Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

The Kerala Devaswom recruitment Board Ordinance (Ordinance No. 14 of 2014)—Tamil

Published 09 June 2015

Department
Law (Legislation-B) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2015-06-09.part_1_ordinance-no-14
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 23 dated 9th June, 2015.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

2014 ஜூலை 20 எண் 5436/ச. இ. பி. 1/2014/சட்டம். திருவனந்தபுரம்,

1189 கர்கிடகம் 4/ 1936 ஆஷாடம் 29.

2014 ஜூலை 20ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. ரம¶, சட்டத்துறை சிறப்புச்செயலர் பொறுப்பு.

2014-ன் அவசரச்சட்டம் எண் 14

2014˛u ˙LW[ A\-®-˚XV ˙Ro‹ YÙ¨V AYNWfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்திஐந்தாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தின் அறநிலைய வாரியங்களின் பாரம்பரிய ப¶யிடங்களும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் ப¶யிடங்களும் தவிர பிற பற்பல ப¶யிடங்களுக்கான நியமனங்களுக்காக ப¶யாளர் தேர்வு பட்டியலை தயாரிப்பதற்கு சுயாட்சியுடன் கூடிய ஒரு அறநிலைய தேர்வு வாரியம் உருவாக்கப்படுவதற்கும் அதனுடன் தொடர்புடையதோ அல்லது ஏற்றபடியானதோ ஆன காரியங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

2

முன்னுரை.—2014-ன் கேரள அறநிலையதேர்வு வாரிய அவசரச்சட்டம் (2014-ன் 10) 2014 மார்ச் 1ஆம் தேதி கேரள ஆளுநர் விளம்பரப்படுத்தி இருந்ததாலும்;

2014 ஜ˜ன் 9ஆம் தேதி ஆரம்பித்து 2014 ஜூலை 17ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப் பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;

மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலை நிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமல் இருப்பதாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது நிலவில் உள்ளது என கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

அத்தியாயம் I

தொடக்கம்

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2014-ன் கேரள அறநிலைய தேர்வு வாரிய அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2014 மார்ச் 1ஆம் தேதி நடைமுறையில் வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. விளக்கங்கள்.—இந்த அவசரச்சட்டத்தில், சூழ்நிலை வேறு வகையில் தேவைப்படாத பட்சத்தில்,—

(எ) "வாரியம்" எனில் பிரிவு 3-ன் படி உருவாக்கப்பட்ட கேரள அறநிலைய தேர்வு வாரியம் என பொருள்படும்;

(பி) "அறநிலைய வாரியம்" எனில் திருவிதாங்கூர் அறநிலைய வாரியம் அல்லது கொச்சி அறநிலைய வாரியம் அல்லது மலபார் அறநிலைய வாரியம் அல்லது குருவாயூர் அறநிலைய மேலாண்மைகுழு அல்லது கூடல் மா¶க்கம் அறநிலைய மேலாண்மைகுழு என பொருள்படும்.

(சி) "அரசு" எனில் கேரள அரசு என பொருள்படும்.

32 3

(டி) "பாரம்பரிய ப¶யிடங்கள்" எனில் இந்த அவசரச்சட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் சட்டங்களின்படி நிர்ணயிக்கப்படலாமெனும் அவ்வாறுள்ள ப¶யிடங்கள் என பொருள்படும்.

(இ) "உறுப்பினர்" எனில் வாரியத்தின் ஒரு உறுப்பினர் என பொருள்படுவதும் அதில் தலைவர் உட்படுவதுமாகும்.

(எப்) "நிர்ணயிக்கப்பட்ட" எனில் இந்த அவசரச்சட்டத்தின்கீழ் உரு வாக்கப்படும் சட்டங்களால் நிர்ணயிக்கப்பட்ட எனபொருள்படும்.

அத்தியாயம் II

வாரியத்தின் உருவாக்கம்

3. வாரியத்தின் உருவாக்கம்.—(1) அரசு, இந்த அவசரச்சட்டத்தின் தொடக்க தேதிக்குப் பிறகு முடிந்த அளவு விரைவில், இந்த அவசரச் சட்டத்தின்கீழ் அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவும் அரசாங்க அறிக்கை வழியாக "கேரள அறநிலைய தேர்வு வாரியம்" என்ற பெயரில் ஒரு வாரியம் உருவாக்கப்பட வேண்டியதாகும்.

