[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 4.00 காசு[விலை : ரூ. 4.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 18] சென்னை, புதன்கிழமை, மே 2, 2018 சித்திரை 19, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (2D) எண் 6, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 25 ஜனவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் அறிவிக்கையின் வரைவு, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த வரைவு அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன இரண்டு திங்கள் கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக எவரிடமிருந்தேனும் வரப்பெறும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எவையேனும் இருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக, தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 10-07-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II பிரிவு 2-இல், 467 முதல் 469 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/472/2013 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில், கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
[1]
DTP-II-2-(18) (T Sup)—12
விவர அட்டவணைவிவர அட்டவணை
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள்
திங்கள் ஒன்றிற்கான குறைந்த அளவு ஊதிய வீதங்கள்
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C மண்டலம்-D (1)
(1) (2) (3) (4)
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு ரூ. காசு I. பொது வகையினர்: . பொது வகையினர்:
1. மேலாளர்
2. விற்பனை மேலாளர்
5960.00 5910.00 5858.00 5818.00 3. கள அதிகாரி
4. வளர்ச்சிப் பணி அலுவலர்
5. அலுவலகப் பொறுப்பாளர்
6. உதவி மேலாளர்
7. கணக்காளர்
8. மேற்பார்வையாளர்
9. விற்பனை நிருவாகி
5548.00 5496.00 5446.00 5396.00 10. கொள்முதல் செய்பவர்
11. பண்டகசாலைக் காப்பாளர்
12. முகவர்
13. விற்பனை மேம்பாட்டுப் பணியாளர்கள்
14. காசாளர்
15. எழுத்தர்
16. தட்டச்சர் மற்றும் எழுத்தர்
17. தட்டச்சர்
18. சுருக்கெழுத்தர்
5507.00 5446.00 5387.00 5338.00 19. விற்பனையாளர்
20. விற்பனைப் பிரதிநிதி
21. ஏலம் விடுபவர்
22. வணிகத் தொழிலாளர்
23. பட்டி தயாரிப்பவர்
24. பட்டிக்குத் தொகை வசூலிப்பவர்
25. பதிவு செய்யும் எழுத்தர்
26. பட்டி எழுத்தர்
27. கிடங்குக் காப்பாளர்
5457.00 5396.00 5338.00 5285.00 28. உதவி விற்பனையாளர்
29. கிடங்குப் பொறுப்பாளர்
30. உதவிக் கணக்காளர்
31. வரவேற்பாளர்
32. லைன்மேன்3 33. சரிபார்ப்பு எழுத்தர்
34. பாதுகாப்புக் காவலர்
35. எடை போடுபவர்
36. ஓட்டுனர்
37. ஏவலாள்
38. காவலாள்
39. கடை உதவியாள்
40. துணையாள்
41. சிப்பம் கட்டுபவர்
42. உதவியாள்
43. பொருள்களை வழங்குபவர்
5396.00 5338.00 5275.00 5218.00 44. செய்தியாள்
45. மின்தூக்கி இயக்குபவர்
46. கடைச் சிப்பந்தி
47. தண்ணீர் கொடுப்பவர்
48. பெருக்குபவர்
49. தோட்டக்காரர்
50. துப்புரவுப் பணியாளர்
II.II. சிறப்பு வகைப் பணியாளர்கள் சிறப்பு வகைப் பணியாளர்கள்
(1) இரசாயன மற்றும் மருந்துப் பொருள் விற்பனைக்கடை: (1) இரசாயன மற்றும் மருந்துப் பொருள் விற்பனைக்கடை:
(அ) மருந்தாக்குநர்
5960.00 5910.00 5858.00 5818.00 (ஆ) வேதியியல் வல்லுநர்
(இ) மருந்து கலப்பவர் 5507.00 5446.00 5387.00 5338.00 (2) முடிதிருத்தும் நிலையம் / அழகு நிலையம் (2) முடிதிருத்தும் நிலையம் / அழகு நிலையம்
