Kerala Gazette No. 48 dated 3rd December, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-டி) துறை
அறிக்கை
2013 ஜனவரி 15 எண் 18411/ச. இ. டி. 3/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 பௌஷம் 25.
2013 ஜனவரி 14ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரிக்கப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.
2013-ன் அவசரச்சட்டம் எண் 18
2013˛u ˙LW[ UÙ®X C˚[-˙VÙo-œ› AYNWfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
இளைஞர்களை கல்வியறிவுடையவராகவும், திறமையாளர்களாக்குவதற்கான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும், செயல்படுத்தவும், இளைஞர் களுக்கான உரிமைகளின் பாதுகாப்பினை அதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இளையோர் குழுவை உருவாக்குவதற்கும் அதனுடன் சம்பந்தப்பட்டதோ அல்லது தொடர்புடையதோவான காரியங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.
2முன்னுரை.—2012-ன் கேரள மாநில இளையோர் குழு அவசரச்சட்டம் (2012-ன் 49) 2012 ஆகஸ்ட் 18ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;
2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல்போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் இல்லாததாலும், தாம் துரிதநடவடிக்கை எடுக்கத்தேவையான சூழ்நிலைகள் நிலவிலுள்ளதென கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
அத்தியாயம் I
தொடக்கம்
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் கேரள மாநில இளையோர்குழு அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
( 2 ) இ து 2 0 1 2 ந வ ம் ப ர் 1ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்படவேண்டும்.
2. விளக்கம்.—(1) இந்த அவசரச்சட்டத்தில் சந்தர்ப்பம் பிற வகையில் தேவைப்படாதபட்சத்தில்,—
(எ) "தலைவர்" எனில், குழுவின் தலைவர் என பொருள்படும்.
(பி) "குழு" எனில், பிரிவு 3-ன்படி உருவாக்கப்பட்ட கேரள மாநில இளையோர்குழு என பொருள்படும்.
(சி) "அரசு" எனில், கேரள அரசு என பொருள்படும்.
(டி) "உறுப்பினர்" எனில், குழுவின் ஒரு உறுப்பினர் என பொருள்படும்.
(இ) "நிர்ணயம் செய்யப்பட்ட" எனில், இந்த அவசரச்சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களால் நிர்ணயம் செய்யப்பட்ட என பொருள்படும்.
3(எப்) "இளையோர்" எனில், பதினெட்டு வயது முடிவடைந்ததும் ஆனால் நாற்பது வயது முடிவடையாததுமான ஒரு நபர் என பொருள்படும்.
அத்தியாயம் II
குழுவின் உருவாக்கம்
3. குழுவின் உருவாக்கம்.—(1) அரசு, இந்த அவசரச்சட்டம் ஆரம்பித்த பிறகு முடிந்தயளவு விரைவில் இந்த அவசரச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வினியோகிப்பதற்கும், அதற்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை நிர்வாகம் செய்வதற்காகவும் கேரள மாநில இளையோர் குழு என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கலாம்.
(2) குழுவில்,—
(எ) ஒரு தலைவரும்;
(பி) பத்திற்கு மிகாத எண்¶க்கையில் உள்ள உறுப்பினர்கள் இருக்க வேண்டியதும், அதில் ஒரு நபர் மகளிரும் அட்டவணை சமுதாயம் அல்லது பழங்குடியினர் பிரிவிலுள்ள ஒரு நபரும், ஒரு நபர் தகுதியுள்ள ஒரு சட்டத் தொழில் செய்பவராகவும் இருக்கவேண்டும்.
(3) குழுவிற்காக நியமனம் செய்யப்படும் தலைவர் மற்றும், உறுப்பினர்கள் இளைஞர்களாக இருக்கவேண்டும்.
(4) தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு நியமனம் செய்ய வேண்டும்.
(5) அரசு கூடுதல் செயலர் பதவிக்கு குறையாமல் பதவி வகிக்கும் அல்லது பதவியில் இருந்ததோவான ஒரு நபரை குழுவின் செயலராக அரசு நியமிக்க வேண்டும்.
(6) குழுவின் தலைமையிடம் திருவனந்தபுரமாக இருக்கவேண்டும்.
4. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அலுவல் காலவரம்பும், சேவை நிபந்தனைகளும்.—(1) தலைமையர்களும், உறுப்பினர்களும் அவர் அலுவலகப் பதவி பொறுப்பேற்ற தேதி முதல் மூன்று வருட காலத்திற்கு அலுவலர் பதவியில் பொறுப்பு வகிக்கலாம்.
என்றாலும், தலைவர் தன் பின்னவர்களை பிரிவு 3-ன் நிபந்தனை களுக்கேற்ப நியமிக்கவும், அலுவலகப்பதவி பொறுப்பேற்பவரோ அல்லது ஆறு மாதத்திற்கோ, எது முதலில் வருமோ அதுவரை அப்படிப்பட்ட அலுவலகப் பதவியில் தொடரலாம்.
4(2) தலைவரோ, அல்லது உறுப்பினரோ எந்த நேரத்திலும் அரசிற்கு எழுத்துவடிவிலான கடிதம் எழுதி கையொப்பமிட்டு அலுவலகப்பதவியை இராஜினாமா செய்யலாம்.
(3) மரணம், பதவி நீக்கம் செய்தல், இராஜினாமா செய்தல் அல்லது பிற ஏதேனும் காரணங்களால் ஏற்படும் தலைவருடைய அல்லது உறுப்பினரின் எதிர்பாராத காலியிடம் புதிய நியமனம் மூலம் சரிசெய்ய வேண்டியதும், அப்படி நியமிக்கப்படும் நபர், எந்த நபரின் பதவி இடத்தில் நியமிக்கப் ப ட் ட ா ே ர ா அ ந் த ந ப ரி ன் க ா ல வ ர ம் பி ல் மீ த மு ள் ள க ா ல ய ள வி ல் அலுவல் பொறுப்பில் தொடரவேண்டும்.
(4) அரசிற்கு, உத்தரவின்படி தலைவரோ அல்லது ஏதேனும் உறுப்பினரோ, அவர்,—
(எ) ஒரு திவாலானவர் என தீர்ப்பு அளிக்கப்படவோ, அல்லது (பி) அரசின் கருத்தில் ஒழுக்கக்கேடு உட்பட்ட ஒரு குற்றத்திற்கு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டணைக்கு விதிக்கப்பட்டதோ, அல்லது
(சி) மனநிலை பாதித்தவராக ஒரு தகுதியுள்ள நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டதோ, அல்லது
(டி) குழுவில் ஆஜராகாமல் இருப்பதற்கு அனுமதி வாங்காமல் குழுவின் தொடர்ந்த மூன்று கூட்டங்களில் ஆஜராகாமல் இருக்கவோ, அல்லது
(இ) பதவியிடத்தில் தொடர்வது இளைஞர்களின் விருப்பத்திற்கோ அல்லது பொது விருப்பத்திற்கோ தீமை விளைவிக்கும் விதம் தன் அலுவல் பதவியை தவறாக பயன்படுத்தியதாக அரசு புரிந்துகொள்ளும்போது, அலுவல் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்படலாம்;
என்றாலும், இந்த உட்பிரிவின்கீழ் உள்ள எந்த ஒரு நபரையும் இந்த காரியத்தில் அவருக்கு கூறவேண்டியதை கூறுவதற்கு நியாயமான ஒரு வாய்ப்பு அளிக்காமல் பதவி நீக்கம் செய்யக்கூடாததாகும்.
(5) தலைவர் அல்லது ஒரு உறுப்பினர் அவரின் இளைஞர் நிலை முடியும்போது அலுவல் பதவி முடிவடைவதாகும்.
(6) தலைவர் அல்லது ஒரு உறுப்பினருக்கு இரண்டு முறைக்கு மேல் பதவிப்பொறுப்பேற்க தகுதி இராது.
(7) குழுவின் அன்றாட காரியங்களின் பொதுவான மேற்பார்வை, அறிவுரைகள், ஆட்சி நிர்வாகம் போன்றவை தலைவரின் பொறுப்பாக இருப்பதுடன், அவருக்கு பிற உறுப்பினர்கள் உதவி செய்யவும் வேண்டும்.
5(8) தலைவராக இருப்பவர் அரசுச்செயலர் பதவியிலுள்ள ஒரு முழு நேர அலுவலராக இருக்கவேண்டியதும் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியமும், உதவித்தொகையும் அளிக்கப்படவும் வேண்டும்.
