Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

4. The Kerala Panchayat Raj (Amendment) Ordinance, 2013 (Ordinance No. 8 of 2013)—Tamil

Published 24 December 2013

Department
Law (Legislation-C) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-12-24.pdf_2013_51_Part_1_Panchayat_Raj
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 51 dated 24th December, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

2013 ஜனவரி 10 எண் 24831 /ச. இ. சி. 1/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1 9 3 4 ெ ப ள ஷ ம் 2 0 .

2013 ஜனவரி 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2013-ன் அவசரச்சட்டம் எண் 8

2013-˛u ˙LW[ Tg-NÙ-Vj-'-WÙw (ß⁄j-R) AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முன்னுரை.—2012-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (மூன்றாம் திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 62) 2012-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (நான்காம் திருத்த) அவசரச்சட்டமும் (2012-ன் 63) 2012 நவம்பர் 24ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டிருந்ததாலும்;

2

2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல்போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2013-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

( 2 ) இ து 2 0 1 2 ந வ ம் ப ர் 2 5ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்பட வேண்டும்.

2. 1994-ன் 13வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கின்ற காலத்தில் 1994-ன் கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் (1994-ன் 13) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படலாம்) பிரிவு 3 முதல் 6 வரை கூறப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 203-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 203-ல்,—

(எ) துணைப்பிரிவு (4)-க்குப் பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப் பட வேண்டும், அதாவது:—

"(4) துணைப்பிரிவு (2)-ன்படி அரசு நிச்சயிக்கின்ற அடிப்படை சொத்துவரி கட்டணங்களின் வரம்புகளுக்கும், அவைக்கு உட்பட்டு துணைப் பிரிவு (3)-ன்படி குழுமம் ஒரு முறை நிச்சயிக்கின்ற அடிப்படை சொத்துவரி கட்டணங்களுக்கும் அவை அமலுக்கு வருகின்ற தேதி முதல் ஐந்து வருட காலயளவிற்கு அமலில் இருப்பதும், தொடர்ந்து ஒவ்வொரு ஐந்து வருட காலயளவு முடிகின்ற முறைக்கு அடுத்த ஐந்து வருட காலயளவிற்கு அமலில் வரக்கூடிய விதத்தில் அடிப்படை சொத்துவரி கட்டணங்கள் வரிசைப்படி அரசும் குழுமமும் தற்போதுள்ள வரம்புகள் மற்றும் கட்டணங் களின் மீது ஒவ்வொரு வருடமும் ஐந்து சதவிகிதம் என்ற விகிதத்தில்3 அதிகரித்து அதன்படி ஐந்து வருட காலயளவு முடிகின்றபோது இருபத்திஐந்து சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் புதுப்பித்து நிச்சயிக்க வேண்டியதாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி வரிக்கட்டணம் புதுப்பித்து நிச்சயிக்கப்பட்ட படி வரி நிர்ணயம் செய்யும்போது,—

(எ) புதியதும், புதுப்பிக்கப்பட்டதும், பயன்பாட்டு முறையில் மாறுதல் செய்யப்பட்டதுமான கட்டிடங்களுடைய காரியத்தில் செயலாளர், நிச்சயிக்கப் பட்டபடி வரி நிச்சயிக்கப்பட வேண்டியதும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுமாகும்.

(பி) உட்பிரிவு (எ)-யில் குறிப்பிட்டுள்ள பிரிவில் உட்படாததும், தரை பரப்பளவின் அடிப்படையில் ஒரு முறை வருடாந்திர சொத்துவரி நிச்சயம் செய்யப்பட்ட கட்டிடத்தினுடைய காரியத்தில், தொடர்ந்து வருகின்ற பத்து வருடத்திற்கு வரி புதுப்பித்து நிச்சயிப்பதற்காக தற்போதுள்ள வருடாந்திர சொத்துவரி கட்டணங்களுடன் அதனுடைய இருபத்தைந்து சதவிகிதம் உயர்த்தி குழுமத்தின் வரி புதுப்பித்து நிச்சயிக்க வேண்டியதும் அதன்படி அடுத்த ஐந்து வருடத்திற்கான டிமான்ட் அறிவிப்பு செயலாளர் கட்டிட உரிமையாளருக்கு கொடுக்கவேண்டியதுமாகும்;