(2) வாரியம் நிலையான வாரிசு உரிமையுடனும் பொதுமுத்திரையுடனும் ஒரு நபர் குழுமமாக மேற்குறிப்பிட்ட பெயரில் சுதந்திரமாகவும் சுயஆட்சி உரிமையோடு கூடிய ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டதும் முன்குறிப்பிட்ட பெயரில் வழக்கு தொடுக்கவும் வழக்கு தொடரப்படவும் செய்யவேண்டியதாகும்.

(3) வாரியத்தில் அரசு பெயர் பரிந்துரை செய்கின்ற இந்து மதத்தை சார்ந்தவரும் கடவுளிலும் கோயில் ஆசாரங்களிலும் நம்பிக்கையுள்ள ஐந்து உறுப்பினர்கள் இருக்கவேண்டியதாகும். அரசு செயலாளர் பதவிக்கு குறையாத நிலையில் இருப்பவரோ இருந்தவரோஆன ஒருவர் தலைவராக இருக்க வேண் டியதும் பிற உறுப்பினர்களில் ஒருவர் பெண்ணாகவும் ஒருவர் அட்டவணை ஜாதியினரோ அல்லது பழங்குடியினர் இனத்தில் உள்ள நபராகவோ இருக்க வேண்டும்;

(4) அரசு கூடுதல் செயலாளர் பதவிக்கு குறையாத நிலையில் இருக்கும் ஒருவரை வாரியத்தின் செயலராக அரசிற்கு நியமனம் செய்யலாம். அவர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவரும் வாரியம் அதிகாரம் அளித்துள்ள அத்தகைய அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியதும் பொறுப்புகள் செயல்படுத்த வேண்டியதுமாகும்.

(5) வாரியத்தின் தலைமையிடம் திருவனந்தபுரமாக இருக்க வேண்டும்.

4. உறுப்பினர்களுக்குரிய தகுதியின்மை.—(1) பெயர் பரிந்துரை செய்வதன் மூலம் வாரியத்தின் உறுப்பினராவதற்கு எந்த ஒரு நபரும், அவர்,—

(i) மனநிலை சரியில்லாதவரோ,

(ii) திவாலானவராக அறிக்கை செய்யப்பட்டவரோ;

33 4

(iii) ஒரு சுய அதிகாரப் பதவியுடையதோ ஒரு தேவச வாரியத்தினு டையதோ ஒரு அலுவலகப் பொறுப்பில் இருப்பவரோ அல்லது ஒரு ஊழியரோ;

(iv) வாரியம் உட்பட்டதும் அமலில் இருப்பதுமான ஏதேனும் உடன்படிக்கையில் ஆர்வமுள்ளவரோ வாரியத்திற்காக ஏதேனும் அலுவலில் ஏற்பட்டுள்ளவரோ;

(v) ஒழுக்கக்கேடு உட்பட்ட ஏதேனும் குற்றத்திற்கு ஒரு குற்றவியல் நீதி மன்றத்தால் தண்டனைக்கு உட்பட்ட நபரோ;

(vi) சட்டசபை அல்லது வேறு ஏதேனும் மாநில சட்டப்பேரவை யிலோ அல்லது உள்ர் சுய ஆட்சி தலத்தில் உறுப்பினராக இருப்பவரோ;

(vii) ஒரு நீதிமன்ற தீர்ப்பால் ஏதேனும் அலுவலகப் ப¶யிடத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நபரோ;

(viii) மது தயாரிப்பில் அல்லது விற்பனையில் ஏற்பட்டுள்ளவரோ அல்லது ஏற்பட்டிருந்தவரோ ஆன நபர்,

அவ்வாறுள்ளவர் தகுதியற்றவராவர்.

5. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அலுவலக காலவரம்பும் ப¶யின் நிபந்தனைகளும்.—(1) தலைவரும் பிற உறுப்பினர்களுக்கும் அவர்கள் அலுவல கப்பதவி பொறுப்பு ஏற்ற தேதி முதல் ஐந்து வருட காலம் முடிவடையவோ அல்லது அவருக்கு 65 வயது முடிவுறவோ, இவற்றில் எது முதலில் வருகிறதோ, அதுவரை அலுவலர் பதவியில் இடம் வகிக்க வேண்டியதாகும்.

(2) வாரியத்தின் தலைவரோ உறுப்பினருக்கோ எந்த நேரத்திலும் அரசுக்கு தன்கைப்பட எழுத்துமூலம் அறிக்கை விடுத்துக்கொண்டு அவர் தன் அலுவலகப் பதவியை ராஜினாமா செய்யலாம்.

(3) ஒரு தற்காலிக காலியிடத்திற்கு பெயர் பரிந்துரை செய்யப்படும் ஒரு உறுப்பினரின் ப¶க்காலவரம்பு எந்த உறுப்பினரின் காலியிடத்திற்கு அவரை நியமனம் செய்யப்பட்டதோ, அந்த நபர் அலுவலகப்பதவியிலிருக்கும் காலவரம்பு வரை மட்டுமே இருக்கும்.

(4) அரசிற்கு ஆணைமூலம், தலைவரையோ ஏதேனும் உறுப்பினரையோ, அவர்,—

(எ) ஒரு திவாலானவராக அறிக்கை செய்யப்பட்டாலோ; அல்லது (பி) அரசின் கருத்தில் ஒழுக்கக்கேடு உட்படுகின்ற குற்றத்திற்கு, குற்றம் உறுதி செய்யப்பட்டு சிறை தண்டணைக்கு விதிக்கப்படவோ;

34 5

(சி) மனநிலை சரியல்லாத நபராக இருக்கவும் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு நீதி மன்றம் அதை தீர்மானிக்கவும் செய்யவோ;

(டி) வேலை செய்வதற்கு மறுக்கவோ அல்லது வேலை செய்வதற்கு முடியாமல் போகவோ;

(இ) வாரியத்தின் அனுமதி பெறாமல் வாரியத்தின் தொடர்ந்துள்ள மூன்று கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ளாமல் இருக்கவோ;

(எஃப்) அவ்விடத்தில் தொடர்வது வாரியத்தின் விருப்பத்திற்கோ, பொது விருப்பத்திற்கோ தீங்கு விளைவிக்கும்படியாக அலுவலகப்பதவியை தவறான வழியில் பயன்படுத்தியதாக அரசு கருதவோ, செய்யும் தருவாயில் அலுவலகப் பதவியிடத்திலிருந்து விலக்கச் செய்யப்படலாம்;

எனில், இந்த துணைப்பிரிவின்கீழ் எந்த ஒரு நபருக்கும் அவருக்கு கூற வேண்டியதை கூற நியாயமாக ஒரு சந்தர்ப்பம் கொடுக்காமல் பதவி நீக்கம் செய்யக்கூடாது.

(5) துணைப்பிரிவு (2)-ன் கீழ் அல்லது வேற விதத்தில் உண்டான ஒரு காலியிடம், புதிய பெயர் பரிந்துரையின் வழியாக நிரப்ப வேண்டியதாகும்.

(6) தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ ஒரு முறை நியமனம் செய்யப்பட்டவருக்கு மறுநியமனம் செய்வதற்கான தகுதி இல்லை.

(7) தலைவரும் உறுப்பினர்களும் முழு நேர அலுவலர்களாக இருப்பதும் அவர்கள் நிர்ணயிக்கப்படும் ஊதியத்திற்கும் படிகளுக்கும் தகுதி உள்ளவர்களா கவும் இருப்பார்.

