Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 18 April 2018

Type
Ordinary
Gazette no.
16
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notifications
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-04-18.Ordinary_16_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2018

[விலை : ரூ. 3.20 காசு[விலை : ரூ. 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 16] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 18, 2018 சித்திரை 5, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்அறிவிக்கைகள்

[அரசாணை (2D) எண் 80 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 7 டிசம்பர் 2017.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடைந்த நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 5-2-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு-2-இல், 154 முதல் 155 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/102/2014-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டு மாநிலத்தில் பொதுமக்களுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செய்கிற தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

[1]

DTP-II-2-(16) (T Sup)—12

விவர அட்டவணைவிவர அட்டவணை

பொதுமக்களுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பணியில் வேலைவவாய்ப்பு பொதுமக்களுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பணியில் வேலைவவாய்ப்பு

தொடர்

பணியாளர்களின் வகைகள் திங்களொன்றுக்கான

எண்

குறைந்தளவு அடிப்படை ஊதிய

வீதங்கள்

(ரூ. காசு.)

(1)

(2) 3)

1. இயந்திரக் கம்மியர்

9377.00

2. சுற்றுலாச் சீருந்து இயக்குபவர்களிடம்

பணிபுரிபவர்கள் உள்ளிட்ட ஓட்டுநர்கள்

3. உதவி இயந்திரக் கம்மியர்

9118.00

4. பொருத்துநர்

5. மின்கம்மியர்

6. ஆய்வாளர்

9118.00

7. எழுத்தர்

9118.00

8. நடத்துநர்

9. உதவி பொருத்துநர்

8907.00

10. சுத்தியல் அடிப்பவர்

11. பசையிடுபவர்

8642.00

12. ஏவலாள்

13. துப்புரவுப் பணியாளர்

8525.00

14. காவலாள்

15. பெருக்குபவர்

16. கொல்லர் / கருமார்

17. தச்சர் 18. அடைப்பு வேலை செய்பவர் (Tinker)

9118.00

19. கடைசல் பணியாளர் 20. உள் உறையிடுபவர் (Liner)

21. வர்ணம் பூசுபவர் (தெளிப்பு முறை)

22. பற்றவைப்பவர்

9118.00

23. தையற் பணியாளர்

24. வார்ப்படப் பணியாளர்

25. வர்ணம் பூசுபவர் (பெயிண்டர்)

9011.00

26. டயர் பணியாளர்

8907.00

27. மின்கலப் பணியாளர்

28. வல்கனைசர் மற்றும் அதுபோன்ற

பணியாளர்கள்

29. தள மேற்பார்வை:தள மேற்பார்வை:

(i)(i) வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்துதல் (ii) வாகனங்கள் மற்றும் பணி முற்றத்தைச்

சுத்தம் செய்தல்

9377.00

(iii)(iii) வ ா க ன ங் க ை ள க் க ழு வு த ல் ம ற் று ம்

மசகெண்ணெயிடுதல்

(iv)(iv) பழுது சொல்லப்பட்ட வாகனங்களை பயணச்

சோதனையிடல்

30. தட்டச்சுப் பணிக்கான அரசு தொழிற்பயிற்சித்

9377.00

தேர்வில் கீழ்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற

தட்டச்சர்3 தொடர்

பணியாளர்களின் வகைகள் திங்களொன்றுக்கான

எண்

குறைந்தளவு அடிப்படை ஊதிய

வீதங்கள்

(ரூ. காசு.)

