[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. [விலை : ரூ. 1.601.60 காசுகாசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 10] சென்னை, புதன்கிழமை, மார்ச் 7, 2018 மாசி 23, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 12, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 19 ஜனவரி 2018.] தமிழ்நாடு 1971—ஆம் ஆண்டு நகர மற்றும் நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழே விவரித்துள்ளவாறு சியாம பிரசாத் முகர்ஜி ஊரக நகர்ப்புற திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தின் வேலாயுதம்பாளையம் தொகுப்பு மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் வாணியங்குடி தொகுப்பு ஆகியவற்றை ஊரகநகர்ப்புற தொகுப்புகளாக குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
''அட்டவணை''''அட்டவணை''
வட்டத்தின் பெயர் வருவாய் கிராமத்தின் பெயர் மற்றும் எண் மாவட்டத்தின் பெயர்
ஊரக நகர்புற தொகுதியின் பெயர்
(1) (2)
(3)
(4)
திருப்பூர் வேலாயுதம்பாளையம் அவினாசி 23. புதுப்பாளையம்
24. கனியாம்பூண்டி
20. தெக்கலூர்
21. செம்பியநல்லூர்
22. வேலாயுதம்பாளையம்
17. நம்பியம்பாளையம்
சிவகங்கை வாணியங்குடி சிவகங்கை 64. அரசாணி
(அரசாணி முத்துப்பட்டி ஊராட்சி)
37. சோழபுரம்
36. இடையமேலூர்
54. காஞ்சிரங்கால்
55. கொட்டகுடி கீழ்பாத்தி DTP-II-2-(10) (T Sup)—12 2. இந்த வரைவுத் திருத்தங்கள், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பவர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரமன்றம் அல்லது நிறுவனத்திடமிருந்து இது தொடர்பாக வரப்பெறுகிற யாதொரு மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று இதன் மூலம் அறிவிப்பு அளிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எவையேனும் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாக அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
எஸ்எஸ். கிருஷ்ணன், கிருஷ்ணன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர்,
தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (2D) எண் 82, தொழிலாளர்-வேலைவாய்ப்பு (J1)த் துறை, 7 டிசம்பர், 2017.]
1948—ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு, அதனால் பாதிக்கக்கூடிய நபர்கள் அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர். இது தொடர்பாக எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின். அவற்றை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948—ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1958) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 5-2-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-ல் 158 மற்றும் 159ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II((2)/LE/106/2014—ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செய்கிற தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலில் வேலைவாய்ப்பு சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகை மாதாந்திர குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்கள் தொடர் எண்
(ரூ. காசு)
(1)
(2)
(3)
மண்டலம்மண்டலம் A மண்டலம்மண்டலம் B மண்டலம்மண்டலம் C மண்டலம்மண்டலம் D (1) மேலாளர்
6725.00 6626.00 6540.00 6447.00 (2) இயந்திர கம்மியர்/காசாளர்
6261.00 6176.00 6098.00 6012.00 விற்பனையாளர்
(3) இலகு ரக சரக்கு வாகன ஓட்டுநர் 6318.00 5984.00 5905.00 5827.00 (4) கிடங்குக் காப்பாளர் 5706.00 5634.00 5563.00 5491.00 (5) விநியோகிப்பவர்/உதவியாள் 5335.00 5271.00 5206.00 5143.003 விளக்கங்கள்: 1. அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்படவேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010—ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ.31.90 (முப்பத்தொரு ரூபாய் தொண்ணூறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) விலைப் புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) மண்டலங்களின் வகைபாடு பின்வருமாறு:
மண்டலம் - A - அனைத்து மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்.
மண்டலம் - B - சிறப்பு நிலை நகராட்சிகள் தவிர ஏனைய அனைத்து நகராட்சிகள்.
மண்டலம் - C - அனைத்துப் பேரூராட்சிகள், பாளையங்கள் மற்றும் நகரியங்கள்.
மண்டலம் - D - மண்டலங்கள் A, B மற்றும் C மண்டலங்கள் நீங்கலாக ஏனைய பகுதிகள்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்கவேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.