(9) குழுவின் கூட்டங்களில் பங்கெடுப்பதற்காக உறுப்பினர்களுக்கு நி ர் ண யி க் க ப் ப ட் ட உ த வி த் ெ த ா ை க ம ற் று ம் இ ரு ப் பு க் க ட் ட ண ம் அளிக்கப்படவும் வேண்டும்.
5. குழுவின் ஊழியர்கள்.—(1) குழுவின் சரியான முறையிலுள்ள செயல் பாட்டிற்கு தேவையான அலுவலர்களையும் பிற ஊழியர்களையும் குழுவிற்கு அரசு வழங்கவேண்டும்.
(2) குழுவின் தேவைக்காக நியமனம் செய்யப்படும் அலுவலர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும், அளிக்க வேண்டிய ஊதியமும், படிகளும், சேவைகள் சம்பந்தப்பட்ட பிற நிபந்தனைகளும் ஏற்பாடுகளும் நிர்ணயிக்கப்படும்படி இருக்கவேண்டும்.
6. ஊதியமும், படிகளும் நிர்வாக செலவுகளும் மானியத்தொகை களிலிருந்து அளிக்கப்படவேண்டும்.—தலைவருக்கு அளிக்க வேண்டிய ஊதியம் மற்றும் உதவித்தொகைகள் உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டிய படிகள் அதாவது இருப்புக்கட்டணம் பிரிவு 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டிய ஊதியமும், உதவித்தொகைகளுடன் ஓய்வூதியமும் உட்பட்ட நிர்வாகச்செலவுகளும் பிரிவு 12-ன் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மானியங்களில் இருந்து அளிக்கவேண்டும்.
7. காலியிடங்கள் முதலானவை குழுவின் நடவடிக்கைகளை செல்லுபடி யாக்காமல் இராது.—குழுவின் எந்த ஒரு செயல்பாடுகளும் அல்லது நடவடிக் கைகளும் குழுவில் ஏதேனும் காலியிடங்கள் உள்ளதாலோ அல்லது அதன் உருவாக்கத்திற்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ள காரணங்களால் மட்டும் செல்லுபடியாக்காமல் இராது.
8. குழுவின் கூட்டங்கள்.—(1) தலைவருக்கு உகந்தது என தோன்றும் அப்படிப்பட்ட இடங்களிலும், நேரங்களிலும் குழுவிற்கு கூட்டம் கூட்டவும், குழுவிற்கு அதன் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் அதிகாரம் உள்ளது ஆகும்.
(2) குழுவின் எல்லா ஆணைகளும், தீர்மானங்களும் தலைமையரோ அல்லது இதற்காக குழு அதிகாரப்படுத்தும் எந்த ஒரு உறுப்பினரின் கையொப்புடன் அதிகாரப்படுத்தவும், குழு உருவாக்கும் பிற ஆவணங்கள் செயலரோ அல்லது இதற்காக தலைமையர் அதிகாரப்படுத்தும் பிற ஏதேனும் அலுவலரின் கையொப்பத்துடன் நிறைவேற்றவும் வேண்டும்.
6(3) குழு அதன் முன்புள்ள ஏதேனும் காரியங்களின் செ.யல்பாட்டுத் தேவைக்காக ஏதேனும் தனிப்பட்ட விஷயத்தை கருத்தில்கொள்வதற்காகவோ மேற்குறிப்பிட்ட செயல்களில் சிறப்பு அறிவுள்ள இரண்டிற்கு மிகாத நபர்களுக்கு அழைப்பு விடவும், என்றாலும், அவர்களுக்கு குழுவின் கூட்டங்களில் ஓட்டுரிமை இல்லாததும் ஆகும்.
அத்தியாயம் III
குழுவின் அதிகாரங்களும், பொறுப்புகளும்
9. குழுவின் பொறுப்புகள்.—(1) இந்த அவசரச்சட்டத்தின் நிபந்தனைகளுக் குட்பட்டு, இளைஞர்களின் நலனுக்காக அறிவுரைகள் அளிப்பதற்கும், உதவி செய்வதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசு அதற்கு அவ்வப்போது ஒப்படைக்கும் பொறுப்புகளை செயல்படுத்துவதும் குழுவின் கடமையாகும்.
