Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments.

Published 07 March 2018

Type
Ordinary
Gazette no.
10
Part
Part III
Notifications
INDUSTRIES DEPARTMENT - Notification
Section
Section 1a-T Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-03-07.Ordinary_10_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
© தமிழ்நாடு அரசு 2018 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 1.60 காசு.விலை: ரூ. 1.60 காசு.விலை: ரூ. 1.60 காசு.விலை: ரூ. 1.60 காசு.விலை: ரூ. 1.60 காசு.
தமிழ்நாடு அரசிதழ் தமிழ்நாடு அரசிதழ் தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 10] சென்னை, புதன்கிழமை, மார்ச் 7, 2018

மாசி 23, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழில் துறைதொழில் துறைதொழில் துறைதொழில் துறைதொழில் துறை

அறிவிக்கைஅறிவிக்கைஅறிவிக்கைஅறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 9, தொழில் (MMC-1)த் துறை, 8 பிப்ரவரி 2018.]

1957-ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் (மத்திய சட்டம் 67/1957) 15ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (1-A) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1959-ஆம் ஆண்டு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.

திருத்தம்திருத்தம்திருத்தம்திருத்தம்திருத்தம்

மேற்சொன்ன விதிகளின், 43ஆம் விதியில், (7) துணை விதிக்குப் பின்னர், பின்வரும் துணை விதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

''(8) கனிமம் வெட்டியெடுக்கும் திட்டம், திருத்தப்பட்ட கனிமம் வெட்டியெடுக்கும் திட்டம் மற்றும் கனிமம் வெட்டியெடுக்கும் திட்டப்பணி ஆகியவை தமிழ்நாடு அரசால் அதிகாரமளிக்கப்பட்ட மண்ணியல் மற்றும் சுரங்கத்துறையின் கூடுதல் இயக்குநரிடம் அல்லது மண்ணியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநரிடம் ஒப்புதலுக்காக அளிக்கப்பட வேண்டும்.''

கே. ஞானகே. ஞானகே. ஞானகே. ஞானகே. ஞான தேசிகன்,தேசிகன்,தேசிகன்,தேசிகன்,தேசிகன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(பமிறாங்சய்)

ந.ந.ந.ந.ந. அருள்அருள்அருள்அருள்அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்அறிவிக்கைகள்அறிவிக்கைகள்அறிவிக்கைகள்அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண் 13, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 31 ஜனவரி 2018.] 1970-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்தலும் நீக்கலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) 35-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1975-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்தலும் நீக்கலும்) விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 35-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு இதனால் வெளியிடப்படுகிறது.

DTP—10-III-1(a)(T-Sup)

[1]2

திருத்தங்கள்திருத்தங்கள்திருத்தங்கள்திருத்தங்கள்திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(a) விதி 20-இன் துணை விதி (4) இல் ''ரூபாய் ஐந்து'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக ''ரூபாய் ஐநூறு'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(b) விதி 24-இன் துணை விதி (1)இல் ''ரூ. 100/- (ரூபாய் நூறு மட்டும்)'' என்ற சொற்றொடருக்கு பதிலாக ''ரூ. 500/- (ரூபாய் ஐநூறு மட்டும்)'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(c) விதி 26-இன் துணை விதிகள்(1) மற்றும் (2)-க்குப்பதிலாக கீழ்க்காணும் துணை விதிகள் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அவையாவன;-

''(1) பிரிவு 7-இன் கீழ் நிறுவனம் ஒன்றின் பதிவு சான்றிதழைப்பெறுவதற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் கீழே குறிப்பிடப்பட்டவாறாக இருக்க வேண்டும் அதாவது:-

யாதொரு நாளில், ஒப்பந்தத்தின் பேரில் பணியமர்த்தப்படுவதற்கு கருதப்பட்ட பணியாட்களின் எண்ணிக்கை,- (a) 50 க்கு மேற்படாமல் இருப்பின்; ரூ. 2,500

(b) 50 க்கு மேற்பட்டு ஆனால் 100க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 5,000

(c) 100 க்கு மேற்பட்டு ஆனால் 200க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 10,000

(d) 200 க்கு அதிகமாக மேற்பட்டிருப்பின் ரூ. 20,000

என்று குறிப்பிடப்பிட வேண்டும்."

