Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

L.A. Bill No. 15 of 2018 - A Bill to amend the Tamil Nadu Private Clinical Establishments (Regulation) Act, 1997. (TAMIL)

Published 20 March 2018

Type
Extraordinary
Gazette no.
102
Part
Part IV
Extraordinary Type
Legislative Assembly of the State of Tamil Nadu
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2018-03-20.Extraordinary_102_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2018

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 102A] சென்னை, செவ்வாய்க்கிழமை, மார்ச் 20, 2018 பங்குனி 6, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2018-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 15/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 15

1997ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்)

சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவு. சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக்குடியரசின், அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச்சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவமனை

தொடக்கம்.

நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(தமிழ்நாடு சட்டம்

நெடுந்தலைப்பில் 2. (இதன் பின்பு இதில் முதன்மைச்சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)

4/1997)

திருத்தம். 1997ஆம் ஆண்டில் தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிறுவனங்கள்

(முறைப்படுத்துதல்) சட்டத்தில் நெடுந்தலைப்பில் "தனியார் மருத்துவமனை

நிறுவனங்கள்" என்று வருகின்ற சொற்றொடருக்கு பதிலாக "மருத்துவமனை

நிறுவனங்கள்" என்னும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

1-ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச்சட்டத்தில் 1ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவிற்காக பின்வரும் உட்பிரிவினை மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும் ;-

"(1) இந்தச்சட்டம், 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவமனை

நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் என வழங்கப் பெறும்".

(2) (3)ஆம் உட்பிரிவிற்காக பின்வரும் உட்பிரிவு மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

102A-Ex-IV-1-T—1

12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு "(3) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.".

"தனியார்

4. முதன்மைச்சட்டத்தில் "தனியார் மருத்துவமனை நிறுவனம்" மற்றும்

"தனியார் மருத்துவமனை நிறுவனங்கள்" என்ற சொற்றொடர் எங்கெல்லாம்

வருகின்றதோ அங்கெல்லாம் "மருத்துவமனை நிறுவனம்" மற்றும் "மருத்துவமனை

நிறுவனங்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

மருத்துவமனை நிறுவனம்" மற்றும் "தனியார் மருத்துவமனை நிறுவனங்கள்" என்ற சொற்றொடரை மாற்றாக அமைத்தல்.

2-ஆம் பிரிவிற்கான

5. முதன்மைச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) கூறு (a) கூறு (aa) என திருப்பி எழுதப்படவேண்டும் மற்றும் அவ்வாறு

திருப்பி எழுதப்பட்ட கூறு (aa) க்கு முன்பு பின்வரும் கூறு புகுத்தப்பட வேண்டும்

அதாவது:-

(a) "மருத்துவ நிறுவனம்'' என்பது மருத்துவ முறைகளினால்

ஏற்பளிக்கப்பட்ட எதையும் மற்றும் -

(i) பல் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனை, மருந்தகம்,

கலந்தாய்வு அறை, மருத்துவமனை, பல்வகை நோய்க்கான மருத்துவமனை அல்லது

பண்டுவமனை உள்ளடங்கலான ஒரு பொது மருத்துவமனையை;

(ii) ஒரு நிலையம் அல்லது மையம், அது எந்தப் பெயரால்

அழைக்கப்பட்டாலும் அங்கு உள்நோயாளியாகவோ அல்லது வெளி நோயாளியாகவோ

அறுவைச் சிகிச்சை நடைமுறைகளுடனோ அல்லது இல்லாமலோ ஒன்று உடல்

நோயாலோ அல்லது மனநோயாலோ பாதிக்கப்பட்டுள்ள, காயமடைந்துள்ள அல்லது

உடல் சிகிச்சைக்காக பலகீனமான நபர் அனுமதிக்கப்பட்டுள்ளதையும்;

(iii) கூட்டுறுமமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பினும் அல்லது

இல்லாவிடினும், நபர் அல்லது நபர்களின் குழுமம் எதனாலும் மாநில அரசால் அல்லது

மைய அரசால் அல்லது மாநில மற்றும் மத்திய அரசின் துறை எதனாலும் அல்லது

பொது அல்லது தனியார் பொறுப்புக் கட்டளை ஒன்றால் அல்லது அரசிற்கு அல்லது ஓர்

உள்ளாட்சி அதிகார அமைப்பிற்கு சொந்தமாக இருப்பினும் அல்லது இல்லாவிடினும்

ஒரு நிறுமத்தால் நிறுவப்பட்ட அல்லது பராமரிக்கப்பட்டு வரும் வேண்டிய மருத்துவ

வசதியினை ஆய்வக அல்லது பிற மருத்துவக் கருவிகளின் உதவியுடன் கதிரியக்க

வகையிலும் சரி, உயிரியில் சார்ந்த வகையிலும் சரி அல்லது பிறநோய் குறியினை

மருத்துவ சோதனையினை கொண்டுள்ள மருத்துவப் பணிகளை செய்துவரும்

ஒரு மருத்துவ நிறுவனம் என்று பொருள்படுவதோடு அவற்றை உள்ளடக்கும்.