எனினும், இதன்படி வருடாந்திர சொத்துவரி புதுப்பித்து நிச்சயிக்கும் போது துணைப்பிரிவு (7)-ன்படியுள்ள குறைவு செய்வதற்கோ அதிகரிப்பதற்கோ பொருந்தச்செய்வதில்லை;

(பி) துணைப்பிரிவு (7)-ல், (iii), (vii), (ix) போன்ற இனங்கள் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

(சி) துணைப்பிரிவு (9)-ன் காப்புவாசக நிபந்தனையில், "கட்டிடத்தின் சுவரினுடைய கட்டுமானம்" என்ற சொற்கள் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

(டி) துணைப்பிரிவு (10)-ல், "அறுபது நாட்களுக்குள்" என்ற சொற்களுக்கு பதிலாக "முப்பது நாட்களுக்குள்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்..

(இ) துணைப்பிரிவு (12) தவிர்க்கப்பட வேண்டியதாகும்;

(எஃப்) துணைப்பிரிவு (14) தவிர்க்கப்பட வேண்டியதாகும்;

(ஜி) துணைப்பிரிவு (19)-ல், இனம் (ii)-க்கு பதிலாக பின்வரும் இனம் சேர்க்கப்பட வேண்டியதாகும், அதாவது:—

"(ii) வருடாந்திர சொத்துவரியின் உயர்வில் மிகவும் குறைந்த வரம்பும் கூடிய வரம்பும் நிச்சயிப்பது".

4

4. பிரிவு 207-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 207-ல் உட்பிரிவு (பி)-க்கு பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட வேண்டியதாகும், அதாவது:—

"(பிஎ) அரசினுடைய அங்கீகாரம் உள்ள கல்வி நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளதும் மேல்நிலைப்பள்ளி வரையுள்ளதுமான கல்வித் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்ற கட்டிடங்களும் அப்படிப்பட்ட நிறுவனங்களில் மாணவர்கள் தங்குகின்ற விடுதி கட்டிடங்களும்".

5. பிரிவு 232-ல் திருத்தம்.—(1) முதன்மைச்சட்டத்தின் பிரிவு 232-ன் துணைப்பிரிவு (1)-க்கு பிறகு பின்வரும் துணைப்பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"(2) 1077-ல் அப்காரி சட்டத்திலோ (1077-ன் 1) தற்போது நிலவிலுள்ள பிற ஏதேனும் சட்டத்திலோ எதுவும் எவ்வாறிருந்தபோதிலும், எந்த ஒரு நபரும் பஞ்சாயத்தினுடைய முன்அனுமதி இல்லாமலும் அனுமதியில் தனியாகக் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்படாததுமான, ஒரு பஞ்சாயத்து பகுதிக்குள் ஒரு மதுக்கடை தொடங்கக்கூடாது.

(3) கல்வி நிறுவனம் அல்லது பிரார்த்தனை இடங்களின் அருகில் ஒரு மதுக்கடை தொடங்க அனுமதி அளிக்கும்போது தற்போது நிலவிலுள்ள அப்காரி சட்டத்திலோ அல்லது அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ள Áர அளவிற்கு கட்டுப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட Áர அளவிற்குள் ஒரு மதுக்கடை தொடங்க பஞ்சாயத்து அனுமதி அளிப்பதற்கு முடியாததும் ஆகும்.

(4) பொது அமைதி அல்லது ஒழுக்கத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, வசதியோ, இன்னலோ காரணமாகவோ ஒரு மதுக்கடை ஒரு இடத்திலிருந்து இதற்காக பரிந்துரை செய்யப்படுகின்ற பதினைந்து நாட்களுக்கு மிகாத காலயளவிற்குள் வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கோ, மூடுவதற்கோ உத்தரவு அளிப்பதற்கு ஒரு பஞ்சாயத்திற்கு அதிகாரமுள்ளதாகும்.