(2) பிரிவு 12-இன் கீழ் உரிமம் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் கீழே குறிப்பிடப்பட்டவாறாக இருக்க வேண்டும்

அதாவது :-

யாதொரு நாளில், ஒப்பந்ததாரால் பணியமர்த்தப்பட்ட பணியாட்களின் எண்ணிக்கை,-

(a) 50 க்கு மேற்படாமல் இருப்பின்; ரூ. 2,500

(b) 50 க்கு மேற்பட்டு ஆனால் 100க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 5,000

(c) 100 க்கு மேற்பட்டு ஆனால் 200க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 10,000

(d) 200 க்கு மேற்பட்டிருப்பின் ரூ. 20,000

என்று குறிப்பிடப்பிட வேண்டும்."

(d) விதி 27-இன் துணை விதி (1) இல், ''அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 31ஆம் நாள் வரையில்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக ''அந்த ஆண்டிலிருந்து தொடங்கி அடுத்தடுத்த இரண்டு ஆங்கில ஆண்டுகளின் கால அளவிற்கு'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(e) விதி 28-இன் துணை விதி (3) இல், ''இருபத்தைந்து ரூபாய்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக ''ஐநூறு ரூபாய்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(f) விதி 30-இல் ''ரூ. 50/-(ரூபாய் ஐம்பது மட்டும்) என்ற சொற்றொடருக்குப் பதிலாக ''ரூ.500/- (''ரூபாய் ஐநூறு மட்டும்)'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(g) விதி 32-இன், துணை விதிகள் (6) மற்றும் (7)க்குப்பதிலாக, பின்வரும் துணை விதிகள் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்; அவையாவன;

"(6) துணைவிதி (3)-இன் கீழ் பதிவு சான்றிதழைப் பெறுவதற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் கீழே குறிப்பிடப்பட்டவாறாக இருக்க வேண்டும் அதாவது :-

யாதொரு நாளில், ஒப்பந்தத்தின் பேரில் பணியமர்த்தப்படுவதற்கு கருதப்பட்ட பணியாட்களின் எண்ணிக்கை,- (a) 50 க்கு மேற்படாமல் இருப்பின் ரூ. 500

(b) 50 க்கு மேற்பட்டு ஆனால் 100க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 1,000(c) 100 க்கு மேற்பட்டு ஆனால் 200க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 2,000 (d) 200 க்கு மேற்பட்டிருப்பின் ரூ. 4,000 என்று குறிப்பிடப்பட வேண்டும்."3 "(7) துணைவிதி (3)-இன் கீழ், உரிமம் பெறுவதற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் கீழே குறிப்பிடப்பட்டவாறாக இருக்க வேண்டும். அதாவது:-

யாதொரு நாளில், ஒப்பந்ததாரரால் பணியமர்த்தப்படும் பணியாட்களின் எண்ணிக்கை,-

(a) 50க்கு மேற்படாமல் இருப்பின்; ரூ. 500

(b) 50க்கு மேற்பட்டு ஆனால் 100க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 1,000

(c) 100க்கு மேற்பட்டு ஆனால் 200க்கு மிகாமல் இருப்பின்; ரூ. 2,000

(d) 200க்கு மேற்பட்டிருப்பின் ரூ. 4,000

என்று குறிப்பிடப்பட வேண்டும்."

மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசுமுதன்மைச்செயலாளர்.

(தமிழாக்கம்)

ந.ந.ந.ந.ந. அருள்அருள்அருள்அருள்அருள் , இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

அறிவிக்கைஅறிவிக்கைஅறிவிக்கைஅறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 15, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 31 ஜனவரி 2018.] 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950-ஆம் ஆண்டு, தொழிற்சாலைகள் விதிகளில், பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 115-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

வரைவுத் திருத்தங்கள்வரைவுத் திருத்தங்கள்வரைவுத் திருத்தங்கள்வரைவுத் திருத்தங்கள்வரைவுத் திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1). 3ஆம் விதியின், துணை விதி (2)-இல், ''படிவம் எண் 1-இல் மூன்று படிகளில்'', என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக படிவம் எண் 1-இல்'', என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(2). 4ஆம் விதியில்,

(a) துணை விதி (2)-இல், ''படிவம் எண் 2-இல் மூன்று படிகளில்'', என்ற சொற்றொடருக்குப் பதிலாக ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக படிவம் எண் 2-இல்'', என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(b) துணை விதி (3)-இல், ''வட்டார தொழிற்சாலைகளின் துணைத் தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடருக்குப் பின்னர், ''அல்லது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக, இணைய வழி தொகை செலுத்துதல் மூலம்'' என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும்;