ஆனால் ஆயுதப்படையினரின் கட்டுப்பாட்டிலோ அல்லது மேலாண்மையில் உள்ள

பண்டுவமனை நிறுவனங்களை உள்ளடக்காது.

விளக்கம்: இந்தக் கூறுகளின் நோக்கத்திற்காக "ஆயுதப் படைகள்"

என்பது 1950 ஆம் ஆண்டு ஆயுதப்படைச் சட்டம், 1950 ஆம் ஆண்டு வானூர்தி

படைச் சட்டம் மற்றும் 1957 ஆம் ஆண்டு கடற்படைச் சட்டம் ஆகியவற்றின்படி

(மையச்சட்டம் 46/1950) (மையச்சட்டம் 45/1950) (மையச்சட்டம் 62/1957) அமைத்துருவாக்கப்பட்ட படைகள் என்று பொருள்படும்.

(2) (aa) எனும் கூறுக்குப் பின்னர் பின்வரும் கூறு புகுத்தப்படுதல்

வேண்டும் அதாவது:-

''(aaa) "மாவட்ட குழு'' என்பது 2-D எனும் பிரிவின்படி

அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;".

3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(3) (c) எனும் கூறுக்காக, பின்வரும் கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

''(c) ஏற்பளிக்கப்பட்ட மருத்துவமுறை'' என்பது ஆங்கில மருத்துவம்,

யோகா, இயற்கை மருத்துவம், ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தமருத்துவம்

அல்லது யுனானி மருத்துவ முறை அல்லது மைய அரசால் அல்லது மாநில அரசால்

ஏற்பளிக்கப்பட்ட பிற மருத்துவ முறை எதுவும் என்று பொருள்படும்;

(d) "மாநில அளவிலான அறிவுரைக்குழு'' என்பது,

2-A எனும் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;".

2-A, 2-B, 2-C, 6. முதன்மைச் சட்டத்தின் 2-ஆம் பிரிவிற்கு பின்னர் பின் வரும் பிரிவுகள்

புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

2-D, 2-E மற்றும் 2-F எனும் புதிய கூறுகளை புகுத்துதல்.

''2''2-A. -A. மாநில அளவிலான அறிவுரைக்குழுவினை அமைத்தல்

மாநில அளவிலான அறிவுரைக்குழுவினை அமைத்தல்.- (1)

மாநில அரசு, அறிவிக்கையினால், மாநில அளவில் அறிவுரைக்குழு என்று

அழைக்கப்படலாகும் குழு ஒன்றை அமைத்தல் வேண்டும்.

(2) மாநில அளவிலான அறிவுரைக் குழு பின்வரும் உறுப்பினர்களைக்

கொண்டிருத்தல் வேண்டும். அதாவது:-

(a) மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் பதவி வழி

தலைவராக இருத்தல் வேண்டும் ;

(b) மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி வழியில் அல்லது அவரால்

நியமிக்கப்பட்டவர்;

(c) இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் பதவி

வழியில் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்;

(d) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் பதவி

வழியில் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்;

(e) ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி,

சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் ஓராண்டிற்கு சுழற்சியின் அடிப்படையில்

தொடர்புடைய மாநில மருத்துவ மன்றத்தால் பெயர் குறித்து அமர்த்தப்பட்ட

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும்

ஹோமியோபதி மருத்துவ முறைகளிலிருந்து உறுப்பினர் ஒருவர்;

(f) இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்

ஒருவர்;

(g) தமிழ்நாடு மருத்துவ மன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட

உறுப்பினர் ஒருவர்;

(h) தமிழ்நாடு பல் மருத்துவ மன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட

உறுப்பினர் ஒருவர்; மற்றும்

(i) தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் மூலம்

நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்;

(3) நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூன்றாண்டு கால அளவிற்கு

பதவி வகித்தல் வேண்டும். ஆனால் மேலுமான மூன்றாண்டு கால அளவிற்கு மறு

நியமனத்திற்கு தகுதியுடையவர் ஆவார்.