(1)

(2) 3)

31. தட்டச்சுப் பணிக்கான அரசு தொழிற்பயிற்சித்

தேர்வில் கீழ்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற

தட்டச்சர்

32. பண்டகசாலைக் காப்பாளர்

9243.00

33. ஷராப் அல்லது காசாளர்

34. பணிமனை தொடக்குநர் (டிப்போ ஸ்டார்ட்டர்)

35. இருக்கை பொருத்துநர்

36. வாகனங்கள் நிறுத்துதல் கட்டுப்பாட்டாளர்

9118.00

(வாகனங்கள் நிறுத்துதலை முறைப்படுத்துதல்

மேற்பார்வை கழுவுதல், மசகெண்ணெயிடுதல்)

37. இயந்திரப் பணியாளர் (மெஷினிஸ்ட்)

38. பயணச்சீட்டு சோதனை எழுத்தர் அல்லது

9011.00

பதிவு செய்யும் எழுத்தர்

39. மசகெண்ணெய் ஆய்வாளர்

40. ரேடியேட்டர் பொருத்துநர்

9011.00

41. மின்முலாம் பூசுபவர்

42. பணிமனை நேரக்காப்பாளர்

43. கருணையாளர் (வைண்டர்)

44. நேரங்குறிப்பவர் மற்றும் வாகன நிறுத்த

முகவர்

45. உதவி கருமார்

46. உதவி டயர் பணியாள்

47. உதவி ஓட்டுவேலை செய்பவர்

48. உதவியாள் (அட்டெண்டர்)

49. உதவி மின் கம்மியர்

8907.00

50. கட்டுப்பாட்டாளர்

51. இயந்திரப் பணியாள (மெஷினிஸ்ட்)

உதவியாள்

52. பற்றவைப்பவரின் உதவியாள்

53. உதவித் தையற் பணியாளர்

54. பணிமனைக் கருவிகள் காப்பாளர்

55. வண்ணம் பூசுபவரின் உதவியாள் 8768.00

56. மசகெண்ணெய் உதவியாள்

8642.00

57. பொருத்துநரின் உதவியாள்

58. நிலக்கரிப் பணியாளர்

59. உதவியாள் (ஹெல்ப்பர்)

60. மஸ்தூர் மற்றும் அது போன்றவர்கள்

8525.00

61. கிளீனர் (சாதாரணம்)

62. கிளீனர் (சிறப்பு மற்றும் வாகன நிறுத்தங்கள்)

63. தண்ணீர் சுமப்பவர்

64. பெட்ரோல் பம்பு இயக்குபவர்

65. வாடிக்கை திரட்டுபவர் (கான்வாசர்)

விளக்கங்கள்:விளக்கங்கள்:—(1) அகவிலைப்படிஅகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ. 52.95 (ஐம்பத்து இரண்டு ரூபாய் தொண்ணூற்று ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

4

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, அல்லது ஒரே பணியைச் செய்யும்போது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) பொதுமக்களுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பணியில் செய்யும் வேலைக்கேற்ற ஊதியவீதம் பெறும் தொழலாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டால், சாதாரணமான ஒரு வேலை நாளில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ஊதியம் நிகரான வகையினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(5) 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 2 ஆம் பிரிவைச் சேர்ந்த (h) பகுதியில் ஊதியம் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள வரையறை இந்த அறிவிக்கையைச் செயல்படுத்துவதற்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும்

(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 81 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 7 டிசம்பர் 2017.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 24-4-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு-2-ல், 287 மற்றும் 288 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/330/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில் அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழே விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)இல் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

ஏதேனும் அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத் தொழிலில் பணிபுரிபவர்களுக்கான வேலைவாய்ப்பு ஏதேனும் அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத் தொழிலில் பணிபுரிபவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

(ரூபாயில்)

(1) (2)

(3)

1 பொது வகைப்பாடுகள்:பொது வகைப்பாடுகள்:

1. மேலாளர்

6654.00 மாதமொன்றுக்கு 2. உதவி மேலாளர் 6319.00 மாதமொன்றுக்கு 3. காசாளர் / எழுத்தர் 5896.00 மாதமொன்றுக்கு 4. தட்டச்சர்

5896.00 மாதமொன்றுக்கு5 தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்

(ரூபாயில்)

(1) (2)

(3)

5. விற்பனையாளர் 5896.00 மாதமொன்றுக்கு 6. பண்டக சாலை உதவியாளர் 5787.00 மாதமொன்றுக்கு 7. ஓட்டுநர்

