Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala Local Authorities Entertainments Tax (Amendment) Ordinance, 2013 (Ordinance No. 11 of 2013)—Tamil

Published 10 December 2013

Department
Law ( Legislation-C ) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-12-10.pdf_2013_49_Part_1_klaet
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 49 dated 10th December, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

2013 ஜனவரி 15 எண் 7828/ச. இ. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பௌஷம் 25.

2013 ஜனவரி 14ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரிக்கப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலர் (சட்டம்).

2013-ன் அவசரச்சட்டம் எண் 11

2013˛u ˙LW[ Es-[Ùh-£- A-ß-LÙW ®fl-Y-]e-Ls

˙L∞d-˚L -Y¨ (ß-⁄j-R) AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1961-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் கேளிக்கைவரி சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு அவசரச்சட்டம்.

முன்னுரை.—2012-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் கேளிக்கை வரி (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 61) 2012 நவம்பர் 24ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;

2

2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரிதநடவடிக்கை எடுக்கத்தேவையான சூழ்நிலைகள் தற்போதுள்ளதென கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் கேளிக்கை வரி (திருத்த) அவசரச் சட்டம் என்று அழைக்கப்படலாம்.

( 2 ) இ து 2 0 1 2 ந வ ம் ப ர் 2 5ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்பட வேண்டும்.

2. 1961-ன் 20வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலயளவில் 1961-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் கேளிக்கை வரிச்சட்டம் (1961-ன் 20) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்) பிரிவு 3 முதல் 6 வரை கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. புதிய பிரிவு 3சி-யை புகுத்தல்.—முதன்மைச்சட்டத்தில் பிரிவு 3பி-க்கு பிறகு பின்வரும் பிரிவினை சேர்க்க வேண்டும், அதாவது:—

"3C. வீதவரி விதித்தல் மற்றும் வசூலித்தல்.—(1) 2010-ன் கேரள கலாச்சார செயல்பாட்டாளர்கள் நலநிதிச்சட்டம் (2011-ன் 6)-ன் கீழ் உருவாக்கப்பட்ட கேரள கலாச்சார செயல்பாட்டாளர்கள் நலநிதியின் தேவைக்காக அனுமதிக்குரிய பணம் இருபத்தைந்து ரூபாய்க்கு மேலுள்ள திரைப்படத்தின் ஒவ்வொரு அனுமதிக்கும் அரசு அவ்வப்போது அரசிதழ் வழியாக குறிப்பிடும் மூன்று ரூபாய்க்கு மிகாமல் உள்ள விகிதத்தில் ஒரு வீதவரி சுமத்தவேண்டியதும் வசூலிக்க வேண்டியதும் ஆகும்.

(2) துணைப்பிரிவு (1)-ன் கீழ் விதிக்கப்படும் வீதவரி ஒவ்வொரு திரைப் படத்தின் அனுமதிக்காக உள்ள பணத்தின் மீதுள்ள வரியுடன் உள்ளாட்சி அதிகார நிறுவனங்களால் வசூலிக்க வேண்டியதும் மற்றும் வீதவரியின் வருமானம், அரசால் குறிப்பிடப்பட்டுள்ள விதத்திலுள்ள வசூல் கட்டணம் குறைத்து 2010-ன் கேரள கலாச்சார செயல்பாட்டாளர்கள் நலநிதிச்சட்டத்தின் (2011-ன் 6) கீழ் உருவாக்கப்பட்ட கேரள செயல்பாட்டாளர்கள் நலநிதி வாரியத்திடம் ஒப்படைக்கவும் வேண்டும்.

3

(3) துணைப்பிரிவு (2)-ன்படி ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்காகவும் வசூலிக்கப்பட்ட வீதவரியின் வருமானம் உள்ளாட்சி அதிகார செயரால் தொடர்ந்துவரும் மாதத்தில் 15 தினங்களுக்கு முன்பாகவோ அல்லது அன்றோ கேரள கலாச்சார செயல்பாட்டாளர்கள் நலநிதி வாரியத்தின் கணக்கில் செலுத்த வேண்டும்,

(4) உள்ளாட்சி அதிகார நிறுவனத்தால் வசூலிக்கப்பட்ட வீதவரி வருமானம் துணைப்பிரிவு (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் செலுத்தவில்லை எனில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார நிறுவனம் கேரள கலாச்சார செயல்பாட்டாளர்கள் நலநிதி வாரியத்திடம் அந்த காலவரை யறையிலிருந்து மாதம் ஒன்றுக்கு அந்தத்தொகையுடன் ஒன்றரை சதவிகித பிழையுடன் சேர்த்து செலுத்தத வேண்டியதாகும்.

(5) காலங்கடந்த எல்லா பணம் கொடுக்கல்களுக்கும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார நிறுவனத்தின் செயலர் மற்றும் தலைவர் அல்லது தலைமையரும் கூட்டாகப்பொறுப்பாவார்கள் மற்றும் கேரள கலாச்சார செயல் பாட்டாளர்கள் நலநிதி வாரியத்திடம் பிழையாக செலுத்திய ஏதேனும் தொகை அந்த உள்ளாட்சி அதிகார நிறுவனத்தின் செயலர் மற்றும் தலைவர் அல்லது தலைமையரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

(6) பிரிவுகள் 5, 6, 7, 7எ மற்றும் பிரிவுகள் 8 முதல் 10 வரையுள்ள வழிமுறைகள் திரைப்படத்தின் அனுமதிக்குரிய சீட்டின் மீதுள்ள வீதவரி சம்பந்தப்பட்டு பாதகமாக உள்ளதும் அவற்றில் 'வரி' என்ற சொல் 'வீதவரியும்' என கூட்டிச்சேர்த்து பொருள் கொள்ள வேண்டியதும் ஆகும்,