(2) குழுவிற்கு அதன் நோக்கங்களுக்காக பின்வரும் பொறுப்புகளை செயல்படுத்தலாம், அதாவது:—
(எ) மாநிலத்தில் இளைஞர்களின் நலனை பாதுகாப்பவராக செயல்படுதல்;
(பி) தொழிலின் பெருமையைக் குறித்து இளைஞர்களில் அறிவை உருவாக்கவும் மனதில் பதிய வைக்கவும் செய்தல்;
(சி) இளைஞர்களுக்கு மேம்பட்ட கல்விக்கும், தொழில் வாய்ப்புகளை அடைவதற்காகவும் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்தல்;
( டி ) முழு தி ற ை ன யு ம் ே ம ம் ப ா ட் ை ட யு ம் அ ை ட வ த ற் க ா க இளைஞர்களின் திறமையை விரிவுபடுத்தவும், நேர்வழியில் கொண்டு செல்லவும் செய்தல்;
(இ) இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் நல்ல வழிகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், ஊக்கப்படுத்தவும், கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவும் செய்தல்;
(எப்) இளைஞர்களில், குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் பழங்குடியினர் பிரிவிலுள்ளவரின் சமூக, பொருளாதார வளர்ச்சிகளின் மேம்பாட்டு திட்ட நடவடிக்கைகளில் அரசிற்கு அறிவுரை வழங்குதல்;
(ஜி) இளைஞர்களின் திறமையையும், ஆற்றலையும் மேம்படுத்தி உயர் தரத்திலுள்ள நோக்கங்களை அடைவதற்கு தகுதி.யுள்ளவராக்குவதற்கு எல்லா நிலைகளிலுமுள்ள செயல்பாடுகளிலும் அவர்களுக்குரிய வாய்ப்புகளையும், திறமையையும் கண்டடைதல்;
7(எச்) சங்கமல்லாத இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழில் சார்ந்த துன்பங்களை கவனித்து அறிக்கை செய்தல்;
(ஐ) இளைஞர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது சம்பந்தப்பட்ட புகார்களின் மீது விசாரணை நடத்தவும் அக்காரியத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசிற்கு பரிந்துரை செய்யவும்;
(ஜெ) அவ்வப்போது அதன் பரிசீலனைக்கு அனுப்பும் பிற காரியங்களில் அரசிற்கு அறிவுரை வழங்குதல்.
10. குழுவின் அதிகாரங்கள்.—(1) குழுவிற்கு அதன் பொறுப்புகளை நிறை வேற்றும் தேவைக்காக,—
(எ) அரசின் அனுமதியுடன் ஏதேனும் அரசு அலுவலரின்; அல்லது (பி) அரசு உடமையிலுள்ள மாநகராட்சிகளோ உள்ளாட்சி அதிகாரி களோ ஏதேனும் அலுவலரின் அப்படியுள்ள மாநகராட்சியின் அல்லது உள்ளாட்சி அதிகாரியின் அனுமதியுடனும் அரசின் ஒப்புதலுடனும், சேவைகளை உபயோகப்படுத்தலாம்.
(2) குழுவின், பிரிவு 9-ன் படியுள்ள அதன் பொறுப்புகளை நிர்வாகம் செய்யும்போது பின்வரும் காரியங்கள் சம்பந்தப்பட்டு 1908-ன் உரிமையியல் விசாரணை முறை தொகுப்புச்சட்டத்தின் (1908-ன் 5ஆம் மத்தியச்சட்டம்) கீழ் ஒரு வழக்கு விசாரணை செய்யும் ஒரு உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய எல்லா அதிகாரங்களும் இருக்கும், அதாவது:—
(எ) ஏதேனும் நபருக்கு அழைப்புவிடுவதற்கும் ஆஜராவதை உறுதி செய்வதற்கும், வாக்குறுதியின் மீது விவரிக்கவும்;
(பி) ஏதேனும் ஆவணங்கள் கண்டெடுப்பதற்கும் ஆஜராக்குவதற்கும் தேவைப்படுவதற்கும்;
(சி) வாக்குறுதியின் மீது சான்றுகளை ஏற்றுக்கொள்ளவும்;
(டி) ஏதேனும் நீதிமன்றத்தில் இருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ ஏதேனும் பொது ஆவணங்களோ அல்லது அதன் நகல்களோ தேவைப்படுவதற்கும்;
(இ) சாட்சிகளை விவரிப்பதற்கும், ஆவணங்களை பரிசோதனை செய்வதற்கும் குழுக்களை நியமனம் செய்வதற்கும்;
(எப்) நிர்ணயிக்கப்படுகின்ற பிற ஏதேனும் காரியங்களுக்கும்.
