Kerala Gazette No. 49 dated 10th December, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஐ) துறை
அறிக்கை
2013 ஜனவரி 10 எண் 22884/ச. இ. ஐ. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 பௌஷம் 20.
2013 ஜனவரி 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலர் (சட்டம்).
2013-ன் அவசரச்சட்டம் எண் 1
2013-˛u ˙LW[ LÙp-S˚P Ut-flm ÆXe-œ-Ls U⁄j-'Y
Tp-L-˚Xd-L-ZL (ß-⁄j-R) AYNWfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
2010-ன் கேரள கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம் 2 2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் மாதம் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் கேரள கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.
( 2 ) இ து 2 0 1 2 ம ா ர் ச் 2 6ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்படவேண்டும்.
2. 2011-ன் 3வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 2010-ன் கேரள கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.
3. பிரிவு 57-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 57வது துணைப் பிரிவு 7-ல், "ஐம்பத்தி ஐந்து வருடங்கள்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "ஐம்பத்தி ஆறு வருடங்கள்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழக (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 57) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) இவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டப்படி செய்ததோ செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் செயலோ எடுத்ததோ எடுத்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கையோ, இந்த சட்டத்தின்படி செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.