Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala Stamp (Amendment) Act, 2013 (Act No. 14 of 2013)—Tamil

Published 31 December 2013

Department
Law (Legislation-A) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-12-31.pdf_2013_52_Part_1_Stamp
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 52 dated 31st December, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2013 மார்ச் 5 எண் 18971/ச. இ. எ. 2/2010/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பால்குணா 14.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 மார்ச் 4ஆம் தேதி கேரள ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2013-ன் சட்டம் எண் 14

2013˛u ˙LW[ ÿj-ß-˚Wl-Tj-ßW (ß-⁄j-R) NhPm

1959-ன் கேரள முத்திரைப்பத்திர சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—1959-ன் கேரள முத்திரைப்பத்திர சட்டத்தை இதன் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

இந்தியக்குடியரசின் அறுபத்திநான்காவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும். 2

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தச்சட்டம் 2013-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.

( 2 ) இ து 2 0 1 0 ஏ ப் ர ல் 1ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்படவேண்டும்.

2. பிரிவு 28(எ)-யில் திருத்தம்.—1959-ன் கேரள முத்திரைப்பத்திர சட்டம் (1959-ன் 17) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படும்) பிரிவு 28(எ)-ன் துணைப்பிரிவு (4)-ல்,—

(எ) "முப்பது நாட்கள்" என்ற சொற்களுக்குப் பதிலாக "ஒரு வருடம்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

(பி) நிலவிலுள்ள ஏற்பாடுகளுக்குப் பதிலாக பின்வரும் ஏற்பாடுகள் சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"ஆனால் குறிப்பிட்ட காலயளவிற்குள் மேல்முறையீடு தாக்கல் செய்யாததற்கு மேல்முறையீட்டாளருக்கு போதிய காரணமுள்ளது என மாவட்ட ஆட்சியாளர் திருப்தி அடைந்தால் அவர் குறிப்பிட்ட ஒரு வருட காலயளவிற்கு பிறகும் மேல்முறையீடு தாக்கல் செய்வதற்குரிய அனுமதி அளிக்கலாம்".

3. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2013-ன் கேரள முத்திரைப்பத்திர (திருத்த) அவசரச்சட்டம் (2013-ன் 5) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்ததோ, செய்ததாகக் கருதப்படுவதோவான ஏதேனும் செயலோ, மேற்கொண்டதோ, மேற்கொண்டதாக கருதப்படுவதோவான ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின் ஏற்பாடுகளின்படி செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 31 December 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-12-31.pdf_2013_52_Part_1_Stamp/. Archive identifier in.gazette.kerala_new.2013-12-31.pdf_2013_52_Part_1_Stamp.