Kerala Gazette No. 49 dated 10th November, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஜி) துறை
அறிக்கை
2013 ஜனவரி 15 எண் 21528/ச. இ. ஜி. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 பௌஷம் 25 2013 ஜனவரி 14ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலர் (சட்டம்).
2013-ன் அவசரச்சட்டம் எண் 13
2013-˛u LÙ≠d-Lh Tp-L-˚Xd-L-ZL (ß-⁄j-R)
AYNWfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1975-ன் காலிக்கட் பல்கலைக்கழக சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்
முகவுரை.—2012-ன் காலிக்கட் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 55) 2012 செப்டம்பர் 30ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;
2மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் காலிக்கட் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.
(2) இந்த அவசரச்சட்டம் 2012 செப்டம்பர் 22ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படவேண்டும்.
2. 1975-ன் 5வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 1975-ன் காலிக்கட் பல்கலைக்கழக சட்டம் (1975-ன் 5) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.
3. பிரிவு 7-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 7-ன் துணைப் பிரிவு (4)-ல், "ஓராண்டு" என்ற சொற்களுக்கு பதிலாக "இரண்டு ஆண்டுகள்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
4. செல்லுபடியாதல்.—முதன்மைச்சட்டத்தின் 7ஆம் பிரிவினுடைய (4) துணைப்பிரிவினுடைய (பி) பிரிவின் கீழ் 2011 செப்டம்பர் 22ஆம் தேதியிலுள்ள இ.எல்.இ.சி. 2/2011ஆம் எண் அறிக்கையின்படி வேந்தர் பெயர் பரிந்துரை செய்த ஆட்சிக்குழுவினுடைய காலவரையறை முடிவடைந்திருந்தால் கூட 2012 செப்டம்பர் 22ஆம் தேதியிலும் அதற்கு பிறகும் 2012-ன் காலிக்கட் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 55) அரசிதழில் அறிக்கை யிடுகின்ற நாள் வரையிலும் செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்த முதன்மை சட்டத்தின் விதிமுறைகள்படி செல்லுபடியாதலுடன் செய்யப்பட்டதோ எடுத்ததோவாக எண்ணப்பட வேண்டும்.
5. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள காலிக்கட் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 55) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) இவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி செய்ததோ செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் செயலோ எடுத்ததோ எடுத்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கையோ, இந்த சட்டத்தின்படி செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.