(3) பிரிவு 9-ன் கீழ் விசாரணை நடத்தும்போது குழு எல்லா கட்சிகளுக்கும் சொந்தமாகவோ அல்லது அதிகாரப்படுத்திய பிரதிநிதி மூலமாகவோ அவரின் கருத்தினை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கவேண்டும்.
8(4) இந்த அவசரச்சட்டத்தின்கீழ் நடத்திய எந்த ஒரு விசாரணையிலும் குழுவின் தீர்மானங்கள் அதன் பரிந்துரையுடன் தகுந்த நடவடிக்கையோ அல்லது வழக்கில் ஏற்பட்ட கட்சியின் தீர்வுக்காக அரசிற்கு அளிக்கவேண்டும்.
11. குழுவிற்கான நன்கொடைகள், பங்களிப்பு முதலானவை.—குழுவிற்கு அரசின் முன்அனுமதியுடன் அரசு இக்காரியத்தில் குறிப்பிடும் வரையறை களுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பலவகையிலுள்ள இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக அறக்கொடைகளை உருவாக்குவதற்காகவும் பரிசுகள் வழங்குவதற்கும் ஏதேனும் சங்கத்திலிருந்தோ, நபரில் இருந்தோ நன்கொடையாகவோ, பங்குத்தொகை யாகவோ, பிற ஏதேனும் பெயரிலோ பணம் பெற்றுக்கொள்ளலாம்.
அத்தியாயம் IV
நிதி, கணக்குகள் மற்றும் த¶க்கை
12. அரசிற்குரிய மானியங்கள்.—(1) அரசு, சட்டப்பேரவையில் இதற்காக சட்டப்படி நிதி ஒதுக்கீடு செய்த பிறகு இந்த அவசரச்சட்டத்தின் தேவைக்காக அரசு பொருத்தமென கருதும் அத்தகைய தொகை மானியமாக குழவிற்கு அளிக்கவேண்டியதாகும்.
(2) குழுவிற்கு இந்த அவசரச்சட்டத்தின்கீழ் உள்ள பொறுப்புகளை நிர்வாகம் செய்வதற்கு தேவை என கருதும்படியான தொகை மானியத்தில் இருந்து செலவு செய்வதற்கும், அப்படிப்பட்ட தொகை துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மானியத்தில் இருந்து அளிக்கவேண்டிய செலவாக கருதப்படவேண்டும்.
13. கணக்குகளும் த¶க்கை செய்தலும்.—(1) குழு சரியான கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியதும் மாநில கணக்காய்வுத் தலைவருடன் கூடி ஆலோசித்து நிர்ணயிக்கலாமெனும் ஒரு படிவத்தில் கணக்குகளின் ஒரு வருட அறிக்கை தயாராக்கவும் வேண்டும்.
(2) குழுவின் கணக்குகள், மாநில கணக்காய்வுத் தலைவர் வருடந்தோறும் த¶க்கை செய்ய வேண்டியதும், அப்படிப்பட்ட த¶க்கை சம்பந்தப்பட்டு உருவாகும் செலவு குழுவின் மாநில கணக்காய்வுத் தலைவருக்கு அளிக்கவும் வேண்டும்.
(3) கணக்காய்வு தலைவருக்கும், இந்த அவசரச்சட்டத்தின்கீழ் குழுவின் கணக்குகளின் த¶க்கை, சம்பந்தப்பட்டு அவர் நியமிக்கும் எந்த ஒரு நபருக்கும், சாதாரணமாக மாநில கணக்காய்வுத் தலைவருக்கு, அரசு கணக்குகளை த¶க்கை செய்யும்போதுள்ள அதே அதிகாரங்களும் சிறப்பு உரிமைகளும் இருப்பதும், மேலும் புத்தகங்களும், கணக்குகளும் சம்பந்தப்பட்ட பற்றுச்சீட்டு களும், பிற ஆவணங்களும், காகிதங்களும் ஆஜராக்குவதற்கு தேவைப்படவும் குழுவின் எந்த ஒரு அலுவலகத்தையும் பரிசோதனை செய்வதற்குரிய அதிகாரமும் உள்ளதாகும்.
