Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala Prohibition of Charging Exorbitant Interest Act, 2012 (Act No. 2 of 2013)—Tamil

Published 24 December 2013

Department
Law ( Legislation-A) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-12-24.pdf_2013_51_Part_1_Prohibition
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 51 dated 24th December, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2013 ஜனவரி 7 எண் 11752/ச. இ. எ. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பௌஷம் 17.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 ஜனவரி 4ஆம் தேதி கேரள ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2013-ன் அவசரச்சட்டம் எண் 2

2012˛u ˙LW[ AßL Yh• Y„-≠j-R˚X

R˚P-˘Nn-Rp NhPm

கேரள மாநிலத்தில் அதிகவட்டிக்கு பணம் கடன் கொடுப்பதை தடைசெய் வதற்கும் பணம் கடன் கொடுத்தல் வியாபாரத்தில் அதிக வட்டி வசூலிப்பதற்கு கடும் தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டதோ தொடர்புடையதோவான காரியங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்குரிய ஒரு சட்டம்.

2

முன்னுரை.—கேரள மாநிலத்தில் அதிகவட்டிக்கு பணம் கடன் கொடுப் பதை தடைசெய்வதற்கும் பணம் கடன் கொடுக்கும் வியாபாரத்தில் அதிக வட்டி வசூலிப்பதற்கு கடும் தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டதோ தொடர்புடையதோவான காரியங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்குரிய ஒரு சட்டம்.

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தச்சட்டம் 2012-ன் கேரள அதிக வட்டி வசூலித்தலை தடைசெய்தல் சட்டம் என அழைக்கப்படும்.

( 2 ) இ து 2 0 1 2 ஆ கஸ் ட் 2 7ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்படவேண்டும்.

2. விளக்கங்கள்.—(1) இந்தச்சட்டத்தில், சந்தர்ப்பம் வேறு விதத்தில் தேவைப்படாதபோது,—

( எ ) "தி ன ச ரி வ ட் டி" எனி ல் , 1 9 5 8 - ன் ே க ர ள பண ம் க ட ன் கொடுப்போர் சட்டத்தில் (1958-ன் 35) பிரிவு 7-ன் துணைப்பிரிவு (1)-ல் கு றி ப் பி ட ப் ப ட் டு ள் ள வ ட் டி வி கி த த் ை த வி ட அ தி க வி கி த த் தி ல் , தினஅடிப்படையில் கணக்கு செய்யப்படும் வட்டி எனப்பொருள்படும்.

(பி) "கடனாளி" எனில், அதிகவட்டிக்கு கடன் வழங்கும் ஒரு நபர் எனப்பொருள்படும்.

(சி) "அதிக வட்டி" எனில், 1958-ன் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு (7)-ன் துணைப்பிரிவு (1)-ல் கூறப்பட்டுள்ள வட்டி விகிதத்தை விட அதிக வட்டியும் அதில் தினவட்டி, ம¶க்கூர் வட்டி, கந்துவட்டி, மீட்டர்வட்டி, தண்டல் போன்றவை உட்படும்..

(டி) "ம¶க்கூர் வட்டி" எனில், 1958-ல் கேரள பணம் கடன் கொடுப் போர் சட்டத்தில் (1958-ன் 35) பிரிவு 7-ன் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிடப் ப ட் டு ள் ள வ ட் டி வி கி த த் ை த வி ட அ தி க வி கி த த் தி ல் , ம¶ க் கூ ர் அடிப்படையில் கணக்கு செய்யப்படும் வட்டி எனப்பொருள்படும்.

(இ) "கந்துவட்டி" எனில், 1958-ன் கேரள பணம் கடன்கொடுப்போர் சட்டத்தில் (1958-ன் 35) பிரிவு 7-ன் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதத்தைவிட அதிக விகிதத்தில் கணக்கு செய்யப்படும் வட்டி எனப்பொருள்படும்.

(எஃப்) "கடன்" எனில், தினசரி வட்டிக்கோ, ம¶க்கூர் வட்டிக்கோ, கந்துவட்டிக்கோ, மீட்டர் வட்டிக்கோ, தண்டலுக்காகவோ முன்கருதலாக பணம் அளித்தல் எனப்பொருள்படும்;

3

(எச்) "தண்டல்" எனில், 1958-ன் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தில் (1958-ன் 35) பிரிவு 7-ன் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிடப் பட்டுள்ள வட்டி விகிதத்தை விட அதிக விகிதத்தில், கணக்காக்கப்படுவதும், கடன்தொகையுடன் தினந்தோறும் வசூலிக்கப்படவேண்டிய வட்டி எனப்பொருள்படும்.