102A-Ex-IV-1-T-—1a4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2-B. மாநில அளவிலான அறிவுரைக் குழுவின் கூட்டங்கள்

மாநில அளவிலான அறிவுரைக் குழுவின் கூட்டங்கள்.- (1)

மாநில அளவிலான அறிவுரைக்குழு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலம்

மற்றும் அத்தகைய இடத்தில் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை கூடுதல் வேண்டும்.

(2) தலைவர் அல்லது அவருடைய வருகையின்மையில் வருகை

தந்துள்ள உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எவரும் கூட்டத்திற்கு,

தலைமை தாங்குதல் வேண்டும்.

(3) கூட்டம் நடத்த தேவைப்படும் குறைந்தளவு உறுப்பினர்களின்

எண்ணிக்கை மற்றும் அந்தக் கூட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை

வகுத்துரைக்கலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

2-C. மாநில அளவிலான அறிவுரைக் குழுவின் செயற்பணிகள்

மாநில அளவிலான அறிவுரைக் குழுவின் செயற்பணிகள்.- மாநில

அளவிலான அறிவுரைக் குழு மருத்துவ நிறுவனங்களை முறைப்படுத்துதல்

தொடர்பான பொருட்பாடுகளின் பேரில் அரசுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்

மற்றும் அப்போதைக்கப்போது அரசால் அதற்கு குறித்தளிக்கப்படலாகும் அத்தகைய

பிற செயற்பணிகளை நிறைவேற்றுதல் வேண்டும்.

2-D. மாவட்ட குழுவினை அமைத்துருவாக்குதல்.

மாவட்ட குழுவினை அமைத்துருவாக்குதல்.- (1) அரசானது,

ஒவ்வொரு மாவட்டத்திற்காக மாவட்டகுழு என அழைக்கப்படுகின்ற ஒரு குழுவினை

அறிவிக்கையினால் அமைத்தல் வேண்டும்.

(2) மாவட்டக் குழுவானது பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக

இருத்தல் வேண்டும், அதாவது:-

(a) மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் துணை இயக்குநர்

பதவி வழி தலைவராக இருப்பார்;

(b) மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர்;

(c) மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அல்லது அவரால்

நியமிக்கப்பட்டவர்;

(d) தமிழ்நாடு மருத்துவ மன்றத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்

ஒருவர்;

(e) இந்திய மருத்துவச் சங்கத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்

ஒருவர்;

(f) ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி,

சித்தமருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் ஓராண்டிற்கு சுழற்சியின் அடிப்படையில்

தொடர்புடைய மாநில மருத்துவ மன்றத்தால் பெயர் குறித்து அமர்த்தப்பட்ட

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும்

ஹோமியோபதி மருத்துவ முறைகளிலிருந்து உறுப்பினர் ஒருவர்; மற்றும்

(g) தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தால்

நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்.

(3) நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூன்று ஆண்டு காலத்திற்கு

பதவி வகித்தல் வேண்டும் ஆனால் மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு மறு

நியமனத்திற்கு தகுதி உடையவர் ஆவார்.

5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

2-E. மாவட்ட குழுவின் கூட்டங்கள்மாவட்ட குழுவின் கூட்டங்கள்.- (1) மாவட்ட குழுவானது குறைந்தது

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது வகுத்துரைக்கலாகிற அத்தகைய நேரத்திலும்,

அத்தகைய இடத்திலும் கூடுதல் வேண்டும்.

(2) தலைவர் அல்லது அவருடைய வருகையின்மையில் வருகை

தந்துள்ள உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எவரும் கூட்டத்திற்கு

தலைமை தாங்குதல் வேண்டும்.

(3) கூட்டம் நடத்த தேவைப்படும் குறைந்தளவு உறுப்பினர்களின்

எண்ணிக்கை மற்றும் அந்தக் கூட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை

வகுத்துரைக்கலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

2-F. மாவட்ட குழுவின் செயற்பணிகள்மாவட்ட குழுவின் செயற்பணிகள்.- மாவட்ட குழுவானது மருத்துவ

நிறுவனங்களை பதிவு செய்தல் விசயங்களில் மாவட்ட தகுதிறம் வாய்ந்த அதிகார

அமைப்பிற்கு உதவி செய்தலும், ஆலோசனை வழங்குதலும் வேண்டும் மற்றும்

வகுத்துரைக்கலாகும் அதனுடன் தொடர்புடைய அல்லது அவற்றிற்க்கு சார்வுறுவான

அத்தகைய பிற கடமைகளையும் ஆற்றுதல் வேண்டும்.".