(அ) முடி திருத்துபவர்
(ஆ) முடி வெட்டுபவர்
5548.00 5496.00 5446.00 5383.00 (இ) அழகுபடுத்துபவர்
(3) நிழற்படமெடுக்கும் நிலையங்கள்(3) நிழற்படமெடுக்கும் நிலையங்கள்
(அ) நிழற்படம் எடுப்பவர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஆ) நிழற்படக் கலைஞர்
(இ) நிழற்பட உதவிக் கலைஞர் 5457.00 5396.00 5338.00 5285.00 (ஈ) நிழற்பட உதவியாளர்
(4) பழுது பார்க்கும் கடைகள்(4) பழுது பார்க்கும் கடைகள்
(கடிகாரம் / வானொலிப் பெட்டி / மிதிவண்டி) (கடிகாரம் / வானொலிப் பெட்டி / மிதிவண்டி)
(அ) கடிகாரம் பழுது பார்ப்பவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (ஆ) வானொலிப் பெட்டி பழுது பார்ப்பவர் / சரிபார்ப்பவர்
(இ) ஒலி/ஒளிக் கருவி பழுது பார்ப்பவர் / சரிபார்ப்பவர்
(ஈ) மிதிவண்டி பொருத்துபவர் 5396.00 5338.00 5275.00 5218.00 DTP-II-2-(18) (T Sup)—1a DTP-II-2-(18) (T Sup)—2 DTP-II-2-(18) (T Sup)—2a4 (5) மூக்குக் கண்ணாடிக் கடைகள்: (5) மூக்குக் கண்ணாடிக் கடைகள்:
(அ) மூக்குக் கண்ணாடி 5548.00 5496.00 5446.00 5396.00 பொருத்துபவர் / கண்ணாடியை அளவிற்கேற்ப அறுத்து சரிசெய்பவர் / பொருட்களை வாங்குபவர்
(ஆ) ரெஃப்ராக்ஷனரி பணியாளர் (ஆ) ரெஃப்ராக்ஷனரி பணியாளர் (6) பட அச்சுக் கட்டைத் தயாரித்தல் மற்றும் இரப்பர் முத்திரை தயாரித்தல்: (6) பட அச்சுக் கட்டைத் தயாரித்தல் மற்றும் இரப்பர் முத்திரை தயாரித்தல்:
(அ) செதுக்கி எடுப்பவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (ஆ) பட அச்சு கட்டைத் தயாரிப்பவர்
5457.00 5396.00 5338.00 5285.00 (இ) செதுக்கும் பணி உதவியாளர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஈ) வண்ணம் பூசுபவர் / ஓவியர்
(7) மின்விளக்கு, ஒலிபெருக்கி பழுதுபார்க்கும் கடை: (7) மின்விளக்கு, ஒலிபெருக்கி பழுதுபார்க்கும் கடை:
(அ) மின் பணியாளர் / கம்பியாளர் / மின்கருவி பழுதுபார்ப்பவர் 5507.00 5446.00 5387.00 5338.00 (ஆ) உதவி கம்பியாளர்
(இ) ஒலிபெருக்கி இயக்குபவர் 5457.00 5396.00 5338.00 5285.00 (8) நோய்குறி கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடம்: (8) நோய்குறி கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடம்:
(அ) ரேடியோகிராஃபர்
(ஆ) எக்ஸ்-கதிர் படமெடுப்பவர்
5507.00 5446.00 5387.00 5338.00 (இ) பரிசோதனைக்கூடத் தொழில்நுட்பப் பணியாளர் / பகுப்பாய்வாளர்
(9) சீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள்: (9) சீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள்:
(அ) தலைமைக் கணக்காளர்
(ஆ) அலுவலகக் கண்காணிப்பாளர்
5548.00 5496.00 5446.00 5396.00 (இ) செயலாளர்
(ஈ) தணிக்கையாளர்
(உ) நேர்முக உதவியாளர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஊ) இளநிலை வளர்ச்சி அலுவலர்
(எ) சட்ட உதவியாளர்
(10) உணவகம் - உறைவிடம்: (10) உணவகம் - உறைவிடம்:
(அ) அறைப் பையன்
5396.00 5338.00 5275.00 5218.00 (ஆ) வாடிக்கையாளர் திரட்டுபவர்
(இ) கொத்தனார்
(ஈ) குழாய் பணியாளர்
5507.00 5446.00 5387.00 5338.00 (உ) வண்ணம் தீட்டுபவர்
(ஊ) மின் பணியாளர்
(11) அறைகலன்கள்: (11) அறைகலன்கள்:
(அ) தச்சர்
(ஆ) மெருகேற்றுபவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (இ) பிரம்புப் பணியாளர்5 (12) பல்வகைப் பணியாளர்: (12) பல்வகைப் பணியாளர்:
(அ) இசைக் கருவி கடையில் உள்ள தொழில்நுட்பப் பணியாளர்
