Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala Municipality (Amendment) Act, 2012 (Act No. 1 of 2013)—Tamil

Published 14 January 2014

Department
Law ( Legislation-C) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2014-01-14.pdf_2014_2_Part_1_Municipality
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 2 dated 14th January 2014.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

2013 ஜனவரி 5 எண் 21700/ச. இ. சி. 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பௌஷம் 15.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 ஜனவரி 4ஆம் தேதி கேரள ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.

2013-ன் சட்டம் எண் 1

2012˛u ˙LW[ ÿ≤-£l-TÙ-≠h• (ß-⁄j-R) Nh-Pm

1994-ன் கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—1994-ன் கேரள முனிசிப்பாலிட்டி சட்டம் இதற்குப் பின்வரும் தேவைகளுக்காக மேலும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்.

2

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தச்சட்டம் 2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த) சட்டம் என அழைக்கப்படும்.

(2) இந்தச்சட்டத்தின் பிரிவு 2, 2010 நவம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படவேண்டியதும் எஞ்சிய பிரிவுகள் 2011 நவம்பர் 25ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படவும் வேண்டும்.

2. பிரிவு 143எ-யில் திருத்தம்.—1994-ன் கேரள முனிசிப்பாலிட்டி சட்டத்திற்கு (1994-ன் 20) (இதற்கு பிறகு முதன்மைச்சட்டம் என்று அழைக்கப்படும்) பிரிவு 143-ல் துணைப்பிரிவு (1)-ல் "மூன்று மாதத்திற்குள்" என்ற வார்த்தைகளுக்கு பதிலாக "பதினைந்து மாதத்திற்குள்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.

3. பிரிவு 334-ற்குப் பிறகு புதிய பிரிவுகள் சேர்த்தல்.—முதன்மை சட்டத்திலுள்ள பிரிவு 334-ற்கு பிறகு பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

"334எ. கழிவுகளை உறைவிடத்தில் கைகாரியம் செய்தல்.—(1) இந்த சட்டத்தில் 326 முதல் 334 வரை உள்ள பிரிவுகளிலும் 335, 336 போன்ற பிரிவுகளிலும் எது எவ்வாறிருப்பினும் விற்பனை மையங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், கசாப்பு சாலைகள், கோழிக்கடைகள், மீன்கடைகள், திருமண மண்டபங்கள், அடுக்கு மாடிக்கட்டிடங்கள், உணவகங்கள், உணவுப்பொருட்கள் விற்பனை சேவை நிறுவனங்கள், 400 சதுர மீட்டருக்கு மேலாக தரை பரப்பளவுள்ள வீடுகள், முனிசிப்பாலிட்டி அறிக்கை செய்யலாமெனும் அத்த கைய பிற நிறுவனங்கள் என்பனவற்றின் உடமையாளர் அல்லது சட்டப்படி அவற்றின் நடத்துதலோ, கட்டுப்பாடோ உள்ள நபர்,—

(எ) அவ்வாறான கட்டிடங்களில், நிறுவனங்களில் அல்லது இடங்களில் இருந்து உருவாகும் கழிவுகள் நிர்ணயம் செய்யக்கூடிய முறையிலும் முனிசிப்பாலிட்டியின் துணைச்சட்டங்களில் கூறப்படுகின்ற கழிவுகளுடைய உறைவிடங்களிலேயே வைத்து இயற்கை மற்றும் செயற்கை கழிவுகளாக வேறுபடுத்தி பாதுகாக்க வேண்டியதும் இதற்காக போதுமான முறைகள் ஏற்படுத்த வேண்டியதும்;

(பி) உட்பிரிவு (எ)-யின் அடிப்படையில் வேறுபடுத்திய இயற்கை கழிவுகள் 1986-ன் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டங்களிலும் (1986-ன் 29வது மத்திய சட்டம்) அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களிலும் உள்ள நி ப ந் த ை ன க ளு க் கு உ ட் ப ட் டு ம் , நீ ர் , வ ா யு , ஒ லி ே ப ா ன் ற வ ற் றி ல் மாசு ஏற்படுத்தாத முறையில் அவ்வாறான கழிவுகளுடைய உறைவிடத்திலோ, செயலாளருடைய எழுத்து மூலமுள்ள அனுமதியுடன் அப்படிப்பட்ட நபருடைய உடமையிலான சமீப இடங்களிலுள்ள இடங்களில் வைத்தோ உகந்த முறையில் பதனிடப்பட்டு அகற்றப்பட வேண்டியதும் இந்தத்3 தேவைக்காக இட நெருக்கடி உள்ள பட்சத்தில் அப்படிப்பட்ட கழிவு பதனிடுதல் முனிசிப்பாலிட்டியின் மூலமோ அல்லது அரசு அங்கீகாரமுடைய கழிவு பத…ட்டு முகமைகள் மூலமோ உறுதி செய்வதற்காக கழிவினுடைய அளவு, தரம் போன்றவற்றிற்கு உகந்ததாக நிர்ணயம் செய்யக்கூடிய அப்படிப் பட்ட கட்டணம் அப்படிப்பட்ட முறையில் செலுத்தப்பட வேண்டியதும்;