6. வாரியத்தின் அலுவலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனம்.—(1) வ ா ரி ய த் தி ன் மு ை ற ய ா ன நி ர் வ ா க த் தி ற் கு ே த ை வ ய ா ன , பி ன் வ ரு ம் அலுவலர்களையும் ஊழியர்களையும் அரசுக்கு நியமனம் செய்யலாம், அதாவது,—

(எ) சட்டத்துறையில் இணைச்செயலாளர் பதவியில் குறையாத ஒரு சட்ட அலுவலர்;

(பி) நிதித்துறை இணைச்செயலாளர் பதவியில் குறையாத ஒரு நிதித்துறை அலுவலர்;

(சி) ஒரு அவசரச்சட்டத்தின் படியுள்ள அதிகாரங்கள் உபயோகிப்பதற்கும் க ட ை ம க ள் நி ை ற ே வ ற் று வ த ற் கு ம் வ ா ரி ய த் ை த உ த வி ெ ச ய் வ த ற் கு தேவையென்று தோன்றுகின்ற நிர்ணயிக்கப்படும் படியான அவ்வாறுள்ள பிற அலுவலர்களும், ஊழியர்களும்;

35 6

(2) வாரியத்தின் அலுவலர்களும், ஊழியர்களும் இந்து மதத்திலுள்ளவர் களும் இறைவனில் கோயில் ஆசாரங்களிலும் நம்பிக்கையுள்ளவராக இருக்க வேண்டும்.

(3) வாரியத்தின் அலுவலர்களுக்கும் பிற ஊழியர்களும் அளிக்க வேண்டிய ஊதியமும், பிற படிகளும் சேவை தொடர்பான பிற நிபந்தனை களும் ஏற்பாடுகளும் நிர்ணயிக்கப்படும்படியாக இருக்கவேண்டும்.

(4) வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட தொடங்கும்பொழுது தற்காலிகமாக டெப்புடேஷன் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனம் நடத்தலாம்.

(5) அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனம் செய்யும்முறை ஊதியம், படி, கட்டுப்பாடு மற்றும் ப¶ நிபந்தனைகள் தொடர்பாக அரசாங்க ஊழியர்களுக்கு பாதகமான சட்டங்கள் வாரியத்தின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதகமாகும்.

7. காலியிடங்கள் முதலியன வாரியத்தின் நடவடிக்கைகளை செல்லுபடியா காததாக இராது.—(1) வாரியத்தின் எந்த ஒரு செய்கையும் அல்லது நடவடிக் கைகளும் வாரியத்தில் ஏதேனும் காலியிடமோ அதன் உருவாக்கத்தில் ஏதேனும் குறைபாடோ உள்ளது என்ற காரணத்தால் மட்டும் செல்லுபடியாகாததாக இராது.

8. வாரியத்தினுடைய கூட்டங்கள்.—(1) தலைவருக்கு உகந்ததென்று தோன் றுகின்ற அவ்வாறுள்ள இடத்திலும், நேரத்திலும், தேவைப்படும்போதெல்லாம் வாரியத்தினுடைய கூட்டம் சேர வேண்டியதாகும்.

(2) தலைவரின் சிபாரிசுமூலம் வாரியச் செயலர் வாரியத்தின் கூட்டம் கூடப்பட வேண்டியதாகும்.

(3) வாரியத்தினுடைய கூட்டங்களில் தலைவரும் அவர் இல்லாத வேளையில் வந்திருக்கும் உறுப்பினர்கள் அவர்களின் இடையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உறுப்பினர் தலைமையேற்று நடத்தவேண்டும்.

(4) ஒரு கூட்டம் அது நடத்துவதற்கு தேவையான நிர்ணயிக்கப்பட்ட எண்¶க்கை, தலைவர் உட்பட மூன்றாக இருக்கவேண்டும்.

(5) செயலர் ஒவ்வொரு கூட்டத்தினுடைய தொடர் நடவடிக்கைகளின் நிகழ்ச்சிப் பதிவை இந்த தேவைக்காக ஒரு புத்தகத்தில் பாதுகாக்க வேண்டிய தும் அதில் தலைவர் அல்லது தலைமையேற்று நடத்தும் நபரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லா உறுப்பினர்களும் கையொப்பம் வைக்க வேண்டியதாகும்.