(2) இந்த சட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதும் எனினும் விளக்கம் செய்யப்படாதுமான ஆனால், 1958-ல் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தில் (1958-ன் 35) விளக்கப்பட்டதுமான சொற்களுக்கும், பயன் பாட்டிற்கும், அவற்றிற்கு அவ்வப்போது அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பொருளும் உள்ளதாகும்.

3. அதிக வட்டி வசூலிப்பதற்கு தடை.—எந்த ஒரு நபரும் அவர் அளிக்கின்ற ஏதேனும் கடன் மீது அதிக வட்டி வசூலிக்க முடியாததும் ஆகும்.

4. குற்றங்கள் பிடியாணையின்றி கைது செய்வதற்கும், பினணயில் விடத்தகாததும் ஆகுமென்பது.—இந்த சட்டப்படியுள்ள எந்த ஒரு குற்றமும் பிடியாணையின்றி கைது செய்வதற்கும் பிணையில் விடத்தகாததும் ஆகும்.

5. நீதி மன்றத்தின் முன்பாக பணம் வைப்பீடு செய்வதும் மனு அளித்தலும் அதனுடன் தொடர்பான நடவடிக்கை முறைகள்—(1) ஒரு கடனாளி அவர் ஏதேனும் நபரிலிருந்து கடனாக வாங்கிய பணத்துடன் தொடர்புடையதாக கொடுக்க வேண்டிய பணம், 1958-ன் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் (1958-ன் 35) பிரிவு 7-ன் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில் வட்டியுடன் வைப்பீடு செய்த தொகை, கடனும் அதன் வட்டியும் சேர்த்து முழுவதுமாகவோ, பகுதியாகவோ, அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அடைத்து தீர்ப்பதற்காக என்று குறிக்கப்படுவதற்கான ஒரு மனுவுடன், அதிகாரவரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யலாம்.

(2) துணைப்பிரிவு (1)-ன் அடிப்படையிலுள்ள ஒரு மனு கிடைத்தால், நீதிமன்றம், வழக்கு சம்பந்தப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ள நபருக்கான நகல் பதினைந்து நாட்களுக்குள் அல்லது நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பிற காலத்திற்குள்ளோ அளிப்பதற்கு பரிந்துரை அளித்துகொண்டு அந்த நபருக்கு மனுவின் ஒரு நகல் வழங்கவேண்டியதாகும். நீதிமன்றத்திற்கு தேவையான விசாரணைக்கு கட்சிகளின் நகல் பரிசீலனை செய்த பிறகு கடனும், அதன் வட்டியும், குறிப்பிட்டுள்ளபடி முழுமையாகவோ, பகுதியாகவோ கொடுத்து தீர்த்தாக அடையாளப்படுத்திக்கொண்டு உத்தரவு அளிக்கலாம்.

4

6. சொத்தின் உடமையை மீட்டல்.—கடனாளி ஒரு மனு தாக்கல் செய்தால், அவருக்கு அளித்த கடனின் அல்லது அதற்கான வட்டியுடன் திரும்ப செலுத்துவதற்காக ஏதேனும் நபர் கையகப்படுத்திய அசையும் மற்றும் அசையா பொருட்கள் ஏதேனும் உண்டெனில் அதன் உடமையை மீட்டு அளிப்பதற்கு நீதிமன்றத்திற்கு ஆணை வெளியிடலாம்.

7. தன்னார்வ வெளிப்படுத்தல்.—அதிக வட்டி வசூலிக்கும் எந்த ஒரு நபருக்கும் இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதி முதல் ஒரு மாதத்திற்குள், அவர் அளிக்கும் கடன்களின் மீது 1958-ன் கேரள பணம் கொடுப்போர் சட்டத்தில் (1958-ன் 35) பிரிவு (7)-ன் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிட்டுள்ள விகிதத்தில் மட்டும் வட்டி வசூலிக்கும் அந்த நபரின் நோக்கத்தை வெளிப்படுத் திக்கொண்டுள்ள ஒரு மனு நீதிமன்றத்தின் முன்பாக தாக்கல் செய்யவும், அப்படி வெளிப்படுத்தினால் அந்த கடன் சம்பந்தப்பட்ட வட்டி மேற்குறிப் பிட்ட சட்டத்தின் பிரிவு 7-ன் துணைப்பிரிவு (1)-ல் குறிப்பிட்டுள்ள விகிதத்தில் இருக்கவேண்டியதும், அப்படிப்பட்ட கடனுடன் சம்பந்தப்பட்டு, இந்த சட்டத்தின்கீழ் உள்ள குற்றங்களுக்கு எந்த ஒரு சட்ட நடவடிக்கைகளும் எடுப்பதற்கு முடியாததும் ஆகும்.