3ஆம் பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவிற்காக பின்வரும்

திருத்தம்.

உட்பிரிவினை மாற்றாக அமைத்தல் வேண்டும், அதாவது:-

"(1) நபர் எவரும் இந்தச் சட்டத்தின்படி அத்தகைய மருத்துவ

நிறுவனங்களை உரியவாறு பதிவு செய்தாலன்றி மருத்துவ நிறுவனங்கள் எதையும்

நடத்துதல் ஆகாது:

வரம்புரைவரம்புரை:- 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள்

திருத்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று (இதில் இதன் பின்பு அறிவிக்கை

செய்யப்பட்ட தேதி என்று சுட்டப்பட்டுள்ளவாறு) இருக்கின்ற மருத்துவ நிறுவனம்

ஒவ்வொன்றும் அறிவிக்கை செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள்

பதிவிற்காக விண்ணப்பித்தல் வேண்டும் மற்றும் அறிவிக்கை செய்யப்பட்ட

தேதிக்குப் பின்பு நிறுவப்பட்டுள்ள மருத்துவ நிறுவனமானது அதனுடைய தொடக்கத்

தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவிற்காக விண்ணப்பித்தல் வேண்டும்:

மேலும் வரம்புரை:மேலும் வரம்புரை: அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்று உள்ள

மருத்துவ நிறுவனம் ஒவ்வொன்றும் அத்தகைய மருத்துவ நிறுவனமானது

விண்ணப்பித்தாலன்றி மற்றும் அவ்வாறு பதிவு செய்திருந்தால் அல்லது அத்தகைய

விண்ணப்பத்தை முடிவு செய்யும்வரை இதில் எது முந்தியதோ அதுவரை,

அறிவிக்கை செய்துள்ள தேதியிலிருந்து பன்னிரெண்டு மாதங்கள் கழிவுறுவதன்

பேரில் அதனுடைய மருத்துவ தொழிலை நிறுத்தி வைத்தல் வேண்டும்.";

5ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவை (1-A)

திருத்தம்.

உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறு

எண்ணிடப்பட்டுள்ள (1-A) உட்பிரிவிற்கு முன்பு, பின்வரும் உட்பிரிவைப் புகுத்துதல்

வேண்டும், அதாவது:-

"(1) மருத்துவ நிறுவன அமைப்பின் பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர்

மொத்தத்தில் மூன்று முறை இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனின்படி

தண்டிக்கப்பட்டிருக்கிறவிடத்து தகுதிறம் வாய்ந்த அதிகார அமைப்பானது, பதிவுச்

சான்றிதழை ரத்து செய்தல் வேண்டும் மற்றும் மருத்துவ நிறுவனத்தை புதிதாக பதிவு

செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு அனுமதித்தல் கூடாது.".

6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

9. முதன்மைச் சட்டத்தின் 5ஆம் பிரிவிற்குப் பின்பு பின்வரும் பிரிவுகளைப்

புகுத்துதல் வேண்டும், அதாவது:-

5-A, 5-B 5-C எனும் புதிய பிரிவுகளைப் புகுத்துதல்

"5-A. மருத்துவ நிறுவன அமைப்புகளால் வசதிகள் மற்றும் சேவைகளை மருத்துவ நிறுவன அமைப்புகளால் வசதிகள் மற்றும் சேவைகளை

பேணுதல்.பேணுதல்.- (1) மருத்துவ நிறுவன அமைப்பு ஒவ்வொன்றும் வகுத்துரைக்கலாகிற

குறைந்த அளவு தர நிலைகளை உடைய வசதிகளையும் சேவைகளையும் பேணி

வருதல் வேண்டும்.

(2) அரசானது, அனைத்து ஏற்பளிக்கப்பட்ட மருத்துவ முறைகளின்படி

பல்வேறு வகையான மருத்துவ நிறுவன அமைப்புகள் தொடர்பாக குறைந்த அளவு

தர நிலையிலான வசதிகளுக்கும் சேவைகளுக்கும் வகுத்துரைத்தல் வேண்டும்.

5-B. மருத்துவ நிறுவனங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.