36 7

அத்தியாயம் III

வாரியத்தின் கடமைகளும் அதிகாரங்களும்

9. வாரியத்தின் கடமைகள்.—(1) வாரியத்திற்கு பின்வரும் கடமைகள் இருக்க வேண்டியதாகும், அதாவது:—

(i) தேவச வாரியத்திலுள்ள ப¶யிடங்களுக்கு அலுவலர்களை நியம னம் செய்வது தொடர்பாக நடைமுறையிலிருக்கும் வேறு ஏதேனும் சட்டங்களி லோ, விதிகளிலோ சட்ட திட்டங்களிலோ உத்தரவுகளிலோ, தீர்ப்பிலோ, தீர்ப்பாணையிலோ என்னதான் அடங்கியிருந்தாலும், அறநிலைய வாரியங்களி லுள்ள பாரம்பரிய ப¶யிடங்கள் மற்றும் அரசு அங்கீகாரமுள்ள கல்வி நிலையங்களிலுள்ள ப¶யிடங்கள் தவிர பிற பலவிதமான ப¶யிடங்களுக்கு அலுவலர்களை நியமனம் செய்வதற்கு தேவையான தகுதி பட்டியல் இந்த அவசரச்சட்டத்திலும் விதிகளிலும் சட்டதிட்டங்களிலுள்ள நிபந்தனைகள்படி வாரியம் தயாரிக்க வேண்டியதாகும்;

(ii) அறநிலைய வாரியத்தின் கீழுள்ள பாரம்பரிய ப¶யிடங்கள் தவிர பலவித ப¶யிடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்காக, அது தொடர்பான அறநிலைய வாரியத்திலிருந்து அவ்வாறுள்ள தேர்வுக்கான அழைப்பு கிடைக்கும் நிலையில், நிர்ணயிக்கப்படும்படியான விண்ணப்பங்கள் அழைக்கப் படவும் விண்ணப்ப மனுதாரர்களின் எழுத்து தேர்வும் நேர்முகத்தேர்வு நடத்தவும் தகுதிப்பட்டியலை தயார் செய்யவும் வேண்டும்;

(iii) வினாத்தாள்கள் தயாரித்தல், தேர்வின் மேற்பார்வையும், மதிப்பீடு செய்தலும், நேர்முகத்தேர்வு நடத்துவதும், தகுதிப்பட்டியல் தயாரித்தல் என்பவை உட்பட தேர்வு தொடர்பாக தேவையான எல்லா ஒழுங்கு முறைகளும் செய்யவேண்டும்;

(iv) அரசு ஒப்படைத்தபடி தேவச வாரியத்துடன் தொடர்புள்ள வேறேதேனும் தேர்வு நடத்தவேண்டும்;

(v) சம்மந்தப்பட்ட தேவச வாரியங்களிலிருந்து தேர்வு தொடர்பான விளக்கவுரைகள் தேவைப்படவும் கைப்பற்றவும் செய்யவேண்டும்;

(2) தேர்வு சரியாக நடத்துவதற்கும் வினாத்தாள் தயாரிப்பதிலும் மதிப்பீடு செய்வதிலும் நேர்முகத்தேர்வு நடத்த வேண்டிய விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தயார் செய்வதிலும் தேவச வாரியத்திற்கு கிடைக்கப்பெறுவதான முடிவான தகுதிப்பட்டியல் தயார் செய்வதிலும் பிற தொடர்புள்ள காரியங்களிலும் இரகசியம் பாதுகாப்பதற்கு தேர்வுகளின் ஆவணங்களை பத்திரமாக பாதுகாப்பதும் வாரியத்தின் பொறுப்பாகும்.

37 8

(3) (i) விண்ணப்பங்கள் அளித்த விண்ணப்பத்தாரர்களுக்கு வாரியம் எழுத்து மூலமான தேர்வு நடத்தப்பட வேண்டியதும் தேவையெனில் நேர்முகத் தேர்வு நடத்தி அட்டவணைகள் தயார் செய்யவேண்டியதுமாகும்.

(ii) ஏதேனும் தேவச வாரியத்திற்காகவோ அல்லது அனைத்து தேவச வாரியங்களுக்காகவோ, மேற்கூறிய தேவைக்கு பொருத்தமான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டியதாகும்.

(iii) விண்ணப்பத்தாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கோ அல்லது ஒன்றுக்கு அதிகமான தேவச வாரியங்களுக்கோ விண்ணப்பிக்கும் பொருட்டு, அவ்வாறுள்ள விண்ணப்பத்தாரருக்கு ஒன்றுக்கு அதிகமான தேர்வுக்கு ஆஜராவதற்கான உரிமையை நிராகரிக்க கூடாது.

