Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

The Kerala Land Tax (Amendment) Ordinance, 2015 (Ordinance No. 16 of 2015)—Tamil

Published 07 February 2017

Department
Law (Legislation-B) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2017-02-07.part_1_Ordinance-No-16
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 6 dated 7th February, 2017.

PART I

Section iii

˙LW[ A-W—

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

2015 அக்டோபர் 3 எண் 20053/ச. இ. பி. 2/2015/சட்டம். திருவனந்தபுரம்,

1191 கன்னி 17/ 1937 அஸ்வினம் 11.

2015 அக்டோபர் 3-ம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

எஸ். குமாரி சுதா, சிறப்புச்செயலர் (சட்டம்).

2015-ன் அவசரச்சட்டம் எண் 16

2015˛u ˙LW[ ®X-Y¨ (ß-⁄j-R) AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1961-ன் கேரள நிலவரி சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குரிய அவசரச்சட்டம்.

முகவுரை.—1961-ன் கேரள நிலவரி சட்டம் பின்வரும் தேவைகளுக்காக மேலும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

2

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்தஅவசரச்சட்டம் 2015-ன் கேரள நிலவரி (திருத்த) அவசரச்சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) 2014 செப்டம்பர் 30-ம் தேதி இது அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. 1961-ன் 13-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 1961-ன் கேரள நிலவரி சட்டத்தில் (1961-ன் 13) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 6-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 6-ல் துணைப் பிரிவு (1)-க்கு பதிலாக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

பிரிவு 7-ன் துணைப்பிரிவு (2)-ன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரிவு 5 - கீ ழ் சு ம த் த ப் ப ட் ட அ டி ப் ப ை ட ஆண் டு வ ரி வி கி த ம் பி ன் வ ரு ம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை

i. பஞ்சாயத்து பகுதிகளுக்கு

8 ஆர் (Are) வரை .. ஆர்-க்கு (Are) ரூபாய் 1

2 ஹெக்டர் வரை .. ஆர்-க்கு (Are) ரூபாய் 2

2 ஹெக்டருக்கு மேல் .. இரண்டு ஹெக்டருக்கு அதிகமான

நிலத்திற்கு, ரூபாய் 400 மற்றும் ஆர்-க்கு

(Are) ரூபாய் 5-ம் சேர்த்து16 3 ii. நகர பஞ்சாயத்து மற்றும் நகராட்சி மன்ற பகுதிகளுக்கு

3 ஆர் (Are) வரை .. ஆர்-க்கு (Are) ரூபாய் 2

2 ஹெக்டர் வரை .. ஆர்-க்கு (Are) ரூபாய் 4

2 ஹெக்டருக்கு மேல் .. இரண்டு ஹெக்டருக்கு அதிகமான

நிலத்திற்கு, ரூபாய் 800 மற்றும் ஆர்-க்கு (Are) ரூபாய் 10-ம் சேர்த்து

iii. மாநகராட்சி பகுதிகளுக்கு

2 ஆர் (Are) வரை .. ஆர்-க்கு (Are) ரூபாய் 4

2 ஹெக்டர் வரை .. ஆர்-க்கு (Are) ரூபாய் 8

2 ஹெக்டருக்கு மேல் .. இரண்டு ஹெக்டருக்கு அதிகமான நிலத்திற் கு, ரூபாய் 1,6 00 மற்று ம் ஆர்-க்கு (Are) ரூபாய் 20-ம் சேர்த்து குறிப்பு:—2014 செப்டம்பர் 30-ம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ செலுத்தப் பட்ட அதிக அளவிலான வரி, மேலும் செலுத்த வேண்டிய நிலுவையில் சரி செய்யப்படும்.

17
Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 07 February 2017. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2017-02-07.part_1_Ordinance-No-16/. Archive identifier in.gazette.kerala_new.2017-02-07.part_1_Ordinance-No-16.