Kerala Gazette No. 52 dated 31st December, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எஃப்) துறை
அறிக்கை
2013 பிப்ரவரி 28 எண் 22813/ச. இ. எஃப். 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,
1934 பால்குணா 9.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 பிப்ரவரி 27ஆம் தேதி கேரள ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலாளர் (சட்டம்).
2013-ன் சட்டம் எண் 11
2013˛u ˙LW[ ˙PÙpv (ß-⁄j-R) NhPm
1976-ன் கேரள டோல்ஸ் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முன்னுரை.—1976-ன் கேரள டோல்ஸ் சட்டம் (1977-ன் 6) இதன் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;
21. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தச்சட்டம் 2013-ன் கேரள டோல்ஸ் (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இந்த சட்டத்தில், பிரிவு (2)-ன் உட்பிரிவு (ii) உடனடியாக அமலுக்கு வருவதாகும். 2011 நவம்பர் 28ஆம் தேதி இந்த சட்டத்தின் பிற ஏற்பாடுகள் அமலுக்கு வந்ததாக கருதப்படவேண்டும்.
2. பிரிவு 2-ல் திருத்தம்.—1976-ன் கேரள டோல்ஸ் சட்டம் (1977-ன் 6) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்).
(i) உட்பிரிவு (எ)-ல், "Ëறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "ஐËறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
(ii) உட்பிரிவு (சி)-ல், "இரு சக்கர வாகனம்" என்ற சொற்களுக்குப் பதிலாக "அல்லது மூன்று சக்கர வாகனம்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
3. இரத்தாதலும் காப்பும்.—(1) 2013-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் (2013-ன் 4) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் செயலோ, மேற்கொண்ட ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்பட வேண்டும்.