மருத்துவ நிறுவனங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்.- மருத்துவ

நிறுவனம் ஒவ்வொன்றும் பின்வரும் கடமைகளையும் பொறுப்புகளையும் பின்பற்றுதல்

வேண்டும், அதாவது:-

(a) பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களே மருத்துவ நிறுவனங்களில்

வருகை புரியும்போது, சாலை விபத்துக்கள், விபத்து அல்லது தற்கொலை

தீக்காயங்கள் அல்லது விசம் அருந்துதல் அல்லது குற்றத் தாக்குதல் மற்றும்

அதனைப் போன்ற அனைத்து சட்டம் சார்ந்த மருத்துவ நேர்வுகளில் அல்லது தீவிர

சட்டம் சார்ந்த மருத்துவ நேர்வுகளாக சாத்தியமுள்ள நேர்வுகளில். மருத்துவ முதல்

அவசர சிகிச்சை அளித்தல் வேண்டும் மற்றும் பிற உயிர்காப்பு அல்லது நிலையான

அவசர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்;

(b) அவ்வப்பொழுது அரசால் குறித்துரைக்கலாகிற அத்தகைய

முறையில் அனைத்து தேசிய மற்றும் மாநில சுகாதார திட்டங்களை நிறைவேற்றுவதில்

பங்கு கொள்ளுதல் மற்றும் அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள அதிகார

அமைப்புகளுக்கு காலந்தோறும் அறிக்கைகளை அளித்தல்;

(c) அந்தந்த மருத்துவ முறைக்காக வகுத்துரைக்கலாகிற அத்தகைய

படிவத்திலும் அத்தகைய முறையிலும் மருத்துவ பதிவேடுகளை வைத்து வருதல்;

(d) தொற்றும் நோய்களை பரவாமல் தடுப்பதற்குத் தேவையான

நடவடிக்கையை எடுத்தல் மற்றும் அவ்வவ்பொழுது அரசு பணிக்கின்றவாறு தொற்றா

நோய்களை கட்டுப்படுத்தல்; மற்றும்

(e) வகுத்துரைக்கலாகிறவாறான அத்தகைய பிற கடமைகள் மற்றும்

பொறுப்புகள்.

5-C. ஆண்டுதோறும் மருத்துவ நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுதல்ஆண்டுதோறும் மருத்துவ நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுதல்.-

தகுதிறம் வாய்ந்த அதிகார அமைப்பானது வகுத்துரைக்கலாகிறவாறான அத்தகைய

படிவத்தில் மருத்துவ நிறுவனங்களின் பதிவேட்டை பராமரித்து வருதல் வேண்டும்

மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் போது, பதிவு செய்துள்ள

மருத்துவ நிறுவனங்களின் பட்டியலை வகுத்துரைக்கலாகிறவாறு அவைகளுக்குத்

தொடர்புடைய விவரங்களுடன் சேர்த்து தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல்

வேண்டும்.".

8ஆம் பிரிவினை

10. 8ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

மாற்றாக அமைத்தல்.

7 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

"8. பணத்தண்டங்கள்8. பணத்தண்டங்கள்.- (1) 3ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவினை

மீறுகின்ற நபர் எவரையும் ஐந்தாயிரத்திற்கு குறையாத பணத்தண்டம் விதித்து

தண்டிக்கப்படுதல் வேண்டும் ஆனால் அந்தப் பணத் தண்டமானது ஐம்பதாயிரம்

ரூபாய் வரை நீட்டிக்கலாம்.

(2) இந்தச் சட்டத்தின் பிற வகை முறை எதையும் அல்லது அதன்படி

இயற்றப்பட்ட விதி எதையும் அல்லது பதிவின் நிபந்தனை எதையும் மீறுகின்ற

நபர் எவரையும் ஐந்தாயிரத்துக்கு குறையாத பணத்தண்டம் விதித்து தண்டித்தல்

வேண்டும் ஆனால் அந்த பணத்தண்டமானது ஐம்பதாயிரம் ரூபாய் வரை

நீட்டிக்கலாம்:

வரம்புரை: இந்த உட்பிரிவின் மற்றும் (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக

நீதிமன்றமானது, தீர்ப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள போதிய அல்லது சிறப்பு

காரணங்கள் எதற்காகவும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறைவான பணத்தண்டத்தை

விதிக்கலாம்.

