© தமிழ்நாடு அரசு 2018
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 17] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 25, 2018 சித்திரை 12, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (2D) எண் 88, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 டிசம்பர் 2017.] 1948-ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் அறிவிக்கையின் வரைவு, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த வரைவு அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக எவரிடமிருந்தேனும், வரப்பெறும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எவையேனும் இருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையாளர் வாயிலாக, தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 9-10-2013-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii—பிரிவு-2-இல், 699 மற்றும் 700 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/780/2013-ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் கீழ்க்காணும் விவர அட்டவணைகள் i மற்றும் ii இல் குறிப்பிடப்பட்டிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்கக் குறைந்த அளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.
[1]
DTP-ii-2-(17) (T Sup)—12
விவர அட்டவணை-i
தங்கப் பொருட்கள் தயாரிப்பு
தொடர்
பொருட்கள் தயாரிப்பதற்கான எண்
தங்கத்தின் எடை (1) (2)
A. செய்யும் வேலைக்கேற்ற ஊதியங்கள் குறைந்த அளவு அடிப்படை ஊதியங்கள் (கிராம் ஒன்றுக்கு)
(3)
கற்கள்
கற்கள் பொருத்தப்படும்
பொருத்தப்படாத பொருட்கள்
பொருட்கள் (ரூ. காசு)
(ரூ. காசு) 1. 1 கிராம் முதல் 5 கிராம் வரை 96.91 242.26 2. 5 கிராமுக்கு மேல் 10 கிராமுக்குள் 67.86 193.82 3. 10 கிராமுக்கு மேல் 20 கிராமுக்குள் 46.85 145.35 4. 20 கிராமுக்கு மேல் 30 கிராமுக்குள் 43.60 96.91 5. 30 கிராமுக்கு மேல் 40 கிராமுக்குள் 38.77 77.53 6. 40 கிராமுக்கு மேல் 50 கிராமுக்குள் 33.94 67.86 7. 50 கிராமுக்கு மேல் 75 கிராமுக்குள் 29.09 58.16 8. 75 கிராமுக்கு மேல் 24.22 48.44 B. நாள் அடிப்படையிலான ஊதிய வீதம் : நாளொன்றுக்கு ரூ.322.00
விவர அட்டவணை-ii
வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பு
A. கொலுசு தயாரிப்பு
தொடர்
பணியின் வகை குறைந்த அளவு அடிப்படை ஊதியங்கள் எண்
(கிலோ ஒன்றுக்கு) (ரூ. காசு)
(3)
(1) (2) 1. ஒற்றைக் கம்பி இழுத்தல் 38.77
2. ஜதை வளைத்தல்
3. பூக்கள் தயாரிப்பு
(a) கெட்டி
(b) மெல்லியது
4. அரும்பு
5. சங்கிலி
6. சலங்கை
7. முகப்பு
484.54
290.74 242.26
58.16
96.91
242.26
387.65
8. திருகாணி 339.15
9. ஒன்று சேர்த்தல் (முழுவடிவம்) B. இதர வெள்ளிப் பொருட்கள்:
தொடர்
பொருட்கள் தயாரிப்பதற்கான எண்
வெள்ளியின் எடை (1) (2)
436.08
குறைந்த அளவு அடிப்படை ஊதியங்கள் (ஒவ்வொரு 10 கிராம் மற்றும் அதன்
பகுதிக்கு) (3)
சாதா
சாதா அல்லாத உருப்படிகளுக்கு
உருப்படிகளுக்கு (ரூ. காசு)
(ரூ. காசு) 1. 1 கிராம் முதல் 10 கிராம் வரை 58.16 77.53 2. 10 கிராமுக்கு மேல் 20 கிராமுக்குள் 56.52 72.69 3. 20 கிராமுக்கு மேல் 30 கிராமுக்குள் 53.33 67.86 4. 30 கிராமுக்கு மேல் 40 கிராமுக்குள் 50.06 62.993 தொடர்