9(4) மாநில கணக்காய்வு தலைவரோ, அவர் இந்த தேவைக்காக நியமித்த பிற ஏதேனும் நபரோ சாட்சியம் செய்தபடியான குழுவின் கணக்குகள், அதன் மீதுள்ள த¶க்கை அறிக்கை உட்பட குழு வருடந்தோறும் அரசிற்கு அனுப்பி கொடுக்க வேண்டியதும், அரசு அது கிடைத்த தேதி முதல் ஆறுமாத காலத் திற்குள் த¶க்கை அறிக்கையை சட்டப்பேரவை முன்பு தாக்கல் செய்யவும் வேண்டும்.
14 குழுவின் ஆண்டறிக்கை.—(1) குழு, ஒவ்வொரு நிதி வருடமும், முடிவடைந்த பிறகு முடிந்த அளவு விரைவில் நிர்ணயிக்கப்படுகின்ற அப்படிப் பட்ட படிவத்திலும், அப்படியுள்ள தேதியிலும், ஒவ்வொரு நிதிவருடத்திலும், முந்தைய நிதி ஆண்டில் செய்யப்பட்ட செயல்கள் மற்றும் நடைமுறைகளின் முழு விவரங்கள் காட்டும் ஒரு வருடாந்திர அறிக்கை, இளைஞர்களின் தகுநிலை விவரங்கள் உட்பட அரசிற்கு சமர்ப்பிக்கவும் வேண்டும்.
(2) துணைப்பிரிவு (1)-ன்படி கிடைத்த அறிக்கையின் ஒரு நகல் அரசிற்கு அது கிடைத்த பிறகு ஆறுமாதத்திற்குள் சட்டசபை முன்பு தாக்கல் செய்யவும் வேண்டும்.
அத்தியாயம் V
பலவகை
15. நன்னம்பிக்கையுடன் எடுத்த நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு.—இந்த அவசரச்சட்டப்படி நன்னம்பிக்கையுடன் செய்ததோ, செய்வதற்கு எண்¶யதோ ஆன ஏதேனும் காரியம் சம்பந்தப்பட்டு குழுவோ, தலைமையரோ எந்த ஒரு உறுப்பினருக்கோ, செயலருக்கோ குழுவின் பரிந்துரையின்படி செயல்படும் குழுவின் எந்த ஒரு அலுவலருக்கோ பிற ஏதேனும் ஊழியருக்கோ எதிராக எந்த ஒரு வழக்குகளோ, தண்டனை நடவடிக்கையோ, பிற சட்ட நடவடிக்கை களோ நிலைநிற்காது.
1 6 . குழு வி ன் த ை ல ை ம ய ரு ம் , உ று ப் பி ன ர் க ளு ம் , ெ ச ய ல ரு ம் , அலுவலர்களும், அரசு ப¶யாளராக இருக்கவேண்டும்.—குழுவின் தலைமையர், உறுப்பினர்கள், செயலர்கள், அலுவலர்களும் ஊழியர்களும், 1860-ன் இந்திய தண்டனைச் சட்டம் (1860-ன் 45ஆம் மத்தியச்சட்டம்) பிரிவு 21-ன் பொருளுக்குள் வரும் அரசு ப¶யாளர்களாக கருதப்படவேண்டும்.
17. தடைசெய்யாத பிற சட்டங்களின் உபயோகம்.—இந்த அவசரச் சட்டத்தின் நிபந்தனைகள் தற்போது அமலில் இருக்கும் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பாகவும் அதற்கு களங்கம் ஏற்படுத்தாமலும் இருக்கவேண்டும்.
18. சட்டங்கள் உருவாக்குவதற்குரிய அதிகாரம்.—(1) அரசிற்கு, அரசிதழ் அறிக்கை வழியாக இந்த அவசரச்சட்டத்தின் நிபந்தனைகளை நடைமுறைப் படுத்துவதற்காக சட்டங்கள் உருவாக்கலாம்.
