோகம் செய்வதற்குள்ள வழி முறைகளோ நடவடிக்கைகளோ சம்பிரதாயங்களோ நிபந்தனை செய்து கொண்டு நீர்பாசனத்திற்குள்ள நீருடைய பராமரிப்பை ஊக்கப்படுத்தல்;

(vi) நீர்ப்பாசன அமைப்புடைய செயல்பாட்டிற்கும், பராமரிப்பிற்கும் சுழல் முறையில் பழுதுபார்ப்பதற்கும் குறைந்த அளவில் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்÷ட்ப நிலவாரம் கண்கா¶க்க வேண்டும்.

(vii) செயல்திட்ட அதிகாரிகள் "முழுமையான நீர்ப்பாசனம்" கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது என்று உறுதிப்படுத்த வேண்டும்.

(viii) நீர்வளத்தினுடைய திறம்பட உள்ள உபயோகம் ஊக்கப்படுத்தவும் நீர் வீணாவது குறைப்பதற்குமாக,—

( எ ) ப ல் ே வ று வ ை க யி ல் நீ ர் ப ய ன் ப டு த் து ே வ ா ரு ம் வீ ட் டு உபயோகத்திற்குள்ள நீர் வழங்குபவரும் துறைகளும் நீர்வளங்களுடைய பராமரிப்பிற்கு தேவையான குறிப்பிட்ட குணநிலவாரம் நிர்ணயிப்பதும் நடைமுறைக்கு கொண்டுவருவதை நெறிப்படுத்துவதும் சட்ட மீறுதலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிபாரிசு செய்தலும்;

(பி) வீட்டிற்குரிய நீர் கொடுப்பவர்கள் உட்பட்ட உள்ள வெவ்வேறு நீர்வள ப¶ கொடுப்பவர்கள் கொடுக்க வேண்டிய ப¶களுடைய குறிப்பிட்ட தரம் நிர்ணயிப்பதும் நடைமுறைக்கு கொண்டு வருவதை நெறிப்படுத்துவதும் சட்ட மீறுதலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிபாரிசு செய்தலும்;

11

(சி) வெவ்வேறு நீர் பயன்படுத்துவோருக்கு கழிவுநீர் பதனிடுவதற்காக திட்டமான குணநிலவாரம் நிர்ணயிப்பதும் நடைமுறைக்கு கொண்டுவருவதை நெறிப்படுத்துவதும் சட்ட மீறுதலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிபாரிசு செய்யவும் வேண்டும்;

(டி) மாநிலத்தின் எல்லா நீர்வளங்களுடையவும் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நிலவாரம் நிர்ணயிப்பதும் நடைமுறைக்கு கொண்டுவருவதும் மாசுப்படுத்துதல் உட்பட கண்கா¶க்கவும் செய்தல்;

(இ) சம்பந்தப்பட்ட மாநில முகமையின் முழு ஒத்துழைப்புடன் மாநிலத்தின் நீருடைய குணநிலவாரம் உயர்த்துவதற்கும் பாதுகாப்பதற்கும் துணையும் உதவியும் செய்வதும் அப்படி செய்வதன்மூலம் "மாசுபடுத்துகின்ற நபர் பணம் கட்டவும்" என்ற கொள்கையை பின்பற்றவும் வேண்டும்.

(ix) செயல்திட்ட அதிகாரக்குழுமம் பின்வரும் விவரங்கள் அடங்கிய ஒரு ஆண்டறிக்கை வெளியிடுவது உறுதிப்படுத்த வேண்டும்; அதாவது (எ) செயல்திட்டத்தின் அடிப்படையிலுள்ள நீர்ப்பாசன ஆற்றலும் அதனுடைய உண்மையான பயன்பாட்டினுடையவும் செயல்திட்டம் சம்பந்தப்பட்ட நீர்பயன்பாட்டு ஆற்றலுடையவும் உற்பத்தி திறனுடையவும் விவரங்கள் உள்ளடங்கிய நீர்ப்பாசனத்துடன் சம்பந்தப்பட்ட எல்லா புள்ளி விவர பட்டியலும் அடங்கிய நீர்பாசன நிலை;