பொருட்கள் தயாரிப்பதற்கான
குறைந்த அளவு அடிப்படை ஊதியங்கள் எண்
வெள்ளியின் எடை
(ஒவ்வொரு 10 கிராம் மற்றும் அதன்
பகுதிக்கு)
(1) (2) 3)
சாதா உருப்படிகளுக்கு
சாதா அல்லாத உருப்படிகளுக்கு
(ரூ.காசு)
(ரூ.காசு)
5. 40 கிராமுக்கு மேல் 50 கிராமுக்குள் 48.44 59.78
6. 50 கிராமுக்கு மேல் 100 கிராமுக்குள் 46.85 58.16
7. 100 கிராமுக்கு மேல் 200 கிராமுக்குள் 43.60 58.16
8. 200 கிராமுக்கு மேல் 500 கிராமுக்குள் 38.77 50.66
9. 500 கிராமுக்கு மேல் 1000 கிராமுக்குள் 29.09 38.77
10. ஒரு கிலோ கிராமுக்கு மேல் 24.22 30.67
C. நாள் அடிப்படையிலான ஊதிய வீதம்: நாளொன்றுக்கு ரூ.311.00
விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2010=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 1.90 (ஒரு ரூபாய் தொண்ணூறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, அல்லது ஒரே பணியைச் செய்யும்போது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 16, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 பிப்ரவரி 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5-ஆம் பிரிவைச் சார்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) ஆம் உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவான இரண்டு மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக, அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சார்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 21-08-2013-ஆம்4 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii—பிரிவு-2-இல், 570 முதல் 571 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/628/2013-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் விசைத்தறி தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையில் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
விசைத்தறி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு
தொடர் எண் பணியாளர் வகைகள் / பணியின் குறைந்தளவு அடிப்படை ஊதிய வகைகள் வீதங்கள் (ரூ. காசு)
(1) (2) (3)
நெசவாளர்களின் பருத்தி :
1. ஊடு இழை (Pick) 36 மீட்டர் ஒன்றுக்கு 1.59
2. ஊடு இழை (Pick) 40 மீட்டர் ஒன்றுக்கு 1.77
3. ஊடு இழை (Pick) 42 மீட்டர் ஒன்றுக்கு 1.77
4. ஊடு இழை (Pick) 44
மீட்டர் ஒன்றுக்கு 1.77
5. ஊடு இழை (Pick) 46
மீட்டர் ஒன்றுக்கு 1.77
6. ஊடு இழை (Pick) 48
மீட்டர் ஒன்றுக்கு 2.12
7. ஊடு இழை (Pick) 50
மீட்டர் ஒன்றுக்கு 2.12
8. ஊடு இழை (Pick) 52
மீட்டர் ஒன்றுக்கு 2.12
9. ஊடு இழை (Pick) 56
மீட்டர் ஒன்றுக்கு 2.39
10. ஊடு இழை (Pick) 60
மீட்டர் ஒன்றுக்கு 2.48
11. ஊடு இழை (Pick) 64
மீட்டர் ஒன்றுக்கு 2.83
12. ஊடு இழை (Pick) 68
மீட்டர் ஒன்றுக்கு 3.01
13. ஊடு இழை (Pick) 70
மீட்டர் ஒன்றுக்கு 3.10
14. ஊடு இழை (Pick) 44 வேட்டிகள் மீட்டர் ஒன்றுக்கு 1.86
15. ஊடு இழை (Pick) 52 வேட்டிகள் மீட்டர் ஒன்றுக்கு 2.39
16. ஊடு இழை (Pick) 56 வேட்டிகள் மீட்டர் ஒன்றுக்கு 2.83
17. ஊடு இழை (Pick) 68-72 (தனிவகை மீட்டர் ஒன்றுக்கு 4.69
வேட்டிகள்- இரட்டைத் தறி) (தனிவகை மீட்டர் ஒன்றுக்கு 11.95 வேட்டிகள்-ஒற்றை தறி)
18. முரட்டுரக படுக்கைவிரிப்புகள் 36-40 மீட்டர் ஒன்றுக்கு 4.34 சாதாரணம்