(ஆ) குடைகள் தயாரிப்புக் கடையில் குடையைப் பொருத்துதல், தைத்தல், கத்தரித்தல் ஆகிய பணிகளைப் புரிபவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (இ) ஆட்டோமொபைல், தானியங்கி வாகனப் பொருட்களின் விற்பனைக் கடையில் மெருகேற்றுபவர்
(ஈ) பயண / உடைப் பெட்டி (சூட்கேஸ்) அனைத்து வகைப் பைகள் மற்றும் பணப்பைகள் தயாரிப்பாளர்கள். (தோலினால் செய்யப்பட்டவை தவிர)
5396.00 5338.00 5275.00 5218.00 (உ) பெட்ரோல் பங்க் பணியாளர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஊ) நிழற்படச் சட்டம் போடும் பணியாளர் / சட்டம் போடும் பொருட்கள் வெட்டுபவர்
5548.00 5496.00 5446.00 5396.00 (எ) மின்தூக்கி நிறுவும் நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சி பெற்ற தொழிலாளர்
(ஏ) குளிர்சாதனப் பணியாளர் 5548.00 5496.00 5446.00 5396.00
5457.00 5396.00 5338.00 5285.00 (ஐ) கடைகளில் பழச்சாறு மற்றம் லஸ்சி தயாரிப்பவர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஒ) எவர்சில்வர், அலுமினியம் பாத்திரக் கடைகளில் பெயர் பொரிப்பவர்
5457.00 5396.00 5338.00 5285.00 (ஓ) விறகுக்கடையில் விறகு வெட்டுபவர்
5507.00 5446.00 5387.00 5338.00 (ஒள) டயர்களின் அடிப்பாகத்தை மாற்றுதல், புதுப்பித்தல், டியூப்பை கந்தகமூட்டி வலுவாக்கும் கடைகளில் டயர் கிரைண்டர் புதுப்பித்தல்.
5396.00 5338.00 5275.00 5218.00 (க) பண்டகச்சாலை, சேமிப்புக் கிடங்கு, இருப்பு வைக்கப்படும் அறை ஆகியவற்றில் உலர வைத்தல், இருப்பு வைத்தல், தூய்மைப்படுத்துதல், அபாரம் ஏற்றுதல் பாரம் இறக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்
5396.00 5338.00 5275.00 5218.00 (கா) நிருவாகப் பணிநிலை, எழுத்துப் பணிநிலை மற்றும் மேற்சொன்ன வகைப்பாடுகள் எதிலும் சேராத பணி ஆகியவை தவிர, அனைத்துக் கடை மற்றும் வணிக நிலையங்களில் பணிபுரியும் பொதுவான பணியாளர்கள்.
6விளக்கங்கள்:விளக்கங்கள்:—(1) அகவிலைப்படிஅகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2010=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூ.32.40 (முப்பத்து இரண்டு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டின் (அதாவது ஜனவரி முதல் டிசம்பர் வரையில்) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில், இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) மண்டலங்களின் வகைப்பாடு பின்வருமாறு:- (2) மண்டலங்களின் வகைப்பாடு பின்வருமாறு:-
(i) மண்டலம் ஏ:
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்.
(ii) மண்டலம் பி:
சிறப்புநிலை நகராட்சிகள் அல்லாத ஏனைய அனைத்து நகராட்சிகள்.
(iii) மண்டலம் சி:
அனைத்து நகரியங்கள், பேரூராட்சிகள் மற்றும் பாளையங்கள்
(iv) மண்டலம் டி :
(ஏ), (பி) மற்றும் (சி) ஆகிய மண்டலங்களில் குறிப்பிட்டுள்ள பகுதிகள் நீங்கலாக ஏனைய அனைத்துப் பகுதிகள்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 11, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 6 பிப்ரவரி 2018.] தொழில்/தொழிலாளர் மற்றும் கூட்டுறவுத் துறையின் 21-10-1960 ஆம் நாளிட்ட 4844 ஆம் (நிலை) எண் அரசாணையில் உள்ளாடைகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு குறைந்தளவு ஊதிய வீதங்கள் நிர்ணயிக்கப்பட்டு, அதன் பின்னர் உள்ளாடைகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு குறைந்தளவு ஊதிய வீதங்கள் திருத்தியமைக்கப்படாததாலும்.