5787.00 மாதமொன்றுக்கு 8. காவலாள் / ஏவலாள் 5505.00 மாதமொன்றுக்கு 2 ஏனைய பொது வகைப்பாடுகள்: 2 ஏனைய பொது வகைப்பாடுகள்:

உயரளவு பயிற்சி பெற்றவர்கள்:உயரளவு பயிற்சி பெற்றவர்கள்:

1 அடுமனை மேலாள் 222.00 நாளொன்றுக்கு 2. ஏதேனும் பிற உயரளவு பயிற்சி பெற்ற வகையினர்

பயிற்சி பெற்றவர்கள்: பயிற்சி பெற்றவர்கள்:

1. மேற்பார்வையாளர் 208.50 நாளொன்றுக்கு 2. தலைமை அடுமனையாளர்

3. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏதேனும் பிற பயிற்சி பெற்ற வகையினர்

ஓரளவு பயிற்சி பெற்றவர்கள்:ஓரளவு பயிற்சி பெற்றவர்கள்:

1. அடுமனையாளர் 197.00 நாளொன்றுக்கு 2. அடுப்பை பராமரிப்பவர்

3. மேசைப்பணியாளர்

4. மாவு தயாரிப்பவர்

5. பன்னை வட்டமாக்குபவர்

6. ரொட்டி வார்ப்பவர்

7. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏதேனும் ஓரளவு பயிற்சி பெற்ற வகையினர்

பயிற்சி பெறாதவர்கள்:பயிற்சி பெறாதவர்கள்:

1. உதவி அடுமனையாளர் 183.50 நாளொன்றுக்கு 2. உதவி செய்பவர் / உதவியாளர்கள்

3. அனைத்து வகையைச் சேர்ந்த தூய்மை செய்பவர்

4. அனைத்து வகையைச் சேர்ந்த உதவியாளர்

5. மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏதேனும் பிற பயிற்சி பெறாத வகையினர்

விளக்கங்கள்:விளக்கங்கள்:—(1)(1) அகவிலைப்படிஅகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும், மாதமொன்றுக்கு ரூ. 1.10 (ஒரு ரூபாய் பத்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

6

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிட, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 20, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 பிப்ரவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு, ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள, ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் யாதொரு வடிசாலைகளில் (Distillery Industry) பணியமர்த்தப் பட்டுள்ளவர்களும், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிட்டுள்ள வகைகளைச் சேர்ந்தவர்களுமாகிய பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

யாதொரு வடிசாலைகளில் யாதொரு வடிசாலைகளில் (Distillery Industry) வேலைவாய்ப்பு.வேலைவாய்ப்பு.

குறைந்தளவு அடிப்படை தொடர்

ஊதிய வீதங்கள்

எண் பணியாளர்களின் வகைகள்

மாதமொன்றுக்கு

(1)

(2)

(3)

1. மேற்பார்வையாளர் / வேதியியலர்

8680

2. தேர்ச்சி பெற்றவர் / இயக்குபவர்

8050

3. தொழிற்பயிற்சி நிறுவனச் (ITI) சான்று வைத்திருப்பவர் 8050

4. உதவியாளர் / இளநிலை தொழில்நுட்பப் பணியாளர் 7840

5. பொறியாளர் / பட்டறை பொறியாளர் 7840

நிருவாகப் பணியாளர்கள்:நிருவாகப் பணியாளர்கள்:

6. மேலாளர்

8400

7. கணக்காளர்

8400

8. விற்பனை நிருவாகி 8400

9. பணி அலுவலர்

8400

10. உதவியாளர்

8190

11. எழுத்தர்

8050

12. ஓட்டுநர்

8050

13. அலுவலக உதவியாளர் / ஏவலாள் 7840

14. காவலாள்

78407 விளக்கங்கள்:விளக்கங்கள்:—(1)(1) அகவிலைப்படிஅகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்.) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ. 48.65/- (நாற்பத்து எட்டு ரூபாய் அறுபத்து ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 April 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-04-18.Ordinary_16_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-04-18.Ordinary_16_Part-II_Section-2-T-Sup.