முரட்டுரக படுக்கைவிரிப்புகள் 36-40 மீட்டர் ஒன்றுக்கு 5.58 வடிவமைப்பு கொண்டவை
19. முரட்டு சாய்வரித் துணிவகைகள் மீட்டர் ஒன்றுக்கு 3.36 31, 36, 38, 38-40 ஊடு இழைகள்
20. டெர்ரி வகைகள் 60, 28, 30, 32 மீட்டர் ஒன்றுக்கு 7.43 ஊடு இழை
21. ஜாக்குவார்ட் வகைகள் 48, 54, 60-32 மீட்டர் ஒன்றுக்கு 7.43 32 ஊடு இழைகள் செயற்கை இழைகள் :
22. ஊடு இழை (Pick) 36 சாதாரணம் மீட்டர் ஒன்றுக்கு 2.48
23. ஊடு இழை (Pick) 56 சரிகை மீட்டர் ஒன்றுக்கு 3.10
24. ஊடு இழை (Pick) 36 கோத்தாரி மீட்டர் ஒன்றுக்கு 3.63
25. ஊடு இழை (Pick) 36/44 நாகபுரி மீட்டர் ஒன்றுக்கு 4.25 கோத்தாரி5 தொடர் எண் பணியாளர் வகைகள் / பணியின் குறைந்தளவு அடிப்படை ஊதிய வகைகள் வீதங்கள் (ரூ. காசு)
(1) (2) (3)
26. ஊடு இழை (Pick) 36 ஜாக்குவார்ட் மீட்டர் ஒன்றுக்கு 4.34
27. ஊடு இழை (Pick) 36/42 வேட்டி மீட்டர் ஒன்றுக்கு 3.10
28. ஊடு இழை (Pick) 36/52 வேட்டி மீட்டர் ஒன்றுக்கு 3.72
29. ஊடு இழை (Pick) 36/56/60 வேட்டி மீட்டர் ஒன்றுக்கு 4.69
30. ஊடு இழை (Pick) 36-38 புடவை வகை மீட்டர் ஒன்றுக்கு 4.25
31. ஊடு இழை (Pick) 36/40 புடவை வகை மீட்டர் ஒன்றுக்கு 4.25
32. ஊடு இழை (Pick) 36/42 நேர்த்தியான மீட்டர் ஒன்றுக்கு 4.87 புடவை வகை
33. ஊடு இழை (Pick) 36/42 செயற்கைப்பட்டு மீட்டர் ஒன்றுக்கு 6.20
34. ஊடு இழை (Pick) 52/56 செயற்கைப்பட்டு மீட்டர் ஒன்றுக்கு 6.20
iii ஏனைய பணியாளர்கள்:
1. முறுக்குபவர் வாரம் ஒன்றுக்கு 1524.00
2. பாவு நூல் பணியாளர் வாரம் ஒன்றுக்கு 1670.00
3. பாவு நூல் உதவியாளர் வாரம் ஒன்றுக்கு 1221.00
4. துணிக்குக் கஞ்சிப்பசையிட்டு
வாரம் ஒன்றுக்கு 1422.00
மொறு மொறுப்பாக்குபவர்
5. சமையலாள் வாரம் ஒன்றுக்கு 1501.00
6. பாவுப்பசையிடுபவர் வாரம் ஒன்றுக்கு 1310.00
7. துணிமணிகளுக்குப் பெட்டி போடும்
வாரம் ஒன்றுக்கு 1392.00
நீராவிப் பொறியை இயக்குபவர்
8. கொதிகலன் பணியாளர் வாரம் ஒன்றுக்கு 1279.00
9. துணிமணிகளுக்குப் பெட்டிபோடும்
வாரம் ஒன்றுக்கு 1279.00
நீராவிப் பொறி உதவியாளர்
10. விழுதில் இழை நுழைப்பவர் மற்றும் ரீச்சர்
1000 முனைகள் ஒவ்வொன்றுக்கும் 30.98 (இருவருக்கும் சேர்த்து)
11. நெசவு உதவியாளர்
23 தறிகள் ஒவ்வொன்றுக்கும் 104.82
12. தூய்மை செய்பவர், எண்ணெய் விடுபவர்
நாளொன்றுக்கு 269.00
(துண்டுகளை சோதித்தல் மற்றும் போல்டிங்பியரிங்)
13 a
பாவு பிணைதல், டெரி/ஜாக்குவார்டு ரகம்
நாளொன்றுக்கு 282.00
b
1500-2000 இழைகள் உள்ள பாவுக்கு முதல் 1000 நூலிழைகளுக்கு
14. எழுத்தர்/மேஸ்திரி மாதமொன்றுக்கு 7094.00
விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அ க வி ை ல ப் ப டி ய ா ன து , 2 0 1 0 ஆ ம் ஆ ண் டி ற் க ா ன ெ ச ன் ை ன ம ா ந க ர நு க ர் ே வ ா ர் ச ர ா ச ரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு ே ம ல் உ ய ரு ம் ஒ வ் ெ வ ா ரு பு ள் ளி க் கு ம் , அ க வி ை ல ப் ப டி ந ா ள் ஒ ன் று க் கு ரூ . 1 . 6 5 க ா சு க ள் (ரூபாய் ஒன்று மற்றும் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
6(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, வார ஊதியம், முதலில் 7 ஆல் வகுக்கப்பட்டு, பின்னர் 30 ஆல் பெருக்கப்பட வேண்டும்.