(சி) உட்பிரிவு (எ)-யின்படி வேறுபடுத்திய இயற்கை மற்றும் செயற்கை கழிவுகள் கைகாரியம் செய்வதற்காக அப்படிப்பட்ட கழிவுகளுக்கு காரணமாகின்ற பொருட்கள் உற்பத்தி செய்வதோ, வினியோகம் செய்யப் படுவதோவான நிறுவனங்களுடனோ, அல்லது நபருடனோ அவ்வாறான பொருட்களுடன் சார்ந்த கழிவுகள் திரும்ப எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் ஏற்படவும் அல்லாத பட்சத்தில் இதற்காக நிர்ணயிக்கப்படக்கூடியதோ, அப்படியுள்ள முறையிலும் அப்படியுள்ள நிரக்கிலுமுள்ள கட்டணம் அவ்வாறான காலயளவில் முனிசிப்பாலிட்டியில் செலுத்தப்படவேண்டியதும்;

(டி) அத்தகைய கட்டிடங்களிலும் நிறுவனங்களிலும், இடங்களிலும் ஏற்படுகின்ற கழிவுநீர் உறைவிட இடத்திலேயே அறிவியல் முறையில் பதனிட வேண்டியதும் அவ்வாறு அறிவியல் முறையில் பதனிட முடியாத பட்சத்தில் கழிவுநீர் அறிவியல் முறையில் பதனிடும் அரசு அங்கீகாரம் பெற்ற முகமைகளு டன் ஒப்பந்தத்தில் ஏற்பட வேண்டியதும் கழிவுநீர், நீர் உறைவிடங்களிலோ, கால்வாய்களிலோ, பொது பாதையிலோ, பொது இடங்களிலோ, ஒழுக அனுமதிக்கக்கூடாததும் ஆகும்.

(2) துணைப்பிரிவு (1)-ல் கூறப்பட்டுள்ள கட்டிடங்கள், நிறுவனங்கள், இடங்கள் போன்றவற்றிற்கு மேற்குறிப்பிட்ட துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள படி கழிவு பதனிடுவதற்குரிய முறைகளை அவற்றின் உருவாக்கில் வேளையி லேயே உருவாக்க வேண்டியதும் அப்படியுள்ள முறைகள் இல்லாததற்கு செயல்பாட்டு அனுமதியோ, உரிமமோ, கட்டிட எண்ணோ முனிசிப்பாலிட்டி அளிக்கக்கூடாததும், தற்போதுள்ள அப்படிப்பட்ட கட்டிடங்கள், நிறுவனங் கள், இடங்கள் போன்றவற்றினுடைய சங்கதியில் அப்படிப்பட்ட முறைகள் ஏற்படுத்துவதற்கோ, முறையிலுள்ள குறைகளுக்கு தீர்வு காணவோ ஒரு வருடத்திற்கு மிகாத காலவரையறை செயலாளருக்கு அனுமதிக்கக் கூடியதும் போதுமான முறைகளை உருவாக்காத நிறுவனங்களுடைய உரிமமும் கட்டிட எண்ணும் செயல்பாட்டு அனுமதியும் சம்பந்தப்பட்ட நபருக்கு கூறப்பட வேண்டியதை கூற ஒரு வாய்ப்பு அளித்த பிறகு இரத்து செய்யப்படலாம்.

(3) துணைப்பிரிவு (1)-ல் ஏதேனும் நிபந்தனையை மீறும் எந்த ஒரு நபருக்கும், குற்றம் புரிந்த நிறுவனத்திற்கும் ஆறு மாதத்திற்கு குறையாமலும், ஒரு வருடம் வரையிலான காலத்திற்குரிய சிறை தண்டனையோ, பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாமலும், ஐம்பதினாயிரம் ரூபாய் வரையிலான பிழையோ இரண்டும் சேர்த்தோ அளித்து தண்டிக்கப்பட வேண்டும்.

4

(4) துணைப்பிரிவு (3)-ன் படி தண்டிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் துணைப்பிரிவின் (1)-ன் விதிமுறைகளின் மீறுதலை தொடருகின்ற ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் உள்ள தண்டத்தொகை விதித்து தண்டிக்கப்பட வேண்டும்.

"334பி. பொருட்கள் கொண்டு செல்வதற்கான பிளாஸ்டிக் பைகளுடையவும், காகித உறைகளினுடையவும், கட்டுப்பாடும், பிளாஸ்டிக் கழிவுகள் கைகாரியம் செய்தல்.—(1) 1986-ன் சுற்றுப்புற (பாதுகாப்பு) சட்டத்திலும் (1986-ன் 29ஆம் மத்திய சட்டம்) அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களுடை யவும், விதிமுறைகளுக்கு உட்பட்டு,—

(எ) பொருட்கள் கொண்டு செல்வதற்கான பல்வேறு பிளாஸ்டிக் பைகளுடையவும், பிளாஸ்டிக் உறைகளுடையவும் மிகவும் குறைந்தவிலை அறிக்கையின்படி முனிசிப்பாலிட்டி நிச்சயிக்கப்பட வேண்டியதும் அவ்வாறு நிச்சயம் செய்யப்பட்ட விலையைவிட குறைந்த விலைக்கோ, இலவசமாகவோ அவ்வாறான பைகளோ, உறைகளோ, எந்த ஒரு நிறுவனமோ, நபரோ விற்கவோ, அளிக்கவோ செய்யக்கூடாததும் அவ்வாறு எந்த ஒரு நிறுவனமோ, நபரோ செய்யவில்லை என்று உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முனிசிப்பாலிட்டி கைகொள்ள வேண்டியதும் ஆகும்.