(பி) பிற செயல்திட்டங்களுக்கு பின்பற்றலாமெனும் வகையில் நீர்ப்பாசன செயல்திட்டங்களையோ அல்லது வெவ்வேறு நோக்கங்களுடைய நீர் செயல்திட்டங்களையோ பெஞ்சுமார்க் செய்துகொண்டு மிகச்சிறந்த நிர்வாகத்தினுடையவோ, செயல்பாடுகள் உள்ள செயல்திட்டங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

(சி) செயல்திட்டங்களுக்கு முறைப்படியும் அறிவியல் பூர்வமாக தண்Ωருடைய கணக்கு தந்து கொண்டு நீர்ப்பாசனத்தினுடையவோ பல்வேறு நோக்கங்களுடைய நீர் செயல்திட்டத்தினுடையவோ நீர் த¶க்கை;

(டி) வீட்டிற்குரிய நீர் வழங்குபவர்களுடைய நீர் த¶க்கை;

(x) நிச்சயித்தபடி அவர்களுடைய உறுப்பினர்களுக்கு கொடுக்கின்ற ப¶கள் உறுதிப்படுத்துவதற்காக விவசாய அமைப்புகளுக்கும் பிற நீர் உபயோகிப்போர் சங்கங்களுக்கும் நிதி உதவி செய்வதற்கோ, அல்லது வசூலிப்பதற்கோ பொருத்தமான ஒரு ஏற்பாட்டை அதிகாரக்குழுமம் உண்டாக்க வேண்டும்.

(xi) இந்த சட்டத்திற்கு கீழுள்ள அதிகாரம் வினியோகிப்பதற்குரிய தனிப்பட்ட வழிகள் கடைப்பிடிக்காத காரியத்தில் அப்படியுள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராக போதமான சட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடங்குவதற்கு அரசிடம் அதிகாரக்குழுமம் சிபாரிசு செய்ய வேண்டியதாகும்.

12

(xii) அதிகாரக்குழுமம் மூன்று வருடத்திற்கொருமுறை தண்Ωர் கட்டணத்தை மீண்டும் பரிசோதிக்கவும் சரிபார்க்கவும் செய்யவேண்டியதாகும்.

(xiii) அரசு, அரசிதழ் அறிக்கை வாயிலாக அதிகாரக்குழுமத்திற்கு ெ க ா டு த் தி ரு க் கி ன் ற ே வ று ஏ ே தனு ம் அ தி க ா ர ங் களு ம் க ட ை ம களு ம் , வேலைகளும் நிர்வகிக்கவும் வேண்டும்.

14. அதிகாரக்குழுமத்தினுடைய பொது கொள்கைகள்.—மாநில நீர் கொள்கைகளுடைய கட்டமைப்புக்கும் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பிற சட்டங்கள்படியும் அதிகாரக்குழுமம் செயல்பட வேண்டியதாகும்.

அத்தியாயம் IV

கணக்குகள், த¶க்கை மற்றும் அறிக்கை

15. அதிகாரக்குழுமத்திற்குரிய மானியங்களும் முன்பணமும்.—அரசிற்கு மா நில சட்டப்பே ரவை இதற்க ா க ச ட்டம் சார் ந்து அ த து நிதி வினியோகம் நடத்திய பிறகு இந்த சட்டத்தின்கீழ் அதனுடைய வேலைகளும் கடமைகளும் நிர்வகிப்பதற்கு தேவையென்று கருதப்படுகின்ற அப்படியுள்ள மானியங்களும் முன்பணமும் அதிகாரக்குழுமத்திற்கு கொடுக்கப்படலாமென்றும் அப்படியுள்ள மானியங்களும் முன்பணமும் மாநில அரசு வரவு-செலவு திட்டத்தில் நிச்சயிக்கின்ற அப்படியுள்ள வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டியதாகும்.