8. வட்டியை சரி செய்வது.—கடனை, அதன் வட்டியுடன் தீர்ப்பதற்காக, கடனாளி தாக்கல் செய்யவும் மனுவின்மீது, 1958-ன் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் (1958-ன் 35) பிரிவு 7-ன் துணைப்பிரிவு (1)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்துடன் அதிக விகிதத்தில் ஏதேனும் வட்டி, கடனாளி அளித்திருந்தால் அது கடன் தொகையில் சரி செய்வதற்கு நீதிமன்றத்திற்கு ஒரு ஆணை வெளியிடலாம்.

9. தண்டணை.—(1) 1958-ன் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தில் (1958-ன் 35) எதுவும் எவ்வாறிருந்தபோதிலும்,—

(எ) பிரிவு (3)-ன் ஏற்பாடுகளை மீறும் எந்த ஒரு நபரும், குற்றம் செய்யும் நிறுவனத்தின் மீது, மூன்று வருடம் வரை உள்ள காலயளவிற்கு சிறைத்தண்டணையும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை உள்ள தண்டத் தொகையையும் தண்டணையாக அளிக்க வேண்டியதும்;

(பி) கடன் வசூலிப்பதற்காக ஏதேனும் கடனாளியை மனதளவிலோ, உடல் ரீதியாகவோ கொடுமைப்படுத்தவோ அப்படி கொடுமைப்படுத்த உடந்தையாக இருந்த எந்த ஒரு நபரும் குற்றம் செய்யும் நிறுவனத்தின் மீது, ஒரு வருடம் வரை உள்ள காலயளவிற்கு சிறைத்தண்டணையும், பத்தாயிரம் ரூபாய் வரை உள்ள பிழையுடன் தண்டனை அளிக்கவேண்டியதுமாகும்;

(2) கடன் அளித்த நபரோ, அவரின் அறிவுரைப்படியுள்ள பிற ஏதேனும் நபரோ, கடனாளியை மனதளவிலோ, உடல் ரீதியாகவோ கொடுமைப் படுத்தவோ, அதன் விளைவாக அதனைத் தொடர்ந்து கடனாளி தற்கொலை5 செய்யவும், செய்யும்போது கடன் அளித்த நபர், குற்றமுள்ள நிறுவனத்தின்மீது, ஐந்து வருடம் வரை உள்ள காலயளவிற்குரிய தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் வரையுள்ள பிழையுடன் தண்டனையும் அளிக்கலாம்.

10. நீதிமன்ற கட்டணம்.—தற்போது நிலவிலுள்ள பிற ஏதேனும் சட்டத் தில் எதுவும் எவ்வாறிருந்தபோதிலும் இந்த சட்டத்தின் அடிப்படையிலுள்ள ஒரு மனு தொடர்பாக அளிக்க வேண்டிய நீதிமன்ற கட்டணம் Ëறு ரூபாய் ஆகும்.

11. சட்டம் பிற ஏதேனும் சட்டங்களுக்கு இழிவை ஏற்படுத்தாது வென்று.—இந்தச்சட்டத்தின் ஏற்பாடுகள் தற்போது அமலில் இருக்கின்ற பிற ஏதேனும் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் அவற்றிற்கு இழிவை ஏற்படுத்தாமலும் உள்ளதாகும்.

12. 1958-ல் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் (1958-ன் 35) ஏற்பாடுகளை பொருந்தச்செய்தல்.—இந்தச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு 1958-ன் கேரள பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் (1958-ன் 35) ஏற்பாடுகள் பணம் கடன் கொடுப்போருக்கு பொருந்துவதாக உள்ளபோது தேவையான மாற்றங்களுடன், இது சட்டத்தின் பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபருக்கு பொருந்ததக்கதாகும்.

விளக்கங்கள்.—ஒரு நபரின் ஒரு செயல் இந்த சட்டத்தின் அடிப்படையிலும் 1 9 5 8 - ன் ே க ர ள க ட ன் ெ க ா டு ப் ே ப ா ர் ச ட் ட த் தி ன் ( 1 9 5 8 - ன் 3 5 ) அடிப்படையிலும் ஒரு குற்றமாக இருக்கும்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாகும்.

13. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள அதிக வட்டி வசூலித்தலை தடைசெய்தல் அவசரச்சட்டம் (2012-ன் 53) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் செய்த ஏதேனும் செயலோ, மேற்கொண்ட ஏதேனும் நடவடிக்கையோ இந்தச்சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 24 December 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-12-24.pdf_2013_51_Part_1_Prohibition/. Archive identifier in.gazette.kerala_new.2013-12-24.pdf_2013_51_Part_1_Prohibition.