© தமிழ்நாடு அரசு 2018
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 18] சென்னை, புதன்கிழமை, மே 2, 2018 சித்திரை 19, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழில் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 41, தொழில் (MMC.1)த் துறை, நாள் 10 ஏப்ரல் 2018.]
1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின் 15 மற்றும் 23-C ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், அனைத்து செயல்படுத்தும் அதிகாரங்களுடனும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை செய்கிறார்.
2. இதனால் செய்யப்பட்ட இந்த திருத்தங்கள், 10 ஏப்ரல் 2018 ஆம் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
தி ருத்த ங்க ள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி 38C-க்குப் பின்னர், பின்வரும் விதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்,
அதாவது:-
"38-D கட்டுமான நோக்கங்களுக்கான மணல் இறக்குமதி:- (1) (a) தமிழ்நாடு மாநில அரசின் பொதுப்பணித் துறை நீங்கலாக, கட்டுமான நோக்கங்களுக்காக ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அல்லது ஏனைய மாநிலங்களிலிருந்து அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வாங்கப்படுகின்ற மணலை விற்பனை செய்வதற்கு ஏந்தவொரு நபருக்கும் உரிமையில்லை ("இனிமேல் இறக்குமதி செய்யப்பட்ட மணல் எனக் குறிப்பிடப்படும்"). அத்தகைய உரிமை, மாநில அரசின் பொதுப் பணித்துறையிடம் மட்டுமே நிலைப் பெற்றிருக்கும்.
(b) எந்தவொரு நபரும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை அவருடைய சொந்த பயன்பாட்டிற்கு கொண்டுச் செல்லக்கூடாது அல்லது தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைத்தாண்டி யாதொரு மாநிலத்தில் அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியில் அல்லது நாட்டில் விற்பனை செய்யக்கூடாது.
(2) இறக்குமதி செய்யப்பட்ட மணலை இருப்பில் வைத்திருக்கும் உரிமை, தமிழ்நாடு மாநில அரசின் பொதுப்பணித்துறையிடம் நிலைப் பெற்றிருக்கும்.
(3) இறக்குமதி செய்யப்பட்ட மணலுடன், மணல் அள்ளப்பட்ட இடம் மற்றும் எந்த நாட்டிலிருந்து அல்லது மாநிலத்திலிருந்து அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியிலிருந்து நேர்விற்கேற்ப, இறக்குமதி செய்யப்படுகின்ற அல்லது கொண்டு வரப்படுகின்ற மணல் தொடர்பான அதன் சட்டபூர்வ கொள்முதல் குறித்த ஆவணங்களும் வைத்திருக்கப்பட வேண்டும்.
[ 1 ]
iii-1a-(18) (T Sup)—12 (4) இறக்குமதி செய்யப்பட்ட மணல், பொதுப்பணித்துறை வரையறை செய்த குறியீடுகளை நிறைவேற்ற வேண்டும். மாதிரிகளை சேகரிப்பதற்கும், இறக்குமதி செய்யப்பட்ட மணல், குறிப்பீடுகளை நிறைவேற்றுகிறதா என்பதை சரிபார்ப்பதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரம் பெற்றுள்ளது.
(5) பொதுப்பணித்துறை, குறிப்பீடுகளை நிறைவு செய்யாத இறக்குமதி செய்யப்பட்ட மணலை, தமிழ்நாடு மாநிலத்திற்குள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கும் அதிகாரம் பெற்றிருக்கும். குறிப்பீடுகளை நிறைவு செய்யாத இறக்குமதி செய்யப்பட்ட மணல், கடல் வழியாக தமிழ்நாடு மாநிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். சாலை வழியாக அல்லது ஏனைய யாதொரு தரைவழிப் போக்குவரத்து வாயிலாக, ஏனைய யாதொரு மாநிலத்திற்கு அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிக்கு அதனை கொண்டுச் செல்லக்கூடாது.
(6) இறக்குமதி செய்யப்பட்ட மணல், எந்த நாட்டிலிருந்து அல்லது மாநிலத்திலிருந்து அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது, கொள்முதல் விலை ஈட்டுறதி, சரக்குக் கட்டணங்கள் மற்றும் பொருந்தத்தக்க வரிகள் அல்லது தீர்வைகள் போன்ற காரணிகளை சார்ந்து அளவு அடிப்படையில் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலை வீதத்தில் பொதுப் பணித்துறைக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும்.
(7) பொதுப் பணித்துறையால் வழங்கப்பட்டு, பொதுப் பணித்துறையின் உதவிப்பொறியாளர் அல்லது உதவி செயற்பொறியாளரால் (நீர்வள ஆதாரங்கள் துறை) உரியவாறு சான்றளிக்கப்பட்ட, பிற்சேர்க்கை-XXiii-இல் வரையறுக்கப்பட்ட படிவத்தில் உள்ள செல்திறன்மிக்க போக்குவரத்து அனுமதியின்றி, தமிழ்நாடு மாநிலத்திற்குள் உள்ள யாதொரு துறைமுகத்திலிருந்து அல்லது யாதொரு மாநிலங்களிலிருந்து அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியிலிருந்து பொதுப் பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் கிடங்குகளுக்கு, இறக்குமதி செய்யப்பட்ட மணல் கொண்டுச் செல்லப்படக்கூடாது.