16. அதிகாரக்குழுமத்தினுடைய வரவு-செலவுத்திட்டம்.—அதிகாரக்குழுமம் ஒவ்வொரு நிதி வருடத்திலும் நிர்ணயிக்கப்படக்கூடிய அப்படியுள்ள படிவத்திலும் குறிப்பிட்ட நேரத்திலும் அதனுடைய அடுத்த நிதி வருடத்திற்குள்ள வரவு-செலவுத்திட்டம் தயாராக்க வேண்டியதும் அதை அரசிற்கு அனுப்ப வேண்டியதுமாகும்.

17. அதிகாரக்குழுமத்தினுடைய கணக்குகள்.—(1) அதிகாரக்குழுமம் சரியான கணக்குகளும் பிற முக்கிய ஆவணங்களும் பாதுகாத்து வைக்க வேண்டியதும், கணக்குகளுடைய ஒரு வருட அறிக்கை அரசின் பொது கணக்குடன் கலந்து ஆலோசனை செய்து நிர்ணயிக்கப்படக்கூடிய அப்படியுள்ள படிவத்தில் தயாராக்க வேண்டியதுமாகும்.

(2) அதிகாரக்குழுமத்தினுடைய கணக்குகள் பொது கணக்கர் வ ரு ட ந் ே த ா று ம் த¶ க் ை க ெ ச ய் ய ே வண் டி ய து ம் அ ப் ப டி யு ள் ள த¶க்கையோடு சம்பந்தப்பட்டுண்டாகின்ற செலவு அதிகாரக்குழுமம் பொது கணக்கருக்கு தரவேண்டியதாகும்.

(3) பொது கணக்கர் இந்த சட்டத்தின்கீழில் அதிகாரக்குழுமத்தினுடைய கணக்குகளுடைய த¶க்கையுடன் சம்பந்தப்பட்டு அவர் நியமிக்கின்ற எந்த ஒரு நபருக்கும் சாதாரணமாக பொது கணக்கருக்கு, அரசின் கணக்குகளுடைய13 த¶க்கை செய்யும்போதுள்ள அதே அதிகாரங்களும் சிறப்புரிமைகளும் உண்டாயிருப்பதும், முக்கியமாக புத்தகங்களும் கணக்குகளும் சம்பந்தப்பட்ட பற்றுச்சீட்டுகளும் பிற ஆவணங்களும் தாள்களும் தாக்கல் செய்வதற்கு தேவைப்படவும் அதிகாரக்குழுமத்தினுடைய எந்த ஒரு அலுவலகமும் பரிசோதிப்பதற்குள்ள அதிகாரமுண்டாயிருப்பதாகும்.

(4) பொது கணக்கரோ, அவர் இந்த தேவைக்காக நியமித்த வேறு ஏதைவது நபரோ சாட்சியப்படுத்திய அதிகாரக்குழுமத்தினுடைய கணக்குகள் அதன் மேலுள்ள த¶க்கை அறிக்கையோடு அதிகாரக்குழுமம் வருடந்தோறும் அரசிற்கு அனுப்பிக்கொடுக்க வேண்டியதும் அரசு அது கிடைத்ததேதி முதல் ஆறுமாத காலத்திற்குள் த¶க்கை அறிக்கை மாநில சட்டப்பேரவை முன்பாக வைக்கவேண்டியதுமாகும்.

18. அதிகாரக்குழுமத்தினுடைய வருடாந்திர அறிக்கை .—(1) அதிகாரக் குழுமம் இந்த சட்டத்தின் கீழுள்ள அதனுடைய அந்த வருடத்தின் நடவடிக் கைகளுடைய ஒரு அறிக்கை தயாராக்க வேண்டியதும் அது நிர்ணயிக்கப்படக் கூடிய குறிப்பிட்ட படிவத்தில் குறிப்பிட்ட தேதியிலோ அதற்கு முன்போ அரசிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியதுமாகும்.