மேற்சொன்ன தயாரிப்பில் சேர்க்கப்பட்டுள்ள பின்னலாடை உட்பட உள்ளாடைகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு குறைந்தளவு ஊதிய வீதங்கள் நிர்ணயிக்கப்படாததால், 1947 ஆம் ஆண்டு தொழிலகத் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 14/1947) 12 (3) ஆம் பிரிவின் கீழ் மேற்சொன்ன தொழிலாளர்களுக்கும் வேலையளிப்போருக்கும் இடையே ஊதிய உடன்பாடு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் தொழிலாளர் நல துணை ஆணையாளர் முன்னிலையில் 16-02-2012 ஆம் நாளிட்ட ந.க. எண். 2/1083/2012-ல் இறுதி உடன்பாடு ஏற்பட்டு, அது 31-01-2012 லிருந்து 29-01-2016 வரையில் செயலில் இருந்தாலும்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறையின் 12-07-2012 ஆம் நாளிட்ட 111 ஆம் (நிலை) எண் அரசாணையில் பின்னலாடை தொழில் உட்பட உள்ளாடைகள் தயாரிப்புப் பணியாளர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை அரசு திருத்தியமைக்க முடிவு செய்து அதற்கிணங்க 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5 (1) (a) பிரிவின் கீழ் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடை தயாரிப்புப் பணியாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் ஆகியோரையும் சேர்த்ததன் மூலம் குழு ஒன்றை ஏற்படுத்தியதாலும்.
7தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறையின் 10-10-2014 ஆம் நாளிட்ட 59 (2D) எண் அரசாணையில் தையல் தொழில் செய்பவர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்கள் திருத்தியமைக்கப்பட்டு அதில் தையல் தொழிலின் கீழ் வருகிற ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்புக்காக தனியாக ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதாலும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் அவருடைய 16-01-2014 மற்றும் 30-01-2015 ஆம் நாளிட்ட கடிதங்களில் தொழிலாளர் நல ஆணையாளரிடம் தெளிவுரை கோரி முறையீடு செய்து அதற்கு தொழிலாளர் நல ஆணையாளர் 4-2-2015 ஆம் நாளிட்ட z3/57821/2014 ஆம் எண் கடிதத்தில் உள்ளாடைகள் தயாரிப்பு பணியாளர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட குறைந்தளவு ஊதிய வீதங்களை நிர்ணயிப்பதற்கு மேற்சொன்ன பத்தி 3 இல் தெரிவிக்கப்பட்டவாறு ஒரு குழு தனியாக அமைக்கப்பட்டு பின்னலாடை தயாரிப்புத் தொழிலை ஒரு துணை நிறுவனமாகக் கருதுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெளிவுரை அளித்துள்ளதாலும்.
உள்ளாடைகள் மற்றும் பின்னலாடை தொழிலின் பணி நிபந்தனைகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பின்னர். 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5 (1) (a) பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட குழு தலைவர் குறைந்தளவு ஊதியங்கள் ஆலோசனை குழு /தொழிலாளர் நல துணை ஆணையாளர் கோயம்புத்தூர்-18, 10-07-2014 ஆம் நாளிட்ட ந.க. எண். ஆ3/6075/2012-ல் அரசுக்கு அதன் அறிக்கையை அளித்துள்ளதாலும்.
மேற்சொன்ன அறிக்கையின் அடிப்படையிலும் குறைந்தளவு ஊதியங்கள் (அரசு) ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தும், அரசு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறையின் 27-1-2016 ஆம் நாளிட்ட 5 ஆம் (2D) எண் அரசாணையை அரசு வெளியிட்டதாலும்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறையின் 10-10-2014 ஆம் நாளிட்ட 59 ஆம் (2D) எண் அரசாணையில் ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்காக தனியானதொரு தலைப்பு உள்ளதால் தையல் தொழிலுக்குப் பொருந்தக்கூடிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறையின் 10-10-2014 ஆம் நாளிட்ட 59 (2D) எண் அரசாணையின் கீழ் பின்னலாடை உட்பட உள்ளாடைகள் தயாரிப்பின் ஏற்றுமதி வருகின்றதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாலும்.
27 முதல் 51/2017 ஆம் எண்கள் வரையிலான சீராய்வு மனுவில் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் 27-04-2017 ஆம் நாளிட்ட அதன் ஆணையில் தொடர்புடைய அரசாணைகளின் பொருந்தும் தன்மை குறித்து தெளிவுரை கோருவதற்கு, அரசை அணுகவேண்டும் என உத்தரவிட்டதாலும்.