(8) பொதுப் பணித்துறையால் வழங்கப்பட்டு, பொதுப் பணித்துறையின் உதவிப் பொறியாளர் அல்லது உதவி செயற்பொறியாளரால் (நீர்வள ஆதாரங்கள் துறை) உரியவாறு சான்றளிக்கப்பட்ட, பிற்சேர்க்கை-XXiV-இல் வரையறுக்கப்பட்ட படிவத்தில், சரக்கு எடுத்துச் செல்வதற்கான அனுமதிச் சீட்டு (Transit Pass) பெறாமல் பொதுப் பணித்துறையால் பேணப்பட்டு வரும் யாதொரு கிடங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை எந்தவொரு நபரும் கொண்டுச் செல்லக்கூடாது.
(9) இந்த விதியின் யாதொரு விதித்துறைகளை மீறுகின்ற எந்தவொரு நபருக்கும் இரண்டாண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அல்லது ஐந்து இலட்சம் ரூபாய் வரையில் அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும்.
(10) பொதுப்பணித்துறை, இறக்குமதி செய்யப்பட்ட மணலின் இருப்பு, கொண்டுச் செல்லுதல் மற்றும் விற்பனை தொடர்பாக, அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கும்.
விளக்கம்:- இந்த விதியின் செயல்நோக்கத்திற்காக "மணல்" என்பது சிலிக்கா மணல் அல்லது கார்னெட் மணல் போன்ற தொழிலக மணல் நீங்கலாக, செய்முறைப்படுத்தப்பட்டு மற்றும் சலிக்கப்பட்டு கட்டுமான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற சாதாரண மணல் என்று பொருள்படும்.
(2) பிற்சேர்க்கை-XXii-க்கு பின்னர், பின்வரும் பிற்சேர்க்கைகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவையாவன:-
"பிற்சேர்க்கை-XXiii
இறக்குமதி செய்யப்பட்ட இடத்திலிருந்து பொதுப் பணித்துறை கிடங்கிற்கு, இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டுச் செல்வதற்கு, பொதுப் பணித்துறையால் வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதி
அனுமதி எண்.
நாள்.
1. இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கான ஆணை எண் மற்றும் நாள்.
2. மணலை இறக்குமதி செய்கின்ற அமைவிடம்
3. கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மணலின் அளவு
4. வண்டி எண்
5. அனுமதி வழங்கப்பட்ட நாளும் நேரமும்
6. இந்த அனுமதியின் செல்திறன்மிக்க கால அளவு
7. எடுத்துச் செல்லப்படுகிற இறக்குமதி செய்யப்பட்ட மணலை, கொண்டு சேர்க்க வேண்டிய பொதுப் பணித்துறையின் கிடங்கு அமைந்துள்ள இடம்.
8. கொண்டு செல்பவரின்/ஓட்டுநரின் பெயரும் கையொப்பமும்.
3நிபந்தனைகள்
1. வழங்கல் அலுவலரால் கையொப்பமிடப்பட்டு முத்திரையிடுவதற்கு முன்னர், தொடர் எண்கள். 1 முதல் 8 வரையிலான விவரங்கள் அனைத்தும் உரியவாறு சரிபார்க்கப்பட வேண்டும்.
2. இந்த அனுமதி மாற்றத்தக்கதல்ல.
3. இந்த அனுமதி, செல்திறன்மிக்க கால அளவிற்கு மட்டுமே செல்திறனுடையதாக இருக்கும். யாதொரு காலதாமதம் ஏற்படுகின்ற நேர்வில், கொண்டுச் செல்பவரால்/ஓட்டுநரால் காலதாமதம் ஏற்பட்டது என்பதை மெய்பிப்பதற்குட்பட்டு, வழங்கல் அலுவலரால் இந்த அனுமதியின் செல்திறன் கால அளவு நீட்டிக்கப்படலாம்.
4. இந்த அனுமதி, பொதுப்பணித்ததுறை கிடங்கிற்கு பொறுப்பு வகிப்பவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்படுகின்ற இடத்திலிருந்து பொதுப்பணித்துறை கிடங்கிற்கு சென்றடைவது குறித்த செல்திறன்மிக்க போக்குவரத்து அனுமதிகள் கொண்ட பதிவேடு ஒன்று வைத்து வரப்பட வேண்டும்.