10(2) சிறப்பாக, மேற்குறிப்பிட்ட அதிகாரத்தின் பொது கருத்துகளுக்கு தீங்கு வராமல் அப்படியுள்ள சட்டங்களில் பின்வரும் எல்லாமோ, ஏதேனும் காரியங்களுக்காக ஏற்பாடுகள் செய்யலாம், அதாவது:—
(எ) தலைமையருக்கு அளிக்க வேண்டிய ஊதியமும், உதவித்தொகையும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற நிபந்தனைகளும், ஏற்பாடுகளும் உறுப்பினர் களுக்கு அளிக்க வேண்டிய உதவித்தொகையும், இருப்புக்கட்டணமும்;
(பி) பிரிவு 10-ன் துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (எ) மற்றும் (பி)-ன் கீழ் அலுவலில் ஈடுபடுகின்ற பிற அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய உதவித் தொகைகளும் பிற அனுகூலங்களும்;
(சி) குழுவின் கூட்டத்திற்கு அழைப்பு விடவும், செயல்படுத்தவும், கூட்டத்தின் கோரவும்;
(டி) குழுவின் செயலரின் அதிகாரங்களும், பொறுப்புகளும்;
(இ) பராமரிக்க வேண்டிய வருட கணக்கு அறிக்கையின் படிவம்;
(எஃப்) தயாராக்க வேண்டிய ஆண்டறிக்கையின் படிவம்;
(ஜி) நிர்ணயம் செய்ய வேண்டியதோ நிர்ணயிக்கப்பட வேண்டியதோ ஆன பிற ஏதேனும் காரியம்;
(3) இந்த அவசரச்சட்டத்தின்கீழ் உருவாக்கிய எந்த ஒரு சட்டமும் அது உருவாக்கிய பிறகு, முடிந்த அளவு விரைவில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருக்கும்போது அதற்கு முன்பு, ஒரு கூட்டத்தொடரிலோ, தொடர்ந் துள்ள இரண்டு கூட்டத்தொடரிலோ உட்படுகின்ற, மொத்தம் பதினான்கு நாட்களுக்கு வைக்கவேண்டியதும், அதன்படி அது எந்த கூட்டத்தொடரில் வைக்கப்படுகின்றதோ அந்த கூட்டத்தொடரோ தொடர்ந்து வரும் கூட்டத் தொடர்களோ முடிவடையும் முன்பு சட்டப்பேரவை மேற்குறிப்பிட்ட சட்டத்தில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தவோ அல்லது அந்தச்சட்டம் உருவாக்க வேண்டியதில்லை என முடிவெடுக்கவோ செய்யும்போது, அந்த சட்டத்திற்கு அதற்குப்பிறகு, அந்தந்த செயல்களைப்போல், அப்படி மாற்றம் செய்யப்பட்ட உருவத்தில் மட்டும் அமலில் இருக்கவோ அல்லது எந்த ஒரு அமலிலும் இல்லாமல் இருக்கவோ செய்யும். எனினும், அப்படியுள்ள ஏதேனும் உருவமாற்றமோ, இரத்து செய்தலோ அந்த சட்டப்படி முன்பு செய்த ஏதேனும் காரியங்களின் செல்லுபடியாதலுக்கு இழிவு ஏற்படாத விதத்தில் இருக்கவேண்டும்.
19. இடர்களை நீக்கம் செய்வதற்குரிய அதிகாரம்.—(1) இந்த அவசரச் சட்டத்தின் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு ஏதேனும் இடர்கள் உருவாகும்போது, அரசிற்கு, அரசிதழ், அறிக்கை வெளியிட்ட உத்தரவின்படி,11 அத்தகைய இடர்களை நீக்கம் செய்வதற்காக தேவையென்றோ, பொருத்த மென்றோ அதற்கு தோன்றியதும், இந்த சட்டத்தின் நிபந்தனைகளுக்கு முரண்பாடு அல்லாத நிபந்தனைகளை உருவாக்கவும் வேண்டும்.
எனினும், அப்படிப்பட்ட எந்த ஒரு ஆணையும் இந்த அவசரச்சட்டம் தொடங்கிய தேதி முதல் இரண்டு வருட காலத்திற்கு பிறகு வெளியிடுதல் கூடாது.
(2) இந்த பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட ஒவ்வொரு ஆணையும் அது வெளியிடப்பட்ட பிறகு, முடிந்த அளவு விரைவில் சட்டப்பேரவை முன்பு வைக்கவேண்டும்.
20. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள மாநில இளையோர் குழு அவசரச்சட்டம் (2012-ன் 49) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி செய்த ஏதேனும் செயலோ, எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டத்தின் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.
எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.