(4) தேவச வாரியத்தின் பல்வேறு பதவிகளுக்கு தகுதிப்பட்டியல் தயார் செய்வதற்கான விண்ணப்பங்களின் அழைப்பு விடுதல், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துவதற்கான அலுவலர்களின் அட்டவணை தயார் செய்தல், நேர்முகத்தேர்வு நடத்துவது, தகுதிப்பட்டியல் தயார் செய்தல் முதலிய தேர்வுடன் தொடர்புடைய வாரியம் செய்ய வேண்டிய நடவடிக்கை முறைகள் நிர்ணயிக்கப்படும்படியாக இருக்கவேண்டும்.

(5) வாரியத்தின் பொறுப்புகளுக்கு உகந்ததாகவும் தேர்வு நடத்துவதற்கு தேவைக்கு ஏற்ப தேவச வாரியங்களுக்கான பொது வழிமுறைகள் வாரியத்திற்கு வெளியிடலாம்.

(6) நிர்ணயிக்கப்படும் முறையில் தயாரித்த தகுதிப்பட்டியல் தேவச வாரியத்திற்கு அளிக்க வேண்டியது வாரியத்தின் கடமையாக இருக்கவேண்டும்..

அத்தியாயம் IV

வாரியத்தின் செலவு, வரவு செலவு திட்டம், கணக்குகள் மற்றும் த¶க்கை

10. வாரியத்தின் செலவுகள்.—வாரியத்தின் அவைத்தலைவரும் உறுப்பினர் களுக்கும், அலுவலர்களுக்கும் தரவேண்டிய ஊதியமும், படிகளும் ஓய்வூதியமும் உட்பட்டுள்ள வாரியத்தின் செலவுகள் மாநில தொகுநிதியிலிருந்து எடுக்க வேண்டியதாகும்.

11. வாரியத்திற்கான நிதி வினியோகம்.—அரசு, மாநில சட்டப்பேரவையில் இதற்காக, சட்டத்தின் அடிப்படையில், முறையாக நிதி வினியோகம் செய்த பிறகு இந்த அவசரச்சட்டத்தின் தேவைகளுக்காக வினியோகிப்பதற்காக தேவையென்று கருதப்படும் தொகை வாரியத்திற்கு தரப்பட வேண்டியதாகும்.

38 9

12. வரவு செலவு திட்டம்.—வாரியம் ஒவ்வொரு நிதியாண்டும் அடுத்த நிதியாண்டிற்கு எதிர்பார்க்கப்படும் வரவு செலவுகளை குறித்து ஒரு வரவு செலவு திட்டத்தை தயாரிக்க வேண்டியதும் அவ்வாறு தயாரித்த வரவு செலவு திட்டத்தின் அரசு தேவைப்படும் அளவு பிரதிகள், ஒவ்வொரு நிதியாண்டும் ஆரம்பித்த இரண்டு மாதத்திற்குள்ளாக அரசிற்கு சமர்பிக்கவேண்டியதாகும்.

13. கணக்குகளும், த¶க்கையும்.—(1) வாரியம், சரியான கணக்குகள் மற்றும் தகுந்த குறிப்புகளும் வைத்து காப்பாற்ற வேண்டியதாகும். மாநில கணக் காய்வு தலைவருடன் கலந்தாலோசித்து நிர்ணயிக்கப்படும் அவ்வாறுள்ள படிவத்தில் கணக்குகளின் ஒரு வருடாந்திர அறிக்கை தயார் செய்ய வேண்டியதாகும்.

(2) வாரியத்தின் கணக்குகள், மாநில கணக்காய்வு தலைவர் வருடந் தோறும் கணக்குத் த¶க்கை நடத்த வேண்டியதும் அவ்வாறுள்ள கணக்குத் த¶க்கை தொடர்புள்ள செலவு வாரியம் கணக்காய்வு தலைவருக்கு தரப்பட வேண்டியதாகும்.