5. தமிழ்நாடு 1959 சிறுகனிம சலுகை விதிகளின் விதித்துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அவ்வப்போது விதிக்கப்பட்ட ஏனைய யாதொரு சிறப்பு நிபந்தனைகளுக்கு ஒத்திசைவாக செயல்படுவதற்குட்பட்டு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
பிற்சேர்க்கை-XXiV
பொதுப் பணித்துறை கிடங்கிலிருந்து நுகர்வோருக்கு, இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டுச் செல்வதற்கு பொதுப் பணித்துறையால் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு
அனுமதி எண்.
நாள்.
1. பொதுப்பணித்துறை கிடங்கின் பெயர்/அமைவிடம்
2. இறக்குமதி செய்யப்பட்ட மணலை, கொண்டு சேர்க்க வேண்டிய முகவரி
3. கொண்டுச் செல்லப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மணலின் அளவு
4. செலுத்தப்பட்ட தொகை
5. இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டுச் செல்லும் வண்டியின் பதிவு எண்
6. பொதுப்பணித்துறை கிடங்கிலிருந்து அனுமதி சீட்டு வழங்கப்பட்ட நாள் மற்றும் நேரம்
7. இந்த அனுமதிச் சீட்டின் செல்திறன்மிக்க கால அளவு
8. கொண்டு செல்பவரின்/ஓட்டுநரின் பெயரும் கையொப்பமும்
அலுவலக முத்திரை
வழங்கல் அலுவலரின் கையொப்பம்:
பெயர்:
பதவிப்பெயர்:
நிபந்தனைகள்
1. வழங்கல் அலுவலரால் கையொப்பமிடப்பட்டு முத்திரையிடுவதற்கு முன்னர், தொடர் எண்கள் 1 முதல் 8 வரையிலான விவரங்கள் அனைத்தும் உரியவாறு சரிபார்க்கப்பட வேண்டும்.
2. இந்த அனுமதிச் சீட்டு, மாற்றத்தக்கதல்ல.
3. இந்த அனுமதிச் சீட்டு, செல்திறன்மிக்க கால அளவிற்கு மட்டுமே செல்திறனுடையதாக இருக்கும். யாதொரு காலதாமதம் ஏற்படுகின்ற நேர்வில், கொண்டுச் செல்பவரால்/ஓட்டுநரால் காலதாமதம் ஏற்பட்டது என்பதை மெய்பிப்பதற்குட்பட்டு, வழங்கல் அலுவலரால் இந்த அனுமதியின் செல்திறன் கால அளவு நீட்டிக்கப்படலாம்.
4. இந்த அனுமதிச் சீட்டு மணலை ஒப்படைக்கும் இடத்தில், நுகர்வோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அமலாக்க அதிகாரிகள் சரிபார்ப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஒப்படைத்த நாளிலிருந்து, குறைந்தது ஒரு மாத கால அளவிற்கு, இந்த அனுமதி சீட்டை நுகர்வோர் வைத்திருக்க வேண்டும்.
45. தமிழ்நாடு 1959 சிறுகனிம சலுகை விதிகளின் விதித்துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அவ்வப்போது விதிக்கப்பட்ட ஏனைய யாதொரு சிறப்பு நிபந்தனைகளுக்கு ஒத்திசைவாக செயல்படுவதற்குட்பட்டு இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.
K. ஞானதேசிகன், அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 28, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, நாள் 22 மார்ச் 2018.] 1951-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1955 ஆம் ஆண்டு, மலைத்தோட்டத் தொழிலாளர் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 43 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
(1) 2A ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (2)-இன் விவர அட்டவணையின் நெடும்பத்தி (3)-இல்,-
(i) தொடர் எண் 1 இல் "150" என்ற எண்ணிற்குப் பதிலாக "1000" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(ii) தொடர் எண் 2 இல் "300" என்ற எண்ணிற்குப் பதிலாக "1500" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(iii) தொடர் எண் 3 இல் "600" என்ற எண்ணிற்குப் பதிலாக "2000" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(iv) தொடர் எண் 4 இல் "900" என்ற எண்ணிற்குப் பதிலாக "2500" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(v) தொடர் எண் 5 இல் "1200" என்ற எண்ணிற்குப் பதிலாக "3000" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(vi) தொடர் எண் 6 இல் "2000" என்ற எண்ணிற்குப் பதிலாக "6000" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(vii) (i) தொடர் எண் 7 இல் "3000" என்ற எண்ணிற்குப் பதிலாக "10000" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(2) விதி 2D.-இல்.-
(i) துணை விதி (3) இல், இரண்டு இடங்களில் ரூ. "50/- (ரூபாய் ஐம்பது மட்டும்)" என்று அமைந்துள்ளதற்குப் பதிலாக, ரூ. "1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்)" என்று அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(ii) துணை விதி (5) இல், ரூ. "50/- (ரூபாய் ஐம்பது மட்டும்)" என்று அமைந்துள்ளதற்குப் பதிலாக, "ரூ.1000/- (ரூபாய் ஒரு ஆயிரம் மட்டும்)" என்று அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.