(c) துணை விதி (6A)-இல், ''தொடர்ச்சியான ஐந்து ஆங்கில ஆண்டுகள்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக "தொடர்ச்சியான பத்து ஆங்கில ஆண்டுகள்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(3). 6ஆம் விதியின், துணை விதி (2)-இல் ''வட்டார தொழிற்சாலைகளின் துணைத் தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடருக்குப் பின்னர், ''அல்லது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக, இணைய வழி தொகை செலுத்துதல் மூலம்'' என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;

(4). 7ஆம் விதியில்,

(a) துணை விதி (2)-இல் ''படிவம் எண் 2-இல் மூன்று படிகளில்'', என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக படிவம் எண் 2-இல்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(b) (3)ஆம் துணை விதியின், இரண்டாவது வரம்பு நிபந்தனையில், ''தொடர்ச்சியான ஐந்து ஆங்கில ஆண்டுகள்'', என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "தொடர்ச்சியான பத்து ஆங்கில ஆண்டுகள்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

4

(5). 11ஆம் விதியின், துணை விதி (1)-இல், ''வட்டார தொழிற்சாலைகளின் துணைத் தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடருக்குப் பின்னர், ''அல்லது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக, இணைய வழி தொகை செலுத்துதல் மூலம் என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;

(6). 56-B ''ஆம் விதியில்,

(a) துணை விதி (1)-இல், ''தொழிற்சாலைகளின் துணைத் தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடருக்குப் பின்னர், ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக'', என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;

(b) துணை விதி (3)-இல், ''தொழிற்சாலைகளின் துணைத் தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடருக்குத் பின்னர், ''அல்லது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக, இணைய வழி தொகை செலுத்துதல் மூலம்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(7). 100 ஆம் விதியில், "ஒவ்வொரு தொழிற்சாலையின் மேலாளரும், கீழ்காணும் கணக்கு விவர அறிக்கைகளை, ஆய்வாளரிடம் அளிப்பார். அவையாவன:-", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''ஒவ்வொரு தொழிற்சாலையின் மேலாளரும், கீழ்காணும் கணக்கு விவர அறிக்கைகளை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக ஆய்வாளரிடம் அளிப்பார். அவையாவன:-'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(8). படிவம் எண் 22-இல்,

(a) 11ஆம் பகுதியின், துணைப் பகுதிகள் (i) மற்றும் (ii)-இல் ''மாதமொன்றுக்கு ரூ.18,000/-க்கு மேற்படாமல்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''1936-ஆம் ஆண்டு, ஊதியங்கள் வழங்கல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 4/1936) 1ஆம் பிரிவைச் சேர்ந்த (6) உட்பிரிவின் கீழ், மத்திய அரசால் குறிப்பிடப்பட்ட மாதாந்திர ஊதியங்களுக்கு மேற்படாமல்'' என்ற சொற்றொடர் முறையே அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(b) 13ஆம் பகுதிக்குப் பின்னர், பின்வரும் பகுதிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவையாவன:-

''14. மாநிலகளுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்:

ஒப்பந்ததாரர்களின் பெயர் மற்றும் முகவரி

ஒப்பந்தக் கால அளவு

பணியின் தன்மை

ஒவ்வொரு ஒப்பந்ததாரராலும் பணியமர்த்தப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பெருமளவு எண்ணிக்கை பணிபுரிந்த நாட்களின் எண்ணிக்கை

பணிபுரிந்த மனித உழைப்பு நாட்களின் எண்ணிக்கை

15. தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர நிலைமை வழங்குதல்

தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை

டிசம்பர் மாதம் 31ஆம் நாளுடன் முடிவடைந்த ஆங்கில ஆண்டில் 480 நாட்கள் பணிக்காலத்தை நிறைவு செய்தும் பணி நிரந்தரம் செய்யப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை

டிசம்பர் மாதம் 31ஆம் நாளுடன் முடிவடைந்த ஆங்கில ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை

ஜனவரி 1 அன்றுள்ளவாறாக, பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கை

காலதாமத்திற்கான காரணங்கள்

மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசுமுதன்மைச்செயலாளர்.

(தமிழாக்கம்)

ந.ந.ந.ந.ந. அருள்அருள்அருள்அருள்அருள் , இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 March 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-03-07.Ordinary_10_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-03-07.Ordinary_10_Part-III_Section-1a-T-Sup.