(5) இந்த பிரிவில் எதுவும் எவ்வாறிருந்தபோதிலும், (2) முதல் (4) வரை யுள்ள துணைப்பிரிவுகளின் ஏற்பாடுகள் 2012-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (இரண்டாம் திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 64) அமலுக்கு வந்த 2012 நவம்பர் 25ஆம் தேதியில் நிலவிலுள்ள எந்த ஒரு மதுக்கடைக்கோ, நிலவிலுள்ள எல்லா சட்ட ஏற்பாடுகளுக்கும் உட்பட்டு மேற்குறிப்பிட்ட தேதியில் தற்போதுள்ள கள்ளுகடைகள் அவை தொடங்குவதற்கு அனுமதிக்கப் பட்டுள்ள வரையறைகளுக்குட்பட்ட பகுதியில் மாற்றி நிறுவுவதற்கு பாதகமாக இருப்பதில்லை..

5

விளக்கம்..—"மதுக்கடை" எனில், 1077-ன் அப்காரி சட்டமும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களின்படியுள்ள ஒரு கள்ளுக்கடையோ, ஒரு அயல்நாட்டு மதுக்கடையோ, அயல்நாட்டு மது சில்லறை விற்பனை நிறுவனங்களோ, FL-9 உரிமம் உள்ள ஒரு நிறுவனமோ அல்லது ஒரு பார் ஹோட்டலோ என பொருள்படும்".

6. 279ஆம் பிரிவிற்கு பிறகு புதிய பிரிவு சேர்த்தல்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 279ஆம் பிரிவிற்கு பிறகு பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டியதாகும், அதாவது:—

"279எ. உரிமம் தவிர புறம்போக்கு கைவசப்படுத்துதல்.—(1) பஞ்சாயத்தினு டையதோ அல்லது இதில் உட்படுவதோ அல்லது இதன் கட்டுப்பாட்டில் உள்ளதோ ஆன ஏதாவது நிலம், இதனுடைய முன்அனுமதி இல்லாமல் யாரா வது கைவசம் வைத்திருந்தால், இதுபோல கைவசம் வைத்தது சம்பந்தப்பட்டு அந்தந்த காலங்களில் தண்டக்கட்டணம் என்கிற நிலையில் பஞ்சாயத்து தேவைப்படுகின்ற ஒரு தொகை, நிர்ணயிக்கப்படலாமெனும் எல்லைகளுக்கு உட்பட்டு கொடுக்க இதுபோன்ற நிலம் கைவசம் வைத்துள்ள நபர் பொறுப்புள்ளவராக இருப்பதாகும்.

என்றாலும், இந்த துணைப்பிரிவின்படி ஒரு நபரோடு ஏதாவது தொகை தேவைப்படுவதற்கு முன்பு அவ்வாறு தேவைப்படுவதற்கு எதிரான காரணத்தை புரியவைக்க இந்த நபருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டியதாகும், (2) (1)ஆம் துணைப்பிரிவின்படியுள்ள ஏதாவது தொகை கொடுக்க ஒரு நபர் தவறுகின்றபோது செயலாளருடைய விண்ணப்பத்தின்மீது, பஞ்சாயத்தின் அதிகாரவரம்பிற்குட்பட்ட நீதிபதிக்கு இந்த தொகை நீதிமன்றம் சுமத்திய ஒரு தண்டக்கட்டணம் என்பதுபோல இதே விதத்தில் வசூலிக்கப்பட வேண்டியதாகும்.