(3) இந்தச் சட்டத்தின்படி அத்தகைய பணிப்புரைகளை பிறப்பிப்பதற்கு

அதிகாரமுடைய நபர் அல்லது அதிகார அமைப்பு எதனாலும் சட்டப்படி வழங்கப்பட்ட

பணிப்புரை எதற்கும் இசைய மறுக்கின்ற அல்லது இந்தச் சட்டத்தின்படி

செயல்படுவதற்கு வேண்டுறுத்தப்பட்ட அல்லது அதிகாரம் கொண்டுள்ள அத்தகைய

நபர் அல்லது அதிகார அமைப்பானது செயற்பணி எதையும் ஆற்றுகையில்

தடுக்கின்ற நபர் எவரையும் முப்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் பணத்தண்டம்

விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

(4) இந்தச் சட்டத்தால் அல்லது இந்தச் சட்டத்தின்படி தகவல் எதையும்

அளிப்பதற்கு வேண்டப்பட்ட அல்லது அத்தகைய தகவலை வேண்டுமென்றே

தர மறுக்கின்ற அல்லது தவறான தகவல் என்று தெரிந்திருந்தும் அல்லது அந்தத்

தகவல் உண்மையானது என்று நம்புவதற்குரியது அல்ல என்று தான் தெரிந்தும்

தகவல் அளிக்கின்ற நபர் எவரையும் முப்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும்

பணத்தண்டம் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

நீக்கறவு.

11. 1997 ஏப்ரல் 11 தேதியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் சிறப்பிதழின்

பகுதி II இல் பிரிவு 2 இல் வெளியிடப்பட்டுள்ள சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின்

அறிவிக்கை எண்.198 ஐ, 1997 ஏப்ரல் 14ஆம் தேதியன்று மற்றும் தேதியிலிருந்து

நீக்கறவு செய்யப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை

தமிழ்நாடு அரசு, மைய அரசு மற்றும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்வதன் மூலமாக முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தை இயற்றியது. எனினும் இதற்கான விதிகள் இயற்றப்படாததால் இந்தச் சட்டத்தின் காப்புரைகள் செயற்பாட்டிற்கு வரவில்லை.

2. இதற்கிடையில் மைய அரசு 2010 ஆம் ஆண்டு மருத்துவ நிறுவனங்கள் (பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தை (மையச்சட்ட எண்.23/2010) இயற்றி, வரைவு மாதிரி மாநில விதிகளை பரிசீலிக்கும் பொருட்டும், செயல்படுத்தும் பொருட்டும் இந்த அரசுக்கு அனுப்பிவைத்துள்ளது.

3. தமிழ்நாடு அரசு, ஏற்கெனவே 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தை (தமிழ்நாடு சட்ட எண்.4/1997) இயற்றி இருப்பதால், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவையில் 2012-2013 ஆம் ஆண்டிற்கான மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை எண். 19ஐ தாக்கல் செய்து, 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்திற்கு உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்காக, மேற்கூறப்பட்ட மாநிலச்சட்டத்தையும் மையச் சட்டத்தையும் ஆராய்ந்து பரிந்துரை வழங்க, வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இக்குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார்.

4. இதன்படி, வல்லுநர்குழு, 3.12.2012 அன்று அமைக்கப்பட்டு, இந்த குழு அதன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. இக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்வதற்கு மற்றும் முறைப்படுத்துவதற்கு வழிவகை செய்யும் பொருட்டும், அம்மருத்துவ நிறுவனங்களால் குறைந்த அளவு தரத்திலான வசதிகள் மற்றும் சேவைகள் அளிக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் பொருட்டு, 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.

5. இந்தச் சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

மரு. சி. விஜயபாஸ்கர்,மரு. சி. விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்.

9 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

சட்டம் இயற்று அதிகார ஒப்படைவு பற்றியக் குறிப்பு சட்டம் இயற்று அதிகார ஒப்படைவு பற்றியக் குறிப்பு

இச்சட்ட முன் வடிவில் கூறு 1 (2)ல், 2-A, 2-B, 2-C, 2-D, 2-E மற்றும் 2-F ஆகிய புதிய பிரிவுகள் கூறு 6ஆல் மற்றும் 5-A, 5-B மற்றும் 5-C ஆகிய புதிய பிரிவுகள் கூறு 9ஆல் அவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு அறிவிக்கையை அல்லது பணிப்புரை பிறப்பிப்பதற்கோ அல்லது விதிகளைச் செய்வதற்கோ அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவை அல்ல.

மரு. சி. விஜயபாஸ்கர்,மரு. சி. விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 20 March 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-03-20.Extraordinary_102_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2018-03-20.Extraordinary_102_Part-IV_Section-1.