(2) துணைப்பிரிவு (1)-ன் படி கிடைத்த அறிக்கையினுடைய ஒரு நகல் அரசிற்கு அது கிடைத்த பிறகு ஆறுமாதத்திற்குள் சட்டப்பேரவை முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டியதாகும்.

அத்தியாயம் V

பலவகை

19. அரசின் பொது அதிகாரங்கள்.—அரசிற்கு பொதுவான திட்டமிடலும் ஒருங்கிணைத்தலும் உட்பட உள்ள மாநிலத்தின் நீருடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் அதிகாரக்குழுமத்திற்கு கொள்கைப்படியான பரிந்துரை அளிப்பதற்குரிய அதிகாரம் உண்டாயிருப்பதாகும்.

20. அதிகாரக்குழுமத்தின் உறுப்பினர்களும், அதிகாரிகளும் பிற ஊழியர்களும் பொது ஊழியர்களாக இருப்பார்கள்.—அதிகாரக்குழுமத் தினுடைய அவைத்தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகளும் பிற ஊழியர்களும் 1860-ல் இந்திய தண்டணை சட்டத்தினுடைய (1860-ல் 45ஆம் மத்திய சட்டம்) பிரிவு 21-ன் கருத்திற்குள் வருகின்ற பொது ஊழியராக கருதப்பட வேண்டியதாகும்.

21. நன்னம்பிக்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு..— இந்த சட்டத்தின் விதிமுறைகள்படியோ அதன்கீழ் உண்டாக்கப்பட்டுள்ள சட்டங்களோ ஒழுங்குமுறை விதிகளின்படியோ நன்னம்பிக்கையில் செய்ததோ செய்ய விரும்புகின்றதோ ஆன ஏதாவது காரியம் சம்பந்தப்பட்டு14 அதிகாரக்குழுமத்தினுடைய அவைத்தலைவரோ உறுப்பினர்களோ செயலாளருக்கோ பிற ஊழியர்களுக்கோ எதிரான எந்த ஒரு பிரச்சனையோ தண்டனை நடவடிக்கையோ பிற சட்ட நடவடிக்கைகளோ நிலை நிற்பதல்ல.

22. தடைகளை நீக்கம் செய்வதற்குள்ள அதிகாரம்..—(1) இந்த சட்டத்தின் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஏதாவது தடைகள் உண்டானால் சூழ்நிலைக்கு ஏற்ப, அரசிற்கு அந்த தடைகளை நீக்கம் செய்வதற்கு தேவை என்று தங்களுக்கு தோன்றுகிறதும் இந்த சட்டத்தின் விதிமுறைகளுக்கு எதிராக இல்லாததுமான எந்த காரியமும் ஆணை மூலம் செய்யப்படலாம்.

எனில், இந்த சட்டத்தின் ஆரம்ப தேதி முதல் இரண்டு வருடத்திற்கு பிறகு அப்படியுள்ள எந்த ஒரு ஆணையும் வெளியிடப்படக்கூடாது.

(2) துணைப்பிரிவு (1)-ன் கீழ் வெளியிடப்பட்ட ஒவ்வொரு ஆணையும் சட்டப்பேரவை முன்பாக வைக்கவேண்டும்.

23. சட்டங்கள் உண்டாக்குவதற்குரிய அதிகாரம்.—(1) இந்த சட்டத்தின் விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வருவதற்குள்ள தேவைக்காக அரசிற்கு அரசிதழ் அறிக்கை மூலம் சட்டங்கள் உண்டாக்கலாம்.

