Kerala Gazette No. 2 dated 14th January, 2014.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஐ) துறை
அறிக்கை
2013 பிப்ரவரி 28 எண் 25020/ச. இ. ஐ. 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,
1934 பால்குணா 9.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 பிப்ரவரி 27ஆம் தேதி கேரள ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலர் (சட்டம்).
2013-ன் சட்டம் எண் 12
2013˛u Fß-Vm Ut-flm T•-Ls Sp-œ-Rp
(ß-⁄j-R) NhPm
1951-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முன்னுரை.—1951-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் சட்டம் இதன் பின்வரும் தேவைகளுக்காக மேலும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;
21. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தச்சட்டம் 2013-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.
2. 8C என்ற புதிய பிரிவு சேர்த்தல்.—1951-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் சட்டத்தின் (1951-ன் XIV) பிரிவு 8பி-க்குப் பிறகு பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"8சி. புத்தகங்கள் விலைக்கு வாங்குவது சம்பந்தப்பட்டு ஏற்படும் தொகை திருப்பி அளித்தல்.—இதற்காக உருவாக்கப்படலாமெனும் அத்தகைய விதிகளுக்கு உட்பட்டு, சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்கட்சித்தலைவர், முதன்மை கொறடா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டப்பேரவையின் ஒவ்வொரு நிதியாண்டும் புத்தகங்கள் வாங்குவது சம்பந்தப்பட்டு ஏற்பட்ட செலவு அதிக அளவு பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் திரும்ப பெறுவதற்கு உரிமை உடையதாக இருக்கும். "