(4) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(5) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, வார ஊதியத்தை 6 ஆல் மற்றும் மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 18, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 பிப்ரவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமை செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சார்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-08-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii-பிரிவு-2-இல், 540 மற்றும் 541 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/482/2014-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள உப்பளங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்த அளவு ஊதிய வீதங்களை, இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
உப்பளங்களில் வேலைவாய்ப்பு
குறைந்த அளவு
தொடர்
அடிப்படை
எண் பணியாளர்களின் வகை
ஊதிய வீதங்கள்
ரூபாய் காசு.
(1)
(2)
(3)
நாளொன்றுக்கு
1. உப்பைச் சுரண்டி எடுத்தல்
ரூ. 229.007 குறைந்த அளவு
தொடர்
அடிப்படை
எண் பணியாளர்களின் வகை
ஊதிய வீதங்கள்
ரூபாய். காசு.
(1)
(2)
(3)
2. உப்பளத்திலிருந்து உலர்த்தும் தளத்திற்குக் கொண்டு
செல்லுதல்
நாளொன்றுக்கு
ரூ. 226.00
(i) உத்தரவாதமளிக்கப்பட்ட குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(ii) செய்யும் வேலையின் அளவுக்கேற்ற ஊதிய வீதம்
ரூ. 34.37
(a) 45 மீட்டர் தொலைவுக்கு (lead) கொண்டு செல்ல மெட்ரிக் டன் ஒன்றுக்கு
(b) 45 மீட்டருக்கு மேல் 105 மீட்டர் வரையிலான தொலைவுக்குக் கொண்டுசெல்ல மெட்ரிக் டன்
ரூ. 20.86
ஒன்றுக்கு
ரூ. 20.86
(c) 105 மீட்டர் தொலைவுக்கு மேல் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவுக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு
3. பராமரிப்பு
நாளொன்றுக்கு ரூ. 226.00
4. நீரிறைக்கும் எந்திரப் பணியாளர் நாளொன்றுக்கு
ரூ. 228.50
5. நீரிறைக்கும் எந்திர உதவிப் பணியாளர்
நாளொன்றுக்கு ரூ. 226.00
6. மேலாள்
திங்களொன்றுக்கு ரூ. 6682.00
7. காவலாள்
திங்களொன்றுக்கு ரூ. 6367.00
8. (i) டிராக்டர் ஓட்டுநர் (கிருஷி டிராக்டர் உட்பட)
திங்களொன்றுக்கு ரூ. 6682.00
(ii) நீரிறைக்கும் இயந்திரத்தை இயக்கும் கம்மியர் (டீசல் அல்லது மின்சக்தியில் இயங்குகிற உப்பைப்
பொடியாக்கும் இயந்திரம்)
9. எழுத்தர்
திங்களொன்றுக்கு ரூ. 6682.00
10 உப்பை அகற்றுதல், எடையிடுதல் மற்றும் மூட்டைகளில் 100 மூட்டைகளுக்கு ரூ. 230.40
நிரப்புதல்
11. உப்பை அகற்றுதல், எடையிடுதல் மூட்டைகளில்
100 மூட்டைகளுக்கு ரூ. 650.72
நிரப்புதல், தைத்தல் மற்றும் உப்பு மூட்டைகளை
அனுப்புதல் (30 மீட்டர் தொலைவுக்கு 75 கிலோ
கிராம் முதல் 80 கிலோ கிராம் வரை எடையுள்ள
மூட்டை)
12. பொதுவான பணிவகைள் (மேற்சொன்ன எந்தவொரு
பணிவகையின் கீழும் வராதவை)
நாளொன்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்த அளவு அடிப்படை ஊதியம் ரூ. 226.00 என்ற வரையறைக்கு உட்பட்டுச் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்8 விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:
(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 1.40 (ஒரு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாத ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை நிலை எண் 39, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 23 மார்ச் 2018.] தமிழ்நாடு 2018-ஆம் ஆண்டு உணவக நிறுவனங்கள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/2018) 1 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டம் செயலுக்கு வரும் நாளாக 23-03-2018 ஆம் நாளினை இதனால் நிர்ணயிக்கிறார்.
மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.