(பி) பிரிவு 447-ன் படி உரிமத்திற்கு விண்ணப்பம் செய்கின்ற ஒரு விண்ணப்பதாரர் அவருடைய நிறுவனத்தின் வழியாக பிளாஸ்டிக் பைகளோ, பிளாஸ்டிக் கூடுகளோ விற்பனை செய்ய விருப்பம் உள்ளது என்றால் அப்படி யுள்ள விவரம் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டியதும் இதற்காக பொதுவான உரிம கட்டணம் தவிர நிர்ணயிக்கப்படுகின்றபடியுள்ள காலயள விற்கு விற்பனை செய்ய எண்ணுகின்ற பிளாஸ்டிக் பைகளுடையவும், பிளாஸ்டிக் கூடுகளுடையவும் ஏறக்குறைய அதே எண்¶க்கைக்கோ அல்லது அளவிற்கோ ஏற்றவாறு அப்படியுள்ள ஒரு குறிப்பிட்ட தொகை அதிக கட்டணமாக முனிசிப்பாலிட்டிக்கு வசூலிக்க கூடியதுமாகும்.

(சி) தேவையற்ற பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கூடுகளும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் பிற கழிவுப்பொருட்களில் இருந்து தரம் பிரித்து காக்க வேண்டியதும் அவை குழுமம் உருவாக்கக்கூடிய உபவிதிகளில் கூறப்படு கின்ற முறையில் கைகாரியம் செய்யப்பட வேண்டியதுமாகும்.

(2) துணைப்பிரிவு (1)-ல் உட்பிரிவு (எ)-யின் நிபந்தனைகளை மீறுகின்ற எந்த ஒரு நபருக்கும் எதிராக மேற்குறிப்பிட்ட மத்திய சட்டத்திலும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களிலும் உள்ள நிபந்தனைகளின்படி செயலாளருக்கு புகார் சமர்ப்பிக்க வேண்டும்.

5

334சி. கழிவு அகற்றல் நிதி உருவாக்கல்.—(1) முனிசிப்பாலிட்டி பிரதே சங்களில் உருவாகின்ற கழிவுகளை அகற்றுவதன் தேவைக்காக, முக்கியமாகவும் பிளாஸ்டிக் கழிவு பதனிடுவதற்காக முனிசிப்பாலிட்டி, "கழிவு அகற்றல் நிதி" என்ற பெயரில் ஒரு சிறப்பு நிதி சேமிக்க வேண்டியதும், நிதியில்,—

(எ) பிரிவு 334பி-யில் துணைப்பிரிவு (1)-ல் உட்பிரிவு (பி)-யின்படி வசூலிக்கப்படுகின்ற அதிக கட்டணம்.

(பி) கழிவு ஒழிப்புடன் சார்ந்த வழக்குகளில் வசூலிக்கப்படுகின்ற பிழைத்தொகை;

(சி) இந்த தேவைக்காக அரசாங்கம் அனுமதிப்பதோ அல்லது பிற முகமைகளோ/நபரோ/அளிப்பதோவான தொகைகள்;

போன்றவை வரவு வைக்கவேண்டியதும் அது நிர்ணயிக்கப்படும் வகையின்படி கைகாரியம் செய்யவேண்டியதும் ஆகும்.

5. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள முனிசிப்பாலிட்டி (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 43) (இதற்குப்பிறகு மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டம் என்று அழைக்கப்படும்) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத் தின்கீழ் செய்ததோ செய்ததாக கருதப்பட்டதோவான ஏதேனும் காரியமோ எடுத்ததோ எடுத்ததாக கருதப்பட்டதோவான ஏதேனும் நடவடிக்கையோ இந்தச் சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின்படி செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.

என்றாலும், 2012 ஜூலை 23ஆம் தேதி முதல் 2012 ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையுள்ள காலயளவில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின் நிபந்தனைகளின்படியுள்ள ஒரு குற்றம் செய்ததாக கருதப்படுகின்ற எந்த ஒரு நபரையும் குற்ற நிறுவனத்திற்கு ஆஜர்படுத்த வேண்டியதில்லை.

G. 25/2013/DTP.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 14 January 2014. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2014-01-14.pdf_2014_2_Part_1_Municipality/. Archive identifier in.gazette.kerala_new.2014-01-14.pdf_2014_2_Part_1_Municipality.