(3) மாநில கணக்காய்வு தலைவருக்கும் இந்த அவசரச்சட்டத்தின் அடிப் படையில் வாரியத்தின் கணக்குகளின் கணக்குத் த¶க்கையுடன் தொடர்பு கொண்டு அவர் நியமனம் செய்யும் எந்த ஒரு நபருக்கும், சாதாரணமாக கணக்காய்வு தலைவருக்கு, அரசு கணக்குகள் கணக்குத் த¶க்கை செய்யும்போ துள்ள அதே அதிகாரங்களும் உரிமைகளும் உண்டாயிருப்பதும் முக்கியமாக குறிப்பேடுகள் கணக்குகளுடன் தொடர்புள்ள செலவுச் சீட்டுகள் பிற ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் ஆஜராக்க தேவைப்படுவதும் வாரியத்தின் எந்த ஒரு அலுவலகமும் பரிசோதனை செய்வதற்கான அதிகாரம் இருக்கும்.

(4) மாநில கணக்காய்வு தலைவரோ அவர் இதன் தேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வேறொரு நபரோ உறுதிப்படுத்தியதன் படியுள்ள வாரியத்தின் கணக்குகள் மேற்குறிப்பிட்டுள்ள கணக்குத் த¶க்கை உட்பட வாரியம் வருடந் தோறும் அரசுக்கு அனுப்ப வேண்டியதும் அரசு அது கிடைத்த தேதி முதல் ஆறுமாத காலத்திற்குள் சட்டப்பேரவைமுன் வைக்கப்பட வேண்டியதுமாகும்.

14. ஆண்டறிக்கை.—வாரியம் முன் நிதி ஆண்டிலுள்ள அதன் செயல்பாடு களின் முழு அறிக்கை தரும் ஆண்டறிக்கை ஒவ்வொரு நிதியாண்டிற்கும் நிர்ணயிக்கப்படும் படியுள்ள படிவத்திலும் நேரத்திலும் தயார் செய்ய வேண்டியதும் அதன் ஒரு நகல் அரசாங்கத்திற்கு நேரடியாக அனுப்பபட வேண்டியதுமாகும்.

10

அத்தியாயம் V

பலவகை

15. வாரியத்தின் அவைத்தலைவரும், உறுப்பினர்களும், ஊழியர்களும், பொதுப்ப¶யாளராக இருக்கவேண்டும்.—வாரிய அவைத்தலைவரும், உறுப்பினர்களும், ஊழியர்களும் 1860-ன் இந்திய தண்டனைச் சட்டவிதித் தொகுப்பின் (1860-ன் 45-ம் மத்தியச்சட்டம்) பிரிவு 21-ன் பொருள் வரம்பிற்குள் வருகின்ற பொது ப¶யாளராக கருதப்பட வேண்டும்.

16. இடர்பாடுகளை நீக்கம் செய்வதற்கான அதிகாரம்.—(1) இந்த அவசரச் சட்டத்தின் முறைகள் நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் உண்டாகும் பொருட்டு அரசிற்கு, அரசிதழில் வெளியிட்ட உத்தரவின்படி அவ்வாறுள்ள கஷ்டம் நீக்குவதற்கு தேவையென்றோ சரியென்றோ அதற்கு தோன்றுவதும் இந்த அவசரச்சட்டத்தின் முறைகளுக்கு முரண்பாடில்லாதது மான ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டியதுமாகும்.

எனில், அவ்வாறுள்ள எந்த ஒரு ஆணையும் இந்த அவசரச்சட்டத்தின் ஆரம்ப நாள் முதல் இரண்டு வருட காலத்திற்கு பிறகு அமுல்படுத்தப் படக்கூடாததுமாகும்.

(2) இந்த பிரிவின்கீழ் அமல்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆணையும் அது அமுல்படுத்தியபிறகு முடிந்த அளவு விரைவில் சட்டப்பேரவைமுன் சமர்ப்பிக்க வேண்டியதாகும்.

17. ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான அதிகாரம்.—வாரியத்திற்கு, அரசின் முன் ஒப்புதலுடன் தேர்வின் சரியான நடத்துதலுக்கு தேவையான சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டியதுமாகும்.