பின்னலாடை தயாரிப்பு உட்பட உள்ளாடைகள் தயாரிப்புக்காக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறையின் 27-01-2016 ஆம் நாளிட்ட 5 (2D) எண் அரசாணையை செயல்படுத்துவதில் உள்ள ஐயப்பாடுகளைக் களையும் பொருட்டு குறைந்தளவு ஊதியங்கள் (அரசு) ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து மேற்சொன்ன அரசாணையில் திருத்தம் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளதாலும்.
எனவே, தற்போது 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் குறைந்தளவு ஊதியங்கள் (மாநிலம்) ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து 17-02-2016 ஆம் நாளிட்ட பாகம் - II பிரிவு 2-இல் 127 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ வே வா/120/2016 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார் அதாவது:-
திருத்தம் திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையின் விவர அட்டவணையின் இறுதியில் பின்வரும் விளக்கம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்
மேற்சொன்ன அறிவிக்கையின் விவர அட்டவணையின் இறுதியில் பின்வரும் விளக்கம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்
அதாவது.அதாவது.
"விளக்கம். இந்த விவர அட்டவணையின் நோக்கத்திற்காக உள்ளாடைகள் தயாரிப்பில் ஏற்றுமதி அல்லது உள்நாட்டு
"விளக்கம். இந்த விவர அட்டவணையின் நோக்கத்திற்காக உள்ளாடைகள் தயாரிப்பில் ஏற்றுமதி அல்லது உள்நாட்டு
நோக்கத்திற்கான பின்னலாடை தயாரிப்பும் அடங்கும்.''
நோக்கத்திற்கான பின்னலாடை தயாரிப்பும் அடங்கும்.''
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
8[அரசாணை (2D) எண் 17, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 பிப்ரவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் அறிவிக்கையின் வரைவு, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த வரைவு அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவான இரண்டு திங்கள் முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக, எவரிடமிருந்தேனும் வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006 இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 11-09-2013-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-ல், 616 முதல் 617 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/698/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சவ்வரிசி தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்கக் குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையில் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
சவ்வரிசி தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு சவ்வரிசி தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகை குறைந்தளவு அடிப்படை
தொடர் எண்
ஊதியங்கள் ரூ. காசு
(1)
(2)
(3)
1. உரிப்பவர்கள் (செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்) 70 கிலோ கிராம் பை ஒன்றுக்கு 25.30 2. நசுக்கி, வகைப்படுத்தி, அரைத்து, வறுக்கும் மற்றும் ஏனைய
பல்வகை தொழில்களில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள்
நிலை-I
252.00 நாளொன்றுக்கு
நிலை-II
243.00 நாளொன்றுக்கு
3. ஓட்டுநர்கள்
நிலை-I
6819.00 மாதமொன்றுக்கு
நிலை-II
6390.00 மாதமொன்றுக்கு
4. எழுத்தர்கள்
நிலை-I
6912.00 மாதமொன்றுக்கு
நிலை-II
6564.00 மாதமொன்றுக்கு
5. காவலாள்
6390.00 மாதமொன்றுக்கு
விளக்கங்கள்:விளக்கங்கள்:— 1. — 1. (i) உடல்திறன், தேர்ச்சி, திறமை மற்றும் செய்யும் வேலையின் அளவு மற்றும் பணிமூப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நிலை-I மற்றும் நிலை-IIக்கு நசுக்குதல், வகைப்படுத்துதல், அரைத்தல், வறுத்தல் ஆகிய தொழில்களில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை வகைப்படுத்துதல்.
(ii) நிலை-I மற்றும் நிலை-II ஆக ஓட்டுநர்களை வகைப்படுத்துதல்:-
நிலை-I: முறையான பணியில் ஐந்து ஆண்டுகள் முடித்தவர்கள். 9 நிலை-II: முறையான பணியில் ஐந்து ஆண்டுகள் முடிக்கப் பெறாதவர்கள்.(iii) நிலை-I மற்றும் நிலை-II ஆக எழுத்தர்களை வகைப்படுத்துதல்:-
நிலை-I: முறையான பணியில் ஐந்து ஆண்டுகள் முடித்தவர்கள்.
நிலை-II: முறையான பணியில் ஐந்து ஆண்டுகள் முடிக்கப் பெறாதவர்கள்.
(2)(2) அகவிலைப்படிஅகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ. 39.65 (மூப்பத்தொன்பது ரூபாய் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.