(2) இந்த சட்டத்தின்கீழே உண்டான எந்த ஒரு சட்டமும் அது உண்டான பிறகு முடிந்த அளவு விரைவில் சட்டப்பேரவை முன்பாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்பொழுது, ஒரு கூட்டத்தொடரோ அல்லது தொடர்ச்சியான இரண்டு கூட்டத்தொடரிலோ மொத்தம் பதினான்கு நாட்களுக்கு வைக்கவேண்டியதும், அவ்வாறு அது எந்த கூட்டத் தொடரில் வைக்கப்படுகின்றதோ அந்த கூட்டத்தொடரோ அதற்கடுத்து வருகின்ற கூட்டத்தொடரோ முடிவுறுவதற்கு முன்பு சட்டப்பேரவை அமல்படுத்திய சட்டத்தில் ஏதாவது உருமாற்றம் உண்டாக்கவோ அல்லது அந்த சட்டம் உண்டாக்க வேண்டியதில்லை என்று தீர்மானம் எடுக்கவோ செய்கின்ற விதத்தில், அந்த சட்டத்திற்கு அதன்பிறகு அதது காரியம்போல், அவ்வாறு உருமாற்றம் செய்த உருவத்தில் மட்டும் அமல்படுத்தப்படவோ அல்லது எந்த ஒரு அமல்படுத்துவதும் இல்லாமல் இருப்பதோ செய்யப்படுவதாகும். எனினும், அப்படியுள்ள ஏதேனும் உருமாற்றப்படுத்தலோ இரத்தாக்கலோ அந்த சட்டப்படி முன்பு செய்த ஏதாவது காரியத்தினுடைய வாய்ப்புக்கு பாதிப்பு உண்டாகாத விதத்தில் இருக்கவேண்டும்.

24. வழக்கு தீர்வு முறை.—(1) அரசு இந்த சட்டத்தின் கீழ் நிச்சயித்தபடி யுள்ள நீர்கொடுப்பதற்கும் வினியோகம் செய்வதற்குமாக சம்பந்தப்பட்ட வழக்கு கள் தீர்ப்பதற்காக அதிகாரத்திலுள்ள ஏதாவது அதிகாரியையோ அதிகாரிக ளையோ ஒவ்வொரு திட்டத்தினுடைய முதன்மை வழக்கு தீர்வு அதிகாரியாக இதற்கு வெளியிடப்படும் ஆணை வாயிலாக அதிகாரப்படுத்த வேண்டியதாகும்.

15

(2) வழக்குகள் கேட்கப்படுகின்ற நேரத்தில் முதன்மை வழக்கு தீர்வு அ தி க ா ரி நி ர் ண யி க் க ப் ப டு கி ன் ற அ ப் ப டி யு ள் ள ந ட வ டி க் ை க க ள் கைக்கொள்ளப்பட வேண்டும்.

25. ஒழுங்குமுறைகள் உண்டாக்குவதற்குரிய அதிகாரக்குழுமத்தினுடைய அதிகாரம்.—அதிகாரக்குழுமம் அரசினுடைய முன்கூட்டிய அனுமதியோடுகூடி இந்த சட்டமும் அதன்கீழ் உண்டான சட்டங்களுக்கும் ஏற்ப அதனுடைய கடமைகள் நிர்வாகப்படுத்துவதற்காக ஒழுங்குமுறைகள் உண்டாக்கப்படலாம்.

26. இரத்தாதலும் காப்பும்.—(1) 2012 கேரள மாநில நீர்வள ஒழுங்குமுறை அதிகாரக்குழுமத்தின் அவசரச்சட்டம் (2012-ன் 42) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) இவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் செயலோ அல்லது எடுத்ததாக கருதப்பட்ட அல்லது எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ அல்லது எடுத்ததாக கருதப்பட்டதோ ஆன நடவடிக்கையை இந்த அவசரச்சட்டத்தின்கீழ் எடுத்ததா கவோ அல்லது செய்ததாகவோ கருதப்படவேண்டும்.

எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 26 November 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-11-26.pdf_2013_47_Part_1_Water_resources/. Archive identifier in.gazette.kerala_new.2013-11-26.pdf_2013_47_Part_1_Water_resources.