4. பிரிவு 5-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 5-ல்,—

(எ) துணைப்பிரிவு (1)-ல் உட்பிரிவு (எ)-க்குப் பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"(எஎ) உள்ளாட்சி அதிகார நிறுவனத்தால் அதிகாரப்படுத்தப்பட்ட ஏதேனும் அலுவலர் தேவைப்படும்பொழுது உள்ளாட்சி அதிகார நிறுவனத்திற் கான வரி சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவலோ அல்லது புள்ளி விவரங்களை சரி பார்க்கவோ உரிய வசதியுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நேரணு முறைக் கான வசதியுடன்கூடிய செய்முறை மென்பொருளுடன் மின்னணுக்கருவியில் இருந்து உருவாக்கப்படும் அந்த சீட்டிற்குரிய பொருத்தமான வரி குறிப்பிடுகின்ற மின்னணு படலத்திலுள்ள ஒரு சீட்டுடன் கூடவோ; அல்லது"

(பி) துணைப்பிரிவு (1)-ல், பின்வரும் காப்புரை சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"ஆனால் ஏதேனும் பிரிவு அல்லது பிரிவுகளுக்குள்ளில் கேளிக்கைக் கான அனுமதி அல்லது கேளிக்கை நடத்துவதற்கான ஏதேனும் இடம் அல்லது இடங்களை குறிப்பிட்டு துணைப்பிரிவு (1)-ல் உட்பிரிவு (எஎ)-ன் படியுள்ள சீட்டுடன் மட்டும் நடத்த வேண்டும் என்று அரசு அரசிதழ் அறிக்கை வழியாக குறிப்பிட வேண்டியதும் மற்றும் அந்த கேளிக்கையின் அனுமதிக்காக உட்பிரிவு (எ)-ன்படி எந்த ஒரு சீட்டும் வழங்க முடியாததும் ஆகும்.

4

(சி) துணைப்பிரிவு (2)-க்குப் பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"(3) துணைப்பிரிவு (1)-ல், உட்பிரிவு (எஎ)-ல் கூறப்பட்டுள்ளபடி மின்னணுப்படிவத்திலுள்ள சீட்டினை உருவாக்கத்தேவையான செய்முறை மென்பொருளுடன் கூடிய மின்னணுக்கருவியை உருவாக்குவதன் தேவைக்காகவும் மற்றும் அந்த கருவியை சீரமைப்பதற்காகவும், அரசால் உருவாக்கப்படும் விதிகளின்படியுள்ள விகிதத்திலும் முறையிலும் உள்ள ஒரு தொகை சீட்டுடன் சேவை வரியில் விதிக்கவும், வசூலிக்கவும் வேண்டியதாகும்".

5. பிரிவு 6-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 6-ல்,—

"(எ) துணைப்பிரிவு (1)-ல், "உட்பிரிவு (எ)-ல்", என்ற சொல், எழுத்து, அடைப்புக்குறிக்கு பிறகு "அல்லது உட்பிரிவு (எஎ)" என சொற்களும், எழுத்துக்களும் மற்றும் அடைப்புக்குறிகளும் சேர்க்கப்பட வேண்டும்.

(பி) துணைப்பிரிவு (3)-க்குப் பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"(4) 1958-ன் கேரள திரைப்பட (ஒழுங்குமுறை) சட்டம், (1958-ன் 32) அல்லது 1994-ன் கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் (1994-ன் 13) அல்லது 1994-ன் கேரள முனிசிப்பாலிட்டிச்சட்டம் (1994-ன் 20)-ல் எதுவும் எவ்வாறு இருந்த போதிலும், ஒரு திரையரங்கு நடத்துவதற்கோ, அதனுடன் தொடர்புடைய கண்காட்சியை நடத்துவதற்கோ உரிய உரிமம் அல்லது அனுமதிச்சீட்டு அந்த திரையரங்கின் உரிமையாளர் அதன் முந்தைய மாதம் வரையுள்ள கேளிக்கை வரிக்கான உரிய தொகையை செலுத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகார நிறுவனத்தால் புதுப்பித்து வழங்குவதற்கு இயலாது.

6. பிரிவு 11-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 11-ல், துணைப் பிரிவு (2)-ல், உட்பிரிவு (பி)-க்குப்பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"(சி) சேவை வரியின் விகிதமும் பிரிவு (5)-ல் துணைப்பிரிவு 3-ன்படி யுள்ள மின்னணு படிவச்சீட்டுகளை உருவாக்குவதற்குரிய கடினப்பொருள் மற்றும் செய்முறை மின்பொருளை உருவாக்குவதற்கும் சீரமைப்பதற்காகவும் அதை நிர்ணயம் செ.ய்வதற்காகவும் அளிப்பதற்குரிய முறையை தீர்மானிப்பதற்கும்" 4. இரத்தாதலும் காப்பும்.—(1) 2012-ன் கேரள உள்ளாட்சி அதிகார நிறுவனங்கள் கேளிக்கை வரி (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 61) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அ வ ச ர ச் ச ட் ட த் தி ன் ப டி தி ரு த் த ம் ெ ச ய் ய ப் ப ட் ட மு த ன் ை ம ச் ச ட் ட த் தி ன் அ டி ப் ப ை ட யி ல் ெ ச ய் த ஏ ே த னு ம் ெ ச ய ே ல ா , எ டு த் த ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.

எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 10 December 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-12-10.pdf_2013_49_Part_1_klaet/. Archive identifier in.gazette.kerala_new.2013-12-10.pdf_2013_49_Part_1_klaet.