(3) (எ) ஏதாவது நிலம் சட்டவிரோதமாக கைவசம் வைத்தும், அவ்வாறு கைவசம் வைத்தது சம்பந்தப்பட்டு (1)ஆம் துணைப்பிரிவின்படி தண்டக்கட்டணம் கொடுக்க பொறுப்புள்ளவராக இருக்கவும் செய்கின்ற எந்த ஒரு நபரையும் செயலாளருக்கு அப்போதே நீக்கம் செய்யலாம் என்பதோடு இந்த நிலத்தில் விவசாயம் செய்த ஏதாவது பொருளோ, வேறு உற்பத்தி பொருளோ பறிமுதல் செய்வதற்கு உட்படுத்தவும், இதில் இருக்கும் ஏதாவது கட்டிடமோ, கட்டுமானங்களோ அல்லது சேமித்து வைக்கப்பட்ட ஏதாவது பொருளோ நியாயமானது என்று செயலர் கருதுகின்ற எழுத்து மூலமான அறிக்கை வழங்கிய பிறகும் இந்த நபர் நீக்கம் செய்யாதபோது பறிமுதல் செய்வதற்கு உட்படுத்துவதும் இதன்படி பறிமுதல் செய்த எந்த ஒரு பொருளும் பஞ்சாயத்து குறிப்பிடுகின்ற நடவடிக்கை முறைகளுக்கேற்ப விட்டுவிட வேண்டியதாகும்.

6

(பி) ஏதேனும் நிலத்தை சட்டவிரோதமாக கைவசம் வைத்திருக்கும் நபருக்கோ அல்லது அவரது முகவருக்கோ அறிக்கை அளித்தப்பிறகு நியாயமானது என செயலாளர் எண்ணும் நேரத்திற்குள், நிலத்தை காலி செய்யவேண்டு மென்று தேவைப்பட்ட ஒரு அறிக்கை அனுப்ப வேண்டியதும் அத்தகைய அறிக்கையின்படி அவர் செயல்படாமல் இருக்கும்பட்சத்தில் அதை காலி செய்ய மறுக்கும் எந்த நபரையும் நீக்கம் செய்யவோ அல்லது நீக்கம் செய்ய ஒரு கீழ் அதிகாரியையோ நியமனம் செய்யவேண்டியதும் அத்தகைய எந்தவொரு நபரையும் நீக்கம் செய்யும் அதிகாரியை யாரேனும் எதிர்க்கும்போதோ அல்லது தடை செய்யும்போதோ செயலாளர் அந்த உண்மையை மாவட்ட ஆட்சியாளருக்கு அறிக்கை செய்யவேண்டியதும், அவ்வாறு அறிக்கை செய்தால் மாவட்ட ஆட்சியாளர் அந்த வழக்கு சம்பந்தப்பட்டு பரிசோதனை செய்ய வேண்டியதும் எதிர்ப்பு அல்லது தடை செய்வது தொடர்கிறது என்று புரிந்துகொள்ளும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட நபரை கைது செய்வதற்குரிய ஒரு வாரண்ட் வெளியிட வேண்டியதும் அவர் ஆஜராகும்போது நிர்ணயம் செய்யப்படலாம் எனும் படிவத்திலுள்ள ஒரு வாரண்டுடன் அவரை, அத்தகைய தடையோ அல்லது எதிர்ப்போ தொடர்வதை தடை செய்வதற்கு தேவைப்படலாம் என்பதும் முப்பது நாட்களுக்கு மிகாததுமான சிறைத்தண்டனைக்காக குற்றவியல் சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டியதும் ஆகும்.

எனினும், இந்தப்பிரிவின்படி அவ்வாறு சிறைத்தண்டனைக்கு அனுப்பும் எந்த ஒரு நபரையும் அதே உண்மைகள் சம்பந்தப்பட்டு 1860-ன் இந்திய தண்டனைச் சட்டத்தின் (1860-ன் 45வது மத்தியச்சட்டம்) பிரிவுகள் 183, 186 மற்றும் 188-ன்படியான தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கூடாததும் ஆகும்."

7. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள பஞ்சாயத்து ராஜ் (மூன்றாம் திருத்த) அவசரச்சட்டமும் (2012-ன் 62) 2012-ன் கேரள பஞ்சாயத்து ராஜ் (நான்காம் திருத்த) அவசரச்சட்டமும் (2012-ன் 63) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்கூறிய அவசரச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் செயலோ, மேற்கொண்ட ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்ததாகவோ, மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.

ஹெச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 24 December 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-12-24.pdf_2013_51_Part_1_Panchayat_Raj/. Archive identifier in.gazette.kerala_new.2013-12-24.pdf_2013_51_Part_1_Panchayat_Raj.