18. விதிகள் உருவாக்குவதற்கான அதிகாரம்.—(1) அரசுக்கு, அரசிதழ் மூலம் இந்த அவசரச்சட்டத்தின் தேவைகள் செயல்படுத்துவதற்காக, முற்கால பலனுடனோ அல்லது பிற்கால பலனுடனோ விதிகள் உருவாக்கப்பட வேண்டியதாகும்.

(2) அவ்வாறுள்ள விதிகளில், முக்கியமாக மேற்குறிப்பிட்ட அதிகாரங் களின் பொதுத்தன்மைக்கு கேடு விளைவிக்காமல் கீழ் காணும் அனைத்தையும் அல்லது ஏதேனும் காரியத்திற்காக நிபந்தனை செய்யப்படவேண்டியதாகும், அதாவது,—

(எ) பிரிவு 2-ன் உட்பிரிவு (டி)-ன் படியுள்ள பாரம்பரிய பதவிகள்;

(பி) பிரிவு 5-ன் துணைப்பிரிவு 7-ன்படி அவைத்தலைவரும், உறுப்பிர்களும் பிரிவு 6-ன் துணைப்பிரிவு (1)-ல் உட்பிரிவு (சி)-ம் துணைப் பிரிவு (3)-ன்படி அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் தரவேண்டிய ஊதியமும் படிகளும் அவர்களின் சேவை குறித்த மற்ற ஏற்பாடுகளும்;

40 11

(சி) பிரிவு 9-ன் துணைப்பிரிவு 4-ன்படி தேர்வு சரியான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கை;

(டி) பிரிவு 13-ன் உட்பிரிவு 1-ன்படி தயார் செய்ய வேண்டிய கணக்குகளின் ஆண்டு அறிக்கையின் படிவமும் நேரமும்;

(இ) பிரிவு 14-ன் உட்பிரிவு 1-ன்படி தயார் செய்ய வேண்டிய கணக்குகளில் ஆண்டு அறிக்கையின் படிவம்;

(எஃப்) நிர்ணயிக்கப்பட வேண்டியதோ, நிர்ணயிக்கவோ செய்யும் வேறு சங்கதிகள்;

(3) இந்த அவசரச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டமும் அது உருவாக்கிய பிறகு, விரைவில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அதன்முன், ஒரு கூட்டத்தொடரிலோ அடுத்தடுத்துள்ள இரண்டு கூட்டத் தொடர்களிலோ உட்கொள்ளும், மொத்தம் பதினான்கு நாட்களுக்கு வைக்க வேண்டியதும், அவ்வாறு அது எந்த கூட்டத்தொடரில் வைக்கப்பட்டதோ அந்த கூட்டத்தொடரோ அல்லது அடுத்து வரும் கூட்டத்தொடரோ முடிவடையும் முன் சட்டசபை சட்டத்தின் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தவோ இல்லையெனில் அந்த சட்டம் உருவாக்க வேண்டியதில்லை என்று தீர்மானம் செய்யவோ அவ்வாறு செய்யும் பட்சத்தில், அந்த சட்டத்திற்கு அதன்பிறகு, அதது சங்கதிபோல, அவ்வாறு மாற்றம் செய்த உருவத்தில் மட்டுமே செயல்படவோ அல்லது எவ்விதத்திலும் செயல்படாமல் இருக்கவோ செய்ய என்றிருந்தாலும் அவ்வாறுள்ள ஏதேனும் திருத்தம் செய்யவோ இரத்து செய்யவோ அந்த சட்டத்தின்படி முன்பு செய்த ஏதேனும் சங்கதியின் செல்லுபடிக்கு கேடு விளைவிக்காத நிலையிலிருக்க வேண்டியதாகும்.

19. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2014-ன் கேரள அறநிலைய தேர்வு வாரிய அவசரச்சட்டம் (2014-ன் 10) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) இவ்வாறு இரத்து செய்யப்பட்ட போதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி செய்த ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டத்தின் செய்ததாகவோ மேற்கொண்ட தாகவோ கருதப்படவேண்டும்.

Ãலா தீக்μத்,

ஆளுநர்.

41
Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 09 June 2015. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2015-06-09.part_1_ordinance-no-14/. Archive identifier in.gazette.kerala_new.2015-06-09.part_1_ordinance-no-14.